சூனியம் மறுப்புக்கு மறுப்பு.



சூனியம் மறுப்புக்கு மறுப்பு.


திருக்குர் ஆனையும் நபிவழியையும் விட்டு விட்டு சலபி எனும் புதுமதஹபுக்கு வக்காலத்து வாங்கப் புறப்பட்டுள்ள அல்ஜன்னத் மாத இதழ் சூனியம் குறித்து மிகப் பெரும் ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூனியம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு கருத்தை முன்வைக்கிறது என்றால் அது குறித்து எடுத்துவைக்கும் ஒவ்வொரு ஆதாரத்துக்கும் ஒவ்வொரு வாதத்தையும் எடுத்துக் காட்டி அதற்கான மறுப்பை எடுத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் தூரும் இல்லாமல் தலைப்பும் இல்லாமல் ஒரு மறுப்புக் கட்டுரையை எழுதி அதன் மூலம் தனது அறியாமையை தானே தம்பட்டம் அடித்துள்ளது. 

சூனியம் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் என்று கேள்விகளைச் சமாளிப்பதற்காக எதையாவது எழுதி விட்டு நாங்கள் அபோதே இதற்கு பதில் சொல்லி விட்டோம் என்று கூறி சலபி மத்ஹபினரை நம்ப வைக்கவே இந்தக் கட்டுரையை அல்ஜன்னத் வெலீயிட்டுள்ளது.

அல்ஜன்னத் வெளியிட்ட அந்த ஆராய்ச்சிக் கட்டுரை இது தான்












    

















    இது தான் அந்தக் கட்டுரை. இதில் உள்ள அபத்தங்களை அப்பாஸ் அலி அவர்கள் ஆய்வு செய்து கட்டுரை தயாரித்து அனுப்பியுள்ளார். அதை தேவையான மாற்றம் செய்து வெளியிடுகிறோம்.
சூனியம் குறித்து நாம் எழுதிய ஆக்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே நமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆக்கங்களில் உள்ள பல ஆதாரங்களுக்கு எந்த பதிலும் இதில் சொல்லப்படவில்லை. மேலும் இதில் சொல்லப்பட்டுள்ள பல வாதங்களுக்கு நாம் முன்னரே பதில் சொல்லி இருந்தும் அதைக் கூட வாசிக்காமல் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதியுள்ளனர். இது குறித்து நாம் எழுதியுள்ள ஆக்கங்களை வாசித்து விட்டு அல்ஜன்னத் கட்டுரையையும் வாசித்தால் அல்ஜன்னத் கட்டுரையில் சரக்கு ஏதும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/ http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/28-vanavarkal-sooniyathai-katru-tharavillai/ http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/182-sooniyam-karpanaiye/ http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/285/ http://onlinepj.com/aayvukal/sihru_1/ http://onlinepj.com/bayan-video/vivathangal/soonoyam_vathamum_ethirvathamum/ http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/illatha_sooniyam_eppadi_perumbavamakum/ 

இவ்வளவு ஆக்கங்களிலும் நாம் எடுத்து வைத்த வாதங்களை ஒவ்வொன்றாக எழுதி பட்டியல் போட்டுக் கொண்டு அல்ஜன்னத்தின் அறியாமைக் கட்டுரையை வாசித்தால் ஏராள்மான வாதங்களுக்கும் ஆதாரங்களுக்கும் வாதங்களுக்கும் இவர்களிடம் எந்த பதிலும் இல்லை என்பதையும் இத்தனை ஆண்டுகள் தேடிப்பிடித்து இவர்கள் எழுதிய மறுப்பின் இலட்சணத்தையும் அறிந்து கொள்ளலாம். இவர்கள் இப்போது எழுதியுள்ள பல விஷயங்கள் முன்னர் ஒருவரால் எழுதப்பட்டு அதற்கு நாம் பதிலும் அளித்த பின்னர் அதையே காப்பி அடித்து எழுதியுள்ளனர் என்பதும் உங்களுக்கு தெரிய வரும்.

மேற்கண்ட ஆக்கங்களில் தேவைக்கு அதிகமாகவே விளக்கம் இருந்தாலும் இபோதும் ஒரு முறை இந்த அபத்தக் கட்டுரைக்கு பதிலை மீண்டும் வெளியிடுகிறோம்.
உலகத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மார்க்கம் இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மதமும் இல்லை.  மனிதனுக்கு கேடு விளைவிக்கின்ற ஓரிறைக் கொள்கைக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய எல்லா நம்பிக்கைகளையும் இஸ்லாம் தகர்த்து எரியக்கூடிய மார்க்கம். ஆனால் இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள சிலர் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் அறியாத காரணத்தால் தற்போது மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். 

தங்களுடைய வழிகேட்டிற்கு குர்ஆன் வசனங்களையே ஆதாரமாகக் காட்டி இந்த மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொள்வது தான் குர்ஆனுடைய வழி என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழி என்றும் கூறுகின்றனர்.
தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் தங்களுடைய யூகங்களையும் கற்பனைகளையும் குர்ஆனில் புகுத்தி தவறான விளக்கம் கொடுக்கும் இவர்கள் மிக ஆபத்தானவர்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைக் குழப்ப நினைக்கும் குழப்பவாதிகள்.
ஜாக் ஜமாத் வெளியிடும் அல்ஜன்னத் என்ற மாத இதழ் இப்படிப்பட்ட குழப்பத்தைச் செய்துகொண்டிருக்கின்றது. சென்ற மே மாதம் அவர்கள் வெளியிட்ட அல்ஜன்னத் இதழில் சூனியம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர்.
அதில் நம்முடைய கருத்துக்களை விமர்சித்து சூனியத்துக்கு அவர்களாக கற்பனை செய்துகொண்ட விளக்கத்தைக் கூறி இருந்தனர். வழக்கம் போல் இந்த கற்பனைக் கதைகளுக்கு இடையே குர்ஆன் வசனங்களையும் குறிப்பிட்டு  தங்களுடைய சுயக் கற்பனை கருத்துக்களுக்கு தோதுவாக அந்த வசனங்களை வளைத்துக் கொண்டனர்.
எனவே இந்த ஆய்வுக் கட்டுரையில் அவர்களின் அறியாமையை ஒவ்வொன்றாக தெளிவுபடுத்துவோம்.

வித்தைகளைப் போட்டார்களாகயிறுகளைப் போட்டார்களா?

"நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.
அல்குர்ஆன் (7 : 116)
7 : 116 வது வசனத்துக்கு சகோதரர் பீஜே அவர்கள் மேற்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்கள்.  அடைப்புக் குறிக்குள் தமது வித்தைகளை என்று பீஜே அவர்கள் குறிப்பிட்டதை இவர்கள் சுட்டிக்காட்டி இது குர்ஆனைத் திரித்துக் கூறும் செயல். தனது தவறான கருத்துக்குத் தோதுவாக குர்ஆனை வளைப்பதாகும் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
திருக்குர்ஆனில் 26 : 43  மற்றும் 20 : 66 ஆகிய இடங்களிலும் சூனியக்காரர்கள் கயிறுகளையும் கைத்தடிகளையும் போட்டனர் என்று சொல்லப்பட்டு இருப்பதால் அடைப்புக் குறிக்குள் இதைச் சொல்லாமல் வித்தைகளைப் போட்டனர் என்று கூறியிருப்பது மிகப்பெரிய தவறு என்று விமர்சனம் செய்துள்ளனர்.
குர்ஆன் கூறாத கருத்தை அடைப்புக் குறிக்குள் குறிப்பிடுவது தவறு என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் குர்ஆன் கூறிய கருத்தை குர்ஆன் கூறவில்லை என்று இவர்கள் சொல்வதையே நாம் மறுக்கின்றோம்.
நம்மைப் பொறுத்தவரை அடைப்புக்குறிக்குள் கயிறுகளையும் கைத்தடிகளையும் போட்டனர் என்று கூறுவதும் சரி. வித்தைகளைப் போட்டனர் என்று கூறுவதும் சரி.
மூசா நபியின் வரலாற்றை முழுவதுமாக படிக்கும் போது மூசா (அலை) அவர்களுடன் போட்டி போட வந்த சூனியக்காரர்கள் கண்கட்டி வித்தை செய்தார்கள் என்று குர்ஆன் கூறுவதை தெளிவாக அறியலாம். 

7:116 வசனத்தை மட்டும் பார்த்து விட்டு இவர்கள் மேற்கண்ட விமர்சனத்தைச் செய்துள்ளனர். ஆனால் 7:115, 7:116, 7:117 ஆகிய மூன்று வசனங்களையும் வரிசையாகப் பார்ப்போம்.
"மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீராநாங்களே போடட்டுமா?'' என்று அவர்கள் கேட்டனர். 

"நீங்களே போடுங்கள்!
'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.
"உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்தவித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.
அல்குர்ஆன் (7 : 115,116, 117)
வித்தை என்ற சொல்லை 116 வது வசனத்தில் பீஜே பிராக்கெட்டில் போட்டுள்ளார். 117 வசனத்தில் பிராக்கெட்டில் இல்லாமல் போட்டுள்ளார். வித்தையை விழுங்கியது என நாம் மொழிபெயர்த்துள்ள 117 ஆம் வசனத்தில் குர்ஆனில் யஃபிகூன் என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. இதற்கு அவர்கள் பொய்யாக உருவாக்கியவை என்று அர்த்தம். இந்தச் சொல்லுக்கு இந்த அர்த்தம் இருப்பதை அரபு தெரிந்த யாரும் மறுக்க மாட்டார்கள். அவர்களின் வித்தையை விழுங்கியது என்று இவ்வசனம் சொல்வதால் அவர்கள் எதைப் போட்டார்கள் என்பதை விளக்கும் போது வித்தையை என்று பீஜே பிராக்கெட்டில் போட்டுள்ளார். அதாவது இந்தத் தொடர் வசனங்களில் கூறப்பட்டதை வைத்து தெளிவாகும் கருத்தை பிராக்கெட்டில் போதுவது எப்படி குர் ஆனில் இல்லாத கருத்தைத் தினிப்பதாக ஆகும்? 
அவர்கள் பொய்யாக உருவாக்கியவை என்பதும் அவர்கள் செய்த வித்தை என்பதும் ஒரே கருத்தை தரக்கூடிய சொற்களாகும்.  இவ்விரண்டில் எதைக் கூறினாலும் அது குர்ஆனில் சொல்லப்பட்ட வாசகமே அன்றி வேறில்லை. இன்னும் சொல்லப்போனால் கயிறுகளையும் கைத்தடிகளையும் சாதாரணமாக அவர்கள் போட்டிருந்தால் அது மக்களைக் கவர்ந்திருக்காது. வித்தை கலந்து அதை போட்டதால் தான் இந்த நிலை ஏற்பட்டது. இதை வைத்து பார்க்கும் போது நாம் அடைப்புக்குறிக்கும் சரியாகவே போட்டுள்ளோம் என்பது உறுதியாகிறது.
சூனியக்காரர்கள் கயிறுகளையும் கைத்தடிகளையும் பாம்பாக மாற்றினால் அதை அற்புதம் என்று சொல்லலாம். அவர்கள் பாம்பாக மாற்றவில்லை என்பதை அல்ஜன்னத் இதழும் ஒத்துக் கொள்கின்றது.
கயிறுகளையும் கைத்தடிகளையும் தானாக நகர்வது போன்ற தோற்றத்தைத் தான் ஏற்படுத்த முடிந்தது. அது கூட உண்மையில்லை. பொய்யான தோற்றத்தையே ஏற்படுத்தினர்.
கயிறுகளும் கைத்தடிகளும் தானாக அசையாது. இது தான் எதார்த்தமான விஷயம். இந்த எதார்த்தத்திற்கு மாற்றமாக கயிறுகளும் கைத்தடிகளும் அசைந்தால் அது மக்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும் பயத்தையும் ஏற்படுத்தவே செய்யும். இதைத் தான் சூனியக்காரர்கள் செய்தார்கள். இதற்கு வித்தை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
மேலம் 20 : 69 வது வசனத்தில் சூனியக்காரர்கள் சூழ்ச்சியையும் தந்திரத்தையும் தான் செய்தார்கள் என்று தெளிவாகவே சூனியம் என்பது வித்தை என்று அல்லாஹ் கூறுகிறான்.
"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)
அல்குர்ஆன் (20 : 69)
7 : 116 வது வசனத்தில் சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று கூறப்படுகின்றது.
"நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். 
அல்குர்ஆன் (7 : 116)
இன்றைக்கு இதை எல்லாம் மிஞ்சும் வகையில் வித்தைக் கலை வளர்ந்துவிட்டது. எந்தச் சாதனமும் இல்லாமல் வானத்தில் பறப்பதைப் போன்றும், ஒரு பெரிய பொருள் திடீரென மறைவது போன்றும், இல்லாத பொருளைத் திடீரென கொண்டு வருவது போன்றும் இன்னும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய பல விஷயங்களை வித்தை செய்பவர்கள் செய்கிறார்கள்.
இவர்களுக்கு மறைமுகமான ஆற்றல் ஏதோ உள்ளது என்று ஜாக் அமைப்பினர் கூறுவார்களா?இவர்கள் இந்த வித்தைக்காரர்களையும் மந்திரவாதிகளாக ஆக்கினாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
குர்ஆனில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட சம்பவத்தில் முன்பின் வார்த்தைகளைக் கவனிக்காமல் சூனியம் பற்றி ஆய்வை வெளியிட்டால் அந்த ஆய்வு இந்த லட்சணத்தில் தான் இருக்கும்.
எனவே வித்தைகளைப் போட்டார்கள் என நாம் அடைப்புக் குறிக்குள் போட்ட வாசகம் குர்ஆனில் கூறப்பட்ட கருத்தே ஆகும்.

புறச்சாதனமின்றி பாதிப்பை ஏற்படுத்த இயலாது

ஒருவர் எந்த புறச் சாதனத்தையும் பயன்படுத்தாமல் பிறருக்கு தீங்கு விளைவிக்க முடியாது என்று நாம் கூறுகிறோம். இந்தக் கருத்துக்கு எதிராக திருக்குர்ஆனின் 2 : 102 வது வசனம் அமைந்துள்ளது என அல்ஜன்னத் இதழ் வாதிடுகின்றது.
ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். (ஜிப்ரீல்மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத்மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவைனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும்மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்குத் தீங்களிப்பதையும்பயனளிக்காததை யும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில்1 எந்த நற்பேறும் இல்லை'என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?
அல்குர்ஆன் (2 : 102)
சூனியம் என்பது காஃபிராக்கிவிடும் அளவுக்குப் பெரும்பாவம். இதைச் செய்பவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லாமல் போகும். இதன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே பிரிவை உண்டுபண்ண முடியும் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இதை அப்படியே நம்ப வேண்டும் என அல்ஜன்னத் கூறுகிறது.

குருட்டு நம்பிக்கையை குர்ஆனில் புகுத்தும் ஜாக்

இதை அப்படியே நம்ப வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. புறச்சாதனம் எதுவும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த வசனத்தில் ஆதாரம் இருப்பதாக அல்ஜன்னத் கூறுகிறது. இந்தக் கருத்து இந்த வசனத்தில் எங்கே இருக்கின்றது என்பது தான் நம்முடைய கேள்வி.
புறச்சாதனம் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று இந்த வசனம் உட்பட குர்ஆனில் எங்கும் சொல்லப்படவில்லை. இவர்களின் சுய கற்பனையைக் கொண்டு வந்து இந்த வசனத்தில் நுழைக்கிறார்கள். இவர்கள் எப்படி நுழைக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இந்த வசனத்தை கூறிவிட்டு இதன் கீழ் பின்வருமாறு ஜாக் எழுதுகிறது.
இது எவ்விதம் என்று நாம் கண்கூடாகப் பார்க்க இயலாத வண்ணமும் இருக்கலாம். புறச்சாதனங்களை பயன்படுத்தாமல் மறைமுக சாதனங்கள் ஏதாவதொன்றை பயன்படுத்தலாம். நம்மால் வெளிப்படையாக அறிந்துகொள்ள இயலாத ஒன்று சூனியத்திலும் இருக்கலாம்.
இது தான் இவர்கள் காட்டும் ஆதாரம். இது ஆதாரமா அல்லது இவர்களாக எழுதிக் கொண்ட்தா? ஆதாரம் என்றால் ஒரு வசனத்தை எடுத்துக் காட்ட வேன்உம் , அல்லது ஒரு நபிமொழியை எடுத்துக் காட்டவேன்உம். அவ்வாறு எதியும் காட்டாமல் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்பது தான் ஆய்வு செய்யும் லெட்சணமா?

எனவே இவர்கள் சூனியத்தில் புறச்சாதனங்கள் இல்லாமல் தீங்கு செய்ய முடியும் என்பதற்கு இவர்களின் யூகங்களைத் தான் ஆதாரங்களாக்க் கூறியுள்ளார்கள். இதற்கு குர்ஆனையோ ஆதாரப்பூர்வமான நபிமொழியையோ இவர்கள் காட்டவில்லை.
ஆதாரமற்ற இந்த யூகத்தின் அடிப்படையில் சூனியத்தின் மூலம் புறச்சாதனங்கள் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது தெளிவான மூடநம்பிக்கையாகும்.
இவர்களின் இந்த யூகத்தைப் படித்தால் இந்த வசனத்தில் சொல்லப்படும் தீங்கை புறச்சாதனங்களைப் பயன்படுத்தியும் செய்யலாம். அச்சாதனங்கள் இல்லாமலும் செய்யலாம் என்ற கருத்தையே கூறியுள்ளனர். நமது விளக்கத்தை இவர்களால் மறுக்க முடியவில்லை. அப்படியிருக்க இந்த வசனத்தில் நமக்கு எதிரான கருத்து கூறப்பட்டுள்ளது என்று ஏன் சொல்ல வேண்டும்?
2 : 102 வது வசனத்தில் சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கு இடையே பிரிக்க முடியும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. புறச்சாதனங்கள் இல்லாமல் இந்த தீங்கைச் செய்ய முடியும் என்று சொல்லப்படவில்லை. அப்படியிருக்க இவர்கள் தங்களுடைய குருட்டு நம்பிக்கைக்கு இந்த வசனத்தை எப்படி ஆதாரமாகக் காட்ட முடியும்?

நபிமொழி அடிப்படையிலான விளக்கம்

2 : 102 வது வசனத்துக்குரிய சரியான விளக்கதை நபிமொழிகளின் துணையுடன் அறிந்து கொள்ள முடியும்.
சூனியக்கலையில் ஈடுபட்ட ஹாரூத் மாரூத் ஆகிய இருவரும் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் காரியத்தைக் கற்றுக் கொடுத்ததாக இவ்வசனம் கூறுகின்றது.
சூனியம் என்றால் பொய்யை உண்மை போல் காட்டும் வித்தை என்று மூசா நபியின் வரலாறு விளக்குகின்றது. இந்த விளக்கம் இந்த வசனத்திலும் பொருந்திப் போகின்றது.
பேச்சில் சூனியம் இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
5146حَدَّثَنَا قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ جَاءَ رَجُلَانِ مِنْ الْمَشْرِقِ فَخَطَبَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الْبَيَانِ لَسِحْرًا رواه البخاري
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து  இரண்டு  மனிதர்கள் வந்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், " பேச்சில் சூனியம் (கவர்ச்சி) உள்ளது'' என்று சொன்னார்கள்.
புகாரி (5146)
கவர்ச்சியாகப் பேசினால் பொய்யைக் கூட உண்மை என்று நம்பவைத்து விடலாம். இதுவும் சூனியக் கலையின் ஒரு அம்சமாகும். கவர்ச்சியான பேச்சின் மூலம் கணவனிடம் மனைவியைப் பற்றி தவறான அப்பிராயங்களை ஏற்படுத்த முடியும். இதே போன்று கவர்ச்சியாகப் பேசி மனைவியிடம் கணவனைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்த முடியும். முடிவில் கணவன் மனைவி பிரியும் சூழல் இதனால் ஏற்படும்.
இப்பாவத்தைச் செய்யக்கூடிய பலர் சமுதாயத்தில் இருக்கின்றனர். இவர்கள் எத்தனையோ குடும்பங்களைத் தங்களது நாவால் பிரித்திருக்கின்றனர். ஷைத்தான் இவ்வாறே கணவன் மனைவியைப் பிரிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
5032حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أُرَاهُ قَالَ فَيَلْتَزِمُهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இப்லீஸ்தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், "(சொல்லிக் கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை'' என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ்அவனை அருகில் வரச் செய்து, "நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்) கூறுவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் (5419)
எனவே சூனியக்கலை ஒன்று இருக்கின்றது. இக்கலையால் பொய்யை உண்மையாக காண்பிக்கும் வித்தையை மட்டுமே செய்ய முடியும். ஒருவரின் உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தவோ உறுப்புக்களை செயலிழக்கச் செய்யவோ இதன் மூலம் முடியாது. பாமரர்களை ஏமாற்றி கணவன் மனைவிக்கிடையே பிரிவினை ஏற்படுத்த முடியும் என்பது ஹதீஸ் துணையுடன் நமக்குத் தெளிவாக விளங்குகிறது..

சூனியமும் ஜோசியமும்

ஜோசியக்காரனுக்கு ஜின்கள் மறைமுக செய்தியைத் தெரிவிப்பார்கள் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இது போல் கண்ணுக்குத் தெரியாத தீய ஜின்களின் தீங்கு சூனியத்தில் இருக்கலாம் என்று ஜாக் கூறுகிறது.
 சூனியத்தில் புறச்சாதனங்கள் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது எப்படி ஆதாரமாகும்சூனியத்தைப் பற்றி விளக்குவதாகச் சொல்லிவிட்டு அது தொடர்பான ஆதாரத்தைக் காட்டாமல் ஜோசியம் தொடர்பான செய்திக்குத் தாவினால் இவர்கள் என்ன தான் நினைக்கின்றார்கள்?ஆய்வு என்ற பெயரில் எதைச் செய்தாலும் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று மக்களைத் திசைதிருப்பும் வேளையில் ஈடுபடுகின்றனர்.
ஜோசியம் தொடர்பான ஹதீஸையும் இவர்கள் தங்கள் கருத்துக்கு வளைக்கப் பார்க்கின்றனர். ஓரிரு தகவல்களை ஜின்கள் குறிகாரனுக்குச் சொன்னது என்று ஹதீஸ் உள்ளது. இதனால் ஜின்களின் மூலம் மனிதனுக்கு சில நன்மை ஏற்பட முடியும் என்று வேண்டுமானால் கூறலாம். இந்த ஹதீஸை வைத்துக்கொண்டு பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று கூற முடியாது. அந்தக் கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ இதில் இடம்பெறவில்லை.
ஆனால் இவர்களோ ஜின்கள் மனிதனுக்கு மறைமுகமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்த ஹதீஸ் கூறுவதாகச் சொல்கிறார்கள். ஹதீஸில் இல்லாத தங்களுடைய சுய கற்பனையை ஹதீஸில் புகுத்தும் இவர்களுக்கு நாம் அடைப்புக்குறிக்குள் ஆதாரத்துடன் இட்ட விளக்கத்தை விமர்சிக்க என்ன தகுதி இருக்கின்றது?
ஜோசியம் தொடர்பான ஹதீஸில் கூறப்படும் நிலமை திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்பிருந்த நிலையாகும். திருக்குர்ஆன் அருளப்பட்ட பிறகு இது மாற்றப்பட்டுவிட்டது.
இவர்களுக்கு இந்த அறிவும் இல்லாமல் இப்போதும் ஜின்கள் ஜோசியக்காரனுக்கு தகவல்களை கடத்துவதாக உளறி இவர்கள் ஆய்வில் அரைகுறை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜோசியம் தொடர்பான ஹதீஸின் விளக்கம்

ஜோசியக்காரன் பல பொய்களை சொன்னாலும் அவன் சொன்ன ஓரிரு விசயங்கள் நடந்து விடுகின்றதே என நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த ஓரிரு செய்திகள் ஜின்கள் வானுலகத்தில் ஒட்டுக்கேட்டு வந்த இந்த ஜோசியக்காரனுக்கு சொன்ன செய்திகள். இதனுடன் அவன் நூறு பொய்களை சேர்த்துக்கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோசியக்காரனுக்கும் ஜின்களுக்கும் இடையில் இப்படி ஒரு தொடர்பு இருந்தது என இந்த ஹதீஸ் கூறுகிறது. 

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு வரை இந்த நிலை இருந்தது. அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டவுடன் வானுலகத்தில் எந்தச் செய்தியையும் கேட்க முடியாத வாறு ஜின்கள் தடுக்கப்பட்டு விட்டார்கள். ஜின்களுக்கும் ஜோசியக்காரனுக்கும் இடையிலான இந்த தொடர்பு முற்றிலும் முறிக்கப்பட்டுவிட்டது.    இதை பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றது.
இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.
அல்குர்ஆன் (26 : 210)"
வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும்தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.
அல்குர்ஆன் (72 : 8)
ஜின்கள் ஒட்டுக்கேட்பதை விட்டும் தடுக்கப்பட்டதால் மறைவான விஷயங்கள் எதுவும் அவர்களால் அறிந்துகொள்ள முடியாது. இதை ஜின்களே கூறுகின்றன.
பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதாஅல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர் வழியை நாடியிருக்கிறானாஎன்பதை அறிய மாட்டோம்.
அல்குர்ஆன் (72 : 10)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் "உக்காழ்எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப் பட்டு)விட்டனர். (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்கüடம்) திரும்பி வந்தனர். அப்போது தலைவர்கள், "உங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், "வானகத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டதுஎங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன'' என்று பதிலளித்தனர். "புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே நீங்கள்பூமியின் கீழ்த்திசைமேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்'' என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசைமேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர். "திஹாமாஎனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது "உக்காழ்'சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் "நக்லாஎனுமிடத்தில் தம் தோழர்களுக்கு "ஃபஜ்ரு'த் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள்.அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) "வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்'' என்று கூறிவிட்டுதம் கூட்டத்தாரிடம் சென்று, "எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்'' என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, "(நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்கüல் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்...'' என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருüனான்.
ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி "வஹி'யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்  : புகாரி (4921)
திருக்குர்ஆன் வருவதற்கு முன்பு ஜின்களுக்கும் குறிகாரர்களுக்கும் இருந்த தொடர்பு குர்ஆன் அருளப்பட்ட பிறகு முற்றிலுமாக முறிக்கப்பட்டு விட்டது. தற்போது வானுலகத்தில் தீர்மாணிக்கப்படுகின்ற விஷயங்களில் ஓரிரு விஷயங்களைக் கூட ஜின்களின் மூலம் குறிகாரர்களால் அறிந்துகொள்ள முடியாது.

இவர்கள் குறிகாரர்களுக்கு ஜின்கள் மூலம் உதவிகள் கிடைக்கிறது என்ற இந்த ஆதாரத்தை வைத்துத் தான் ஸிஹ்ர் மூலம் பாதிப்புகளை செய்ய முடியும் என்றனர். இவர்கள் கூறுவது உண்மை என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் நபிகள் நாயகம் காலத்துக்குப் பின்னர் அது தடுக்கப்பட்டு விட்டதால் இவர்கள் வாதம் சுக்குநூறாக நொறுங்கி விடுகின்றது.
குறிகாரர்களிடம் செல்வதும் அவர்களிடம் குறி கேட்பதும் இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டள்ளது. அவர்கள் கூறுவது உண்மை நம்புவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒருவர் குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பினால் அவர் முஹம்மதுக்கு அருளப்பட்ட(இஸ்லாத்)தை விட்டும் நீங்கிவிட்டார்.
அறிவிப்பர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : அபூதாவுத் (3405)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் சோதிடனிடம் சென்றுஎதைப் பற்றியாவது கேட்டால்,அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.
அறிவிப்பவர் ஸஃபிய்யா (ரலி)
நூல் : முஸ்லிம் (4488)

கண்டிதிருஷ்டி ஆதாரமாகுமா?

சூனியத்தில் புறச்சாதனங்கள் எதுவும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க இயலாமல் ஜோசியத்துக்கு முதலில் தாவினார்கள். அடுத்து கண்டிதிருஷ்டிக்கு தாவியுள்ளார்கள்.
கண்ணேறு எப்படி தாக்கம் ஏற்படுத்தும் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. இது போன்று நம்மால் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாத ஒன்று சூனியத்திலும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
நம்மால் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாத அம்சம் சூனியத்தில் இருக்கின்றது என இவர்களால் அடித்துச் சொல்ல முடியவில்லை. இருக்கலாம் என்று யூகம் தான் செய்ய முடிகின்றது. இந்த யூகத்துக்கு வலு சேர்க்க கண்ணேறு தொடர்பான ஹதீஸை இழுத்துக் கொண்டு வந்துள்ளனர்.
கண்ணேறு தொடர்பான ஹதீஸ்கள் பற்றி விரைவில் நாம் தெளிவான விளக்கத்தைத் தர இருக்கின்றோம். ஒரு பேச்சுக்கு கண்ணேறில் அதன் பாதிப்பை நம்மால் வெளிப்படையாக அறிய முடியவில்லை என்பதை ஏற்றுக் கொண்டாலும் இதனால் சூனியத்திலும் இந்த அம்சம் அடங்கியுள்ளது என்று கூற முடியாது.
கண்ணேறும் சூனியமும் வெவ்வேறான விசயங்கள் என்று இவர்களே நம்பும் போது கண்ணேறில் உள்ள அம்சத்தை சூனியத்தில் கொண்டு வந்து நுழைப்பது தவறாகும். இவர்களுடைய அனைத்து வாதங்களையும் கவனித்தால் இவர்கள் சம்பந்தமில்லாத செய்தியை ஆதாரமாகக் காட்டுவதும் பிறகு யூகத்தை நுழைப்பதும் தெரியவரும்.

அற்புதங்களை அற்பமாக்கிவிட்ட ஜாக்

நபிமார்கள் அற்புதங்களைக் கொண்டு வந்தபோது எதிரிகள் இதை சூனியம் என்று கூறி மறுத்தனர். அதாவது தந்திரம் செய்து அற்புதம் செய்வது போல் நம்மை ஏமாற்றுகிறார் என்ற கருத்தில் சிஹ்ர் என்ற சொல்லை எதிரிகள் பயன்படுத்தி வந்தனர் என்று நாம் கூறுகிறோம். இதற்குச் சான்றாக பல வசனங்களைக் குறிப்பிட்டு எழுதியுள்ளோம்.
எதிரிகள் சிஹ்ர் என்ற சொல்லை நாம் கூறிய கருத்தில் பயன்படுத்தவில்லை என்று ஜாக் மறுக்கின்றது. அப்படியானால் அவர்கள் எந்த அர்த்தத்தில் சொன்னார்கள்ஜாக் கூறுவதைக் கேளுங்கள்.
நபி ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அற்புதத்தால் பிறவிக் குருடருக்கு பார்வை கொடுத்தார்கள். குஷ்ட நோயாளியை குணமாக்கினார்கள். இதைப் பார்த்த எதிரிகள் இது தெளிவான சூனியம் என்று கூறினார்கள். மூசா (அலை) அவர்களின் கைத்தடி பாம்பாக மாறியது தெளிவான அற்புதம். ஆனால் அதையும் எதிரிகள் சூனியம் என்றே சொன்னார்கள்.
அற்புதத்தை தெளிவாக்க் கண்ணால் காணும் போது இது கண்கட்டி வித்தை என்று எதிரிகள் எப்படி சொல்லியிருப்பார்கள் என்று ஜாக் கேள்வி எழுப்புகிறது. இந்தக் கேள்விக்கு நாம் பதில் சொல்வதற்கு முன்னால் இவர்களின் அறியாமையை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
ஏதோ ஒரு மறைமுக சக்தியின் உதவியினால் சில ஆச்சரியமான காரியங்களை சூனியக்காரர்களால் செய்ய முடியும். அந்த சூனியக்காரர்கள் எந்தவித தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் இது சாத்தியம் என்று எதிரிகள் நம்பியிருந்தார்களாம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் இறைத்தூதர் மட்டும் அற்புதம் செய்யமாட்டார். சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என்று எதிரிகள் நம்பினார்கள் என இவர்கள் கூறுகின்றனர்.
இறைத்தூதர்களை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக எல்லா இறைத்தூதர்களுக்கும் அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான். இந்த அற்புதங்கள் மக்களை சத்தியத்தின் பக்கம் ஈர்க்கும் சக்தியாக இருந்தது.
இறைத் தூதராக இல்லாத சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என மக்கள் நம்பினார்கள் என்றால் அல்லாஹ் கொடுத்தனுப்பிய அற்புதம் மக்களை எப்படி நேர்வழிக்கு கொண்டுவர உதவும்?இந்லையில் இறைத்தூதர் செய்து காட்டும் அனைத்து அற்புதங்களும் பயனற்று போகும்.
அல்லாஹ் குர்ஆனில் அற்புதங்களைப் பற்றி குறிப்பிடும் போது சான்றுகள் என்றும் ஆதாரங்கள் என்றும் கூறுகிறான். சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என்று நம்பக்கூடிய மக்களிடம் இறைத்தூதர் அற்புதம் செய்துகாட்டினால் இந்த அற்புதம் அந்த மக்களுக்கு எப்படி சான்றாகவும் ஆதாரமாகவும் அமையும்?
எனவே இவ்வாறு கூறியதன் மூலம் அல்லாஹ்வும் அவனுடைய தூதர்களும் தேவையற்ற காரியத்தைச் செய்தார்கள் என ஜாக் கூற வருகின்றது.

மூசா நபி போட்டிக்கு ஒத்துக்கொண்டது ஏன்?

சூனியக்காரர்கள் அற்புதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்திருந்தால் ஃபிர்அவ்னின் சூனியக்காரர்கள் போட்டிக்கு வருமாறு மூசா நபியை அழைத்த போது அந்த அழைப்பை மூசா நபி ஏற்றிருக்க மாட்டார்கள்.
ஏனென்றால் போட்டியில் மூசா நபி வெற்றிபெற்றாலும் அவரை யாரும் நம்பப் போவதில்லை. வெற்றி பெற்றதால் திறமையான சூனியக்காரர் என்று மக்கள் சொல்வார்களே தவிர இறைத்தூதர் என்று கூறமாட்டார்கள்.
அப்படியானால் மூசா நபி எதற்கு போட்டி போட ஒத்துக் கொண்டார்கள். அல்லாஹ்வும் அந்த போட்டியில் கலந்துகொள்ளுமாறு மூச நபியிடம் ஏன் கூற வேண்டும்?
போட்டியில் வெற்றி பெற்றால் மூசா நபி இறைத்தூதர் என்பது தெளிவாகும் என்பதால் தான் அல்லாஹ் இவ்வாறு கூறினான். இதிலிருந்து சூனியக்காரர்கள் அற்புதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை எதிரிகளிடமிருந்தது என்ற கூற்று தவறானது என்பதை அறியலாம்.

சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்றது ஏன்?

மூசா (அலை) அவர்கள் செய்து காட்டிய அற்புதத்தைப் பார்த்தவுடன் போட்டியிட வந்த சூனியக்காரர்கள் மூசா (அலை) அவர்களை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். சஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள்.
சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை எதிரிகளிடம் இருந்திருந்தால் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்க மாட்டார்கள். மூசா நம்மை விட பெரிய சூனியக்காரர் என்று கூறி மறுத்திருப்பார்கள்.
மூசா நம்மைப் போன்று ஒரு சூனியக்காரர் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் மூசா நபியை போட்டிக்கு அழைத்தார்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழிக்கு ஏற்ப சூனியக்காரன் யார்?என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
மூசா நபி செய்தது தாங்கள் செய்தது போன்று வித்தை அல்லாமல் தெளிவான அற்புதமாக இருந்ததாலும் இதை இறைத்தூதரைத் தவிர சூனியக்காரர்களாலும் செய்ய முடியாது என்று நம்பியதாலும் இஸ்லாத்திற்கு வந்தார்கள். ஜாக் இந்த விசயத்தை சிந்திக்க தவறிவிட்டது.

எதிரிகள் ஏன் மறுத்தார்கள்?

தெளிவாகத் தெரியும் அற்புதத்தை சூனியம் என்று கூறி எதிரிகள் ஏன் மறுக்க வேண்டும் என ஜாக் கேட்ட கேள்விக்கு வருவோம்.
நபிமார்கள் செய்து காட்டிய அற்புதம் எதிரி உட்பட அனைவரும் நம்பும் வகையில் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக இருந்தது. எதிரிகள் அனைவரும் இவர் இறைத்தூதர் தான் என்பதை நன்கு விளங்கி வைத்திருந்தனர். மனமுரண்டாகத் தான் மறுத்துக்கொண்டிருந்தனர்.
அதாவது நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பார்த்த பிறகு அவர் நபி என்றும் அவர் செய்துகாட்டியது அற்புதம் என்றும் இது போன்று வேறு யாராலும் செய்ய முடியாது என்றும் எதிரிகள் நம்பினர்.
ஆனால் பதவி அந்தஸ்து முன்னோர்களின் வழி ஆகிய காரணங்களால் சத்தியம் விளங்கிய பிறகும் சத்தியத்திற்கு வர மறுத்தனர். இன்றைக்கு பலர் இதுபோன்று இருப்பதைப் பார்க்கின்றோம். பின்வரும் வசனங்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றது.
நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது "இது தெளிவான சூனியம்''என்று அவர்கள் கூறினர். அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும்,ஆணவமாகவும் மறுத்தனர். "குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?'' என்று கவனிப்பீராக!
அல்குர்ஆன் (27 : 13)
தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! "மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்'' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.
"வானங்களுக்கும்பூமிக்கும் அதிபதியே இவற்றைச் சான்றுகளாக அருளியுள்ளான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என்றே நான் கருதுகிறேன்'' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் (17 : 102)
எனவே சூனியக்காரர்களால் அற்புதம் செய்ய முடியும் என்ற கருத்தில் சிஹ்ர் என்ற வார்த்தையை எதிரிகள் பயன்படுத்தவில்லை என்று மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் தெளிவாகிவிட்டது.
சூனியம் என்பது பொய்யும் பித்தலாட்டமும் அடங்கிய கலை என்பதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்கள் ஆதாரங்களாக மக்களுக்கு மத்தியில் வைத்துள்ளோம். இதழ்கள் வாயிலாகவும் இணையதளத்தின் வாயிலாகவும் இதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.
ஜாக் இந்த ஆதாரங்களில் எந்த ஒன்றுக்கும் பதில் கொடுக்கவில்லை. ஆய்வு என்ற பெயரில் உளறிக்கொட்டியது தான் மிச்சம். இந்த லட்சணத்தில் இந்த ஆய்வை தொடரப்போவதாக வேறு அறிவித்துள்ளது.
இறுதியாக நாம் சொல்வது என்னவென்றால் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னதை அப்படியே ஏற்போம். அவர்கள் கூறாத நம்முடைய சொந்த கற்பனைகளை மார்க்கத்தில் நுழைத்து மூட நம்பிக்கைகள் பரவ நாம் காரணமாகிவிடக்கூடாது. அல்லாஹ் நம்மை இதை விட்டும் பாதுகாப்பானாக.
www.onlinepj.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை