பைபிளின் அரேபிய தீர்க்கதரிசனம்


பைபிளின் அரேபிய தீர்க்கதரிசனம்

பைபிளின் அரேபிய தீர்க்கதரிசனம்

பைபிளின் அரேபிய தீர்க்கதரிசனம்
அரேபியாவின் பாரம் …… ஆண்டவன் என்னை நோக்கி ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்குக்கொத்தஒரே ஒரு வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போகும். கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சம் பேராயிருப்பார்கள் என்றார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதைஉரைத்தார்.
(ஏசாயா 21:13-17)
கேதார் வம்சத்தினர் நபிகள் நாயகத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டமக்களையும் சொல்லெனாத் துன்பத்துக்கு ஆளாக்கினார்கள். இதைத் தாங்க முடியாத முஸ்லிம்கள்அபீசீனியாவுக்கும், மதினாவுக்கும் ஓடலானார்கள். ஒரு வருடம் நிறைவடைவதற்குள் முதலாவதுபோர்க்களமான பத்ரில் கோதாரியர்கள் வேரறுக்கப்பட்டார்கள்.
இந்த அரேபியாவின் தீர்க்கதரிசனம் கூறுவது முஹம்மது நபியின்வரலாற்றை மறுக்கமுடியுமா ?

பைபிளின் இந்த தீர்க்கதரிசி யார்?

தீர்க்கதரிசி யார்?

எருசலேமிருந்து யூதர்கள் ஆசாரியாரையும், லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி நீர்யார் என்று கேட்ட போது அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டது மட்டுமின்றி நான் கிறிஸ்துஅல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள் பின்னர் யார் எலியாவா? என்று கேட்பார்கள். அதற்கு நான் அவன்அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா? என்று கேட்டார்கள் அதற்கும் அல்ல என்றான்.
(யோவான் 1:19,22)
இதில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசியார்?
அவர் தான் முஹம்மது (ஸல்)
இந்த தீர்க்கதரிசியை தேடித்தான் யூதர்கள் ஜெருசலேமிருந்து புறப்பட்டுமதினாவில் குடியேறினர்.தீர்க்கதரிசியானவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இல்லை என்றால் மதீனாவுக்கு யூதர்கள்வரவேண்டிய அவசியமே இல்லை.
அன்பு கிறுஸ்துவ சகோதரர்களே இதை மறுக்க முடியுமா?



இவர் யார் ?


இவர் யார்?

இஸ்ரவேல் அனைவரையும் மோசே அழைத்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகளையும் அவர்கள் தவிர்க்கவேண்டியவைகளையும் விரிவாகக் கூறுகின்றார். வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றியும் அதனிடையே பின்வருமாறு கூறுகிறார்.
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்குச் செவி கொடுப்பீர்களாக. (என்றார்).
(உபகாமம் 18:15)
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னது சரியே உன்னைப் போல் ஒருதீ்ர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்வார்.
(உபாகமம் 18:17,18) 
இது தான் முஹம்மது (ஸல்), ஏசுவோ , ஜோஸுவாவோ இல்லை
இதை மறுக்க உங்களால் முடியுமா ?





பாரான் (ஹிரா) மலையின் பிரகாசம்


பாரான் (ஹிரா) மலையின் பிரகாசம்

கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி,சேயீரிலிருந்துஅவர்களுக்கு உதயமானார்,பாரான் மலையிலிருந்து பரிசுத்தவான்கள்நடுவிலிருந்து பிரசன்னமானார். அவர் வலதுபுறத்தில் அக்கினிமயமானபிரமானம் அவர்களுக்கு வெளிப்பட்டது.
(உபகாமம் 33:1,2)
பாரான் மலையிலிருந்து பிரகாசமாய்த் தோன்றி என்பதன் பொருள் என்ன? பாரான் மலை என்பது மோசே வாழ்ந்தபகுதியிலும் இல்லை. இயேசு வாழ்ந்த பகுதியிலும் இல்லை. மாறாக அது மக்காவில்அமைந்துள்ள மலைகளில் ஒரு மலையின் பெயராகும்.
அவன் வளர்ந்து வனாந்திரத்தில்குடியிருந்தான். அவன் வளர வளர வில் வித்தையிலும்வல்லவனானான்.பாரான் வனாந்தரத்தில் அவன்குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்துப் பெண் ஒருத்தியை அவனுக்கு விவாகஞ்செய்வித்தான்.
(ஆதியாகமம் 21:12-21)
சீனாய் மலையில் தோன்றிய பிரகாரசம் மோசேவின் வேதம் என்றால், சீயேரில் தோன்றிய ஒளி இயேசுவின் வேதம்என்றால்,        பாரானில் தோன்றிய பிரகாசம் எது?
மோசே காலம் முதல் நபிகள் நாயகம் காலம் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அப்பகுதியில் எவரும்கர்த்தரின் தூதர் என அறியப்படவில்லை.
எனவே, பாரான் (ஹிரா) மலையிலிருந்து தோன்றிய பிரகாசம் என்பதுநபிகள் நாயகத்தையும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தையும் குறிக்கிறது , மறுக்க முடியுமா, இதை மறைக்க முடியுமா?
www.jesusinvites.com








Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை