Posts

Showing posts from August, 2012

இஸ்லாமும் ஆடைஅலங்காரமும்

ஆடைகள்   அல்லாஹ்   தன்னுடைய   அடியார்களுக்கு   வானம்   மற்றும்   பூமியில்   உள்ள   அனைத்தையும் வசப்படுத்திக்   கொடுத்திருக்கின்றான் .  இன்னும்   அவர்களுக்கு   உணவுகளையும் ,  குடிபானங்களையும் , ஆடைகளையும்   வசப்படுத்திக்   கொடுத்திருக்கின்றான் .  எனினும்   அதில்   சில   வரையறைகளை ஏறபடுத்தி   இருக்கிறான் .  அந்த   வரையறைகளைப்   பேணி   நடந்து   கொள்ள   வேண்டும் . அல்லாஹ்   கூறுகிறான் : " தனது   அடியார்களுக்காக   அல்லாஹ்   வழங்கிய   அலங்காரத்தையும் , தூய்மையான   உணவுகளையும்   தடை   செய்பவன்   யார் ?''  என்று  ( முஹம்மதே !)  கேட்பீராக ! " அவை இவ்வுலக   வாழ்க்கையிலும்   குறிப்பாக   கியாமத்   நாளிலும்   நம்பிக்கை   கொண்ட   மக்களுக்குரியது ''  எனக் கூறுவீராக !  அறிகின்ற   சமுதாயத்திற்கு   இவ்வாறே   சான்றுகளை   விளக்குகிறோம்            அல்குர்ஆன்   7:33 தான்   படைத்தவற்றிலிருந்து   அல்லாஹ்   உங்களுக்கு   நிழல்களை   ஏற்படுத்தினான் .  மலைகளில் உங்களுக்காகக்   குகைகளையும்   ஏற்படுத்தினான் .  வெப்பத்திலிருந்து   உங்களைக்   காக்கும் சட்டைகளையும் ,  போரில்   உங்களைக

தீய நண்பன்

தீய நண்பன் கெட்ட தோழன் நல்ல நண்பனைத் தேர்வு செய்யாமல் தீய நண்பனை நாம் தேர்வு செய்துவிட்டால் நம்முடைய நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். தீயதை ஏவுதல், பகைமையை ஊட்டுதல், ஒழுக்கங்கெட்ட செயல்பாடுகளுக்கு அழைத்துச்செல்லுதல் இன்னும் மார்க்கத்திற்கு முரணான பிற விஷயங்களில் கொண்டு சென்று அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்றுவிடுவான். அபூமூசா (ர-லி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவ னிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்! நூல் : புகாரி 2101 நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கைகளை மூடிக் கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான். நய

ஸலவாதுன்னாரிய்யா ஓதலாமா?

ஸலவாதுன்னாரிய்யா ஓதலாமா? தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது. இந்த ஸலவாத்தின் வாசகங்கள் பெரிதாக உள்ளதால் இதை அனைவரும் மனனம் செய்திருப்பதில்லை. மேலும் 4444 தடவை ஒருவர் இதை ஓதினால் இதற்காகப் பல நாட்களை ஒதுக்க வேண்டிவரும். இதனால் ஆலிம்களை அழைத்து அவர்களுக்கு உரிய(?) கட்டணம் கொடுத்து ஓதச் செய்யப்படுகிறது. இது மார்க்கத்தில் உள்ளதா என்பதை நாம் அறிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். தவறான கருத்துக்களை உள்ளடக்கியது ஸலவாதுன்னாரியா எனப்படும் இந்த ஸலவாத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த சில அறிவீனர்களால் உண்டாக்கப்பட்டதால் இதில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கும் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன. இந்த ஸலவாத்துக்குப் பெயர் வைத்தவர்கள் அதில் மட்டும் உண்மையாளர்களாக உள்ளனர். நார் என்றால் நெருப்பு, நரகம் என்று பொருள். ஸலவாதுன்னாரிய்யா என்றால் நரகில் சேர்க்கும் ஸலவாத் என்பது பொருள். இதை ஓதுவதால் நரகம் தான

அமல்களை பாதுகாப்போம்.

Image
அமல்களை பாதுகாப்போம்.

பாழாப்போகும் நல்லறங்கள்

Image
பாழாப்போகும் நல்லறங்கள்

மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்

Image
மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம் உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் – கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும். பழமையானது – உலகின் முதல் மனிதன் தொடங்கி உலகில் தோன்றிய அத்துணை நபிமார்களும் ஓரிறைக் கொள்கையையே போதித்தனர். ஆதலால், உலகின் பழமையான மார்க்கம் இஸ்லாமே. இளமையானது – முகமது (ஸல்) அவர்கள் தான் இவ்வுலகிற்கு வந்த இறுதி நபி. அவர்களே முந்தைய நபிமார்களை மெய்ப்படுத்தி, ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுத்து மக்களுக்கு போதித்தார். ஆதலால், இஸ்லாமே அனைத்திலும் இளமையானது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியப் பாலைவனத்தில் ஊறத் தொடங்கிய இஸ்லாம் எனும் சத்திய ஊற்று, இப்போது உலகம் முழுவதும் கடலென பரவிக் கிடக்கின்றது. வாளால் பரவிய மார்க்கம் என்று ஊடகங்கள் ஓயாது ஒலித்தாலும், அதற்கான பதிலை தன்னகத்தே பிரதிபலித்துக் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க

டெஸ்டியூப் குழந்தைகளுக்கு எளிதில் வரும் ஆபத்து…!

Image
டெஸ்டியூப் குழந்தைகளுக்கு எளிதில் வரும் ஆபத்து…! இன்றைய உலகில் இயற்கையாக குழந்தைகளைப் பெற முடியாத பெற்றோருக்கு வரப்பிரசாதமாக இருப்பது In vitro fertilisation (IVF) என்று அழைக்கப்படும் முறை மூலம் உருவாக்கப்படும் குழந்தைகளாகும். இந்த முறையில் பெண்ணின் முட்டைக்கலமும் ஆணின் விந்துக்கலமும் உடலுக்கு வெளியே எடுக்கப்பட்டு பரிசோதனைக் குழாயில் அவை கருக்கட்ட அனுமதிக்கப்பட்டு உருவாக்கப்படும் நுகம், முளையம் என்ற நிலைக்கு வளர்ந்த பின் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தையாக வளரச் செய்யப்பட்டு,பிறப்பிக்கப்படுகிறது. இப்போ இந்த முறையால் பிறக்கும் குழந்தைகள் மத்தியில் சாதாரண குழந்தைகளை விட நோய்களின் தாக்கம் அல்லது உடற் கோளாறுகள் அதிகம் என்று கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். குறிப்பாக இவ்வகையான குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு உடல் நலக்குறைவு அல்லது மரபணு சார்ந்த கோளாறுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் இதய வால்வுப் பிரச்சனைகள், உணவுக்கால்வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் உதட்டுப் பிளவு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. எதிர்காலத்தில் இவ்வாறு IVF முறையில் குழந்தை பெற்ற

போலி போட்டோக்களுக்கு ஏமாறாதீர்

Image
போலி போட்டோக்களுக்கு ஏமாறாதீர்! – மியான்மர் புகைப்படங்களின் பின்னால் உள்ள புனைவுகள்! நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல் குர்ஆன் 49 : 6) மியான்மரில் வாழும் ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு ஆட்சியாளர்களாலும் புத்த பிட்சுகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக உலகளாவிய முஸ்லிம்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தமது ஆழ்ந்த கவலைகளையும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. மியான்மர் முஸ்லிம்கள் தொடர்பாக முஸ்லிம் ஊடகங்கள் தொடர்ச்சியாக தமது கரிசனையை வெளிப்படுத்தி வருகின்ற அதேநேரம் பலரும் இணையதளங்கள் வாயிலாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தமது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எதுவரை இறைவனை வணங்க வேண்டும்?

எதுவரை இறைவனை வணங்க வேண்டும் ?   சூபியாக்கள் என்ற பெயரில் மக்களை வழிகெடுக்கும் கூட்டம் தங்கள் வழிகேட்டுக்கான ஆதாரம் ஆதாரம் குர் ஆனிலும் நபிவழியிலும் உள்ளதாகக் கூறுவதை ஒரு தந்திரமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் வழிகேட்டுக்கு பயன்படுத்தும் வசனங்களில் 15:99 வசனமும் ஒன்றாகும். இது குறித்து ஒற்றுமை இதழில் பீஜே எழுதிய கட்டுரையை சகோதரர் இலங்கை எழுத்தாளர் மவ்லவி ஹபீல் அவர்கள் கம்போஸ் செய்து அனுப்பியுள்ளார். அதை நன்றியுடன் வெளியிடுகிறோம் “ உமக்கு யகீன் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக. ” ( 15:99) “ உலகில் உள்ள ஆன்மீக நெறிகளில் இஸ்லாம் தலைசிறந்த ஆன்மீக நெறியாகத் திகழ்கிறது. ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல்  நடப்பதை அடியோடு தடை செய்திருக்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றெல்லாம் நாம் பெருமிதம் கொள்கிறோம். முஸ்லிமல்லாத அன்பர்களும் கூட இதை ஒப்புக் கொள்கின்றனர் . ஆயினும் ,  முஸ்லிம் சமுதாயத்திலும் போலி ஆன்மீகவாதிகள் உருவானர்கள். அவர்களின் போலி ஆன்மீகக் கொள்கைக்கு குர்ஆனிலும் நபிவழியிலும் ஆதாரம் ஏதும் இல்லை என்ற போதிலும் , திருக்குர்ஆனின் சில வசனங்களைத் தங்கள் விருப்பம் போல் வளைத்து , 

ஆண்களை விட பெண்களுக்கு சொத்துரிமையில் பாதி என்பது சரியா?

ஆண்களை விட பெண்களுக்கு சொத்துரிமையில் பாதி என்பது சரியா ?  பாகப்பிரிவினை இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும். பலமுடையவர்களாகவும் ,  பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும் பலவீனர்களாகவும் ,  பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் நிலையில் - இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது என்ற நிலையில் - ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது. இஸ்லாம் மார்க்கத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை. இஸ்லாம்

அறிந்த செய்தியும் அறியாமை ரஷாதியும்.

அறிந்த செய்தியும் அறியாமை ரஷாதியும் இஸ்லாம் என்பது இறைவனுக்குரிய மார்க்கமாகும். இஸ்லாம் என்ற பெயரில் எந்த ஒரு சட்டத்தைக் கூறவும் நீக்கவும் இறைவனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இஸ்லாம் இறை மார்க்கம் என்பதன் உண்மையான பொருள், இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் மார்க்கமாகக் கருதப்படாது. ஒன்றைச் சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. (அல்குர்ஆன் 12:40) இறைத்தூதரும் கூட இறைவனுடைய கட்டளைகளைத் தான் மக்களுக்குப் போதிக்க வேண்டும். இதைத் தான் இறைவன் பின்வரும் வசனத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கட்டளையிடுகின்றான். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள் (அல்குர்ஆன் 7:3) (முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன் 6:1

ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை

ஸகாத்தை   நிறைவேற்றாதவர்களின்   மறுமை   நிலை ஸகாத்தை நிறைவேற்றுபவர்களின் சிறப்புகளையும் ,  மறுமையில் அடையவிருக்கும் நன்மைகளையும் நாம் விரிவாகப் பார்த்தோம். அதே நேரத்தில் ஸகாத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்பவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் தண்டனையையும் அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான் . இத்தகைய கொடும் தண்டனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டுமென்றால் நாம் அவசியம் ஸகாத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் . இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் எத்தனையோ செல்வந்தர்கள் ஸகாத்தைக் கணக்கிட்டு நிறைவேற்றும் விசயத்தில் பொடும்போக்கானவர்களாகவே இருக்கின்றார்கள் . மரணம் ஒரு மனிதனுக்கு எப்போது வரும் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது. செல்வ வசதியைப் பெற்றும் ஸகாத்தை நிறைவேற்றாமல் இருப்பவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும். ஸகாத்தை நிறைவேற்றி மறுமை வேதனைகளிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதோ ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை வேதனையைப் பற்றி திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்

ஸகாத் என்றால் என்ன?

  ஸகாத் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இக்கட்டுரையில் 1. ஸகாத் கட்டாயக் கடமை 2. ஸகாத்தின் இம்மை மறுமை பயன்கள் 3. ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் காணவிருக்கின்றோம். நம்முடைய இந்தத் தொகுப்பில் ஸகாத் பற்றி வரக்கூடிய பலவீனமான ஹதீஸ்களை நாம் குறிப்பிடவில்லை. இன்ஷா அல்லாஹ் வரக் கூடிய இதழ்களில் ஸகாத் பற்றிய பலவீனமான ஹதீஸ்களை ஒரு தொகுப்பாக நாம் வெளியிடுவோம். நம்முடைய சக்திக்குட்பட்டு, நம்முடைய ஆய்வின் அடிப்படையில் ஸஹீஹான ஹதீஸ்களையே இக்கட்டுரையில் நாம் இடம் பெறச் செய்துள்ளோம். ஸகாத் என்றால் என்ன? ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது. அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாக்கியங்களை அதிகப்படுத

காதல்+காமம்+ஊழல் = கத்தோலிக்கம்

காதல்+காமம்+ஊழல் = கத்தோலிக்கம் சிஸ்டர் ஜெஸ்மி எழுதி மலையாளத்திலும் பின் ஆங்கிலத்திலும் வெளியாகி பரபரப்பைத் தேடிக்கொண்ட புத்தகம் ‘ஆமென்’. ஜெஸ்மியின் தன்வரலாறு. பள்ளியில் படிக்கும்போதே தான் ஒரு கன்யாஸ்திரீ ஆகவேண்டும் என்று முடிவெடுத்த ஓர் இளம்பெண், எப்படி தன் விருப்பத்தை அடைந்தார், ஆனால் ஒரு கத்தோலிக்க கன்யாஸ்திரீயாக அவர் எவ்விதமான இன்னல்களை வாழ்வில் சந்திக்கவேண்டிவந்தது என்பதை இந்தப் புத்தகம் எடுத்துவைக்கிறது. புத்தகத்தை நான் மூன்று பகுதிகளாகப் பார்க்கிறேன். சிலிர்க்கவைக்கும் ஜெஸ்மியின் இயேசு அனுபவங்கள். ஒரு கன்யாஸ்திரீயாக ஆகவேண்டும் என்று அவருக்கு ஏற்படும் ஆன்மிக அனுபவத்தை இயேசுவுடனான திருமணம், இயேசுவுடன் கூடுவதுபோன்ற உணர்வு என்று உருவகிக்கும்போது கிட்டத்தட்ட ஆண்டாளை நெருங்குகிறார். புத்தகத்தின் கவித்துவமான கணங்கள் இவை. தொடர்ந்து அவர் இயேசுவுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவது, சண்டை போடுவது எல்லாம் சுவையாக ரசிக்கத்தக்கவை. அடுத்து, அவரது கன்யாஸ்திரீ வாழ்க்கைமுழுவதும் மடத்தில் உள்ள பெண்களாலும் ஆண்களாலும் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள். இதுபற்றி அறிந்திராதவர்களுக்கு இது அதிர்ச்சியைத் தரலாம். ஆனா

என்ன இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!

என்ன இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!  நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! என் மனைவி – மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!  மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த

ஸியாரத் என்றால் என்ன?

ஸியாரத் என்றால் என்ன? ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளை சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும். அவர்கள் மறுமை வாழ்கையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   கப்ருகளை ஸியாரத் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன. முதல்வகை: முஸ்லிம்களின் கப்ர்களை ஸியாரத் செய்வது முதல் வகை.  மண்ணறைகளுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச் செய்துவிட்டு வருதல் ஒரு வகையாகும். இதற்குப் பின்வரும் நபிமொழி ஆதாரமாக உள்ளது. (2208) ـ حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَ يَحْيَى بْنُ أَيُّوبَ وَ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى ابْنُ يَحْيَى: أَخْبَرَنَا. وقَالَ الآخَرَانِ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ شَرِيكٍ وَهُوَ ابْنُ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءِ ابْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللّهِ كُل

பாவங்களுக்குப் பரிகாரம் என்ன?

பாவங்களுக்குப் பரிகாரம் என்ன? பொதுவாக இது போன்ற தீமைகளைச் செய்துவிட்டால் மனம் திருந்தி இனி அந்தத் தவறு நம்மிடம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதோடு இத்தீமைகளை அழிக்கக்கூடிய தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்கங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும் . சிறு பாவங்களுக்குரிய பரிகராம் ஒருவர் உளூச் செய்துவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதால் அத்தொழுகை முன் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகிவிடும் . 1300حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ الثَّقَفِيِّ عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ الْأَسَدِيِّ عَنْ أَسْمَاءَ بْنِ الْحَكَمِ الْفَزَارِيِّ قَالَ سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ كُنْتُ رَجُلًا إِذَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا نَفَعَنِي اللَّهُ مِنْهُ بِمَا شَاءَ أَنْ يَنْفَعَنِي وَإِذَا حَدَّثَنِي أَحَدٌ مِنْ أَصْحَابِهِ اسْتَحْلَفْتُهُ فَإِذَا حَلَفَ لِي صَدَّقْتُهُ قَالَ وَحَدَّثَنِي أَبُو بَكْرٍ وَصَدَقَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْ

முஸ்லிமல்லாதவர் மரணித்த செய்தி கேட்டால் இன்னாலில்லாஹி கூறலாமா?

முஸ்லிமல்லாதவர் மரணித்த செய்தி கேட்டால் இன்னாலில்லாஹி கூறலாமா? நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்பது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்ற சொல்லின் நேரடிப் பொருளாகும். இதை எப்போது சொல்ல வேண்டும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான். ஓரளவு அச்சத்தாலும் ,  பசியாலும் செல்வங்கள் ,  உயிர்கள் ,  மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக !     தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் ;  நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் ''  என்று அவர்கள் கூறுவார்கள் .     அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும் , அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர் . திருக்குர்ஆன் 2:155, 156, 157

101 தலைப்புகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது

Image
101 தலைப்புகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது சைஃபுத்தீன் ரஷாதியுடன் கடந்த 26-8-2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர்பட்டிணத்தில் 101 தலைப்புகளில் விவாதம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. அல்ஹம்துலில்லாஹ்! விவாத ஒப்பந்த நகல்   Click Here to download