பெண்ணினத்திற்கு சிறப்பு சேர்த்த இஸ்லாம்

பெண்ணினத்திற்கு சிறப்பு சேர்த்த இஸ்லாம்

இவ்வுலுகத்தில் எந்த மதமும் பெண்களுக்கு கொடுக்காத சிறப் பையும் கண்ணியத்தையும் இஸ்லாமிய மார்க்கம் கொடுத் துள்ளது.

பெண்கள் இந்நாட்டின் கண்கள், என்றும் ஓர் ஆணுடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்றும் ஏட்டளவில் சொல்பவர்கள் இதைப்போன்றே அடுப்பூதும் பெண்க ளுக்கு படிப்பெதற்கு? என்றும் பெண் புத்தி பின்புத்தி என்றும் சொல்லி வைத்துள்ளனர். ஆனால் இதுபோன்று பெண்களை மட்டம் தட்டாமல் பெண்களை மிகச் சிறந்தவர்களாக இஸ்லாம் மதித்து வைத்துள்ளதோடு அவர்களை அவ்வாறு மதிக்குமாறும் கட்டளையிட்டுள்ளது.

நற்செய்தி

பெண்களை இழி பிறவிகளாகவும் பெண்களை போகப் பொருளாகவும் மட்டும் பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்க வும் செய்த கொடுமை நடந்தபோது பெண்களின் பிறப்பு ஓர் நற்செய்தி என்றும் அவர்களை உயிருடன் புதைப்பது மோசமான காரியம் என்றும் இஸ்லாம் கண்டித்தது.
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப் பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்தி லிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.
(அல்குர்ஆன் 16:58,59)

சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் சாதனம்

ஓர் ஏழைப் பெண் தன்னுடைய இரு பெண் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு என்னிடம் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்க ளைக் கொடுத்தேன். உடனே அவர் தம் குழந்தைகளில் ஆளுக்கொரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுவ தற்காக வாயருகில் கொண்டு சென்றார்.

அந்த ஒரு பேரீச்சம் பழத்தையும் அக்குழந்தைகள் கேட்டனர். உடனே அப்பெண் தாம் சாப்பிட நாடியிருந்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரண்டாகப் பிட்டு அவ்விரு குழந்தைகளிடையே பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். அவரு டைய நிலை என்னை ஆச்சரியப்படுத்தியது.
ஆகவே, அவர் செய்ததை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரு டைய இச்செயலின் காரணத்தால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான்'. அல்லது "அவரது இச்செயலின் காரணத்தால் அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்துவிட்டான்' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (5126)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண் குழந்தை களை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (5127)

பெண் குழந்தைகளை வெறுத்து, உயிருடன் புதைத்த காலத்தில் அவர்களை நல்ல முறையில் பாரமரித்தாலோ சொர்க்கம் உண்டு என்று இஸ்லாம் கூறு கிறது என்றால் பெண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுத் துள்ளது என்பதை அறியலாம்.

இருமடங்கு கூலி

1. வேதக்காரர்களில் ஒருவர் தமது (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத் தூதரையும் (இறுதித் தூதர்) முஹம்மதையும் நம்பிக்கை கொண்டார்.

2. ஓர் அடிமை அல்லாஹ்வின் கடமைகளையும் தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றினான்.

3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்கு கல்வி கற்பித்து, அதை யும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடி மைத்தளையிருந்து விடு தலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டவர். இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), நூல் :புகாரி (97)

அடிமையாக இருக்கும் பெண்களுக்குக்கூட நல்லொழுக்கம் கற்றுக் கொடுத்து அந்த பெண்ணை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்து, அவரையே திரும ணம் செய்து கொள்ளவும் இஸ்லாம் ஆர்வமூட்டி இவ்வாறு நடப்பவர்களுக்கு இரு மடங்கு கூலி உண்டு என்று சொன்னதிலிருந்து இஸ்லாம் பெண்களை எவ்வாறு மதித்துள்ளது என்பதை விளங்கலாம்.

சிறந்தவர்

ஒரு மனிதரை நல்லவரா? கெட்டவரா? என்று எடைபோட இஸ்லாம் பெண்களையே அளவு கோலாக வைத்துள்ளது. தம் மனைவியிடம் நல்ல குணத்தில் நடந்து கொள்பவர்தான் ஆண்களிலேயே சிறந்தவர் என்று இஸ்லாம் கூறுகிறது.

முஃமின்களில் முழுமையானவர் குணத்தால் அழகானவரே! உங்களில் சிறந்தவர் தம் மனைவியிடம் குணத்தால் சிறந்தவராக இருப்பவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதி (1082)

உலகத்தில் மிகச் சிறந்த பொருள்

இவ்வுலுகில் பயனளிக்கும் செல்வங்களில் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணவாள். மனிதன் சேமிக்கும் பொருள்களில் சிறந்த பொருளும் நல்லொழுக்கமுள்ள பெண்ணே ஆவாள்.
ஒரு மனிதன் சேமிக்கும் சொத்துக்களில் சிறந்த ஒன்றை அறிவிக் கட் டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு அதுதான் நல்ல பெண் மணி என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் :அபூதாவூத் (1417)
இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல பெண்ணாவாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல் : முஸ்லிம் (2911)

நட்புக்கு இலக்கணம்

உலகில் ஒருவன் அன்பும் பாசமும் காட்டுவதற்கு முதலிடம் தாய் என்ற பெண்தான் என்று இஸ்லாம் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பிறகு, உன் தந்தை'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (5971)

அமைதியின் இல்லம்

மனிதன் சோர்வடையும்போதும் நிம்மதி இழக்கும்போதும் அவனுக்கு மன அமைதியை தரும் இடம் பெண்தான்.
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக் காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தி யிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 30:21)

"அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.
(அல்குர்ஆன் 7:189)

இதைப்போன்று துன்பங்கள் நிறைந்து வரும் கணவனுக்கு ஆறுதல் சொல் லும் பெண்ணாகவும் மனைவி இருப்பாள்.

நபிகளாரை இறைத்தூதராக பிரகடனப்படுத்தும் திருமறைக்குர்ஆன் வசனங் கள் இறங்கியபோது பயந்து, தனக்கு ஏதும் நிகழந்து விடுமோ என்று பயந்த நபிகளாரை அவர்களின் மனைவி கதீஜா (ரலி) அவர்கள்தான் ஆறுதல் கூறி அவர்களின் ஐயத்தைப் போக்கி தேற்றினார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேத அறிவிப்பு (வஹீ) தூக் கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்க ளின் விருப்பமாயிற்று. (எனவே) அவர்கள் "ஹிரா' குகையில் தனித்திருந்து தம் வீட்டாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் வணக்க வழிபாடுக ளில் ஈடுபட்டு வந்தார்கள். அதற்காக (பல நாள்களுக்கு வேண்டிய) உண வைத் தம்முடன் கொண்டு செல்வார்கள்.
(அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாள்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் பெற்றுச் செல்வார்கள். இந்நிலை "ஹிரா' குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும்வரை நீடித்தது. (ஒருநாள்) அந்த வான வர் (ஜிப்ரீல்) நபி அவர்களிடம் வந்து, "ஓதுவீராக'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்று சொன்னார்கள் (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:

வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு "ஓதுவீராக'' என்றார். அப் போதும் "நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்றேன். உடனே அவர் என் னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு "ஓதுவீராக!'' என்றார்.
அப்போதும் "நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக கட்டித் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, "படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை "அலக்' (என்ற) நிலையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம்முடைய இறைவன் கண்ணியமானவன் எனும் இறை வசனங்களை (96:1-5) அவர் ஓதினார்.
(தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைத் (ரலி) அவர்களிடம் வந்து "எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்'' என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந் தவற்றைத் தெரிவித்துவிட்டு "எனக்கேதும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள்.
அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், "அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ் வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட் டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடு கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட் டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை)'' என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தை யின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள்.
"வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவி யவராக இருந்தார். மேலும், அவர் (அரபு மற்றும்) எபிரேய (ஹீப்ரு) மொழி யில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல் லாஹ் நாடிய அளவிற்கு ஹீப்ரு மொழியி(ருந்து அரபு மொழியி)ல் எழுது வார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், "என் தந்தையின் சகோதரர் புதல் வரே! உங்கள் புதல்வர் (முஹம்மத்) இடம் அவர் கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், "என் சகோதரர் மகனே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?'' எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) வரக்கா, "(நீர் கண்ட) இவர்தாம், (இறைத்தூதர்) மூசாவி டம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார்'' என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, "(மகனே!) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திட காத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே!'' என்றார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்?'' என்று கேட்க, வரக்கா, "ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக்கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுவப்பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன்'' என்று சொன் னார். அதன் பின் வரக்கா நீண்ட நாள் இராமல் இறந்துவிட்டார். (அந்த முதல் வஹீயுடன்) வேத அறிவிப்பு (சிறிது காலம்) நின்றுபோயிற்று.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் :புகாரி (3)

ஆலோசனையின் முன்மாதிரி

கணவனுக்கு சிக்கல் ஏற்படும்போது அரிய ஆலோசனை சொல்லும் மந்திரியா கவும் பெண் இருப்பாள். ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு நடந்த ஹுதைப் பிய்யா உடன்படிக்கையின் அடிப்படையில் அந்த வருடம் உம்ரா செல்ல முடியாமல் இடையில் நின்றுவிட்டதால் நபிகளார் அவர்கள் குர்பானி பிராணி கொண்டு வந்தவர் தம் தலையை மழித்துக் கொண்டு குர்பானி பிராணியை அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். ஆனால் சோகத்தில் இருந்த நபித்தோழர்கள் யாரும் இக்கட் டளையை கண்டு கொள்ளவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நபிகளாரின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கொடுத்த ஆலோசனை சிறந்த பயனைத் தந்தது.

... பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, "எழுந்து சென்று குர்பானி கொடுத்துவிட்டு தலை முடி களைந்து கொள்ளுங்கள்'' என்று உத்தரவிட்டார் கள். ஆனால், அவர்கüல் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர் கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்கüல் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கüடம் சென்று மக்கüடமி ருந்து தாம் சந்தித்த அதிருப்தியை(யும், அதனால் அவர்கள் தமக்குக்

கீழ்ப்படியாமலிருப்பதையும்)சொன்னார்கள்.

உடனே உம்மு சலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி கûளையப்) புறப்படுங்கள். நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி ஒட்டகங்களை அறுத்துவிட்டு உங்கள் நாவி தரை அழைத்து, அவர்
உங்கள் முடியைக் களையும்வரை அவர்கüல் எவருடனும் ஒரு வார்த்தை யும் பேசாதீர்கள்'' என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவி தரை அழைத்துத் தலை முடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கüல் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித் தோழர்களும் எழுந்து சென்று தியாகப்பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு (தியாகப் பிராணிகளை அறுக்கவும் முடிகளை யவும்) சென்றனர்.
அறிவிப்பவர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), நூல் : புகாரி (2731,2732)

முஃமின்களின் முன் மாதிரி

சொர்க்கத்தை பெறுவதற்காக இறைவனுக்கு தியாகம் செய்தவர்களின் முன்மா திரியாக அல்லாஹ் இரு பெண்களை சுட்டிக்காட்டுவது பெண்ணினத்தின் சிறப்பை எடுத்துக் காட்டும் ஒரு மகுடமாக சொல்லலாம்.

"என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்பு வாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என் னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பா யாக!'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமா கக் கூறுகிறான்.
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறுகி றான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.
அல்குர்ஆன் 66:11,12)

எனவே பெண்கள் என்பவர்களை போகப் பொருளாக பயன்படுத்தாமல் குணம் நிறைந்த மங்கையாகவும் சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் அரிய பொக்கிஷ மாகவும் நினைத்து பெண் குழந்தைகளை மகிழ்வோடு வளர்ப்போம்.

- எஸ்.கே. மைமூனா, எம்.ஐ.எஸ்.ஸி., 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை