Posts

Showing posts from March, 2013

திரும்பவும் வராதா என்று போலீஸார் ஏங்கிய அந்த மூன்று நாட்கள்!

திரும்பவும்   வராதா   என்று   போலீஸார்   ஏங்கிய   அந்த   மூன்று   நாட்கள் ! தலைப்பைக்   கண்டவுடன்   போலீஸார்   என்ன   ஏக்கம்   கொண்டார்கள் ?  திரும்பவும்   வராதா   என்று எந்த   மூன்று   நாட்கள்   குறித்து   ஏங்கினார்கள் ?  அளவுக்கதிகமாக   மாமூல்   வசூல்   செய்யப்பட்ட   நாளா அவர்கள்   ஏங்கும்   நாள் ?  என்ற   சந்தேகமெல்லாம்   உங்களது   உள்ளத்தில்   எழலாம் . போலீசாரின்   ஏக்கம்   உண்மையாகவே   மதிப்பளிக்கக்கூடிய   வகையிலான   நியாயமான   ஏக்கம்தான் என்பதை   அதற்கான   செய்தியைப்   பார்த்து   விளங்கிக்   கொள்ளலாம் .  போலீஸார்   ஏங்கியதைப்போல ஒவ்வொரு   தமிழக   மக்களும்   அந்த   மூன்று   நாட்களைப்போலவே   வருடத்தின்   மற்ற  365  நாட்களும் ஆகிவிடக்கூடாதா   என்று   ஏங்கக்கூடிய   அளவுக்கு   திரும்பவும்   வராதா   என்று   போலீசார்   ஏங்கிய அந்த   நாட்கள்   அமைந்துவிட்டன . அதுகுறித்து   தகவல்கள்   இதோ  :   கடந்த   ஜனவரி   மாதம்   டாஸ்மாக்   மதுக்கடைகளுக்கு   தொடர்ச்சியாக   மூன்று   நாட்கள்   விடுமுறை விடப்பட்டது .   ஜனவரி  25, 26, 27 ( மீலாடி   நபி ,  குடியரசு   தினவிழா ,  வள்ளலார்   த

ஹைதராபாத் குண்டு வெடிப்பும் - முஸ்லிம்களுக்கு எதிரான சதியும்!

ஹைதராபாத் குண்டு வெடிப்பும் - முஸ்லிம்களுக்கு எதிரான தமிழக பத்திரிகைகளின் சதியும்! ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் குண்டு வெடித்து 17 பேர் பலியாயினர். இந்த குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் யார்? என புலனாய்வு செய்து கண்டு பிடிப்பதற்கு பதிலாக எடுத்த எடுப்பில் முஸ்லிம்கள்தான் இதைச் செய்தனர் என்று முடிவு செய்துவிட்ட போலீசாரும், ஊடகங்களும் இது சம்பந்தமான பெய்ச் செய்திகளை கசிய விட்ட வண்ணம் உள்ளனர். கோவையில் இருந்து கேரளா நோக்கி மினி லாரி ஒன்று சென்றதாம்! அந்த லாரியில் 5 டன் அம்மோனியம் நைட்ரேட் இருந்ததாம்! அந்த மினி லாரியை கேரள மாநில மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல்கரிம் என்பவர் ஓட்டிச் சென்றாராம்! இந்த லாரியை மடக்கிப் பிடித்த போலீசார் கோவை - கேரளாவைத் தகர்க்கும் சதித் திட்டத்தில் இந்த வெடி மருந்துகள் கடத்தப்பட்டதா? என்பது குறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என 25-02-13 அன்று தினத் தந்தி செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தி மூலம் ஹைதராபாத்தில் குண்டு வைத்தது முஸ்லிம்கள்தான் என பிற சமூக மக்களிடம் பதிய வைத்தாயிற்று. ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கும், அப்துல் கரிமுக்கும் எந்த சம்பந்

தனி ஈழம் சாத்தியமா?

தனி ஈழம் சாத்தியமா? போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களின் முதல் கோரிக்கையாக தனிஈழம் என்பதை முன்வைக்கின்றனர். அதாவது இலங்கையின் வடக்கு மாகாணத்தை  இலங்கையிலிருந்து பிரித்து அதைத் தமிழர்களின் தனிநாடாக ஆக்கவேண்டும் என்பது முதல்கோரிக்கை.  அமெரிக்கா  கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க  வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும். இதில் முதலாவது கோரிக்கை எள்முனையளவும் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. எந்தநாடும் தனது நிலப்பரப்பைப் பிரித்து இன்னொரு நாட்டை ஏற்படுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்ள ஒப்புக் கொள்ளாது. தனிநாடு கோருவோரின் கடுமையான பதிலடி காரணமாக ,  ராணுவமும் காவல்துறையும் சோர்வடைந்து இனிமேல் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்ற அளவுக்கு பலவீனம் அடையும்போது மட்டுமே வேறுவழி இல்லாமல் தொலைந்து போகட்டும் என இதற்கு ஒப்புக் கொள்வார்கள். அல்லது உலகநாடுகள் அனைத்தும் அல்லது வல்லரசுநாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடும்விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கும் அளவுக்கு ஒருநாடு தனிமைப்படுத்தப்பட்டால் அப்போது வேறுவழியில்லாமலும் ,  எஞ்சிய பகுதியையாவது தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தனிநா

TNTJ நிர்வாகிகளிடத்தில் இருக்க கூடாத பண்புகள்(வீடியோ)

Image
TNTJ நிர்வாகிகளிடத்தில் இருக்க கூடாத பண்புகள்(வீடியோ)

மதுவை ஒழிக்க வழி என்ன? - இஸ்லாம் கூறும் தீர்வு!

மதுவை   ஒழிக்க   வழி   என்ன ? -  இஸ்லாம்   கூறும்   தீர்வு ! மதுவை   முற்றிலுமாக   ஒழித்துக்கட்டுங்கள் ;  அதனால்தான்   நாட்டில்   பல   துன்பங்களும் ,  துயரங்களும் நிகழ்கின்றன   என்று   ஆட்சியாளர்களிடத்தில்   கோரிக்கை   வைத்தால் ,  அவர்கள்   கூறும்   பதில் , “ டாஸ்மாக்   கடைகளை   இழுத்துப்பூட்டினால் ,  கள்ளச்சாராயக்கடைகளை   திறந்துவிடுவார்கள் . அதனால்தான்   நாங்களே   சாராயக்கடைகளை   திறந்து   வியாபாரம்   பார்க்கின்றோம் ”  என்பதாக உள்ளது .   உண்மையிலேயே   இந்த   மதுவை   ஒழிக்க   வழியில்லையா ?  என்ற   ஏக்கம்   பலரது   உள்ளத்திலும் நீண்ட   நெடுங்கனவாக   உள்ளது .  அதற்கு   இஸ்லாம்   அழகான   தீர்வை   வழங்குகின்றது .    மது   அருந்துவது   ஒரு   கேவலமான   செயல்   என்று   பார்க்கும்   நிலைமாறி ,  அது   ஒரு பாராட்டத்தக்க ,  போற்றத்தக்க   ஒரு   சாதனை   என்பது   போல   நிலைமையை   மாற்றி   வைத்துள்ளனர் ஆட்சியாளர்கள் .   ஆம் !  தொலைக்காட்சி   சேனல்களில்   குடிமகன்கள்   பேட்டி   கொடுக்கின்றனர் .   ·           மூன்று   நாட்கள்   தொடர்ந்து   கடைகளைப்   பூட்டினால்   நாங்கள்   எங்குபோய்  

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு பகிரங்க அறைகூவல்!

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு பகிரங்க அறைகூவல்! இலங்கை அதிபர் ராஜபக்சே பிரபாகரன் மகனான பச்சிளம் சிறுவனுக்கு பிஸ்கட் கொடுத்து, பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனை படுகொலை செய்துள்ளார். இந்த சிறுவனைக்கூட விட்டு வைக்காமல் கொலை செய்த ராஜபக்சேவை சர்வேதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகளுக்கு ஆதாரவாக பச்சைத் தமிழர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் குரல் கொடுத்து வருகின்றனர்.  ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு அப்பாவி மக்களை கொன்று குவித்தது கண்டிக்கத்தக்கதுதான். அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதைவிட பன்மடங்கு படுகொலைகளை செய்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அறிவிஜீவிகளது கண்களுக்கு கொலைகாரர்களாக ஏன் தெரியவில்லை என்பதுதான் நமது கேள்வி.  இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் காத்தான்குடி என்ற ஊரில் தொழுது கொண்டிருக்கும்போது பள்ளிவாசலுக்குள் புகுந்து படுகொலை செய்த விடுதலைப்புலிகளின் தீவிரவாதச் செயல் பச்சைத்தமிழர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?

நிர்மூலமான இஜ்மா நீர்த்துப் போன ஸைபுத்தீன்

Image
நிர்மூலமான   இஜ்மா   நீர்த்துப்   போன   ஸைபுத்தீன் எண்பதுகளின் இறுதிக் கட்டத்தில் தமிழகமெங்கும் தவ்ஹீத் எனும் தீப்பந்தம் பற்றி எரிந்தது. அது காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்த போது ,  அதை அணைப்பதற்கு ,  அந்த சத்தியக் கொள்கையை அழித்தொழிப்பதற்கான முயற்சிகளும் அதே வேகத்தில் நடைபெற்றன. மேலப்பாளையம் ஆலிம்கள் நிறைந்த ஊர் என்பதால் அதன் வேகம் மற்ற இடங்களைக் காட்டிலும் சற்றுக் கடுமையாக இருந்தது. அதன் ஒரு கட்டமாக தவ்ஹீதை எதிர்க்கும் நோக்கத்தில் இங்கு 06.12.1988 ல் புதுமனைப் பள்ளிவாசலில் மஜ்லிஸ் உலமா சார்பில் , " மத்ஹபுகள் மாநாடு '' நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு ஸைபுத்தீன் ரஷாதி அழைக்கப்பட்டிருந்தார். அங்கு போய் தனது சவால் படலத்தை ,  சவடால் படலத்தை அரங்கேற்றத் தொடங்கினார். " எங்காவது பி.ஜே. சிக்குவான்னு எனக்கு ஆசை '  என்று பேசினார். பேசி முடித்ததும் அப்போது தவ்ஹீது ஜமாஅத்தின் பொறுப்பில் இருந்தவர்கள் அவரைச் சுற்றி முகாமிட்டனர் ,  முற்றுகையிட்டனர். அதன் பின்னர் கடிதப் போக்குவரத்திலேயே காலம் தள்ளிவிட்டு ஓட்டம் எடுத்தார். இதுபோன்று விருதுநகர் ,  காயல்பட்டணம் ,  திருச்சி என ப

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள்

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றக் கூடிய பல சகோதரர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் தாமதமாக வருவதை வழமையாகக் கொண்டுள்ளனர். பாங்கு சொல்லப்பட்ட பிறகும் இகாமத் சொல்லும் வரை வீணான காரியங்களிலும் ,  தேவையற்ற பேச்சுக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். இகாமத் சொன்னவுடன் வேக ,  வேகமாக உளூச் செய்து விட்டு மூச்சிறைக்க தொழுகைக்கு ஓடிவருவார்கள். அதுமட்டுமில்லாமல் சில சகோதரர்கள் இகாமத் சொல்லப்பட்ட பிறகு தான் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றச் செல்வார்கள். அவர்கள் தங்களது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றி ,  பிறகு உளூச் செய்து விட்டு வருவதற்குள் தொழுகை முடிந்துவிடும். அல்லது இமாம் அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது தொழுகையில் வந்து இணைவார்கள். இது போன்ற வீணாண காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். தொழுகைக்கு முன்கூட்டியே நாம் தயாராவதால் ஏராளமான நன்மைகளை நாம் அடைகின்றோம். இது அல்லாஹ் நமக்குச் செய்த பாக்கியமாகும். தொழுகைக்கு நாம் முன்கூட்டியே வருவதால் எவ்வளவு நன்மைகளைப் பெறுகிறோம் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.

அப்சல்குரு தூக்கு அப்பட்டமான சட்டமீறல்

Image
அப்சல்குரு   தூக்கு   அப்பட்டமான   சட்டமீறல் ( இந்தக் கட்டுரை ,  அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை விமர்சித்து டி.ஆர். அந்தியார்ஜுனா அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமாகும். கட்டுரையாளர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் மத்திய அரசாங்கத்தின் முன்னாள் சொலிஸிட்டர் ஜெனரலும் ஆவார். இவரின் கட்டுரை பிப்ரவரி  19, 2013  இந்து நாளேட்டில் வெளியானது.) பிப்ரவரி  9, 2013  அன்று மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமான செயல் ஆகும். ஆகஸ்ட்  4, 2005 ம் ஆண்டு அப்சல் குருவுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.  இதன் பின்னர் அவர் நவம்பர்  8, 2006 ல் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். ஏழு வருடங்கள் அவருடைய கருணை மனு கண்டு கொள்ளப்படாமல் கிடப்பில் கிடந்தது. இப்போது அது மறுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தனக்கு வாழ்வா ?  சாவா என்று எந்த ஒரு முடிவும் தெரியாமல் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் கடுந்துயருக்கும் கவலைக்கும் ஆளாயினர். தூக்குத் தண்டனை கைதிகளும் ,  அவர்களது குடும்பத்தாரும் படுகின்ற அவஸ்தை ,  அல்லல் காரண