Posts

Showing posts from January, 2022

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்

  தொழுகையின் அமர்வில்   விரலசைத்தல் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நாம் இதைக் கூறி வருகிறோம். இது, தமிழக முஸ்லிம்களுக்கு முன்னர் கேள்விப்படாத ஒரு நடைமுறையாக இருந்ததால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். விரல் அசைப்பதால் மற்றவர்களின் தொழுகை பாதிக்கப்படுகின்றது என்பது போன்ற காரணங்களைக் கூறி இந்த நபிவழியை அவர்கள் மறுத்து வந்தனர். இது கருத்தில் கொள்ளத் தகுதியில்லாத வாதம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த வாதம் மக்களிடம் எடுபடாமல் போன பின், விரல் அசைத்தல் தொடர்பான ஹதீஸ் பலவீனமானது என்று கூறி புதுப்புது காரணங்களைக் கூறலானார்கள். அதற்கேற்ப சில ஆதாரங்களையும் முன் வைத்தனர். இது பரிசீலிப்பதற்குத் தகுதியுடைய வாதம் என்பதால் இவ்வாறு கூறுவோரின் அனைத்து வாதங்களையும் திரட்டி மறு ஆய்வு செய்தோம். அவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் அதைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்து