சுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வு
சுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வு நூலின் பெயர் : ஸுப்ஹான மவ்லிது பக்கங்கள் : 64 விலை ரூபாய் : 12.00 ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் Download this Book in PDF ஸுப்ஹான மவ்லிது தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமைகளான தொழுகை , நோன்பு , ஸகாத் , ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து மவ்லிதுகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை நாம் அறியலாம் . நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பெயரால் ஸுப்ஹான மவ்லிது , பர்ஸஞ்சி மவ்லிது , புர்தா போன்ற பாடல்கள் , நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பேரர்கள் ஹஸன் , ஹுஸைன் ஆகியோர் பெயரால் மவ்லிதுகள் , அப்துல் காதிர் ஜிலானி என்பவரின் பெயரால் முஹ்யித்தீன் மவ்லிது , யாகுத்பா , நாகூர் ஷாகுல் ஹமீது என்பவரின் பெயராலும் , அந்தந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் பெயராலும் வகை வகையான மவ்லிதுகள் உலா வர...