ஹதீஸ் கலை.
ஹதீஸ் கலை - அறிமுகக் குறிப்பு ( அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் இருபதாண்டு காலமாக மக்கள் ஹதீஸ்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றனர். புகாரி முஸ்லிம் திர்மிதீ போன்ற ஹதீஸ் நூற்களின் தமிழாக்கங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஆலிம்களின் வாய்களிலிருந்து உதிர்ந்தவை எல்லாம் ஹதீஸ் என்ற நிலை மாறி நீங்கள் சொன்னது சரியான ஹதீஸா ? பலவீனமான ஹதீஸா ? என்று கேட்கும் காலம் வந்திருக்கின்றது. உண்மையில் இது பாராட்டத்தக்க அம்சமாகும். மக்கள் இந்த ஹதீஸ் துறையில் ஓரளவு ஈடுபாடு காட்டி வருகின்றார்கள் என்பதையே இது காட்டுகின்றது. எனினும் ஹதீஸ் துறையில் ஸஹீஹ் என்றால் என்ன ? லயீஃப் என்றால் என்ன ? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்றால் என்ன ? என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் மிக சொற்பமே! ஏகத்துவப் பணிகளில் ஈடுபாடு கொள்வோர் ஹதீஸ் துறையில் உள்ள இந்த கலைச் சொற்களை நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். இந்த நோக்கத்தை நிறைவு செய்யவே இந்தத் தொடர்! ஹதீஸ் கலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள் செயல்கள் அங்கீகாரங்கள் ஆக...