Posts

மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம்....!!!!

மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம்....!!!! அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! படிக்கத்தவறாதீர்!  மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம்! "மார்க்கம் ரீதியாக மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்று அறுதியிட்டு கூறலாம்" என்று கூறும் இக்கட்டுரை - 'எங்கே கிறித்தவம்? யார் கிறித்தவர்?' என்ற தலைப்பில் தமிழகச் திருச்சபையின் தனிப்பெரும் அரசியல் ஆன்மீக சமூக வார இதழான 'நம்வாழ்வு' ஜனவரி 01-08, 2006-ல் பிரசுரமானது. 'இயேசுவின் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே' என்ற வார்த்தைகளை அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரார்த்தனைக் கூட்டங்களிலும் நாம் அடிக்கடி கேட்டு இருக்கின்றோம். இந்த வார்த்தைகள் உரைப்பவர்களின் உதடுகளிலிருந்து வெளிப்பட்டு, கேட்பவர்களின் செவிகளோடு மட்டும் நின்று விடுகிறது என்பதே கசப்பான உண்மை. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மதம் மாறியவர்களே. இருந்தபோதும் முஸ்லிம் மதத்தில் காணப்படும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் 'இறைவனின் மக்கள் நாம் அனைவரும்' என்ற உணர்வும் கிறிஸ்தவ மதத்தில் காணப்படுவதில்லை.

மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?

மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா ? ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா ?  என்பதில் அறிஞர்களிடையே இரண்டு கருத்து நிலவுகின்றது. எனவே இது பற்றி நாம் விரிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத்  9229, 9727, 9485 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக ஸாலிஹ் என்பார் அறிவிக்கின்றார். தல்அமா என்பவரால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான இவர் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள இயலாது. மேற்கண்ட ஹதீஸ் வேறு அறிவிப்பாளர்கள் வழியாக அஹ்மதில் ( 7443)  பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை அபூஹுரைரா (ரலி) கூறியதாக அபூ இஸ்ஹாக் அறிவிக்கின்றார். அபூ இஸ்ஹாக் கூறியதாக அறிவிப்பவரைப் பற்றிக் கூறும் போது , " ஒரு மனிதர் அறிவித்தார் ''  என்று கூறப்பட்டுள்ளது.

முஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்

முஹர்ரம் பத்தும்   மூடப் பழக்கங்களும் வானங்களையும் ,  பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. ( அல்குர்ஆன்  9:36) ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கில் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதமும் புனிதமிக்க நான்கு மாதங்களில் ஒன்றாகும். இப்புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற நோன்பை நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறா ô ர்கள்: நபி (ஸல்) அவர்களிடம் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக சிறந்த தொழுகை எது ? ரமலான் நோன்பிற்கு அடுத்தபடியாக சிறந்த நோன்பு எது ?  என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் , கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக சிறப்பிற்குரியது இரவின் நடுப் பகுதியில் (எழுந்து) தொழுகின்ற தொழுகையாகும். ரமலான் நோன்பிற்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பிற்குரிய நோன்பு அல்லாஹ் வுடைய மாதமாகிய முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும் என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம்  1983

கதிரவனை மறைக்கும் கர்பலா காரிருள்

கதிரவனை மறைக்கும் கர்பலா காரிருள் இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது. ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து ,  மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி ,  அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள். மூஸா நபியை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு விட்டது. கதிரவனை மறைக்கும் கிரகணத்தைப் போல ஆஷூரா தினத்தை ,  கர்பலாவும் ,  அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷூரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் பைத்தியக்காரத்தனமான செயல்பாடுகளையும் ,  இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும் ,  மாற்று மத அனுஷ்டானங்களையும் இப்போது பார்ப்போம்.

ஆஷூரா நாள் [மூஸா நபி வறலாறு ]

ஆஷூரா நாள் [மூஸா நபி வறலாறு ] முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் சிறந்த மகத்தான ஒரு நாளாகும். ஆஷூரா நாள் என்றழைக்கப்படும் அந்த நாள் எப்படிப்பட்டது ?  அது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு இவ்வாறு சொல்கின்றது. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள் ?''  என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே ,  மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள் ''  என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் "நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் ''  என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி  3397

யூத வேர்களில் ஊதயமான ஷியா விருட்சம்

யூத வேர்களில் ஊதயமான ஷியா விருட்சம் "ஈரானில் இமாம் குமைனியின் இஸ்லாமியப் புரட்சி', "ஈரான் இஸ்லாமிய வீராங்கனைகளின் ஆயுதப் பயிற்சி' என்ற புகழார வசனங்கள் தமிழக இஸ்லாமிய ஏடுகளில் மாறி மாறி எழுதப்பட்டன. தற்போது அவை நூல் வடிவில் மாறி உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வெளியிடும் இயக்கங்கள் ஈரானை இமயத்தில் கொண்டு போய் நிறுத்தின. அப்போதே அந்த இயக்கங்களின் ஆபத்துக்களை உணர்ந்து ஈரானை ஆளும் ஷியாக் கொள்கையானது குர்ஆன், ஹதீசுக்கு எதிரான கொள்கை என்பதை தவ்ஹீது ஜமாஅத் தனது ஏடுகளில் இனம் காட்டியது. இன்றளவும் ஈரானை இஸ்லாமிய நாடு என்றும் ஷியாக்களின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்றும் பறை சாற்றுபவர்கள் தமிழகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். தவ்ஹீது ஜமாஅத்திற்கு எதிரான பரேலவிஸ ஆலிம்களுடன் இவர்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டு தங்கள்      குருட்டுத் தனத்தில் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இயேசு இறை மகனா ????

இயேசு இறை மகனா ???? பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடைய எது சரியான வழி என்பதைக் கிறித்தவ சமுதாயத்தினர் அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டதே "இயேசு இறை மகனா?" என்ற கட்டுரை.. இயேசு (ஈஸா நபியவர்கள்) கடவுளின் தூதர் தானே தவிர அவர் கடவுளின் குமாரர் அல்லர்'' என்பதை பைபிளின் சான்றுகளிலிருந்தே இந்த கட்டுரை விளக்கும். இக்கட்டுரையை விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடும் ஆய்வு நோக்கோடும் வாசிக்கும் கிறித்தவச் சகோதரர்கள ் இந்த உண்மையைத் தெளிவாக உணர்வார்கள். இன்ஷா அல்லாஹ். இயேசு என் குமாரன்' எனக் கர்த்தர் கூறுவதால் கடவுளின் மகனா?: * இயேசுவைத் தமது குமாரன் என்று கர்த்தரே குறிப்பிட்டுள்ளதாக பைபிள் கூறுகிறது. * இயேசுவும், கர்த்தரும் ஒன்றுக்குள் ஒன்று என பைபிள் கூறுகிறது. * பைபிள் இயேசுவை ஆண்டவர் என்கிறது. * இயேசு தந்தையின்றிப் பிறந்தார். * இயேசு ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார். * இறந்த பின் இயேசு உயிர்த்தெழுந்தார். * இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்.