ஷபே பராஅத் சாந்த நாளா? சாப நாளா?
ஷபே பராஅத் சாந்த நாளா? சாப நாளா? ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என அனைவராலும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன. முன்னோர்கள் சிலரால் வழிவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதைத் தவிர, குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள் கூட ஆராயவில்லை. இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் அமல்கள் ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் காட்டித்தந்த அமல்கள், வணக்க வழிபாடுகள் (இபாதத்) ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள் மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன. அமல்களை நிர்ணயிக்க வேண்டியது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தானே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித்தோன்றல்களோ அல்ல! துரதிஷ்டவசமாக இன்று இந்நிலை முஸ்லிம்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. மார்க்கத்தில் எல்லை மீறிச் செல்கின்ற போது தனி மனித வழிபாடும், வழிகேடுகளும், மூட நம்பிக்கைகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறா