தேனீக்களின் வழி அறியும் திறன் தேனீக்கள் மூலம் கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற செய்தி தமிழில் எல்லா ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு வெளிவந்தது. அச்சு அசலாக ஒரு வார்த்தை கூட மாறாமல் அனைத்து ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு தான் இச்செய்தி வெளியானது. ஏதோ ஒரு ஊடகத்தில் வந்ததை அப்படியே காப்பி அடித்து எல்லோரும் பயன்படுத்தியுள்ளனர். ஜாக்ரப், மே 23- வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அய்ரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, அடர்ந்த பசுமை காடுகளும், பெரிய ஏரிகளும் உடையது. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நாட்டில், 1990இல் பால்கன் போரின்போது புதைத்து வைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. சுமார் 750 சதுர கி.மீ. பரப்பளவுக்கு கண்ணி வெடிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொத்தம் 90,000 வெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றை அகற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தாலும், பலனளிக்கவில்லை. கண்ணிவெடியில் சிக்கி இதுவரை 2500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்நாட்டில் உள்ள ஜாக்ரப் பல்கலைக்க