பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை
பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்களிடம் பரேலவிஸம் வேரூன்றியது போலவே தமிழகத்திலும் அது வேரூன்றி ஆலகால விஷ விருட்சமாக விரிந்து கிடந்தது. அதனுடைய விஷக் கனிகள் தான் விண்ணைத் தொட்டு நிற்கும் மனாராக்களைக் கொண்ட தர்ஹாக்கள்! அவற்றைப் போற்றிப் புகழ்கின்ற தரீக்காக்கள்! சூபிஸ தத்துவங்கள்! மவ்லிதுகள்! இருட்டு திக்ருகள்! வலிமார்கள் இறந்த பின்னும் உயிருடன் இருக்கிறார்கள் , எனவே அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்ற நம்பிக்கைகள் ! இவையெல்லாம் குர்ஆன் , ஹதீஸுக்கு மாற்றமானவை என்ற சிந்தனை ஓட்டம் இறையருளால் நம்முடைய உள்ளங்களில் தோன்றியது. நாங்கள் சங்கரன்பந்தல் மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் , தீன் விளக்கக் குழு என்ற பெயரில் வாரந் தோறும் வெள்ளிக்கிழமை இரவு அன்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள பரவலான மதரஸாக்களிலிருந்து ஆலிம்களை உரையாற்ற அழைப்போம் . கூட்டம் முடிந்த பின் விடிய விடிய அவர்களிடம் , இந்தச் சிந்தனை ஓட்டத்தைப் பிரதிபலித்தோம். இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா ? என்று கேட்டோம் . சிலரிடத...















































































































Comments