அன்புடன் அழைக்கிறோம்


அன்புடன் அழைக்கிறோம்
ஷிர்க் ஒழிப்பு மாநாடு
இடம்: திருச்சி
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜனவரி 31
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு
அன்பிற்குரிய பெரியோர்களே! தாய்மார்களே! சகோதரர்களே! சகோதரிகளே!
நாங்கள் உங்களிடம் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசப் போகிறோம். அல்லாஹ்விற்காக இதனைத் தொடர்ந்து படியுங்கள்.
அன்பிற்குரியவர்களே! நாம் கொதிக்கின்ற தண்ணீரினாலும், எரிகின்ற நெருப்பினாலும் ஏற்படும் பாதிப்புகளையும் கொடுமைகளையும் அறிந்திருக்கின்றோம். பார்த்திருக்கின்றோம்.


கொதிக்கும் வெந்நீர் நம்மீது கொட்டிவிட்டால், அல்லது நமது அன்புக் குழந்தைகள் மீது கொட்டிவிட்டால் அந்த வேதனையை நம்மால் தாங்க முடியுமா?
அன்பிற்குரியவர்களே! கொதிக்கின்ற நீராலும், எரிகின்ற நெருப்பாலும் பட்ட காயங்களை, கடும் வேதனைகளை இவ்வுலகில் மருந்திட்டு ஆற்றிட முடியும்.
ஆனால் மறுமையில்...!
ஆம்! மறுமையில் இவ்வுலக நெருப்பை விட 70 மடங்கு அதிகமான நரக நெருப்பு காத்திருக்கின்றது. கொதிக்கும் நீரும், சீழும் சலமுமே நரகத்தில் குடிபானமாகும். அங்கே நெருப்பு ஆடைகளும், சம்மட்டி அடிகளுமே நிறைந்திருக்கும். அங்கே வாழவும் முடியாது, சாகவும் முடியாது.
இந்த நரக நெருப்பில் நிரந்தரமாக தங்கப் போகிறவர்கள் யார் தெரியுமா சகோதரர்களே! அல்லாஹ்விற்கு இணைகற்பித்தல் என்ற பெரும் பாவத்தைச் செய்தவர்கள் தான்!
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை.
அல்குர்ஆன் 5:72
யார் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக இறக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி (1238)
இந்த இணை கற்பிக்கும் பாவம் இறைவனுக்குச் செய்யும் மாபெரும் அநியாயமாகும்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்.
(அல்குர்ஆன் 31:13)
ஒருவன் இறைவனுக்கு இணை கற்பித்த நிலையில் மரணித்து விட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான்.
தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
அல்குர்ஆன் 4:48
அன்பிற்குரிய பெரியோர்களே! தாய்மார்களே! சகோதர, சகோதரிகளே! இப்போது சிந்தித்துப் பாருங்கள். யாருமே காப்பாற்ற முடியாத அந்த மறுமை நாளில் நம்மையும், நம்முடைய குடும்பத்தையும் நிரந்தர நரகத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது இந்த இணைகற்பிக்கும் பாவம்தான்.
இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கவழிபாடுகளை இறைவன் அல்லாதவர்களுக்குச் செய்வதும், அல்லாஹ்வின் வல்லமையைப் போன்று, பண்புகளைப் போன்று இறைவன் அல்லாதவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், இறைவ னல்லாதவர்களின் கருத்துக்களை மார்க்கச் சட்டமாகப் பின்பற்றுவதுமே இணைகற்பிக்கும் பாவமாகும்.
இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தில் தர்ஹாவழிபாடுகள், தரீக்கா வழிகேடுகள், கொடிமரத்தை வழிபடுதல், தாயத்து, தகடுகளைத் தொங்கவிடுதல், மவ்லிதுகள், ஸலாத்துன் நாரியா, சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புதல், ஜோசியம் பார்த்தல், மைபோட்டு பார்த்தல், பால் கிதாப் பார்த்தல், சகுனம் பார்த்தல், திருமணப் பந்தலில் வாழை மரத்தைக் கட்டிவைத்தால் குழந்தை பாக்கியம் உருவாகும் என்ற நம்பிக்கை, ஆரத்தி எடுத்தல், கழித்து வைத்தல், தாலிகட்டுதல், படியரிசி போடுதல், புதுவீடு கட்டும் போது நாள் செய்வது, சிக்கன் பாக்ஸ் நோய் ஏற்பட்டால் கோயிலில் சென்று மந்திரிப்பது போன்ற எண்ணற்ற இணைவைப்புக் காரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அன்பிற்குரியவர்களே! இந்த இணைவைப்புக் காரியங்கள் நம் மறுமை வாழ்வைப் பாழாக்கி நம்மை நிரந்தர நரகத்திலே சேர்த்துவிடும். மறுமையில் நம்மை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்தில் சேர்ப்பது ஏகத்துவக் கொள்கை தான்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை