குடும்பக் கட்டுப்பாடு பற்றி இஸ்லாம் சொல்வது என்ன?
குடும்பக் கட்டுப்பாடு பற்றி இஸ்லாம் சொல்வது என்ன? கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டு விடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள் "அஸ்ல் ' செய்து கொண்டிருந்தோம் . அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி ) நூல் : புகாரி ( 5209 )