Posts

பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு

பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு   ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது. நாட்டின் உயர்ந்த அதிகார பீடமான உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய உத்தரவு சிறுபான்மை மக்களுக்கு அச்ச உணர்வையும் நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது. பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமலும்,அரசியல் சாசனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளைக் கண்டு கொள்ளாமலும் தமது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட நிலையிலும் மேலோட்டமான பார்வையில் கூறப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத் வளர்ச்சிக்குக் காரணம் என்ன?

தவ்ஹீத் ஜமாஅத் வளர்ச்சிக்குக் காரணம் என்ன? அல்லாஹ்வின் அருள் தவிர வேறு இதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை. நாட்டில் இருக்கின்ற இயக்கங்களில் தவ்ஹீத் ஜமாஅத் தான் குறைந்த அளவு தவறுகளைக் கொண்டதாகவும் அதிகமான நன்மைகளைக் கொண்டதாகவும் இருப்பதால் அல்லாஹ்வின் மகத்தான உதவிகள் கிடைத்து வருகின்றன. இது குறித்து ஜூலை 4 மாநாட்டுக்குப் பின்னர் நாம் உணர்வில் எழுதியதை இந்த இடத்தில் எடுத்துக் காட்டுகிறோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய முஸ்லிம்களுக்கான உரிமை மாநாடும் பேரணியும் தமிழக வரலாறு காணாத அளவிலும் ,  ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட கழிசடைகள் தவிர மற்ற இயக்கத்தினர் இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை ஒப்புக் கொள்கின்றனர்.

பீஜே குறித்து செய்யப்பட்ட ஆய்வு

பீஜே குறித்து செய்யப்பட்ட ஆய்வு வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டைச் சேர்ந்த ஹபீபுர்ரஹ்மான் அவர்களின் மகன் வழக்கறிஞர் அர்ஷத் அவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக பீஜே யை சப்ஜெக்டாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டாக்டர் பட்டம் பெற்றார். டாக்டர் பட்டம் பெறுவதற்காக யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கருவாக எடுத்துக் கொள்ளலாம். எனவே இதில் பெருமை அடிக்க ஒன்றும் இல்லை. அந்த திறனாய்வை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று பல சகோதரர்கள் என்னிடம் கேட்டு வந்தனர். அது தேவையற்றது என்பதால் நான் மூன்று ஆண்டுகளாகத் தவிர்த்து வந்தேன். அவர் எப்படி திறனாய்வு செய்துள்ளார் என்ற செய்திக்காகவும் அதை வெளியிட்டால் தமிழக தவ்ஹீத் இயக்கத்தின் வரலாறை மற்றவர்கள் அறிய முடியும் என்பதற்காகவும் தற்போது அது வெளியிடப்படுகிறது. pdf ஃபார்மட்டில் உள்ளதால் அதை அப்படியே டவுன் லோடு செய்து பார்க்கலாம் பீஜே குறித்த திறனாய்வு  PDF Click Here   Zip Click Here இதில் ஆய்வு செய்தவர் தனது பார்வையில் பட்ட அடிப்படையில் செய்திகளை சொல்லி இருக்கிறார்.  ஒருவரது ஆய்வை அப்படியே தான் வெளி

ஒரு நாடகம் அரங்கேறியது

தமிழகத்தில்   பரேலவிஸ எதிர்ப்புப் போர்   தொடங்கிய வரலாறு மனாருல் ஹுதா இப்போது தான் பகிரங்கமாக பரேலவிஸத்திற்கு எதிராகப் போர் தொடுக்கத் துவங்கியுள்ளது. கடந்த காலத்தில் இவர்கள் அதைக் கண்டித்ததே கிடையாது என்று ஒரேயடியாகக் குற்றம் சாட்டவில்லை. ஆனால் , உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்து உரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன்  15:94) என்ற வசனத்திற்கேற்ப அதைப் போட்டு உடைக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். 1.  பரேலவிகள் தூக்கிப் பிடிக்கும் தரீக்கத்தையும் ,  சூபிஸத்தையும் இவர்களும் தூக்கிப் பிடிப்பது. 2.  இது போன்ற பிரச்சனைகளை முன் வைக்கும் போது சமுதாயத்தில் எதிர்ப்பலைகள் சமுத்திரமாகத் திரண்டெழுந்து வரும். அவற்றை எதிர் கொள்ளும் போது பிழைப்புக்கு மட்டும் பாதகம் வருவதில்லை. புகழுக்கும் சேர்த்துப் பாதகம் வரும் என்பதால் பரேலவிகளுக்கு எதிராக அவர்கள் பொங்கி எழவில்லை.

அரஃபா நோன்பு , பெருநாள் தொழுகை சட்டங்கள்

அரஃபா நோன்பு , பெருநாள் தொழுகை சட்டங்கள் அரஃபா நாள் நோன்பு துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள். அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர். அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம் 1977,. அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதை நடைமுறைப்படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்பு நோற்றார்கள். மக்காவில் ப

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

Image
சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..! நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

அச்சுறுத்தும் டெங்கு! என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம்?

Image
அச்சுறுத்தும் டெங்கு! என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம்? பகல் நேர கொசுக்கடியே காரணம் ஏடிஸ் (Aedes) எனப்படும் கொசு கடிப்பதனாலே இந்த நோய் ஏற்படுகிறது. இந்த கொசு நன்னீரில்தான் உயிர்வாழும். பகல் நேரத்தில் மட்டுமே இவை கடிக்கும் என்கின்றனர். மருத்துவத்துறையினர். இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? சாதாரண காய்ச்சல் போல தொடங்கினாலும் கண்வலி, தலைவலி, மூட்டுவலி ஏற்படும். வயிற்றுவலியும் தொடர் வாந்தியும் இருக்கும். உடலில் அரிப்பு இருக்கா? தசைகளில் வலி படிப்படியாக ஏற்பட்டு அதிகரிக்கும். சருமத்தில் அரிப்பு ஏற்படும். கால் முட்டிக்கு கீழே சிவந்த புள்ளிகள் தோன்றும். மூக்கில் ரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும்.