Posts

பாங்கு கூறுவதன் சிறப்புகள்

பாங்கு கூறுவதன் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் பாங்கு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வணக்கமாக்கியுள்ளார்கள். ஒருவன் தன்னுடைய வீட்டில் தொழுதாலும் ,  கடைவீதியில் தொழுதாலும் ,  காட்டில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுவதைத் தான் மார்க்கம் வழிகாட்டுகிறது. பல பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்கென்று முஅத்தின்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முஅத்தின்கள் நியமிக்கப்படாத பள்ளிகளும் உள்ளன. முஸ்லிம்களில் அதிகமானோர் பாங்கு கூறுவதற்கு வெட்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே பல பள்ளிவாசல்களில் சப்தமிட்டு பாங்கு கூறுவதற்குச் சக்தியில்லாத வயோதிகர்கள் முஅத்தின்களாக உள்ளனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கூட விளங்க முடியாத வகையில் பாங்கின் வாசகங்களைக் கூறுகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய ஒரு அம்சமாகும். தொழுகைக்காக நாம் கூறுகின்ற பாங்கிற்கு ,  பாங்கு சொல்பவருக்கு ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வாரி வழங்குகிறான். பாங்கு சொல்வதற்குப் போட்டி ஒரு தடவை பாங்கு சொன்னால் ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று அறிவிப்புச் செய்தால் அந்தப் பணத்தைப் பெறுவதற்காகப் பலர் பாங்கு

மாசுபடும் ஆறுகள் மனம் மாறும் சாதுக்கள்

மாசுபடும்   ஆறுகள்   மனம்   மாறும்   சாதுக்கள் " தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமே ''  என்று சில நேரங்களில் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புவார்கள். (அல்குர்ஆன்  15:2) அண்மையில் இந்தியாவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்வதைப் போன்று பிற மதத்தவர்களை நினைக்கத் தூண்டுகின்றன. டெல்லி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும் ஒரு பெருங்கூட்டம் ,  கற்பழிப்புக் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறுகின்ற மரண தண்டனை வேண்டும் என்று கோரினர். முஸ்லிம்களைப் போன்று பெண்கள் புர்கா அணிந்து செல்ல வேண்டும் என்று மதுரை ஆதீனம் போன்றோர் உண்மையை மறைக்காமல் ஊரறிய ,  உலகறியச் சொன்னார்கள். அரபு நாட்டுச் சட்டங்கள் வேண்டும் என்றும் ,  பெண்கள் கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று குரல் எழுப்பியவர்கள் இஸ்லாத்தைக் கடுமையாக விமர்சிக்கும் சங்பரிவார்கள் என்பது தான் இதில் ஆச்சரியம். பெண்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் இஸ்லாம் கூறும் திருமண ஒப்பந்தத்தை பற்றிப் பேசுகின்றார். இப்போது இந்த வரிசையில

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?

வஸீலா   ஆளை   வைத்தா ?  அமலை   வைத்தா ? வஸீலா என்பது ஆளை வைத்துத் தான் என்று கூறும் தில்லுமுல்லுகளுக்கும் ,  திருகுதாளங்களுக்கும் சரியான விளக்கத்தை இப்போது பார்ப்போம். சான்று:  1 பார்வை தெரியாத நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பரேலவிகள் சொல்வது போன்று , " முஹம்மது நபி பொருட்டால் உன்னிடம் மன்றாடுகிறேன். முஹம்மது (ஸல்) அவர்களே! என் ரப்பிடம் என் தேவை நிறைவேற உங்களின் பொருட்டு முறையிடுகிறேன் ''  என்று கூறவில்லை. அப்படிச் சொல்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் நேரில் வர வேண்டிய அவசியமும் இல்லை. அவர் வீட்டில் இருந்து கொண்டே இந்தப் பிரார்த்தனையைச் செய்திருக்கலாம். ஆனால் அந்த நபித்தோழர் அவ்வாறு செய்யவில்லை. ஏன் ?  அவர் ,  தவஸ்ஸுல் - வஸீலா தேடுதல் என்ற வார்த்தையில் பொருள் அறிந்த ,  அரபி மொழி தெரிந்த ஓர் அரபியர். ஓர் ஆளை வைத்து வஸீலா தேட வேண்டுமானால் அவர் தனது வஸீலாவில் அவரது பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி பிரார்த்திக்க வேண்டும். அப்படிப் பெயரைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே ,  தன் மீது அக்கரை காட்டுபவர் ,  மார்க்க ஞானம் உள்ளவர் என்று யாரை அந்

கூட்டத்திற்கல்ல! கொள்கைக்கே வெற்றி!

கூட்டத்திற்கல்ல !   கொள்கைக்கே   வெற்றி ! அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை , 80 களிலிருந்து இன்று வரை ஏறுமுகத்திலேயே இருந்து வருகின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலிருந்தவர்கள் இன்று வியக்க வைக்கும் எண்ணிக்கையில் வான் முகட்டைத் தொட்டுக் கொண்டிருக்கின்றனர். இங்கு தான் நமது ஜமாஅத் சுதாரிக்கவும் சுயபரிசோதனை செய்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கின்றது. இப்படிப்பட்ட வளர்ச்சியும் எழுச்சியும் கிடைத்தது எதனால் ? கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றதால் தான். இல்லையென்றால் மழை காலத்துக் காளான்கள் போல் நமது கூடாரங்கள் கலைந்து ,  காணாமல் போயிருக்கும். இன்னும் இந்தக் கொள்கை ஏறுமுகம் காண வேண்டுமானால் ,  எழுச்சி பெறவேண்டுமானால் இதே கொள்கைப் பிடிப்பும் பற்றும் நம்மிடம் தொடர்ந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் இறங்குமுகம் தான். நம்முடைய வாழ்நாளிலேயே இந்த இயக்கத்திற்கு முடிவுரை எழுத வேண்டியது தான். அல்லாஹ் நம்மைக் காப்பானாக! கொள்கை உறுதி என்றதும் நம்முடைய கவனத்திற்கு வரும் விஷயங்கள் தர்ஹா வழிபாடு ,  மவ்லிது , மத்ஹபுகள் போன்றவை தான். இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொரு உறுப்பினரும் கவனமாகத் தா

சீறுவோர் சிந்திக்க வேண்டும்

சீறுவோர்   சிந்திக்க   வேண்டும் நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். அல்குர்ஆன்  33:6 இந்த வைர வாக்கியத்தின் உயிரோட்டம் இன்று உலக முஸ்லிம்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை அவ்வப்போது வெளிப்படுத்துகின்றது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் என்பவர் ஷாபானு வழக்கில் ஷரீஅத்துக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய போதும் ,  நமது உயிரை விடவும் மேலாக நாம் மதிக்கும் நபி (ஸல்) அவர்களை டென்மார்க்கில் ஒருவன் கேலிச் சித்திரம் வரைந்த போதும் நாம் வெளிக்காட்டிய எதிர்ப்புக்கள் மாபெரும் வரலாற்றுச் சுவடுகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மார்க்கெட் நிலவரத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த அவரச உலகில் மார்க்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு செழிப்படைந்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற கட்டங்களில் வரம்பு மீறி வன்முறையில் ஈடுபடுவது ,  பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பது போன்ற ஒரு சிலரின் செயல்கள் , " தனது நாவினாலோ ,  கரங்களினாலோ பிறருக்குத் தீங்கு ஏற்படுத்தாதவனே முஸ்லிம் ''  என்று நபி

மவ்லீதும் ராத்தீபும் (வீடியோ)

Image
மவ்லீதும் ராத்தீபும் (வீடியோ) தெருமுனை பிரச்சாரம் புதுவலசை பஸ்ஸ்டாண்ட் உரை: முகவைகான்

தவ்ஹீத் ஜமாஅத் பிற மேடைகளை தவிர்ப்பது ஏன்?

Image
தவ்ஹீத் ஜமாஅத் பிற மேடைகளை தவிர்ப்பது ஏன்?     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக வைக்கப்படும் குற்றசாட்டுக்களில் பிரதான குற்றசாட்டாகப் பேசப்படுவது, இந்த அமைப்பினர் பிற இயக்கத்தின் மேடைகளில் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்வதில்லை என்பதாகும். இதற்கான விளக்கத்தை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் ஷைத்தான் மனிதனை ஒரே வடிவத்தில் தான் வழிகெடுப்பான் என நினைக்கக்கூடாது. மாறாக ஒருவனை வழிகெடுக்க ஷைத்தான் எத்தகைய யுக்தியையும் செய்யத் தயங்க மாட்டான். உதாரணத்திற்கு, வரதட்சணை வாங்கக்கூடாது என்பதில் நாம் உறுதியோடு இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இந்தத் தருணத்தில் நம்மை வழிகெடுக்க ஷைத்தான் வேறு வகையான ஆசை வார்த்தைகளைக் கூறுவான்.