Posts

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்

  தொழுகையின் அமர்வில்   விரலசைத்தல் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நாம் இதைக் கூறி வருகிறோம். இது, தமிழக முஸ்லிம்களுக்கு முன்னர் கேள்விப்படாத ஒரு நடைமுறையாக இருந்ததால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். விரல் அசைப்பதால் மற்றவர்களின் தொழுகை பாதிக்கப்படுகின்றது என்பது போன்ற காரணங்களைக் கூறி இந்த நபிவழியை அவர்கள் மறுத்து வந்தனர். இது கருத்தில் கொள்ளத் தகுதியில்லாத வாதம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த வாதம் மக்களிடம் எடுபடாமல் போன பின், விரல் அசைத்தல் தொடர்பான ஹதீஸ் பலவீனமானது என்று கூறி புதுப்புது காரணங்களைக் கூறலானார்கள். அதற்கேற்ப சில ஆதாரங்களையும் முன் வைத்தனர். இது பரிசீலிப்பதற்குத் தகுதியுடைய வாதம் என்பதால் இவ்வாறு கூறுவோரின் அனைத்து வாதங்களையும் திரட்டி மறு ஆய்வு செய்தோம். அவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் அதைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்து

இறுதி நபியின் இறுதி பேருரை

Image
  இறுதி பேருரை “இக்ரஃ – நீர் ஓதுவீராக” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனை முழுமையாக ஓதிக் காட்டி மறு பதிவு செய்து கொள்வார்கள். (புகாரி 3554) ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமளானில் திருக்குர்ஆனை இரு முறை மறு பதிவு செய்கின்றார்கள். (புகாரி 4998) அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாட்கள் எண்ணப்படத் துவங்கி விட்டது என்பதற்கு இது ஓர் அறிகுறியானது. இது வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வல்ல இறைவனால் கடமையாக்கப்பட்ட அனைத்து வணக்கங்களிலும் வழிகாட்டி விட்டிருந்தார்கள். எஞ்சியிருந்தது ஹஜ் என்ற இறுதிக் கடமை மட்டுமே! அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில், “இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்” என்ற (5:3) வசனம் அருளப்பட்டது. “ஓதுவீராக’ என்று துவங்கிய திருக்குர்ஆன், ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது. அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு

ஜின்களால் மனிதனுக்கு தீங்கு விளைவிக்க முடியுமா??

ஜின்களால் மனிதனுக்கு தீங்கு விளைவிக்க முடியுமா??  

ஹிஜிரி ஆண்டு வறலாறு

Image
 ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு   ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தைப் பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு.(கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.   இஸ்லாமியர்கள் 'ஹிஜ்ரி ஆண்டு' என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது? என்பது இஸ்லாமியர்களில் பலருக்கே தெரியாது. இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது என்பதை நாம் விரிவாகக் காண்போம்.   நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் ஆண்டின் முதல் மாதம் என்பது முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே குறிப்பிட்டு வந்தனர்.   நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னர் அப்ரஹா என்ற மன்னன் யானை படையுடன் கஅபத்துல்லாஹ்வை அழிக்க வந்த போது அல்லாஹ், பறவைகள் மூலம் அந்தப் படையை முறியடித்தான். (திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் இது தொடர்பாகப் பேசுகிறது. இந்த அத்தியாயத்திற்கு ஃபீல் - யான

மார்க்க கேள்வி பதில்.

Image
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு  புதுவலசை மக்களின் கோரிக்கையை ஏற்று மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு மார்க்க கேள்வி-பதில்  என்கிற குழுமத்தை அல்லாஹ்வின் உதவியால் உருவாக்கியுள்ளோம்...  இந்த குழுமத்தை பொறுத்த மாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த இயக்கமாக இருந்தாலும் சரி கொள்கையை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி தாரளமாக இத்தளத்தில் உங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது...  பெண்களுக்கு இத்தளத்தில் அனுமதியில்லை . அதனால்  ஆண்கள் மட்டுமே இணைந்து பயன் பெறுங்ள். தளம் 1 லிங்க் கீழே https://chat.whatsapp.com/K90wqQDLa4mGzZeC7fSqpf தளம் 2 லிங்க் கீழே https://chat.whatsapp.com/HDA7GvR4FZw9TZI9grtl7h *இந்த தளத்திற்கான விதிமுறைகள்* *கேள்வி ஆடியோ மூலமாக அல்லது தமிழில் எழுதி அனுப்பலாம்*   *பிறர் பேசிய வீடியோக்களை  பதிவிட்டு கேள்வி எழுப்ப வேண்டாம்*   *பிறர் பேசிய வீடியோக்களில் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் அந்த வீடியோக்களின் கருத்தை நீங்கள் உள்வாங்கி உங்களுடைய விளக்கத்தை இதில் பதிவிட்டு கேள்வியாக கேட்கலாம்* *ஊர் செய்தி உலக செய்தி தவிர்ப்பது நல்லது* *அட்மின் தவி

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா? (புதிய ஆய்வு முடிவு) இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

அன்புடன் அழைக்கிறோம்

Image
அன்புடன் அழைக்கிறோம் ஷிர்க் ஒழிப்பு மாநாடு இடம்: திருச்சி நாள்: இன்ஷா அல்லாஹ் ஜனவரி 31 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு அன்பிற்குரிய பெரியோர்களே! தாய்மார்களே! சகோதரர்களே! சகோதரிகளே! நாங்கள் உங்களிடம் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசப் போகிறோம். அல்லாஹ்விற்காக இதனைத் தொடர்ந்து படியுங்கள். அன்பிற்குரியவர்களே! நாம் கொதிக்கின்ற தண்ணீரினாலும், எரிகின்ற நெருப்பினாலும் ஏற்படும் பாதிப்புகளையும் கொடுமைகளையும் அறிந்திருக்கின்றோம். பார்த்திருக்கின்றோம்.