பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை நாத்திக்ர்கள் விவாத பின்னணி என்ன? நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தின் போது அவர்கள் படு தோல்வி அடைந்ததை வீடியோ காட்சிகள் மூலம் அறிந்திருப்பீர்கள். பொதுவாக விவாதங்களின் போது எதிர்த் தரப்பினர் எதிர்பார்க்காத சில வாதங்கள் முன் வைக்கப்படும் போது அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படலாம். பின்னர் அதற்கான விடையை அவர்கள் கண்டு பிடிப்பார்கள். ஆனால் நாத்திகர்களுடன் நடந்த இந்த விவாதம் அத்தகையது அல்ல. மாறாக இறைவன் இருக்கிறான் என்பதற்கு நாம் என்னென்ன ஆதாரங்களை எடுத்துக் காட்டுவோம் என்பதும் , குர் ஆன் இறைவேதம் என்பதற்கு நாம் எத்தகைய சான்றுகளை எடுத்துக் காட்டுவோம் என்பதும் , நாத்திகர்களின் மூட நம்பிக்கை குறித்து நாம் எத்தகைய கேள்விகளை எடுத்துக் காட்டுவோம் என்பதும் பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டன. பல மாதங்களூக்கு முன்பே கேள்வித்தாள் வழங்கப்பட்டும் பதில் எழுதாத மாணவனைப் போல் அவர்கள் ஆகி விட்டனர். எத்தனை மாதங்கள் அவர்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டாலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு இஸ்லாம் தெளிவாக இருக்கிறது என்பதும் இதில் நிரூபணமாகியுள...
இஸ்லாம் கூறும் மனித நேயம் மனிதனிடத்தில் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமான பண்பு மனித நேயம். மனித நேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும். தனக்கு விரும்பும் நன்மைகளை பிறருக்கு விரும்புவதும், தான் விரும்பாததை பிறருக்கும் விரும்பாமல் இருப்பதும் மனித நேயமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாகக் கண்டு வருகிறோம். இறைவன் மனிதனுக்குப் பயன் படக்கூடிய உறுப்புகளை ஏற்படுத்தி வெறும் உடலாக மட்டும் அவனைப் படைக்கவில்லை. உலகம் இயங்க வேண்டும் என்பதற்காக உடலுடன் பல நல்ல குணங்களையும் தன்மைகளையும் சேர்த்தே உருவாக்கியுள்ளான். நன்மைகளும் தீமைகளும் மனித நேயம் மட்டும் மனிதனிடம் எடுபட்டுப் போயிருந்தால் என்றைக்கோ இந்த உலகம் அழிந்திருக்கும். இக்குணத்தை இறைவன் சிலரிடத்தில் இயற்கையாகவே அமைத்திருப்பதால் மனிதநேயம் அற்றவர்கள் செய்யும் கொடுமைகளின் போது, மனிதநேயம் உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்து அவர்கள் இந்த உலகில் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கிறார்கள். உ...
Comments
இதனை தயவு செய்து ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தவும்.