பைபிளில் 50000 பிழைகள் – கிறிஸ்தவ இதழின் வாக்குமூலம்: ஓர் இளைஞர் பைபிளை, அதில் தவறே இருக்காது என்று எண்ணி வாங்கினார். ஒருநாள் லுக் என்ற பழைய மாத இதழைப் பார்த்துக் கொண்டிருக்கையில், பைபிளைப் பற்றிய உண்மை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை அவரது பார்வையில் பட்டது. புராட்டஸ்டண்ட், கத்தோலிக்கர்கள் படிக்கின்ற புதிய ஏற்பாட்டின் இரண்டு மொழியாக்கங்களில் குறைந்தது 20,000 பிழைகள் உள்ளன என்று 1720ஆம் ஆண்டு வாக்கில் ஓர் ஆங்கில அதிகாரக் குழுமம் மதிப்பிட்டுள்ளது. புது மாணவர்கள் சுமார் 50,000 பிழைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர் என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்தார். பைபிளின் மீது அவர் கொண்டிருந்த நம்பகத்தன்மை ஆட்டம் கண்டது. பல்லாயிரக்கணக்கான மிக மோசமான குறைபாடுகள், மூலத்திற்கு ஒத்திராத பிழையான ஆக்கங்கள் பைபிளில் இடம் பெற்றிருக்கும் போது அது எப்படி நம்பகமான இறை வேதமாக இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்புகின்றார்.
பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்களிடம் பரேலவிஸம் வேரூன்றியது போலவே தமிழகத்திலும் அது வேரூன்றி ஆலகால விஷ விருட்சமாக விரிந்து கிடந்தது. அதனுடைய விஷக் கனிகள் தான் விண்ணைத் தொட்டு நிற்கும் மனாராக்களைக் கொண்ட தர்ஹாக்கள்! அவற்றைப் போற்றிப் புகழ்கின்ற தரீக்காக்கள்! சூபிஸ தத்துவங்கள்! மவ்லிதுகள்! இருட்டு திக்ருகள்! வலிமார்கள் இறந்த பின்னும் உயிருடன் இருக்கிறார்கள் , எனவே அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்ற நம்பிக்கைகள் ! இவையெல்லாம் குர்ஆன் , ஹதீஸுக்கு மாற்றமானவை என்ற சிந்தனை ஓட்டம் இறையருளால் நம்முடைய உள்ளங்களில் தோன்றியது. நாங்கள் சங்கரன்பந்தல் மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் , தீன் விளக்கக் குழு என்ற பெயரில் வாரந் தோறும் வெள்ளிக்கிழமை இரவு அன்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள பரவலான மதரஸாக்களிலிருந்து ஆலிம்களை உரையாற்ற அழைப்போம் . கூட்டம் முடிந்த பின் விடிய விடிய அவர்களிடம் , இந்தச் சிந்தனை ஓட்டத்தைப் பிரதிபலித்தோம். இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா ? என்று கேட்டோம் . சிலரிடத...
இந்து மதமும் பெண்களும் சில மாதங்களிற்கு முன்பு திருமண மந்திரங்கள் பற்றிய ஒரு பதிவை சில தளங்களில் எழுதினேன். இதையடுத்து நான் எழுதியது சரியா என்று ஒரு விவாதம் ஏற்பட்டது. ஒரு பத்திரிகையில் இந்த மந்திரங்கள் பற்றி எழுதிய போது, யரோ ஒரு பார்ப்பனர் “மந்திரங்கள் புனிதமானவை, அதை குற்றம் சொல்லக் கூடாது” என்று ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தார். வேறு எந்த விளக்கமும் எழுதவில்லை. ஆனால் கருத்துக் களங்களில் திருமண மந்திரங்கள் பற்றிய என்னுடைய கருத்து தவறு என்று சிலர் வாதிட்டார்கள். சில விளக்கங்களை முன்வைத்தார்கள். அவைகளுக்கு பதில் அளிக்க முனைந்த பொழுதே, அது நீண்டு இப்படியான ஒரு தொடருக்கு வித்திட்டது. அந்த வகையில் இந்தத் தொடருக்கு காரணமான திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றி முதலில் ஒரு முறை பார்ப்போம். தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் எந்த ஒரு விடயத்தையும் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்வது என்றாலும், சொல்லப்படுவதன் அர்த்தத்தை புரிந்து கொண்டுதான் செய்வார்கள். ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை மதத்த...
Comments
இதனை தயவு செய்து ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தவும்.