பைபிள் கடவுளின் வார்த்தை இல்லை என்பதினை ஒப்புதல் வாக்குமுலம் தந்த கிருத்துவ பாதிரியார்................ . கடந்த 28.11.12 புதன் கிழமையன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், அனாரியன் சமாஜ் ஊழியங்கள் என்ற கிறித்தவ சபையினருக்கும் இடையில், “திருக்குர்ஆன் இறைவேதமா? பைபிள் இறைவேதமா?” ஆகிய இரு தலைப்புகளில் விவாதம் பரபரப்புடன் நடந்து முடிந்தது. டிஎன்டிஜே சார்பாக கலீல் ரசூல் அவர்கள் தலைமையில் எம்.எஸ்.சுலைமான், அப்பாஸ் அலி, தாங்கல் ஹபீபுல்லாஹ், சையது இப்ராஹீம் ஆகியோர் அடங்கிய குழுவினர் விவாதித்தனர். காலை 9 மணி முதல் இரவு 8.30 வரை நடைபெற்ற இரண்டு தலைப்புகளிலான விவாதம் அனல் பறந்தது. விவாதம் ஆன்லைன்பீஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. திருக்குர்ஆன் இறைவேதமே!: முதலில் திருக்குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பிலும், அடுத்ததாக பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலும் விவாதிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. விவாதம் ஆரம்பித்த உடனேயே, “இயேசுவுக்கு முன்னதாக வந்த மோசே கொண்டு வந்தது நியாயப்பிரமாணம் என்றும், இயேசு அதை மாற்றி கிருபையின் பிரமாணத்தைக் கொண்டு வந்தார்