பெண்கள் போராட்டத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா?

பேரணிஆர்ப்பாட்டம் என முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா?அந்நியர்களின் பார்வையில் மழையிலும் கூட மார்க்கச் சகோதரிகளைக் காட்சிக்கு வைப்பது மார்க்கத்தில்ஆகுமான காரியமாஎன்று தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டுநீக்கப்பட்டவர்களின் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்புகின்றார்

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்னால் இக்கேள்வியைப் பரப்புவோரின் பச்சைநயவஞ்சகத்தனத்தை நாம் எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது.
முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்த கேள்வி தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பானகேள்வியாஅல்லது அனைத்து இயக்கங்களுக்கான கேள்வியா?
தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் (ஒரு இயக்கம் தவிரதாங்கள் நடத்தும் போராட்டங்களில்பெண்களைப் பங்கேற்கச் செய்து வருகின்றனர்தமுமுகஜமாஅதே இஸ்லாமிமமகவிடியல் குரூப்,முஸ்லிம் லீக்தேசிய லீக்உள்ளிட்ட எல்லா இயக்கங்களும் போராட்டத்தில் பெண்களைப் பங்கெடுக்கச்செய்கின்றன.
இது போல் பெண்கள் கலந்து கொண்ட சில இயக்கங்களின் போராட்டங்களை ஜமாஅதுல் உலமா சபையும்ஆதரித்து பங்கு கொண்டுள்ளன.
கப்ரு வணங்கிக் கூட்டமான ஜமாலி குரூப் மட்டுமே பெண்களைப் போராட்டத்தில் பயன்படுத்துவதுகூடாது என்று கூறுகிறதுஆனால் தர்ஹாக்களில் ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வதைஇவர்கள் கண்டிப்பதில்லை.
இக்கேள்வியைக் கேட்பவர் கப்ரு வணங்கிக் கூட்டத்தில் உள்ளவர் என்றால் தனது நம்பிக்கைக்கு ஏற்பஇக்கேள்வியைக் கேட்டுள்ளார் என்று கருதலாம்அவ்வாறு இல்லாவிட்டால் அனைவரும் ஆதரித்துநடைமுறைப்படுத்தும் ஒரு காரியத்தை தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் செய்வது போன்ற தோற்றத்தைஏற்படுத்தும் வகையில் கேட்டால் கேட்பவர் நயவஞ்சகர்களில் ஒருவர் என்பது தெளிவு.
இவர் கப்ரு வணங்கியாக இருந்து பெண்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது கோபத்தை ஏற்படுத்தினால்அனைத்து இயக்கங்களும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று இவர் கேட்டிருப்பார்இவர்அப்போஸ்தலர் பவுல் போல் ஒரு கடைந்தெடுத்த கபடதாரி என்பதால்தான் மற்ற எந்த இயக்கத்தின்செயல்களும் இவரது கண்களுக்குத் தெரியவில்லை.
பெண்கள் அன்னிய ஆண்கள் முன்னால் முகம் கை தவிர மற்ற அங்கங்களை மறைத்துக் கொண்டுவரலாம் என்பது பொதுவான அனுமதிஇதற்கு நபிவழியில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
பெருநாள் தொழுகையில் ஆண்கள் கலந்து கொள்வது போல் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும்என்று மார்க்கம் கட்டளையிடுகிறது.
இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த)பெண்களையும் (தொழுகைத் திடலுக்குஅனுப்பி வைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்)பணிக்கப்பட்டோம்பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ளவேண்டும்முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும்மாதவிடாயுள்ள பெண்கள் மற்றபெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் (என்று நபி (ஸல்அவர்கள் கூறஇதைக்கேட்டுக் கொண்டிருந்தஒரு பெண், "அல்லாஹ்வின் தூதரேஎங்களில் சிலரிடம் அணிந்து கொள்ளமேலங்கி இல்லையே! (அவள் என்ன செய்வாள்?)'' என்று கேட்டார்அதற்கு நபி (ஸல்அவர்கள், "(ஒருபெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு(இரவலாகஅணியக் கொடுக்கட்டும்!'' என்றார்கள்.
அறிவிப்பவர்உம்மு அத்திய்யா (ரலி)
நூல்புகாரி 351
இவர்களின் வாதப்படி நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பெண்களைக் காட்சிக்கு வைத்தார்கள் என்றுஆகுமேஅதுவும் பெருநாள் தினத்தில் புத்தாடை எல்லாம் அணிந்திருப்பார்களேஎன்றெல்லாம் இவர்கள்கேட்பார்களாநபிகள் நாயகத்தின் மீது பழி சுமத்துவதால் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்க முடியும்என்றால் அதையும் செய்பவர்கள் இவர்கள்.
ஐந்து வேளைத் தொழுகையிலும் பெண்கள் கலந்து கொண்டனர்ஆண்களுக்கும் பெண்களுக்கும்இடையில் எந்தத் தடுப்பும் போடப்படவில்லை.
ஆண்களும் பெண்களும் ஒன்றாக உளூச் செய்துள்ளனர்இதனால் கைகளை மனிக்கட்டு வரைவெளிப்படுத்தும் நிலையும் தலையைத் திறக்கும் நிலையும் ஏற்படும்நபிகள் நாயகம் (ஸல்அவர்கள்பெண்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள் என்று இவர்கள் கூறுவார்களா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களுடைய காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்)உளூ செய்வார்கள்.
அறிவிப்பவர்அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்புகாரி 193
போர்க்களத்திலும் பெண்கள் கலந்து கொண்டு காயமடைந்த ஆண்களுக்கு மருத்துவம் செய்யவும்,தண்ணீர் விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்ஆண்களைத் தொட்டு தூக்கும் நிலையும் ஏற்படும்.
நாங்கள் இரு பெருநாள்களிலும் (தொழுமிடத்திற்குபுறப்பட்டு வருவதை விட்டும் எங்கள் குமரிப்பெண்களை தடுத்துக் கொண்டிருந்தோம்இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின்மாளிகையில் தங்கியிருந்தார்அவர் தம் சகோதரி (உம்மு அத்தியாரலிவழியாக வந்த செய்தியைஅறிவித்தார்என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யாஅவரது கணவர் நபி (ஸல்அவர்களோடுபன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார்இதில் என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவரோடுஇருந்தார்.
என் சகோதரி (உம்மு அத்திய்யாகூறினார்:
(பெண்களாகியநாங்கள் நபி (ஸல்அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்குமருந்திடுவோம்நோயாளிகளைக் கவனித்தோம்நான் நபி (ஸல்அவர்களிடம், "எங்களில் ஒருபெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது)குற்றமா?'' என்று கேட்டேன்அதற்கு நபி (ஸல்அவர்கள், "(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்)அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்அவள்நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்!''என்று சொன்னார்கள்.
ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்அவர்கள் கூறுகிறார்கள்:
உம்மு அத்திய்யா (ரலிஅவர்கள் (என்னிடம்வந்த போது, "நபி (ஸல்அவர்கள் இவ்வாறு கூற நீங்கள்செவியுற்றீர்களா?'' என்று நான் கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா (ரலிஅவர்கள், "என் தந்தைநபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்ஆம்நான் நபி (ஸல்அவர்களிடமிருந்து செவியுற்றேன்'' என்றுசொன்னார்கள்உம்மு அத்திய்யாநபி (ஸல்அவர்களின் பெயரைக் கூறும் போதேல்லாம் நபி (ஸல்)அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார்.
"வயது வந்த பெண்களும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்தபெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும்(பெருநாள் தினத்தன்றுவெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின்காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ளட்டும்மாதவிடாயுள்ளபெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று கூறினார்கள்'' என்றார் உம்முஅத்திய்யா (ரலி)
(இதை அறிவித்த உம்மு அத்திய்யா அவர்களிடம்நான், "மாதவிடாயுள்ள பெண்களுமா (பெருநாள்தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)?'' என்று கேட்டேன்அதற்கு உம்மு அத்திய்யா (ரலி)அவர்கள், "மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினாமுஸ்தலிஃபாபோன்றஇன்னின்னஇடங்களுக்கும் செல்வதில்லையா?'' என்று (திருப்பிக்கேட்டார்கள்.
அறிவிப்பவர்ஹஃப்ஸா பின்த் சீரீன்
நூல்புகாரி 351, 979, 1250, 1953
சபைகளில் கேள்வி கேட்பதற்காகப் பெண்கள் வந்து நபிகள் நாயகத்திடம் கேள்வியும் கேட்டனர்அதைப்பல ஆண்களும் பார்த்தனர்.
ஹஜ் பயணத்தின் போது ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே பயணித்துள்ளனர்அப்போது பெண்கள்ஆண்களின் பார்வையில் பட்டுள்ளனர்.
(விடைபெறும்ஹஜ்ஜின்போதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் (என் சகோதரர்ஃபழ்ல் பின்அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள்ஃபழ்ல் மிகவும்அழகானவராயிருந்தார்அப்போது நபி (ஸல்அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத்தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) "கஸ்அம்குலத்தைச் சேர்ந்த அழகானபெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார்அப்போதுஃபழ்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார்அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தைஊட்டியதுநபி (ஸல்அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபழ்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக்கண்டார்கள்உடனே ஃபழ்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல்அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.
அப்போது அப்பெண், "அல்லாஹ்வின் தூதரேஅல்லாஹ் தன் அடியார்கள் மீது விதித்துள்ள ஹஜ்என்தந்தையின் மீது கடமையாயிற்றுஅவரோ வயது முதிந்தவர்வாகனத்தில் அவரால் சரியாக அமரஇயலாதுஆகவேநான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?'' என்று கேட்டார்நபி (ஸல்)அவர்கள்ஆம் (நிறைவேறும்என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி),
நூல்புகாரி 6228
இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளனஅறிவுடையோருக்கு இது போதுமானதாகும்.
மேற்கண்ட கேள்வியில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசக அமைப்பைப் பற்றியும் நாம் சுட்டிக் காட்டவேண்டும்.
கேள்வி கேட்கும் போது இது கூடுமா என்று கேட்பது ஒருவகைபெண்களைக் காட்சிப் பொருளாக்கலாமா?என்று கேட்டிருப்பது கேட்டவரின் வக்கிர புத்தியையும்தவ்ஹீத் ஜமாஅத் மீது உள்ள வெறுப்பின்காரணமாக சமுதாயப் பெண்களைக் காட்சிப் பொருள் என்று வர்ணிக்கும் கேவலப் போக்கையும் நாம்கண்டு கொள்ள முடியும்.
ஒரு செயலைக் குறை கூறி ஒருவர் கேள்வியைக் கேட்கிறார் என்றால் அந்தச் செயலை அவர் செய்யாமல்இருக்க வேண்டும்.
கேள்வி கேட்டவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்கோ சுற்றூலாத்தலங்களுக்கோ செல்வாராஇல்லையாசெல்வார் என்றால் உங்கள் மனைவியைப் பலருக்கும் காட்சிப்பொருளாகக் காட்டலாமாஎன்ற கேள்வி இவரை நோக்கித் திரும்புமே?
தனது மனைவி மற்றும் குடும்பப் பெண்கள் கடைத் தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்கஅனுமதிப்பாராஇல்லையாஅனுமதிப்பார் என்றால் அப்போது பலரும் அவர்களைப் பார்க்கும் நிலைஏற்படாதாஇதே கேள்வியைத் தனக்கெதிராக அவர் கேட்டுக் கொள்ளட்டும்.
முறையாக ஆடை அணிந்து இவரது குடும்பத்துப் பெண்கள் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்குச்செல்வார்களாஇல்லையாசெல்வார்கள் என்றால் பலரது பார்வையில் படுவார்களாஇல்லையா?மேற்கண்ட அதே கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளட்டும்.
பெரிய கூட்டங்களில் பெண்கள் மீது படும் பார்வையை விட ஓரிரு பெண்கள் மீது பார்வை கூர்மையாகப்படுமே அது பரவாயில்லையா?
இதில் கேள்வி கேட்பவரின் கொள்கை தான் என்ன?
மார்க்க அடிப்படையில் ஒன்றைக் கூடாது என்ற கருத்தை விதைப்பவர் அதற்கான குர்ஆன் ஹதீஸ்ஆதரங்களுடன் தான் முன் வைக்க வேண்டும்நாம் ஆதராத்தை முன் வைத்து விட்டோம்கெட்டநோக்கத்தில் கேள்வி கேட்டவர்கள் தமது ஆதாரங்களை எடுத்து வைக்கட்டும்.
ஏகத்துவம் மாத இதழ்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

இஸ்லாம் கூறும் மனித நேயம்