Posts

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையா???

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையா??? "ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன் படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத் திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்'' என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுடையோர் கனிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இது பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது. "ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ வேதனையையோ ஏற்படுத்த முடியும்'' என்பதை நாம் நம்பலாம். கண் கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை. ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்று நம்பலாமா?  அவ்வாறு நம்புவது அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்ற குற்றத்தில் சேரும். அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லை; எவரும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கைக்கு மாற்றமான நம்பிக்கைகள் அனைத்தும் அல்லாஹ்வுக

உறுதியான ஈமானும் நிலையான சுவர்க்கமும்

Image
உறுதியான ஈமானும் நிலையான சுவர்க்கமும்

கொள்கை உறுதி

Image
கொள்கை உறுதி

இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு"

Image
இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு" - அமெரிக்க அதிகாரி திடுக்கிடும் தகவல்! "உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய மற்றும் சர ்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில், "கடந்த இரு வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன். அதன் விளைவாக, 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்

வெண்திரை வெளிச்சத்தில்  வெந்து போகும் வெட்க உணர்வுகள் வெட்கம் என்பது மனித இனத்துடன் ஒட்டி ஒன்றிணைந்து பிறந்த ஓர் இயற்கை உணர்வாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் வெட்கத்தை மனிதனின் உணர்வுகளில் ஒன்றாகக் கலந்து படைத்ததன் விளைவாகத் தான் முதல் மனிதர்களான ஆதம் ,   ஹவ்வா ஆகிய இருவரும் பொங்கி எழுந்த நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விளைகின்றனர். அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர்.  (அல்குர்ஆன்  7:22) மேலும் மண்ணுலகத்திற்கு மனிதனை இறக்கி வைத்து ,  அவனுக்கு மரியாதை தரக்கூடிய ,  அலங்காரமான ஆடையையும் சேர்த்தே இறக்கி வைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான். ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும் ,  அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம்.  (அல்குர்ஆன்  7:26)

தப்லீக் ஜமா அத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்

தப்லீக்   ஜமா   அத்தை   விட்டு   தவ்பா   செய்த   தஃலீம்   புத்தக   வெளியீட்டாளர் மக்களை   ஐந்து   நேரத்   தொழுகைகளுக்கு   அழைக்கின்ற   பணி   நிச்சயமாக   சிறந்த   பணியாகும் .  இதை இன்றைய   தப்லீக்   இயக்கத்தினர்   சிறப்பாகச்   செய்கின்றனர் .  அதே   சமயம்   முஸ்லிம்   என்று   கூறிக் கொண்டு ,  மக்கள்   செய்கின்ற   எண்ணற்ற   தீமைகளை   அவர்கள்   கண்டு   கொள்வது   கிடையாது . கப்ர்   ஜியாரத்   என்ற   பெயரில்   மக்கள்   செய்கின்ற   ஷிர்க்   எனும்   கொடிய   பாவத்தைக்   கண்டு   கொள்வது கிடையாது .  வட்டி ,  வரதட்சணை   போன்ற   சமூகக்   கொடுமைகளை   எதிர்த்துப்   பிரச்சாரம்   செய்ய மாட்டார்கள் .  சுருங்கக்   கூறின்   நன்மைகளை   மட்டும்   அதிலும்   குறிப்பாக   தொழுகையை   மட்டும் ஏவுவார்கள் .  எந்தவொரு   தீமையையும்   தடுக்க   முன்வர   மாட்டார்கள் . தீமையைத்   தடுப்பது   சாதாரண   பணியல்ல .  கை   கால்களைப்   பதம்   பார்க்கக்   கூடிய ,  கண்ணீரையும் செந்நீரையும்   வரவழைக்கும்   மிகக்   கடினமான   பணி   என்பதை ,  செய்து   பார்த்தால்   தான்   தெரியும் . அதனால்   தான்   அல்லாஹ்   அழைப்புப்   பணியைப

உபரியான வணக்கங்கள்

உபரியான வணக்கங்கள் அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும் ,  அவற்றை நிறைவேற்றாதவர்களுக்குத் தண்டனையும் வழங்குகின்றான். ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வமூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக