Posts

உலகமெங்கும் இஸ்லாத்தின் எழுச்சி! – ஒரு விரிவான பார்வை!

உலகமெங்கும் இஸ்லாத்தின் எழுச்சி! – ஒரு விரிவான பார்வை! இறைவன் அருளிய இயற்கை மார்க்கமாம் இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மாபெரும் வளர்ச்சி கண்டு வருகின்றது. இஸ்லாத்திற்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அளவே இல்லை. அதுமட்டுமல்லாமல் உலகத்திலேயே அதிகமான மக்களால் எதிர்க்கப்படும் ஒரே சித்தாந்தம் இஸ்லாம்தான். இப்படி அனைவரும் இஸ்லாத்தின் மீது அவதூறுகளையும், குற்றச்சாட்டு களையும், விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தொடுத்துவரும் இவ்வேளையில், அதிகமான எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் இந்த மார்க்கம் மனித அறிவு போடக்கூடிய கணக்கின் பிரகாரம் பார்த்தால் வீழ்ச்சியடைந்து அழிவை நோக்கித்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி உள்ளதா? இல்லவே இல்லை. மாறாக இந்த அளவிற்கு அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும், விமர்சனங் களையும், எதிர்ப்பு களையும் சந்தித்து வரும் இந்த மார்க்கம் இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி மகத்தான வளர்ச்சி கண்டு வருகின்றது. இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் இஸ்லாம் குறித்து கூறும் சாட்சி: இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகி

தீ மிதிக்க முடியுமா???

தீ மிதிக்க முடியுமா? கேள்வி: இஸ்லாம் உருவ வழிபாடு கூடாது என்று போதிக்கின்றது என்று கூறுகிறீர்கள். அப்படியெனில், நாங்கள் மாரியம்மனின் அருளினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாமியை நினைத்து தீ மிதிக்கிறோம். அவ்வாறு உங்களுடைய இறைவனின் அருளினால் அந்த இறைவனை நினைத்துக் கொண்டே எந்தவித பாதிப்பும் இல்லாமல் நீங்கள் தீ மிதித்து வர முடியுமா? என்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியைப் பார்த்து வரும் ஒரு இந்து நண்பர் கேட்கின்றார். -  பதில்: தீ மிதிப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கும் பக்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

கேமராக்கள் - பெண்களுக்கு எச்சரிக்கை ***

*** கேமராக்கள் - பெண்களுக்கு எச்சரிக்கை *** கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி. மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படு கிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம். குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அல்லாஹ் உருவமற்றவனா?

அல்லாஹ் உருவமற்றவனா?   பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது. உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, 'அவருக்கு வாய் நீளம்' என்று கூறுவார்கள். வாய் நீளம் என்றால் வாயின் அளவு நீளமாக இருக்கும் என்பது அதன் நேரடிப் பொருள் என்றாலும் இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவர் அதிகம் பேசக் கூடியவர் என்ற கருத்தில் ந்த சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்துவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான, உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். அனைத்து மொழிகளிலும் உள்ள இந்த வழக்கிற்கு அரபு மொழியும் விதிவிலக்கல்ல. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உளிய நடையில் அருளப்பட்ட திருக்குர்ஆனிலும் இந்த நடைமுறை கையாளப்பட்டுள்ளது. ஆனால், திருக்குர்ஆனில் உள்ள இந்த மொழி வழக்கைப் புரிந்து கொள்வதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக பல்வேறு விஷயங்களில் சர்ச்சை ஏற்படுகின்றது. அதில் ஒன்றுதான் இறைவனின் தோற்றம் பற்றிய சர்ச்சையாகும். அல்ல

பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா?

பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா? இவ்வசனத்தில் (54:19) நஹ்ஸ் (பீடை) நாளில் "ஆது' சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் நினைக்கின்ற கருத்தை இவ்வசனம் தரவில்லை. பொதுவாக, நல்ல நாள், கெட்ட நாள் என்பதைப் பிற மதத்தவர் பயன்படுத்துவதற்கும், இஸ்லாம் பயன்படுத்து வதற்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. பிற மதத்தவர்கள் ஒரு நாளை நல்ல நாள் என்று சொன்னால் அந்த நாளில் நல்ல காரியத்தைச் செய்தால் அது சிறந்து விளங்கும். நல்லது செய்கின்ற தன்மை அந்த நாளுக்கே உண்டு என்ற கருத்தில் கூறுகின்றனர். கெட்ட நாள் என்றால் அந்த நாளில் செய்கின்ற எந்தக் காரியமும் உருப்படாது என்ற கருத்தில் பயன்படுத்துகின்றனர். ஆனால் இஸ்லாம், இந்தப் பொருளில் இச்சொற்களைப் பயன்படுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ ஒரு கேடு ஏற்பட்ட பிறகு அந்தக் கேடு ஏற்பட்ட மனிதனுக்கு அது கெட்ட நாள்; அனைவருக்கும் கெட்ட நாள் இல்லை என்ற கருத்தில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்ற

அத்வைதத்தின் அறியாமை

அத்வைதத்தின் அறியாமை   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர்க்களம் "பத்ருப் போர். இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான். * ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான் (8:9) * சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக சிறிய தூக்கத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் உள்ளங்களில் அமைதி ஏற்படுத்தினான். (8:11) * அன்றிரவு மழையை இறக்கி அவர்களைத் தூய்மைப்படுத்தியதுடன் அவர்களின் பாதங்களையும் உறுதிப்படுத்தினான் (8:11) * வானவர்களும் களத்தில் இறங்கிப் போரிட்டனர் (8:12) * எதிரிகளின் உள்ளங்களில் பீதியை அல்லாஹ் ஏற்படுத்தினான் (8:12) இந்த அற்புதங்களுடன் சேர்த்து நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தைத் தான் இவ்வசனத்தில் (8:17) அல்லாஹ் கூறுகிறான். "பொடிக்கற்களில் ஒரு கைப்பிடியை எனக்கு எடுத்து வா ''  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அவர் எடுத்துக் கொடுத்தார். அதை எதிரிகளின் முகங்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) எறிந்தனர். எதிரிக் கூட்டத்தின் ஒவ்வொருவர் கண்களிலும்

மெஞ்ஞானமும் அஞ்ஞானமும்

மெஞ்ஞானமும் அஞ்ஞானமும் 18வது அத்தியாயத்தின் 60வது வசனம் முதல் 82வது வசனம் வரை மூஸா நபியவர்கள் ஹில்று நபியைச் சந்தித்து , பாடம் கற்ற வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியின் பின்னணியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரிவாக விளக்கியுள்ளனர். மூஸா நபியவர்கள் இஸ்ரவேலர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்காக எழுந்தார்கள். "மனிதர்களில் மிகவும் அறிந்தவர் யார் ?''  என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. "இது பற்றி அல்லாஹ்வே நன்கறிந்தவன் ''  எனக் கூறாமல் , " நானே மிக அறிந்தவன் ''  எனக் கூறி விட்டார்கள். இதனால் அல்லாஹ் அவர்கள் மீது கோபமடைந்தான். "இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் எனது அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட அதிகம் அறிந்தவர் ''  என்று அல்லாஹ் அறிவித்தான். அதற்கு மூஸா நபியவர்கள் , " அவரை நான் எப்படி அடைவது ?''  என்று கேட்டார்கள். "ஒரு பாத்திரத்தில் ஒரு மீனைப் போட்டுக் கொள்! அந்த மீனை எங்கே தவற விடுகிறாயோ அந்த இடத்தில் தான் அவர் இருக்கிறார் ''  என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. மூஸா நபியவ