Posts

அப்சல்குரு தூக்கு அப்பட்டமான சட்டமீறல்

Image
அப்சல்குரு   தூக்கு   அப்பட்டமான   சட்டமீறல் ( இந்தக் கட்டுரை ,  அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை விமர்சித்து டி.ஆர். அந்தியார்ஜுனா அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமாகும். கட்டுரையாளர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் மத்திய அரசாங்கத்தின் முன்னாள் சொலிஸிட்டர் ஜெனரலும் ஆவார். இவரின் கட்டுரை பிப்ரவரி  19, 2013  இந்து நாளேட்டில் வெளியானது.) பிப்ரவரி  9, 2013  அன்று மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமான செயல் ஆகும். ஆகஸ்ட்  4, 2005 ம் ஆண்டு அப்சல் குருவுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.  இதன் பின்னர் அவர் நவம்பர்  8, 2006 ல் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். ஏழு வருடங்கள் அவருடைய கருணை மனு கண்டு கொள்ளப்படாமல் கிடப்பில் கிடந்தது. இப்போது அது மறுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தனக்கு வாழ்வா ?  சாவா என்று எந்த ஒரு முடிவும் தெரியாமல் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் கடுந்துயருக்கும் கவலைக்கும் ஆளாயினர். தூக்குத் தண்டனை கைதிகளும் ,  அவர்களது குடும்பத்தாரும் படுகின்ற அவஸ்தை ,  அல்லல் காரண

பாங்கு கூறுவதன் சிறப்புகள்

பாங்கு கூறுவதன் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் பாங்கு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வணக்கமாக்கியுள்ளார்கள். ஒருவன் தன்னுடைய வீட்டில் தொழுதாலும் ,  கடைவீதியில் தொழுதாலும் ,  காட்டில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுவதைத் தான் மார்க்கம் வழிகாட்டுகிறது. பல பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்கென்று முஅத்தின்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முஅத்தின்கள் நியமிக்கப்படாத பள்ளிகளும் உள்ளன. முஸ்லிம்களில் அதிகமானோர் பாங்கு கூறுவதற்கு வெட்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே பல பள்ளிவாசல்களில் சப்தமிட்டு பாங்கு கூறுவதற்குச் சக்தியில்லாத வயோதிகர்கள் முஅத்தின்களாக உள்ளனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கூட விளங்க முடியாத வகையில் பாங்கின் வாசகங்களைக் கூறுகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய ஒரு அம்சமாகும். தொழுகைக்காக நாம் கூறுகின்ற பாங்கிற்கு ,  பாங்கு சொல்பவருக்கு ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வாரி வழங்குகிறான். பாங்கு சொல்வதற்குப் போட்டி ஒரு தடவை பாங்கு சொன்னால் ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று அறிவிப்புச் செய்தால் அந்தப் பணத்தைப் பெறுவதற்காகப் பலர் பாங்கு

மாசுபடும் ஆறுகள் மனம் மாறும் சாதுக்கள்

மாசுபடும்   ஆறுகள்   மனம்   மாறும்   சாதுக்கள் " தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமே ''  என்று சில நேரங்களில் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புவார்கள். (அல்குர்ஆன்  15:2) அண்மையில் இந்தியாவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்வதைப் போன்று பிற மதத்தவர்களை நினைக்கத் தூண்டுகின்றன. டெல்லி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும் ஒரு பெருங்கூட்டம் ,  கற்பழிப்புக் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறுகின்ற மரண தண்டனை வேண்டும் என்று கோரினர். முஸ்லிம்களைப் போன்று பெண்கள் புர்கா அணிந்து செல்ல வேண்டும் என்று மதுரை ஆதீனம் போன்றோர் உண்மையை மறைக்காமல் ஊரறிய ,  உலகறியச் சொன்னார்கள். அரபு நாட்டுச் சட்டங்கள் வேண்டும் என்றும் ,  பெண்கள் கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று குரல் எழுப்பியவர்கள் இஸ்லாத்தைக் கடுமையாக விமர்சிக்கும் சங்பரிவார்கள் என்பது தான் இதில் ஆச்சரியம். பெண்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் இஸ்லாம் கூறும் திருமண ஒப்பந்தத்தை பற்றிப் பேசுகின்றார். இப்போது இந்த வரிசையில

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?

வஸீலா   ஆளை   வைத்தா ?  அமலை   வைத்தா ? வஸீலா என்பது ஆளை வைத்துத் தான் என்று கூறும் தில்லுமுல்லுகளுக்கும் ,  திருகுதாளங்களுக்கும் சரியான விளக்கத்தை இப்போது பார்ப்போம். சான்று:  1 பார்வை தெரியாத நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பரேலவிகள் சொல்வது போன்று , " முஹம்மது நபி பொருட்டால் உன்னிடம் மன்றாடுகிறேன். முஹம்மது (ஸல்) அவர்களே! என் ரப்பிடம் என் தேவை நிறைவேற உங்களின் பொருட்டு முறையிடுகிறேன் ''  என்று கூறவில்லை. அப்படிச் சொல்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் நேரில் வர வேண்டிய அவசியமும் இல்லை. அவர் வீட்டில் இருந்து கொண்டே இந்தப் பிரார்த்தனையைச் செய்திருக்கலாம். ஆனால் அந்த நபித்தோழர் அவ்வாறு செய்யவில்லை. ஏன் ?  அவர் ,  தவஸ்ஸுல் - வஸீலா தேடுதல் என்ற வார்த்தையில் பொருள் அறிந்த ,  அரபி மொழி தெரிந்த ஓர் அரபியர். ஓர் ஆளை வைத்து வஸீலா தேட வேண்டுமானால் அவர் தனது வஸீலாவில் அவரது பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி பிரார்த்திக்க வேண்டும். அப்படிப் பெயரைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே ,  தன் மீது அக்கரை காட்டுபவர் ,  மார்க்க ஞானம் உள்ளவர் என்று யாரை அந்

கூட்டத்திற்கல்ல! கொள்கைக்கே வெற்றி!

கூட்டத்திற்கல்ல !   கொள்கைக்கே   வெற்றி ! அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை , 80 களிலிருந்து இன்று வரை ஏறுமுகத்திலேயே இருந்து வருகின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலிருந்தவர்கள் இன்று வியக்க வைக்கும் எண்ணிக்கையில் வான் முகட்டைத் தொட்டுக் கொண்டிருக்கின்றனர். இங்கு தான் நமது ஜமாஅத் சுதாரிக்கவும் சுயபரிசோதனை செய்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கின்றது. இப்படிப்பட்ட வளர்ச்சியும் எழுச்சியும் கிடைத்தது எதனால் ? கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றதால் தான். இல்லையென்றால் மழை காலத்துக் காளான்கள் போல் நமது கூடாரங்கள் கலைந்து ,  காணாமல் போயிருக்கும். இன்னும் இந்தக் கொள்கை ஏறுமுகம் காண வேண்டுமானால் ,  எழுச்சி பெறவேண்டுமானால் இதே கொள்கைப் பிடிப்பும் பற்றும் நம்மிடம் தொடர்ந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் இறங்குமுகம் தான். நம்முடைய வாழ்நாளிலேயே இந்த இயக்கத்திற்கு முடிவுரை எழுத வேண்டியது தான். அல்லாஹ் நம்மைக் காப்பானாக! கொள்கை உறுதி என்றதும் நம்முடைய கவனத்திற்கு வரும் விஷயங்கள் தர்ஹா வழிபாடு ,  மவ்லிது , மத்ஹபுகள் போன்றவை தான். இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொரு உறுப்பினரும் கவனமாகத் தா

சீறுவோர் சிந்திக்க வேண்டும்

சீறுவோர்   சிந்திக்க   வேண்டும் நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். அல்குர்ஆன்  33:6 இந்த வைர வாக்கியத்தின் உயிரோட்டம் இன்று உலக முஸ்லிம்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை அவ்வப்போது வெளிப்படுத்துகின்றது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் என்பவர் ஷாபானு வழக்கில் ஷரீஅத்துக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய போதும் ,  நமது உயிரை விடவும் மேலாக நாம் மதிக்கும் நபி (ஸல்) அவர்களை டென்மார்க்கில் ஒருவன் கேலிச் சித்திரம் வரைந்த போதும் நாம் வெளிக்காட்டிய எதிர்ப்புக்கள் மாபெரும் வரலாற்றுச் சுவடுகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மார்க்கெட் நிலவரத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த அவரச உலகில் மார்க்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு செழிப்படைந்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற கட்டங்களில் வரம்பு மீறி வன்முறையில் ஈடுபடுவது ,  பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பது போன்ற ஒரு சிலரின் செயல்கள் , " தனது நாவினாலோ ,  கரங்களினாலோ பிறருக்குத் தீங்கு ஏற்படுத்தாதவனே முஸ்லிம் ''  என்று நபி

மவ்லீதும் ராத்தீபும் (வீடியோ)

Image
மவ்லீதும் ராத்தீபும் (வீடியோ) தெருமுனை பிரச்சாரம் புதுவலசை பஸ்ஸ்டாண்ட் உரை: முகவைகான்

தவ்ஹீத் ஜமாஅத் பிற மேடைகளை தவிர்ப்பது ஏன்?

Image
தவ்ஹீத் ஜமாஅத் பிற மேடைகளை தவிர்ப்பது ஏன்?     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக வைக்கப்படும் குற்றசாட்டுக்களில் பிரதான குற்றசாட்டாகப் பேசப்படுவது, இந்த அமைப்பினர் பிற இயக்கத்தின் மேடைகளில் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்வதில்லை என்பதாகும். இதற்கான விளக்கத்தை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் ஷைத்தான் மனிதனை ஒரே வடிவத்தில் தான் வழிகெடுப்பான் என நினைக்கக்கூடாது. மாறாக ஒருவனை வழிகெடுக்க ஷைத்தான் எத்தகைய யுக்தியையும் செய்யத் தயங்க மாட்டான். உதாரணத்திற்கு, வரதட்சணை வாங்கக்கூடாது என்பதில் நாம் உறுதியோடு இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இந்தத் தருணத்தில் நம்மை வழிகெடுக்க ஷைத்தான் வேறு வகையான ஆசை வார்த்தைகளைக் கூறுவான்.

வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்!

Image
வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்! வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்! சூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.

நபித்தோர்கள் வாழ்வினிலே .....

நபித்தோர்கள் வாழ்வினிலே .....     என்னிடம் என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரரிடம் என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்கள். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா? என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அஸ்மா (ர­லி), நூல்கள் : புகாரீ (2620), முஸ்லி­ம் (1671?) அஹ்மதுடைய (15529) அறிவிப்பில் சில பொருட்களை அன்பளிப்பாக கொண்டுவந்ததாகவும் அதை அஸ்மா (ரலி­) அவர்கள் மறுத்தவிட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடர் குறைகூறப்பட்டுள்ளது) அபூபக்கர் (ர­லி) அவர்களுக்கு பல மனைவிகள் இருந்தன. அவர்களில் ஒருவர் குதைலா (சிலர் கைலா என்று குறிப்பிடுகின்றனர்) குதைலா அவர்களை அபூபக்கர் (ர­லி) அவர்கள் அறியாமை காலத்தில்  தலாக் விட்டுவிட்டார்கள். இவர்கள் மூலம் அபூபக்கர் (ர­லி) அவர்களுக்கு பிறந்தவர்கள்தாம் அஸ்மா (ர­லி) அவர்கள். இஸ்லாம

தப்லீக் ஜமாஅத் ஒரு பார்வை

தப்லீக் ஜமாஅத் ஒரு பார்வை தப்லீக் ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களை சிறப்பான முறையில் செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. மக்களை தொழுகைக்கு அழைப்பது, அதிகமான வணக்கங்கள் புரிவது, பாவம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது, சில மார்க்க விஷயங்களில் பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பது இது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம் காண முடிகிறது. இவ்விஷயத்தில் இவர்களை நாம் பாராட்டவே செய்கிறோம். இவர்கள் புரியும் இந்த நன்மையான காரியங்களை மட்டும் சிலர் கவனத்தில் கொண்டு இவர்கள் தான் மிகச் சரியாகச் செயல்படுகிறார்கள் என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர். தப்லீக் ஜமாஅத்தினருக்கு இப்படி ஒரு முகம் இருப்பது போன்று இவர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கின்றது. இவர்களுடைய மறுபாதியை பலர் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஒருவருடைய அனைத்து செயல்பாடுகளை வைத்துத் தான் அவர் நல்லவரா? கெட்டவரா என்ற முடிவை எடுக்க வேண்டும். சமுதாயத்துக்குத் தீங்கிழைக்கும் அரசியல்வாதிகள், கொலைகாரர்கள், திருடர்கள் போன்ற தீயவர்களிடம் கூட சில நன்மையான காரியங்களை பார்க்கத் தான் முடிகிறது. இதனால

போப்ஆண்டவர்ராஜினாமா: - மறைக்கப்பட்டஉண்மைகள்!

போப்ஆண்டவர்ராஜினாமா: - மறைக்கப்பட்டஉண்மைகள்! கிறித்தவ மதத்தின் மிகப்பெரிய பிரிவாக உள்ள கத்தோலிக்கப் பிரிவின் மதத் தலைமைப்பீடம் இத்தாலியில் உள்ள வாடிகனில் உள்ளது. இங்கு இருந்துதான் கத்தோலிக்க கிறித்தவர்களுக்கும், கிறித்தவ தேவாலயங்களுக்கும் உண்டான அனைத்து வழிகாட்டுதல்களும் உலகம் முழுவதும் சென்றடையும். அவர்களது மதத் தலைவரான போப் ஆண்டவர்தான் ஆன்மீக அந்தஸ்த்தில் முதலிடம் பெற்றவர் என்று கத்தோலிக்க கிறித்தவர்கள் நம்புகின்றனர்.  போப் ஆண்டவராக கடந்த 2005ஆம் ஆண்டு பதவியேற்ற 16ஆம் போப் பெண்டிக்ட், தான் போப் ஆண்டவர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி அறிவித்தார். பிப்ரவரி 28ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றார்.   முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து  28ஆம் தேதி போப் 16ஆம் பெண்டிக்ட், பதவி விலகியதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிக்கோ லொம்பார்டி அறிவித்துள்ளார்.  600 ஆண்டுகால வரலாற்றில் போப் ஆண்டவர் பதவியை இதுவரை யாரும் ராஜினாமா செய்ததில்லை. இவர்தான் முதன் முறையாக அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதால் இது கத்தோலிக்க கிறித்தவர்களுக்கு மிகப்பெரும்

சத்தியமும் அசத்தியமும் (வீடியோ)

Image
சத்தியமும் அசத்தியமும் (வீடியோ) இடம்: புதுவலசை தவ்ஹீத் மர்க்கஸ் உரை: முகவைகான்

மாவீரன் கர்கரேயைக் கொன்றது யார்?

Image
மாவீரன் கர்கரேயைக் கொன்றது யார்? வெப்துனியா கட்டுரை மறைக்கப்பட்ட உண்மை என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். அன்றைய நாள் உண்மையான பயங்கரவாதிகளும், பயங்கரவாதமும் இணைத்து நசுக்கப்படும். உண்மை நீண்ட நாள் உறங்காது; இறுதியில் சத்தியமே வெல்லும்; நீதி நிலைபெறும்! இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே காவி பயங்கரவாதம் குறித்து பேசியதும், அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டதும், நாட்டை நையப் புடைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை விட்டு விட்டு பாஜகவினர் சுஷில் குமார் ஷிண்டே காவி பயங்கரவாதம் குறித்த தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்டால் தான் நாடாளுமன்றத்தை இயங்க விடுவோம் என்று பாஜகவினர் நாடாளுமன்றத்தை நிறுத்தியதும், அதற்கு வேறு வழியில்லாமல் ஆதாரத்தோடு வைத்த குற்றச்சாற்று என்ற இறுமாப்பு கூட இல்லாமல் ஷிண்டே நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததும், சமீபத்தில் அலகாபாத் கும்பமேளா மாநாட்டுக்குப் பிறகு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்ற அறைகூவலும், அதே கும்பமேளாவில் சாதுக்கள் மாநாட்டில் விஷ்வ

குண்டுவெடிப்பு – கதை எழுதும் (காவி) ஊடகங்கள்

குண்டுவெடிப்பு  –  கதை எழுதும் ஊடகங்கள் ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் தில்சுக் என்ற பகுதி இருக்கிறது. இங்குள்ள கொனார்க் என்ற சினிமா தியேட்டர் அருகே பிப்ரவரி  21 ஆம் தேதி இரவு  7.10   மணி அளவில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. பின்பு  5  நிமிடங்கள் கழித்து அதே பகுதியில் உள்ள ஆனந்த் ஹோட்டலில் இரண்டாவது குண்டு வெடித்தது. அடுத்த  15   நிமிடம் கழித்து வெங்கடாத்திரி என்ற தியேட்டரில்  3- வது வெடிகுண்டு வெடித்தது. இந்த க்   குண்டு வெடிப்புகளில் சிக்கி இதுவரை  16   பேர் இறந்துள்ளனர். சுமார்  116   பேர் காயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா  2   லட்ச ரூபாயும் ,  காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50   ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். மாநில காங்கிரஸ் அரசு இறந்தவர்களுக்கு தலா  6   லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. குண்டு வெடிப்பு நடந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவும் ,  மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பாவங்களுக்கு பரிகாரம் இறைச்சோதனை!

பாவங்களுக்கு பரிகாரம் இறைச்சோதனை! சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறதே! இதற்கு முடிவே இல்லையா? என்று தினமும்; அதிகமானோர் புலம்புவதைக் காணலாம்.  ஆனால் இவ்வுலகத்தின் சோதனைகளிலிருந்து தப்பியோர் யாரும் கிடையாது என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய உண்மை. அதாவது இவ்வுலகில் அல்லாஹ் நம்மைப் படைத்து, சகல வாழ்வாதார வசதிகளையும் நமக்களித்து, சீரான வாழ்க்கைப் பாதைகளையும் அமைத்துக் கொடுத்து நமக்கு இன்பங்களையும் துன்பங்களையும் மாறி மாறி வரச் செய்வதிலிருந்து இவ்வுலக வாழ்க்கையை ஒரு சோதனைக் களமாக, பரீட்சை மண்டபமாக ஆக்கியுள்ளான். நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். (திருக்குர்ஆன் 29 : 2,3) மேலும் கூறுகின்றான்:  ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவையோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா?பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை.படிப்பினை பெறுவதுமில்லை.                         (அல்குர்ஆன்: 9:126) 

”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..”

Image
”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு! “அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..”  என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கச்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்: இதில் இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுருத்தி காட்டியுள்ளார் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள். http://www.thehindu.com/opinion/op-ed/all-the-perfumes-of-arabia/article4415539.ece அனைத்து சமூகத்தாருக்கும் சரி சரிசமமாக உரிமை மற்றும் மதிப்பளிபதால் மட்டுமே இந்தியா வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும் என்பதை நரேந்திர மோடியை ஆரவாரமாய் வரவேற்று ஆதரிக்கும் மக்கள் முதலில் உணர வேண்டும் . அடக்குமுறைகளுக்கும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகளுக்கும் உள்ளாகி மிகுந்த மன நோவினைகளுக்கு உள்ளான பெருவாரியான இந்திய மக்களுக்கு விடிவெள்ளியாகவும் தற்கால மோசேயாகவும் காட்சி அளிக்கிறவர் நரேந்திர மோடி. அடுத்த பிரதமராவதற்குரிய அனைத்து தகுதிகளையும் இவர் கொண்டுள்ளார் என்

நாவை பேனுவோம் நரகிலிருந்து மீள்வோம்

Image
நாவை பேனுவோம் நரகிலிருந்து மீள்வோம். சோழபுரம் ஜீம்மா பயான் முகவை கான்

இஸ்லாமிய அரசியல் அப்பாவித்தனமானதா?

Image
இஸ்லாமிய அரசியல் அப்பாவித்தனமானதா? கடந்த 17.02.2013 ஞாயிறு அன்று வெளியான   ஹிரு தின பத்திரிக்கையில் மதுகம செனவிருவன்   என்பவர் இஸ்லாத்தைப் பற்றி  ‘ இஸ்லாமிய அரசியல் அப்பாவித்தனமானதா ? ‘  எழுதிய ஆக்கம் ஒன்றில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை கண்ட இடத்தில் கொலை செய்யும்படி குர்ஆன் தூண்டுவதாக எழுதியிருந்தார். இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட குறிப்பிட்ட ஆக்கம் முழுவதும் முன்னுக்குப் பின் முரனாக, தவறான கருத்துக்களை சுமந்து இஸ்லாத்தைப் பற்றியோ, குர்ஆனைப் பற்றியோ எவ்வித ஞானமும் இன்றி தன்னிச்சையாக இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வினால் எழுதப்பட்ட ஆக்கம் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. அது மட்டுமன்றி கட்டுரையாளர் தனது ஆக்கத்தில் சுட்டிக் காட்டும் வசனங்களும் அதற்கு அவர் வழங்கியுள்ள தவறான விளக்கங்களும் அவருடைய சொந்த முயற்சியினால் குர்ஆனில் இருந்து தேடி எடுத்து எழுதப்பட்டவைகள் அல்ல என்பது கட்டுரையையும் அதன் வாதங்களையும் பார்க்கும் போதே தெளிவாக விளங்குகின்றது. காரணம் இஸ்லாத்திற்கு எதிராக இந்த குற்றச் சாட்டை பல காலமாக பலரும் வைத்து வருகின்றார்கள். அந்தந்த கா

முஸ்லிம்களுக்குமட்டும் மறுக்கப்படும் நீதி!

முஸ்லிம்களுக்குமட்டும் மறுக்கப்படும் நீதி! அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு ரகசியமாக அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது குடும்பத்தினர்களுக்குக்கூட தெரியாத வகையில் அவரை தூக்கிலிட்டது அயோக்கிய காங்கிரஸ் அரசு. இந்த சம்பவம் நடந்து முடிந்த சில வாரங்களுக்குள்ளேயே காங்கிரஸ் கயவர்களின் கயமைத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகிக் கொண்டு வருகின்றது. முஸ்லிம்களின் முதுகில் குத்தும் கயவர்கள் நாங்கள்தான். நாங்கள் சங்பரிவாரர்களைவிட முஸ்லிம்களை கறுவருப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக காங்கிரஸின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு நாடகம்: வீரப்பன் கூட்டாளிகள் 4பேருடைய கருணை மனுக்களையும் ஜனாதிபதி நிராகரித்து விட்டதாகவும், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளதாகவும் சென்ற வாரம் செய்திகள் வெளியாயின. சங்பரிவாரர்களை திருப்திப்படுத்த அப்பாவி அப்சல் குருவை தூக்கிலிட்ட காங்கிரஸ் கயவர்கள், தாங்கள் நடுநிலையானவர்கள்தான் என்று காட்டிக்கொள்வதற்காக சோனியா காந்தியால் திரைக்கதை வசனம் எழுதப்பட்டு, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ஷிண்டே ஆகியோர் நடித்து வெளியான