முஸ்லிமல்லாதவர்களைக் கொள்ளச் சொல்கிறதா? இஸ்லாம்
முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லும் இஸ்லாம் இஸ்லாம் மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது . காபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது என்பதும் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களில் ஒன்றாகும் . திருக்குர்ஆனில் 2:191 வசனத்தை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர் . ஜிஹாத் ( புனிதப் போர் ) செய்யுமாறு திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகளையும் எடுத்துக் காட்டி இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர் . இது குறித்தும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது . முஸ்லிமல்லாதவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாகச் சொல்வதை முதலில் பார்ப்போம் . ( களத்தில் ) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லு...