‘‘முஸ்லிம்கள் நல்லவர்கள். அவர்களை நம்பலாம்’’

‘‘முஸ்லிம்கள் நல்லவர்கள். அவர்களை நம்பலாம்’’

30 வருடங்கள் சவூதியில் வாழ்ந்து இஸ்லாத்தைத் தழுவிய ஜிப்ரீல் மாசன் கூறுகிறார்

பிரித்தானியாவில் பிறந்து தற்போது சவூதியில் வசித்து வரும் ஜிப்ரீல் மாசன் என்பவர் தான் இஸ்லாத்தின்பால் கவரப்பட்டதன் சுவாரஷ்யங்களை சவூதி அரேபிய தொலைக்காட்சி ஒன்றுடன் பகிர்ந்துக்கொண்டார்.

ஷேக் யூசுப் எஸ்டெஸ்: அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய பெயரை தெரிந்து கொள்ளலாமா?
ஜிப்ரீல் மாசன்: எனது பெயர் ஜிப்ரீல் மாசன். இஸ்லாத்தை ஏற்றதும் எரிக் மாசன் என்ற பெயரை ஜிப்ரீல் மாசன் என மாற்றிக் கொண்டேன்

ஷேக் யூசுப் எஸ்டெஸ்:நீங்கள் பிரித்தானிய மொழி உச்சரிப்பினை கொண்டிருக்கிறீர்கள். எனினும் சில அரபு வார்த்தைகளை பேசுகிறீர்கள். அத்துடன் அரபுப் பெயரைக் கொண்டிருக்கிறீர்கள். இது எப்படி?

ஜிப்ரீல் மாசன்: நன்று, நான் எனது இளமைக் காலத்தில் நைஜீரியாவில் வசித்தேன். எனது தாய் ஒரு இத்தாலிய கத்தோலிக்கர். தந்தை பிரித்தானிய புரொடொஸ்டண்ட். அவர்களுக்கு 4 குழந்தைகள். அக் குழந்தைகளில் நானும் ஒருவன்.நான் சிறுவனாக இருக்கும்போது எனது தந்தை பல வருடங்கள் நைஜீரியாவில் அரசியலில் ஈடுபட்டார். அப்போது நான் எமது பெற்றோருடன் அங்கேயே இருந்தேன்.



எனது தந்தையின் அதிகமான நண்பர்கள் முஸ்லிம்கள். அங்கு வேலை பார்ப்பவர்கள் அநேகமானோர் முஸ்லிம்கள். எனது தந்தை ‘‘முஸ்லிம்கள் நல்லவர்கள். அவர்களை நம்பலாம்’’ என அடிக்கடி கூறுவார். அதனைத்தான் நானும் கூறுகிறேன்.

ஷேக் யூசுப் எஸ்டெஸ்: ஆனால் நீங்கள் சொல்வதற்கு எதிராகவே இன்று ஊடகங்கள் சொல்கின்றன. முஸ்லிம்கள் கெட்டவர்கள். நீங்கள் அவர்களை நம்பாதீர்கள் என அவை கூறுகின்றன. ஆனால் உமது தந்தை முஸ்லிம்கள் நல்லவர்கள். அவர்களை தாராளமாக நம்பலாம் என்கிறார். குழப்பமாக இல்லையா?

ஜிப்ரீல் மாசன்: நடைமுறையில் பெரும்பாலான முஸ்லிம்கள் நல்லவர்கள். நல்ல மக்கள். எனது மகன் சவூதி அரேபியாவிலேயே பிறந்தார். அவன் தற்போது இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கின்றான். அங்கு எனது மகன் சவூதி நண்பர்களுடன் உதைபந்து விளையாடும் ஒரு புகைப்படத்தையேனும் அவர்கள் வெளியிட்டதில்லை. எனினும் அவன் தனது சவூதி நண்பர்களுடன் சண்டையிடும் காட்சிகளை மட்டும் வெளியிடுகின்றனர்.

இஸ்லாம் தொடர்பிலும் ஊடகங்கள் இதனையே செய்கின்றன. முஸ்லிம்களில் நல்லவர்கள் இருப்பதைப் போன்று தவறு செய்தவர்களும் இருக்கின்றனர். எனினும் நடைமுறையில் பெரும்பாலானவர்கள் நல்லவர்களே. இவ்வளவுதான் எங்களுக்கு வேண்டியதும் நல்லவர்களே.

ஷேக் யூசுப் எஸ்டெஸ்: நீங்கள் இஸ்லாத்தைத் தழுவி எவ்வளவு காலம் ஆகின்றது?

ஜிப்ரீல் மாசன்: நான் இஸ்லாத்தைத் தழுவி இப்போது 5 அல்லது 6 வருடங்கள் ஆகின்றன. ஆனால் நான் நைஜீரியாவில் சிறுவனாக இருக்கும் போதே குர்ஆனைப் பெற்றுக் கொண்டேன். ஒருபோதும் அதனை விட்டு விட்டு பயணிக்கக்கூடமாட்டேன்.

ஷேக் யூசுப் எஸ்டெஸ்: நீண்ட நாட்கள் சிந்தித்ததன் பின்னரா முஸ்லிமாக மாறும் முடிவை எடுத்தீர்கள் ?

ஜிப்ரீல் மாசன்: எனக்கு இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. யாருக்காகவும் நான் இதை செய்யவில்லை. எனக்கும் இறைவனுக்குமாகவுமே நான் இதைச் செய்தேன். நான் இஸ்லாத்தை ஏற்கும்போது எனக்கு வேறு தெரிவு என்பது சாத்தியமற்றது.

வணக்கத்துக்குத் தகுதியானவன் இறைவன் ஒருவனே. அவன் அல்லாஹ் ஒருவனே. முஹம்மது நபியவர்கள் அவனின் தூதர். இதுவே நான் இஸ்லாத்தை ஏற்கக் காரணம்.

ஷேக் யூசுப் எஸ்டெஸ்: சரி. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது உங்கள் மனோநிலை எப்படி இருந்தது? மக்கள் உங்களை துரோகியாக பார்த்தார்களா?

ஜிப்ரீல் மாசன்: சிலர் இதனை நம்பவில்லை. இஸ்லாமே வாழ்க்கைக்கு சரியான பாதை என்பதை விளங்கியதால்தான் அதனை ஏற்றுக் கொண்டேன்.
எரிக் நீ எப்படி முஸ்லிம் ஆனாய்? நீ அரைக்கால் சட்டை அணிகிறாய். உன் சிகை அலங்காரம் அலங்கோலமாய் உள்ளது. நீ ஆங்கில கலாசார பழக்க வழக்கங்களை பின்பற்றும் ஒரு ஆடம்பரப் பிரியன் என்றெல்லாம் சிலர் என்னை விமர்சித்தனர்.
ஆனால் முஸ்லிம்கள் நல்லவர்கள். அவர்கள் அனைவரையும் தொப்பி அணிந்து குண்டெறிபவர்களாக சித்தரிக்காதீர்கள். அவர்கள் அப்படிபட்டவர்கள் அல்ல என்று நான் கூறுவேன்.

ஷேக் யூசுப் எஸ்டெஸ்: நீங்கள் குண்டு தொடர்பில் கூறியதால் இன்னொரு வினாவை உங்களிடம் தொடுக்கிறேன். சிலர் தீவிரவாதம் இஸ்லாத்தின் ஒரு பகுதி என்றும் இஸ்லாம் தீவிரவாதத்தின் ஒரு பகுதி என்றும் கூறுகின்றனர். நீங்கள் இதில் உடன்படுகின்றீர்களா? அல்லது இதனை மறுக்கின்றீர்களா?

ஜிப்ரீல் மாசன்: நிச்சயமாக. எல்லா மதத்தவர்களும் அப்படி சொல்கின்றனர். நீங்கள் அதை நிறுத்த முடியாது. சிந்தனைகள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்காது. எங்களில் நல்ல முஸ்லிம்கள் கெட்டவர்கள் என இரு வகையினர் இருக்கலாம். கத்தோலிக்கர்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கின்றார்கள்.

ஷேக் யூசுப் எஸ்டெஸ்: அப்படியானால் குண்டு எறிபவர்கள் அனைவரும் காட்டு மிராண்டிகள் அல்லது கெட்டவர்கள் என்கின்றீர்களா?

ஜிப்ரீல் மாசன்: அப்பாவிகள் மீது குண்டு எறிபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் கெட்டவர்கள் என்றே நான் சொல்கிறேன். அதனை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இஸ்லாமியர்கள் கொலைகாரர்கள் அல்ல. கலந்துரையாடல் புரிந்துணர்வுடன் வழிகாட்டும் மார்க்கமே இஸ்லாம்.

ஷேக் யூசுப் எஸ்டெஸ்: சரி. உங்களிடம் இன்னுமொரு வினா? நீங்கள் இஸ்லாத்தை ஏற்று 5 வருடங்களாகிறது. இப்போது சவூதியின் ஜித்தாவில் இருக்கிறீர்கள். அங்கிருந்து மக்காவுக்கு செல்வதொன்றும் கஷ்டமல்ல. நீர் ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளீரா?

ஜிப்ரீல் மாசன்: இதுவரையில்லை. நான் அடுத்த வருடம் ஜித்தா தஃவா மத்திய நிலையத்தின் வழிகாட்டலின் பேரில் எனது ஐரோப்பிய நண்பர்களுடன் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளேன். அமெரிக்கர் ஜேர்மனியர் பிரான்சியர் இத்தாலியர் பிரித்தானியர் என அனைவரும் வித்தியாசமின்றி நாங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவோம்.

நான் இரு முறை உம்றா செய்திருக்கிறேன். ரமழானில் 27 ஆம் நாளில் அதனை நான் செய்திருக்கிறேன். நான் மதீனாவின் மஸ்ஜிதுல் நபவிக்கும் விஜயம் செய்துள்ளேன்.

ஷேக் யூசுப் எஸ்டெஸ்: எங்களுக்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

ஜிப்ரீல் மாசன்: நல்லவர்களாக வாழ வேண்டும். குர் ஆனை தினமும் ஓதுங்கள். அதனை வாழ்க்கையில் எடுத்து நடவுங்கள். என்னை இங்கு எவரும் முஸ்லிமாவதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இது எனது விருப்பம். தெரிவு அவர்களைப் பொறுத்தது. நல்லவர்களாக மாறுவதற்கு பிரார்த்தனை செய்யுங்கள் அவ்வளவுதான்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை