தொலைக்காட்சியில் தொலைந்துவிட்ட சமுதாயம்


தொலைக்காட்சியில் தொலைந்துவிட்ட சமுதாயம் 
வழிகெடுக்கும் பெற்றோர்கள்
கருவறையை சிந்தித்துப் பார் விண்வெளியை சிந்தித்துப் பார் ஒவ்வொன்றிலும் நீ பயன் தரத்தக்க கோடான கோடி செய்திகள் உனக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு திருமறைக் குர்ஆன் அந்த அறிஞர்களை சிந்திக்கத் தூண்டியது. அதன் காரணமாக
அவர்கள் சிந்தித்துப் பார்த்து திருமறைக் குர்ஆனைப் படித்தார்கள்.
அதன் மூலமாக உலகத்திற்கு ஏராளமான அறிவியல் அருட்கொடைகளை நம்முடைய முன்னோர்கள் அள்ளி வழங்கினார்கள்.
இப்னு அலீ ஸீனா என்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளவர். இவரை வரலாற்றுப் புத்தங்களில் அபி ஸன்னா என்றும் அழைக்கப்படும். இவர் ஒரு இஸ்லாமியப் பேரறிஞர் மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர் என்று இன்றைக்கு மருத்துவ உலகம் இவருக்கு புகழ்சூட்டி அழைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மிகப் பெரிய மருத்துவர் அவர் கி,பி பத்தாம் நூற்றாண்டில் எழுதிய ஒரு மருத்துவ நூலை சென்ற நூற்றாண்டில் (கி,பி பத்தொன்பதாம் நூற்றாண்டு) மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கின்
றார்கள். ஒவ்வொரு நாளும் மருத்துவத்தின் வளர்ச்சி அபரிதமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கின்ற இன்றைய காலத்தில் பத்து நுற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட புத்தகம் ஒன்று இந்த நூற்றாண்டிலே இன்றைக்கு
வாழ்கிற அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது என்று சொன்னால் அவர் அன்றைக்கு சொல்-லி ச் சென்ற மருத்துவக் குறிப்புக்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்துள்ளது. என்பதை இந்த மொழிபெயர்ப்பு நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
அந்தக் கருத்துக்களை எப்படி சொன்னார்? எங்கிருந்து சொன்னார்? என்று நாம் யாராவது என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருப்போமா? அவருக்கு மாத்திரம் இன்றி இந்த உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் திருமறைக் குர்ஆன் சிந்திக்குமாறும் ஆராய்ச்சி செய்யுமாறும் அறிவுறுத்துகின்றது. இந்த கண்டு பிடிப்புக்கள் அனைத்
தையும் அவர் திருமறைக் குர்ஆனில் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையில் இருந்தும் கண்டு பிடித்துக் கூறினார். இன்று வரைக்கும் அல்லாஹ்வின் அற்புதமான வேதம் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நாமோ கேட்கும் போதல்லாம் நேரமில்லை, என்னுடைய வேலைகளைப் பார்ப்பதற்கே நேரம் சரியாகி விடுகிறது என்று ஒரு காரணத்தைச் சொல்லுகிறோம்.
 ஆனால் தொலைக் காட்சி பார்ப்பதற்கு மாத்திரம் நமக்கு ஏராளமான நேரங்கள் இருக்கின்றன. டிவியில் படம் பார்ப்பதற்கும் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்ப்பதற்கும் நேரமிருக்கிறது. சீடிகளில் வகை வகையான காமக் களியாட்டங்களைப் பார்ப்பதற்கு நேரமிருக்கின்றது. இப்படி வீணாக தொலைக்காட்சி சீரியல்களுக்கு நேரத்தை ஒதுக்கிற நாம் குர்ஆனைப் படிப்பதற்கு நேரத்தை ஒதுக்கவுமில்லை. நபிகள் நாயகத்தின் போதனைகளை அதனுடைய மூல மொழிகளில் ஆய்வு செய்தோ அல்லது மொழி பெயர்ப்பு நூல்களில் இருந்தோ கற்றுக் கொள்ள முயற்சி எடுக்கவில்லை. இப்படி இஸ்லாம் காட்டித் தந்த போதனைகளை விட்ட காரணத்தினால் இந்த சமுதாயம் தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சிகளையும் கண்டு பிடிப்புக்களையும் இந்த உலகத்திற்கு அள்ளிக் கொடுத்த எத்தனையோ விஞ்ஞான உண்மைகளைகளையும் இந்த சமுதாயம் தொலைத்து விட்டு நிற்கிறது.
அல்லாஹ்வால் இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடை நேரம் இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு நமக்கு போதனை செய்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கüல் அதிகமானோர்
இரண்டு அருட்செல்வங்கüன் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர். 
1.உடல் ஆரோக்கியம் 2. ஓய்வு
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-) ஆதாரம் புகாரி 6412
 அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் காலத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான்.
 காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.                              அல்குர்ஆன் 103:1,2,3
 காலத்தைப் பயன்படுத்துகிற விதத்தில் பயன்படுத்தாக காரணத்தினாலும் எதற்கு செலவழிக்க வேண்டுமோ அதற்கு செலவளிக்காமலும் எதற்கெல்லாம் செலழிக்கக் கூடாதோ அதில் காலத்தையும் நேரத்தையும் செலவழித்து வீணடிக்கும் ஒரு சமுதாயமாக இருக்கிறோம். இதன் காரணமாக மறுமைப் பேறுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறோம். காலத்தை நாம் முறையாக பயன்படுத்தக் கற்றுக் கொள்ள இஸ்லாமிய மார்க்கம் எண்ணற்ற வழிமுறைகளை நமக்கு கடைப்பிடிக்குமாறு கூறி அதற்கு செயல் வடிவத்தையும் கொடுத்தது போன்று வேறு எந்த சித்தாந்தமும் சொல்லவில்லை இதனால் தான் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் குறிப்பிட்டு அதை நிறைவேற்றுவது இஸ்லாத்தில் உன்னதமிக்க செயல் என்பதையும் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்துள்ளார்கள்.
 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.                அல்குர்ஆன் 4:103
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.: நான் நபி (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள்.
ஆதாரம் புகாரி 527
 நேரத்தின் படி வழிபாட்டை அமைத்துக் கொண்டு நேரத்தை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். என்று இறை வழிபாட்டின் மூலம் இஸ்லாம் கற்றுத் தருகிறது. முஸ்-லி ம் சமுதாயம் நேரத்தின் அருமை பெருமை தெரியாமல் மார்க்கத்தைப் படிப்பதற்கும் அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் அறிவைப் பெருக்குவதற்கு நேரத்தை பயன்படுத்த வேண்டியவர்கள் சீரழிவின் பால் கொண்டு சொல்லும் வீணான போழுது போக்குகளிலே நேரத்தையும் காலத்தையும் செலவழிப்பதை வன்ûமாயகக் கண்டிக்கிறது. இதை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்.
 அல்லாஹ்வின் பாதையைக் கேலி -யாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவு படுத்தும் வேதனை உள்ளது.
 அல்குர்ஆன் 31:06
தொலைக் காட்சியின் தீமையில் இருந்து குழந்தைச் செல்வங்களைப் பாதுகாப்போம்.
தொலைக்காட்சியில் ஏற்படும் சீரழிவில் இருந்து வருங்கால சமுதாயத்தை வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே குழந்தைச் செல்வங்களை இதில் இருந்து காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றெடுத்த தாûயும் தந்தையையும் சாரும் என்பதையும் கவனத்தில்எடுக்க வேண்டும்.
தமிழில் கூட ஒரு பாடல் பாடப்படுகிறது. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே. இப்பாடல் பாடப்படுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் எவ்வாறு பிறக்கின்றது என்பதைப் பற்றி அழகான ஒரு பொன் மொழியை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி (ஸல்) அவர்கள் மிக அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
 ஒரு விலங்கு எப்படி முழுவளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக்குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்
ஆதாரம் புகாரி 1358
குழந்தைகள் வளர்ப்பு முறையைப் பொறுத்து தான் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மேற்கண்ட நபிமொழியிலி -ருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
இதன் காரணமாகத்தான் குழந்தை வளர்ப்பிற்கு இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. எதிர்காலச் சமுதாயம் இன்றைய குழந்தைகள் தான். எதிர்காலச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக வேண்டும் என்றால் இளம் பிராயத்திலேயே அக்குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் போதிக்கப்பட வேண்டும். இன்றைக்கு நமது சமுதாயத்தில் நம்முடைய குழந்தைகளை தேவையில்லாத காட்சிகளைப் பார்க்க வைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்து சின்னாபின்னமாக்கிவிடுகிறோம். நம்முடைய குழந்தைகளை திருமறைக் குர்ஆனையும் அல்லாஹ்வின் தூதரின் பொன் மொழிகளையும் கூறி அவர்களைத் தாலாட்ட வேண்டிய நம் சமுதாயத்தின் தாய்மார்கள் தொலைக்காட்சிகளுக்கும் வானொ-லி களுக்கும் போன் போட்டுக் கொடுத்து என்னுடைய குழந்தைக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும் இந்தப் பாடலைக் கேட்டால்தான் அவனுக்கு தூக்கம் வரும், அவன் சாப்பிட ஆரம்பிப்பான். எனவே இந்தப் பாடலை அவனுக்காக போடுமாறு சொல்-லி எத்தனையோ தாய்மார்கள் பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை வளர்ப்பதை இன்று வாழும் முஸ்லி -ம் தாய்மார்களிடம் காணக் கூடியதாக இருக்கின்றது.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முகமன் சொல்லி - அழைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டிய தாய்மார்கள் அதற்கு வெட்கப்பட்டு குட்மார்னிங் என்றும் நமஸ்காரம் என்று கூறி அழைப்பதற்கு கற்றுக் கொடுக்கின்றார்கள். என்றால் எந்த அளவிற்கு இந்த சமுதாயம் அன்னியர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றி நம்முடைய கலாச்சாரங்களை விட்டும் நெறி பிளந்து பின்னோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது. என்று நம்மை சிந்திக்க வைக்கின்றது.
குர்ஆனை ஓது என்று சொல்ல வேண்டிய வயதில் ரஜினி மாமா, கமல் மாமா, அஜித் மாமா ஆடுவது போல் ஆடி பாட்டுப் பாடு என்று சொல்லி - அதைப் பார்த்து பெற்றெடுத்த தாயும் தந்தையும் மகிழும் காட்சிகளைப் பார்க்கின்றோம். என்னுடைய குழந்தை சிறப்பாகப் பாடுகின்றது நடனமாடுகின்றது என்று கூறுகின்றோம். எந்த பெற்றோராவது என்னுடைய குழந்தை திருமறைக் குர்ஆனின் இந்த அத்தியாயத்தை சிறப்பாக ஓதுகின்றது. என்று கூறி உள்ளத்தால் பூரிப்படைந்தவர்கள் எத்தனை பேர்கள்? இருக்கின்றார்கள். எதில் எல்லாம் சந்தோசப் படவேண்டுமோ அதில் ஆனந்தம் அடையாமல் மார்க்கத்திற்கு விரோதமான மறுமை வாழ்வைச் சிரழிக்கின்ற காரியங்களை பார்த்து சந்தோசப்படுகின்றோம். இது தான் நிரந்தர தர்மம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
நாளை மறுமையில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் அல்லாஹ் சொல்லுவதை நாம் அறியவில்லையா? வழிகெடுப்பவர்களைப் பற்றி அல்லாஹ் எவ்வாறெல்லாம் எச்சரிக்கை செய்கிறான். என்பதை நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? யார் யாரை வழிகெடுக்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ்விடம் இரண்டு மடங்கு தண்டனையை வழங்குமாறு கூறுவார்கள் என்று அல்லாஹ் வழிகெடுத்தவர்களைப் பற்றி கூறுகிறான்.
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள் "எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா!
அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக!
அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' எனவும் கூறுவார்கள்.
அல்குர்ஆன் 33:66,67,68
 நாம் நம்முடைய குழந்தைகளை தவறான பாதையில் இட்டுச் சென்றால் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் இரு மடங்கு தண்டனை வழங்குமாறு பிராத்திப்பார்கள். நாளை மறுமையில் சில முகங்கள் நரகத்தில் போட்டுப் புரட்டப்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டுமே அவனுடைய தூதருக்கு கட்டுப் பட்டிருக்க வேண்டும் என்று அழுது புலபும் காட்சிகளை காணக்கூடிதாக இருக்கும் ஒவ்வொரு குழந்தைகயும் தன் பெற்றோர்களுக்கு எதிராக இறைவா என்னுடைய பெற்றோர்கள் என்னை வழி நடத்த வேண்டிய விதத்தில் வழிநடத்தாமல் தொலைக்காட்சிகளைப் பார்ப்பதற்கும் அதில் நடக்கும் ஆபாசக் காட்சிகளைக் கண்டு கழிப்பதற்குடங காரணமாக இருந்தார்கள் அதில் அவர்கள் என்னை எந்த விதமான ஒரு எச்சரிக்கையும் கண்டும் காணதது போன்று நடந்து எங்களின் தவறுகளைத் திருத்த உதவி செய்யாமல் எங்களை வழிகெடுத்து விட்டார்கள். என்று அல்லாஹ்விடம் முறையிட்டார்கள் என்றால் நமது நிலை என்னவாகும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
இன்னும் சில குடும்பங்களைப் பார்க்கிறோம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கிறோம் என்று சொல்-லி நீ டிவி பார்க்காதே என்று குழந்தைகளுக்கு சொல்-லி விட்டு பெற்றொர்கள் பார்ப்பதை காணலாம். 
இது போன்ற தீமைகளில் இருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்போம்
தீன்குல பெண்மனி மாத இதழ்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை