விஸ்வரூபம் நடந்தது என்ன? – ஒரு விரிவான அலசல்


விஸ்வரூபம் நடந்தது என்ன? – ஒரு விரிவான அலசல்

விஸ்வரூபம் படத்திற்கு தடைகோரி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனியாக உள்துறைச் செயலாளரைச் சந்தித்து கோரிக்கை வைத்தது.

இதை ஏற்று தமிழக அரசு முஸ்லிம்களை புண்படுத்தக்கூடிய விதத்திலான காட்சி அமைப்புகள் கொண்ட அந்தப் படத்திற்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவே அதை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில் விஸ்வரூபத்திற்கு போடப்பட்ட தடை நீடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்படவே கமல் கண்ணீர் பேட்டி கொடுக்க, தமிழ் திரையுலகமே திரண்டு அவருக்கு ஆறுதல் சொல்லியது.
  • முஸ்லிம்களின்போராட்டஅறிவிப்பு!
  • தமிழகஅரசின்தடைஉத்தரவு!
  • அதைஎதிர்த்துகமல்உயர்நீதிமன்றத்தில்வழக்கு!
  • உயர்நீதிமன்றம்படத்தைவெளியிடஅனுமதி!
  • அதைத்தொடர்ந்துதமிழகஅரசின்மேல்முறையீடு!

என்று தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்ட நேரத்தில், அரசியல்வாதிகள் தங்களது சாயம் வெளுக்கும் விதமாக பல அறிக்கைகளை விட்டு தங்களைத் தாங்களே அடையாளம் காட்டிக் கொண்டனர். இந்நிலையில் முதலில் நல்லபிள்ளை நாடகமாடிய கலைஞர் முஸ்லிம்களின் முதுகில் குத்துவதுபோல படத்திற்கான தடைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார்.


பரபரப்பு மேலும் அதிகமானது. இந்நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் இதற்குரிய காரணங்களை விளக்கினார்.

இந்த படத்திற்கான தடை விதிக்கப்படுவதற்கு 23 இஸ்லாமிய அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்புகள் தனியாகவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனியாகவும் கோரிக்கை விடுத்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரை தனித்துக்கூறி நாடு தழுவிய அமைப்பாக வளர்ந்துள்ள டிஎன்டிஜேவிற்கு ஏழரை லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.

சிறுகுழுக்கள்தான் தன்னை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த செய்தியை தனது பேட்டியில் அவர் குறிப்பிட்டார். படம் வெளியாகக் கூடிய அனைத்து தியேட்டர்களையும் ஜனவரி 25ஆம் தேதி அன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்தலைமையகம் கடந்த ஜனவரி 23ஆம் தேதி அன்று அறிவிப்புச் செய்தது.

கடந்த ஜனவரி 23ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் நடந்த உள்துறைச் செயலாளருடனான சந்திப்பினைத் தொடர்ந்து அன்றைய தினமே இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை மாநகர ஆணையாளரிடத்தில் அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டது.



மேலும் உள்துறைச் செயலாளரிடத்தில் மனு கொடுத்த அமைப்புகள் கொடுத்த தகவல்களில், இந்தத் திரைப்படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதனால் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று டிஎன்டிஜேயின் கடிதம் தான் தெளிவுபடுத்தியிருந்தது. அந்த கடிதத்தையும் அதுகுறித்த முழுமையான செய்திகளையும் கடந்த உணர்வு இதழில் விரிவாக வெளியிட்டிருந்தோம்.

தவ்ஹீத் ஜமாஅத் சுட்டிக்காட்டிய அதே காரணத்தைத்தான் முதல்வர் ஜெயலலிதாவும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

மேலும், விஸ்வரூபம் வெளியாகக் கூடிய அனைத்து திரையங்குகளையும் முற்றுகையிடுவோம் என்ற டிஎன்டிஜேவின் போராட்ட அறிவிப்பையும் முதல்வர் அவர்கள் சூசகமாக தனது பேட்டியில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுமட்டுமா? திமுக தலைவர் கருணாநிதி முஸ்லிம்களை முதுகில் குத்தும்விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டாரே! பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது என்ற தலைப்பிலான அந்த அறிக்கையிலும் கூட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத்தான் தாக்கியிருந்தார்.

அதாவது 23 இஸ்லாமிய அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்பினர் அனைவரும் இணைந்தும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனியாகவும் இந்தப் படத்திற்கு தடைகோரி உள்துறைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்த நிலையில், விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு இந்த தடை உத்தரவை பிறப்பிக்க ஒரே ஒரு அமைப்பு கொடுத்த புகார் தான் காரணம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இதோகலைஞரின்அறிக்கைவரிகள்
:

விஸ்வரூபம்திரைப்படம்தமிழகத்தில்ஜனவரி
25ஆம்தேதியன்றுவெளியிடப்படுவதாகஇருந்தது.இந்தத்திரைப்படத்தில்இஸ்லாமியர்களுக்குஎதிரானகாட்சிகள்இடம்பெற்றிருப்பதாகஒருபுகார்எழுந்தது.இதையடுத்துஒருஇஸ்லாமியஅமைப்பினர்கொடுத்தபுகாரின்அடிப்படையில்,தமிழகஅரசுவிஸ்வரூபம்திரைப்படத்தைதமிழகத்திலேவெளியிடதடைபிறப்பித்தது. (ஸ்கிரீன்ஷாட்இணைக்கப்பட்டுள்ளது)

23 இஸ்லாமிய அமைப்புகளும் கூட்டாக கடிதம் வழங்கியிருந்தும், ஒரு அமைப்பு என்று மட்டும் கலைஞர் சொல்லக் காரணம் என்னவென்றால் டிஎன்டிஜேதான் இந்த படம் வெளியிடப்படுமானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை தக்க காரணங்களோடு முன்கூட்டியே தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டியது.

அதோடு மட்டுமல்லாமல் விஸ்வரூபம் திரையிடப்படக்கூடிய தியேட்டர்கள் அனைத்தையும் 
முற்றுகையிடப்போவதாக அறிவித்த ஒரே ஒரு அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும்தான் என்பதால்தான் கலைஞர் தனது அறிக்கையில் ஒரு அமைப்பு கொடுத்த புகாருக்காக படத்தை தடை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது ஒரு அமைப்பின் கோரிக்கை என்று கூறி மற்ற முஸ்லிம்கள் அனைவரும் அந்தப்படத்தை ஆவலோடு எதிர்பார்த்தது போல கலைஞர் படம் காட்டியுள்ளார். உண்மையில் டிஎன்டிஜே தான் வகுத்துக் கொண்ட தனிப்பட்ட வியூகங்கள் மூலம் இப்படத்திற்கு எதிராக களமிறங்கியது போல மற்ற அனைத்து அமைப்பினரும் தாம் வகுத்துக் கொண்ட வியூகங்களின் அடிப்படையில் இப்படத்திற்கு எதிராக ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்தனர்.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப்போராட்டமும் நடத்தினார்கள். ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் இப்படத்திற்கு எதிராக பொங்கி எழுந்திருந்தும் ஒரு இயக்கத்தின் போராட்டமாக சித்தரித்து தனது அரசியல் லாபத்திற்காக சொந்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார் கலைஞர்.

இந்த இடத்தில் கலைஞருக்கு ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இந்த பேரியக்கத்தை ஒரே ஒரு அமைப்பு என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால் இது முஸ்லிம்கள் மத்தியில் தங்களை எதிர்க்கக்கூடியவர்களிடத்திலும் நன்மதிப்பை பெற்றுள்ள ஒரு கொள்கை கூட்டத்தைக் கொண்ட இயக்கம் என்பதை இங்கு பதிவு செய்து கொள்கின்றோம். மேலும், முஸ்லிம்களின் எண்ண ஓட்டத்தை அனுபவ அறிவின் மூலமாக இறைவனுடைய உதவி கொண்டு நாடி பிடித்துச் சொல்லக்கூடிய அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பதை கலைஞருக்குச் சொல்லிவைக்கின்றோம்.

மேலும் இது ஒரே ஒரு அமைப்பா? சிறு அமைப்பா? என்பதற்கு தமிழக முதல்வர் அவர்களே கலைஞருக்கு பதில் சொல்லிவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்...
முதல்வர்அறிவித்தசரியானதீர்வு:

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில்தான் கடந்த 31.01.13 அன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விஸ்வரூபம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஓர் அழகிய தீர்வை முன்வைத்தார்.

கமல்ஹாசன் இதை முன்பே சுமூகமாக முறையில் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். முஸ்லிம் தலைவர்களுடன் அமர்ந்து பேசியிருந்தால் முன்பே சுமூக உடன்பாடு ஏற்பட்டிருக்கும். ஆனால் அதற்கு கமல் முன்வரவில்லை என்றும், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடத்தில் கமல் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டால் தமிழக அரசு இந்த திரைப்படத்திற்கான தடையை நீக்கும் என்றும், அத்தகைய பேச்சுவார்த்தைக்கு உண்டான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றும் உறுதியளித்தார்.

31.01.13 வியாழன் அன்று காலை 11மணிக்கு தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு வெளியானது. இதே தீர்வைத்தான் முதல்வர் அறிவிப்பதற்கு முந்தைய தினம் மாநிலத்தலைவர் பீஜே அவர்கள் 30.01.13 புதன் அன்று இரவு 11மணிக்கு ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அந்த விளக்க வீடியோ ஆன்லைன்பீஜே இணையதளத்திலும் அன்று இரவே வீடியோவாக அப்லோடு செய்யப்பட்டு, இரவோடு இரவாக அந்த வீடியோ ஃபேஸ் புக்குகள் மூலமாகவும், மெயில்கள் மூலமாகவும் பரவியது.

ஒரு விவாத நிகழ்ச்சிக்காக முன்கூட்டியே திருச்சி சென்ற பீஜே அவர்கள் திருச்சியிலிருந்து ஆன்லைன் மூலமாக இந்த உரையை நிகழ்த்தினார்.

ஆன்லைன்உரை
:

அந்த உரையில் விஸ்வரூபம் தொடர்பான இந்த பிரச்சனைக்கு ஐந்து நிமிடத்தில் தீர்வு கண்டுவிடலாம் என்று கூறி பீஜே அவர்கள் கீழ்க்கண்ட தீர்வை முன்வைத்தார்.

கமல்ஹாசன் இதை முன்பே சுமூகமான முறையில் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். இந்த விஷயத்தை அவர் அணுகத் தெரியாமல் அணுகினார். இந்தப் படத்தை தடை செய்தவுடன் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக, “கலாச்சார தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேட்டி கொடுத்தார். சட்டப்படி இதைச் சந்திப்பேன் என்றார். முஸ்லிம்களின் உணர்வுகளை கமல் புரிந்து கொள்ளவில்லை.

முஸ்லிம்களின் கோரிக்கைகளை பரிசீலிக்ககூட அவர் முன் வரவில்லை. சில தலைவர்கள்தான் இந்த படத்தை எதிர்க்கிறார்களே தவிர இஸ்லாமியர்கள் இதை எதிர்க்கவில்லை என்று பேட்டியளித்தார். முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்றுமில்லை. முஸ்லிம்கள் இந்தப் படத்தைப் பார்த்து பெருமைப்படுவார்கள் என்று கூறினார்.

இந்தப் பிரச்சனையை முஸ்லிம் தலைவர்களுடன் அமர்ந்து பேசியிருந்தால் முன்பே சுமூக உடன்பாடு ஏற்பட்டிருக்கும். ஆனால் அதற்கு கமல் முன்வரவில்லை. முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடத்தில் கமல் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். கமலுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருந்த இந்த பிரச்சனை இரு தரப்பு பிரச்சனை என்பதைக் கடந்து தற்போது அரசாங்கம் இந்த படத்திற்கு தடை விதித்ததன் காரணமாகவும், கமல்ஹாசன் நீதிமன்றத்தை நாடியதன் விளைவாகவும், கமல் - முஸ்லிம்கள் - நீதிமன்றம் - தமிழக அரசு என்று நான்குதரப்பு பிரச்சனையாக ஆக்கப்பட்டுவிட்டது.

எனவே முஸ்லிம் அமைப்புகள் கமல் தரப்புடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முஸ்லிம்கள் புண்படும் விதத்திலுள்ள காட்சிகளை நீக்கி, சுமூக உடன்பாடு எட்டப்பட்டு உள்துறைச் செயலாளர் மூலம் அரசு தரப்பையும் அணுகி சுமூக உடன்பாட்டுக்கு வழிவகை செய்தால் இந்த பிரச்சனையை எளிதாக தீர்த்துவிடலாம். இந்த முடிவை 23 அமைப்புகள் கொண்ட இஸ்லாமியர்களின் கூட்டமைப்பு எடுப்பார்களேயானால் அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் எதிராக நிற்காது; இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அந்த 23அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்பினரே நீக்க வேண்டிய காட்சிகளை முடிவு செய்து கமல்ஹாசன் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாட்டை எட்டலாம். அதற்கு டிஎன்டிஜே விற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. டிஎன்டிஜே என்ற இந்த இயக்கத்தைப் பொறுத்தவரை பெயர், புகழுக்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. நாங்கள்தான் நின்று இந்த பிரச்சனையை முடித்துக் கொடுத்தோம் என்ற பெயரும், புகழும் எங்களுக்குத் தேவையில்லை. காரியம் நடந்தால்போதும் என்பதுதான் எங்களது நிலை என்றும் மேற்கண்டவாறு பீஜே அவர்கள் ஆன்லைனில் உரை நிகழ்த்தினார். முதல்வரும் இதே சிந்தனையில் இருந்துள்ளார் என்பதும் மறுநாள் அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பின் வாயிலாக தெரிய வந்தது.

பீஜே சொன்ன தீர்வுக்கும், முதல்வர் அறிவித்த அறிவிப்புக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், பீஜே அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயர் இந்த விஷயத்தில் வரத்தேவையில்லை. எங்களுக்கு பெயரும், புகழும் தேவையில்லை என்று சொல்லி முடித்தார்.

பி.ஜே அவர்களின் உரையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால் தமிழக முதல்வர் அவர்களோ தனது உரையில் டிஎன்டிஜேவின் பெயரை தனியாக இறைவன் குறிப்பிட வைத்தான். அல்ஹம்துலில்லாஹ்...

தவ்ஹீத் ஜமாஅத் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது முக்கியமல்ல என்று அறிவிப்பு செய்த மாநிலத்தலைவரை கூட்டமைப்புத் தலைவர் அப்போலோ ஹனீஃபா அவர்கள் தொடர்பு கொண்டு என்னென்ன காட்சிகளை நீக்க வேண்டும் என்று பட்டியல் தருமாறு கேட்டுக் கொண்டார். பீஜே அவர்களும் அந்த பட்டியலை திருச்சியிலிருந்து தொலைபேசி வழியாக தெரிவித்து, கட்டாயம் நீக்கப்பட வேண்டியவை; நீக்குவது நல்லது என்ற அடிப்படையில் இரண்டாக பிரித்து 13 காட்சிகளை சுட்டிக்காட்டினார்.

23அமைப்புகள் அடங்கிய இஸ்லாமியர்களின் கூட்டமைப்பிடத்திலேயே அந்த பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுவிட்டது.


டிஎன்டிஜேவினருக்குதமிழகஅரசிடம்இருந்துவந்தஅழைப்பு
:

இந்நிலையில் மறுநாள் காலை 10.30மணிக்கு டிஎன்டிஜேவினருக்கு தமிழக அரசிடம் இருந்து அழைப்பு வந்தது. தலைமைச் செயலகத்திலிருந்து டிஎன்டிஜே நிர்வாகிகளைத் தொடர்பு கொண்ட அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் டிஎன்டிஜேவும் கலந்து கொண்டால்தான் ஒப்பந்தம் முழுமை பெறும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

முதல்வர் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை தனியாக குறிப்பிட்டுச் சொல்லி இந்த விஷயத்தில் போராட்ட செய்திகளையெல்லாம் சொல்லிக்காட்டியுள்ள நிலையில் டிஎன்டிஜே பேச்சுவார்த்தையில் பங்கேற்காது. எங்களது சார்பாக 23மூன்று இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகளே பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அறிவித்தால், அது உயர் அதிகாரிகளுக்கு தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்பதை கருத்தில் கொண்டு கமல்ஹாசனுடனான பேச்சுவார்த்தையில் டிஎன்டிஜேவும் பங்கேற்பதாக ஒப்புக்கொண்டது. திருச்சியிலிருந்த மாநிலத்தலைவர் அவர்களை பொதுச் செயலாளர் தொடர்பு கொண்டபோது அரசு தரப்பிலிருந்து வரும் எந்த அழைப்பையும் நாம் நிராகரிக்கக்கூடாது என்பதால் நீங்கள் மூன்று பேரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
உள்துறைச்செயலாளர்தலைமையில்நடந்தபேச்சுவார்த்தை:

அதைத் தொடர்ந்து கடந்த 02.02.13 சனிக்கிழமை அன்று மதியம் 2.30மணிக்கு உள்துறைச் செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

23இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக 15 பிரதிநிகளும், டிஎன்டிஜே சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர்கள் யூசுப், சாதிக் ஆகியோரும், தமிழக அரசு சார்பில் உள்துறைச் செயலாளர் ராஜகோபால் அவர்களும், கமல்ஹாசன் தரப்பில் கமல்ஹாசன் மற்றும் அவரது அண்ணன் சந்திரஹாசன் ஆகியோரும் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

டிஎன்டிஜேசார்பாகமுன்வைக்கப்பட்டமுக்கிய
விஷயங்கள்:

பேச்சுவார்த்தையின் ஆரம்பமாக முஸ்லிம் தரப்பினர் தங்களது கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என உள்துறைச் செயலாளர் அறிவிப்புச் செய்தார்.

அதைத்தொடர்ந்து விஸ்வரூபம் படத்தில் நீக்க வேண்டியது தொடர்பான காட்சிகள் குறித்து 15 கோரிக்கைகள் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக முன் வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, டிஎன்டிஜேவின் கோரிக்கைகளை முன்வைக்குமாறு உள்துறைச் செயலாளர் கேட்டுக் கொண்டதை அடுத்து பிரதானமாக உள்ள 5 விஷயங்களை டிஎன்டிஜே மாநிலப் பொதுச் செயலாளர் பட்டியலிட்டார். இந்த 5 கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக கமல் அறிவிப்பு செய்தார். அதை உள்துறைச் செயலாளர் குறித்துக் கொண்டார். அடுத்து 23அமைப்புகளின் கோரிக்கைகள் டிஎன்டிஜேவின் நிர்வாகிகளது ஒப்புதலுடன் முன்வைக்கப்பட சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

முழுஒத்துழைப்புநல்கியஉள்துறைச்செயலாளர்
:

மதியம் 2.30மணிக்கு ஆரம்பமான பேச்சுவார்த்தை இரவு 7.30மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது உள்துறைச் செயலாளர் ராஜகோபால் அவர்கள் மிகுந்த அக்கறையுடனும், முழுமையான ஈடுபாட்டுடன் சிறந்த முறையில் திறமையாக ஒத்துழைப்பு நல்கினார். 5மணி நேரத்திற்கும் மேலாக முஸ்லிம் சமுதாயத்தின் இந்த பிரச்சனையத் தீர்க்க நேரம் ஒதுக்கித்தந்த உள்துறைச் செயலாளருக்கும், தமிழக அரசுக்கும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

உடன்பாடுஒப்பந்தம்கையெழுத்தானது
:

பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததும் உடன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 23இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற ஒப்பந்தம் என்று ஒப்பந்தம் எழுதப்பட்டு, அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஒவ்வொன்றும் குறிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் 23இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனீஃபா அவர்களும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதன் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும், கமல்ஹாசன் தரப்பில் அவரும் அவரது சகோதரரும், தமிழக அரசு சார்பில் உள்துறைச் செயலாளர் ராஜகோபால் அவர்களும் கையெழுத்திட்டனர்.

ஒட்டுமொத்ததமிழகமும்எதிர்பார்ப்பில்
...:

5மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை இரவு 7.30மணிக்கு முடிவுக்கு வர, பேச்சுவார்த்தையின் முடிவுகளை அறிந்து கொள்ள ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருந்தது. தலைமைச் செயலகத்தில் ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமும் காத்துக் கொண்டிருந்தது.

பத்திரிக்கையாளர்சந்திப்பு
:

தலைமைச் செயலகத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் மத்தியில் முதலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதன் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பேட்டியளித்தார். அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் பேட்டியளிக்க, அதைத் தொடர்ந்து 23இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக பேட்டியளிக்க இந்தப் பிரச்சனை சுமூக உடன்பாட்டிற்கு வந்தது.

விஸ்வரூபம்விவகாரத்தில்டிஎன்டிஜேவின்அதிரடிஅறிவிப்புகள்
:
 · ஜனவரி22 :

இதற்கென சிறப்பு மாநில நிர்வாகக் குழு கூடி விஸ்வரூபம் திரைப்படம் குறித்த முக்கிய முடிவை அறிவிக்கிறது

· 
ஜனவரி23:

விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகுமேயானால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை காரணகாரியங்களுடன் விளக்கி உள்துறைச் செயலாளரைச் சந்தித்து விஸ்வரூபம் படத்தை தடை செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது.

· 
ஜனவரி23 :

விஸ்வரூபம் திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளையும் முற்றுகையிட்டு டிஎன்டிஜே தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளதாக சென்னை ஆணையாளர் அலுவலகத்தில் கடிதம் வழங்கப்பட்டது

· 
ஜனவரி23:

விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் எங்கும் ஓடாது என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் டிஎன்டிஜே சார்பாக ஒட்டப்பட்டன.

· 
ஜனவரி24:

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு
· ஜனவரி24:

விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுமேயானால் ஓடவிடமாட்டோம் என்று மாநிலத்தலைவர் பீஜே அவர்களின் அறிவிப்பு சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பப்பட பரபரப்பு ஏற்படுகின்றது

· 
ஜனவரி26:

கமல் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இப்படம் தடை செய்யப்படுவதற்கான காரணங்களை பட்டியலிட்டும் நீதிபதி வெங்கட்ராமன் அவர்களிடம் மனு சமர்பிப்பு

· 
ஜனவரி27:

கமல் தரப்பிலிருந்து விஸ்வரூபம் திரைப்படத்தை டிஎன்டிஜேவினருக்கு திரையிட்டுக்காட்ட அழைப்பு வந்ததன் பேரில் டிஎன்டிஜேவின் மாநில நிர்வாகிகள் தணிக்கை குழு தலைவர் கலீல் ரசூல், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சையது இப்ராஹீம், மாநிலச் செயலாளர் சாதிக் ஆகியோர் அடங்கிய குழு அந்தப்படத்தை கமல்ஹாசனது இல்லத்திற்குச் சென்று பார்த்து வருகின்றது.

· 
ஜனவரி27:

மண்ணடி மட்டுமல்ல சென்னையே கலங்கக்கூடிய அளவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டம் விஸ்வரூபம் பட விவகாரம் குறித்து விளக்கமளிக்கக் கூட்டப்பட்டு முஸ்லிம்களின் கொந்தளிப்புகள் பீஜே அவர்கள் உரையின் வாயிலாக வெளிப்பட்டது.

· 
ஜனவரி29:

விஸ்வரூபம் படத்திற்கு தடை நீக்கி உயர்நீதிமன்ற உத்தரவு

· 
ஜனவரி30:

தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு தடைகோரி மேல்முறையீடு

· 
ஜனவரி31:

முதல்வர் அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி

· 
பிப்ரவரி2:

இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் டிஎன்டிஜே, கமல்ஹாசன் தரப்பு, தமிழக அரசு என முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மேற்கண்டவகையில் விஸ்வரூபம் பட விவகாரத்தில் டிஎன்டிஜேவின் பங்கு சிறப்பான முறையில் அமைந்திருந்தது.
ஆன்லைன் பிஜே

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை