இயேசு நாதர் காட்டிய பாதை கிறிஸ்தவமா ???


இயேசு நாதர் காட்டிய பாதை கிறிஸ்தவமா ???


உங்கள் அனைவரின் மீதும் சாந்தமும் சமாதானமும் உண்டாவதாக !
இந்த பதிவின் நோக்கம் கிறிஸ்தவத்தை அதன் உண்மை போக்கில் ஆராய்வதாகும் .

இயேசு கிறிஸ்து அவர்கள் உண்மையில் போதித்தது என்ன ??என்பதை எனது கிறிஸ்தவ சகோதரர்கள் கண்டிப்பாய் தெரிந்துகொள்ள வேண்டும் .
இயேசு கிறிஸ்து போதித்தது இஸ்லாம் தான் என நான் இப்போதே சொன்னேன் என்றால் ஏதோ மதப்பற்று உள்ள இஸ்லாமியன் தனது மதத்தை உயர்வாய் பேசவேண்டும் என உளறுகிறான் என நீங்கள் நினைக்க கூடும் .

ஆனால் எனது எல்லா இடுகைகளையும் படித்த சஹோதரர்களுக்கு தெரியும் நான் ஒரு நடுநிலையாளன் என்பது .ஆக வழக்கம் போல் நான் இந்த இடுகையையும் ஒரு நடுநிலையாளனாகவே எழுதுகிறேன் .நீங்களும் நடுநிலையாளராகவே படியுங்கள் இறைவன் நாடினால் உண்மை உணர்வீர்கள் .

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக !நம் பாவங்களை மன்னிப்பானாக !
இஸ்லாத்தின்  5 தூண்கள் 
1.கலிமா (வணக்கத்திற்குரியவன் அல்லா ஒருவனே முஹம்மத் நபி (ஸல் ) அவர்கள் இறைவனின் இறுதி தூதர் ஆவார் 

2 .தொழுகை 
3 நோன்பு 
4 .ஜக்காத் (ஏழைகளுக்கு உதவுதல் )
5 ஹஜ் 

ஒவ்வொரு முஸ்லிமும் விருத்த சேதனம் எனப்படும் சுன்னத்தை செய்தல் அவசியம் .இதை கிறிஸ்தவமும் சொல்கிறது ..ஏன் இயேசு கிறிஸ்து அவர்கள் செய்துள்ளார்கள்

பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாளிலே --லூக்கா 2 :21 


உங்கள் நுனிதோலின் மாமிசத்தை விருத்தசேதனம் பண்ண கடவீர்கள் --ஆதியாகமம் 17 :10  முதல் 14 வரை  
இறைவன் ஒருவனே :

கடவுள் ஒருவனே என்பது இஸ்லாத்தின் அடிப்படை தூண் ஆகும் .இஸ்லாம் மட்டும் அல்ல எல்லா மதங்களும் வலியுறுத்துவது இதைதான் .பிற்காலத்தில் மனிதன் இந்த கொள்கையை மாசுபடுத்தி விட்டான் .சரி பைபிள் கூறும் ஏகத்துவம் பாப்போம் .
இஸ்ரவேலரே கேள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் -மாற்கு 12:29

தொழுகை :
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுது கொள்ளுங்கள் -சங்கீதம் 96:௯

சற்று அப்புறம் போய் முகம்குப்புற விழுந்து இறைவனை வணங்கியதாக மத்தேயு 26:39
குறிப்பிடுகிறது .முகம் குப்புற விழுந்து இறைவனை வணங்குவது  இஸ்லாமிய முறை என்பதை நினைவுபடுத்துகிறேன் .

உண்மையாய் தொழுது கொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் ,உண்மையோடும் தொழுதுகொள்ளும் காலம் வரும் ....

தேவன் ஆவியாய் இருக்கிறார் ஆவியோடும் ,உண்மையோடும் அவரை தொழுதுகொள்ள வேண்டும் --யோவான் 4:23,24

மூப்பர்கள் ,தூதர்கள் யாவரும் முகம்குப்புற விழுந்து கர்த்தரை புகழ்ந்து ---வெளி 7:11
மட்டுமில்லாமல் தொழுகையை பற்றி இன்னும் வெளி 19 :4 ,ஆதி 4 :26 ,நெகேமியா 8 :6 ,
I ராஜாக்கள் 18 :39 ,42 ,II நாளாகமம் 7 :3 ,சங்கீதம் 63 :4  போன்ற வசனங்களிலும் தொழுகையை பற்றி குறிப்பிட பட்டுள்ளது 

இஸ்லாமிய வழக்கப்படி தொழுவதற்கு முன்பாக பள்ளிவாசலில் கட்டபட்டிருக்கும் ஒரு தண்ணீர் தொட்டியில் தன முகம் கை கால்களை கழுவி விட்டு செல்வார்கள் என்பது நாம் அறிந்ததே .இதை பைபிளும் கூறுகிறது ஆனால் எத்தனை கிறிஸ்தவர்கள் செய்கிறார்கள் ??

கர்த்தரை தொழுதுகொள்வதற்கு முன்பாக தங்கள் கைகளையும் ,கால்களையும் கழுவகடவீர்கள் இது தலைமுறை  தோறும் அவனுக்கும் அவன் சந்ததிக்கும் நித்திய கட்டளையாய் இருக்கும் என்றார் --யாத்திரகாமம் 30 :21 

மோசே ஆசரிப்பு கூடாரத்திற்கும் பலி பீடத்துக்கும் நடுவே -தொட்டியை வைத்து கழுவுவதற்கு அதிலே தண்ணீரை வார்த்தான்.அவ்விடத்திலே மோசேயும் .ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள் --யாத் 40 :30 31 

நோன்பு :

இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் அதிகமாக ஏழைகளுக்கு உதவும் வழக்கமுடையவர்கள் ,நோன்பினால் வாடியதை போல் இராமல் வழக்கம் போல் இருக்க  வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது 
பைபிள் உபவாச காலத்தில் எப்படி இருக்கவேண்டும் என சொல்கிறது .

பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடுக்கிறதும் ,துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்து கொள்வதும் .....ஏசாயா 58 :7 

நீங்கள் உபவாசிக்கும் போது மாயக்காரரை போல் முகவாடலாய் இராதேயுங்கள் .-மத்தேயு 6 :16 ,17 
ஜக்காத் :

நீயோ தர்மம் செய்யும் போது உன் தர்மம் அந்தரங்கமாய் இருப்பதற்கு உன் வலது கை --மத்தேயு 6 :3 

ஹஜ் :
புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்க கடவாய் ,ஏழாம் நாளிலே கர்த்தருக்கு பண்டிகை ஆசாரிக்கபடுவதாக --யாத்திரகாமம் 13 :6 
மற்றும் யாத் -13 :10 ,3  ஆகிய வசனங்கள் ஹஜ்ஜை வலியுறுத்துகிறது 

உபகாமம் 33 :2  வசனத்தில் வரும் பாரான் என்ற இடம் இன்று மெக்கா என அழைக்கபடுகிறது இந்த இடத்தில தான் கர்த்தருடைய பண்டிகை நடந்து வருகிறது வருடம் தோறும் .

ஆக சகோதரர்களே இயேசு போதித்தது இஸ்லாம் தான் என தெள்ளதெளிவாக நிரூபணம் ஆகிறது .

சரி இன்று ஏன் கிறிஸ்தவர்கள் இதை பின்பற்றுவது இல்லை ..எப்படி மாறினார்கள் ???
பவுல் எனப்படும் சவுல் அடிகளார் தான் இதெற்கெல்லாம் காரணம் ..இன்று கிறிஸ்தவம் அவரின் மார்க்கமாகத்தான் உள்ளது .
பாப்போம் எப்படி ஆனது என 




     ஆக சஹோதர சஹோதரிகளே நீங்கள் பின்பற்ற வேண்டிய மார்க்கம் பவுல் போதித்த இந்த கிறிஸ்தவமா இல்லை உண்மை இறைவன் தன் தூதர்கள் மூலம் போதித்த உன்னத மார்க்கமா என தீர்மானிக்கும் முடிவு உங்கள் கையில் .எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் நேர் வழி காட்டுவானாக 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை