தாடியின் நன்மைகள் -அறிவியல் சான்றுகள்.

தாடியின் நன்மைகள் -அறிவியல் சான்றுகள்.

தாடி பற்றி பிறமத அறிஞர்களின் ஆய்வுகள், கருத்துகள்

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின்  சமூக உளவியல் துறையைச்  சேர்ந்த டாக்டர் டேனியல் G பிரீட்மான் (Daniel G. Freeman) என்பவர்  தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (reproductive value) பற்றி ஓர்  ஆய்வு மேற்கொண்டார்.
இதை நிரூபிக்க, அவரும் அவரின் மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட  சில இளங்கலை மாணவர்களிடம், தாடி வைப்பதால் அவர்களுக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்படுகிறது என்பதைப் பற்றி பிரிண்ட் செய்யப்பட்ட கேள்வி மூலமாகவும் மற்றும் நேர்காணல் மூலமாகவும் ஆய்வு செய்தனர்.
ஆய்வு செய்யும் ஒரு மாணவர், பல மாணவிகளிடம்  "தாடி வைத்த ஆண்களைப்பற்றி என்ன உணருகிறீர்கள்" என்று நேர்காணல் எடுத்தார். அனேகமாக எல்லா மாணவிகளும், தாடியுடன் உள்ள  ஆண்களின் முகம் , முழுவதுமாக சவரம் செய்யப்பட்ட ஆண்களின் முகத்தைக் காட்டிலும் அதிக ஆண்மைத்தனம், முதிர்ச்சித்தன்மை, சுதந்திர உணர்வு கொண்டதாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

இறுதியாக இந்த ஆய்வு "தாடி, ஒரு பாலியல் காந்த விசையாகவும், ஆண்களை அதிகம் கவர்ச்சியாகவும், பெண்களுக்கு ஓர் ஈர்க்கின்ற விதமாகவும் " இருப்பதாகத் தீர்மானிக்கிறது.(they concluded from their studies that beard increases "sexual magnetism" and attractiveness and makes men more appealing to women.)
(பெண்களின் கூந்தல் பாலியல் உறவுக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாமல் இருந்த போதும் எப்படி ஆண்களை ஈர்ப்பதாக உள்ளதோ அது போல் தாடி பெண்களை ஈர்க்கிறது என்பது இதன் கருத்தாகும்.)
கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின்  உளவியலாளர் ராபர்ட் J பெல்லிக்ரிணி என்பவர் 1973 ஆம் ஆண்டு உளவியல் பத்திரிகையில் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். இந்த ஆய்வுக்காக அவர், 22 வயது முதல் 25 வயது வரையிலான தங்கள் தாடியை முழுவதுமாக சவரம் செய்ய விருப்பமுள்ள எட்டுப் பேரை தேர்ந்து எடுத்தார். அவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் புகைப்படம் எடுக்கப்பட்டனர்.
1. முழு தாடியுடன் 
2. குறுந்தாடியுடன் 
3. மீசையுடன்
4. முழுவதும் சவரம் செய்யப்பட்ட முகத்துடன்.
இந்தப் புகைப்படங்கள் எடுத்து முடித்த உடன், மொத்தம் 32 போட்டோக்களில் ஓவ்வொரு படமும் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்களிடம் கொடுக்கப்பட்டன. இப்படி 64 ஆண்களிடமும் 64 கொடுக்கப்பட்டன. அந்த ஆண்களிடமும், பெண்களிடமும், அந்த  போட்டோவில் உள்ளவர்களின் ஆளுமைப்பண்பு கூறுகள் (personality trait) அடிப்படையில் முதன் முதலில் போட்டோவைப்  பார்த்தவுடன் ஏற்பட்ட உணர்வு, அபிப்பிராயத்தை, (first  impression) மதிப்பிடுமாறு கூறப்பட்டது.
அந்த ஆய்வின் முடிவு இப்படி தீர்மானிக்கிறது." அந்த ஆண்களின் ஆண்மைத் தன்மை, நல்ல தோற்றம், ஆதிக்க உணர்வு, முதிர்ந்த தன்மை, தைரிய தோற்றம், தாராளவாத இயல்பு, ஆரோக்கியத் தன்மை, கவர்ச்சித்  தோற்றம் ஆகிய பண்புகளும் அவர்களின் முகத்தில் உள்ள முடிகளின் எண்ணிக்கையுடன் நேரடி தொடர்பு உள்ளதாக நிருபித்துள்ளது"
(The result of this study by Pelligrini indicated a generally positive correlation between the amount of hair on the person's face and his being perceived as masculine, good looking, dominant, mature, courageous, liberal, non-confirming, older healthy and attractive.)
அமெரிக்க மருத்துவர் Dr சார்லஸ் ஹோமேஸ் (charles holmes)  என்பவர் இப்படிக் கூறுகிறார்,:
"மக்கள் தாடி வளர்க்க ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியவில்லை? தலையில் முடி வளர்க்கும் போது, அதே முடியை முகத்தில் வளர்ப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று தெரிய வில்லை? என்கிறார்.
தலையின் முடி கொட்டிவிட்டால், மிக கஷ்டப்பட்டு வெட்கப்படும் அதே மக்கள், சந்தோசமாக தாடியை ஏன் சவரம் செய்கிறார்கள் என்பது ஆச்சிரியமாக உள்ளது.
நீண்ட தாடி  ஒரு மனிதனின் தடுமல்  சளி கழுத்தை நெருங்குவதை விட்டும்  தடுக்கிறது
 தாடி மார்க்க கட்டளை மட்டுமின்றி, மனிதனுக்கு பயன் அளிக்கக்கூடியதும் ஆகும். முந்தைய அறிவு ஜீவிகள், மருத்துவர்கள் எல்லோரும் தாடி வளர்ப்பவர்களாக இருந்தார்கள். உதாரணம் லூயிஸ் பாஸ்டர், ஆபிரகாம் லின்கன்  உட்பட பலர்.
மேற்சொன்ன முன் நிகழ்வுகள், ஆய்வுகள், அறிக்கைகள் எதுவும் முஸ்லிம்களால் சொல்லப்பட்டதோ அல்லது செய்யப்பட்டதோ அல்ல.
 ஒரு முஸ்லிம் இளைஞன் தாடிவுடன் ஒரு கிறிஸ்தவ நிருவனத்திற்கு  ஒரு நேர்காணலுக்குச் சென்றான். அவன் தாடியை  மழித்தால் வேலை தருவதாக அந்த நிறுவனம் கூறியது. அவன் அதை மறுத்து விட்டு வெளியில் வந்து, அங்கு இருந்த jesus கிறிஸ்து போட்டோவை எடுத்துச் சென்று "இந்த jesus நேர்காணலுக்கு வந்து இருந்தால், அவரிடம் இதே நிபந்தைனையைச் சொல்வீர்களா?" என்று கேட்டு, அவர்களை வாயடைக்க செய்தான். ஒவ்வொரு முஸ்லிமின் மனப்பாங்கும் இப்படித் தான் இருக்க வேண்டும்.

மூட நம்பிக்கை -மருத்துவ உண்மை

"தாடியில் வளரும் பக்டீரியா போன்ற நுண்கிருமிகள் சுகாதாரத்தைக் கெடுக்கும்" என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் இது மூட  நம்பிக்கை.
உண்மை என்னவென்றால் "தாடியை மழிப்பதால், முகத்தில் உள்ள இயற்கையான செல்கள் நீக்கப்படுவதால், முகப் புற்றுநோய் வரலாம்" என்று அஞ்சப்படுகிறது.
ஒரு  நாளைக்கு குறைந்தது ஐந்து முறை ஒழு செய்யும் போது முகத்தைக் கழுவினால், எங்கிருந்து நுண்கிருமிகள் வரும்? என்பதே அறிவியல் பூர்வமான கேள்வி.

நேர விரயம்

 போஸ்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஹெர்பெர்ட் மேஷ்கோன் (Herbert Mescon) இப்படி கணக்கிடுகிறார்.." ஒரு இளவயதினர் தனது 15 வயதில் முகச்சவரம் செய்ய ஆரம்பித்து தொடர்ந்து சராசரியாக 55 வயது வரை செய்தால், அவர் சராசரியாக 3350 மணிநேரம்  அதாவது 139 நாட்களை சவரம் செய்வதில் செலவழிக்கிறார்."

தாடியின் நன்மைகளில் சில

தாடி மனிதனின் முகத்தை, தீங்குதரும்  இரசாயணம், காற்றில் உள்ள மாசுக்களிடம் இருந்து பாதுகாக்கிறது. இந்த மாசு, மற்றும் இராசயனத்தால், முகத்தின் செல்கள் பாதிக்கப்பட்டு, சுருங்கி, அசிங்கமான தோளாக நாளைடைவில் ஆகிறது.
இதனால் முகச்சுருக்கம், மோசமான தோல், தோல் வயோதிகம் ஆகியவற்றில் இருந்து தாடி பாதுகாக்கிறது.
தாடி  முகத்தில் உள்ள சரும மெழுகு சுரப்பிகள் என்னும் sebaceous gland ஐ பாதுகாத்து, அதில் நோய் தொற்றி, பருக்கள், சலம், புள்ளிகள் வருவதை விட்டும் தடுக்கிறது.
 தாடி முகத்தைச் சற்று வெதுவெதுப்பக வைத்து, கன்னத்தை ஆபத்தில் இருந்து பாதுகாக்கிறது.
 தாடி தொண்டை மற்றும் பல் ஈறுகளின் நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
 தாடி வைப்பதால் அநேக சுவாச பிரச்சினைகள் தடுக்கப்படுகிறது.
 தாடி ஓரு ஆணின் அடையாளம். தனித்துவம்
ஆய்வுகள் இப்படி கூறுகின்றன :"தடியின் நீளம் மற்றும் அடர்த்திக்கும், அந்த மனிதனின் புதிசாலித்தனதுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது"
தாடி வைப்பதால், மனிதனின் பொன்னான நேரம் மிச்சப்படுகிறது. (மேற்சொன்ன டாக்டர் ஹெர்பெர்ட் மேஷ்கோன் (Herbert Mescon) கணக்குப்படி.
தாடி வைப்பதால், மனிதனின் செலவு மிச்சப்படுகிறது.( சவர blade , ஷேவிங் gel , after save lotion விலை)
இந்தக் கூற்றுக்கள் எல்லாம், இஸ்லாத்தின் சுன்னத்தை நியயபடுத்திட நானோ அல்லது வேறு முஸ்லிமோ கூறியது அல்ல. பெரும்பாலும் கிருஸ்துவ அறிஞர்களாலும், மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்தும் இணைய தளங்களும் கூறுகின்றன
                நன்றி    http://www.wonderfulinfo.com/islam/beardbenefits.php
dr.ஹிஸார்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

இஸ்லாம் கூறும் மனித நேயம்