பிறந்தநாள் கலாச்சாரம் இஸ்லாத்தில் உண்டா?

                       அல்லாஹ்வின் திருப்பெயாரால்......


பிறந்தநாள் கலாச்சாரம்  இஸ்லாத்தில் உண்டா?
அன்பார்ந்த இஸ்லாமியர்ளே!
 முஸ்லிம்களாக வாழக்கூடிய நாம்
இஸ்லாத்தில் உள்ளதை (அமல்களை) செய்தால்
தான் அது நன்மையாக அமையும் இஸ்லாத்தில் 
இல்லாததை(அமல்களை) செய்தால் அது 
பாவமாகத்தான் அமையும் அந்த அடிப்படையில் 
பிறந்தநாள் என்பது இஸ்லாத்தில் உள்ளதா?
என்றால் இல்லை. அது கிறிஸ்துவ கலாச்சாரம் 
அவர்கள்தான் ஏசுநாதார் பிறந்த தினத்தை அடிப்படையாக
வைத்து ஏசுவுக்கும் மற்றவர்களுக்கும்  அவர்கள்தான் 
கொண்டாடுகின்றனர் அது அவர்கள் கலாச்சாரம்  அதை 
எப்படி முஸ்லிம்கள் கொண்டாடமுடியும்.
 நபி(ஸல்)கூறினார்கள்
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி
 நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர்
 என்பது நபிமொழி.
நூல்: அபூதாவூத் 3512.
அனால் இன்று அதிகமான முஸ்லிம்கள்
பிறந்தநாளை புத்தாடை அணிந்து கேக்வெட்டி குதூகலமாக 
கொண்டாடுகின்றனர். மற்றவர்களோ வாழ்த்து சொல்லி 
மகிழ்கின்றனர் இன்னும் சிலர் அந்த  நாளை மைய்யப் 
படுத்தி அல்லாஹ்வின் ஆசி வேண்டுகின்றனர்  இது 
அத்தனையுமே தவறாகும். ஏன் என்றால் பிறந்தநாள் 
கொண்டாட்டம் இஸ்லாத்தில் இல்லை.இஸ்லாத்தில் 
உள்ளது என்றால் நபி(ஸல்)அவர்கள் தனக்காக 
அல்லது முன்சென்ற நபிமார்களுக்காக பிறந்தநாள் 
கொண்டாடியிருப்பார்கள் அல்லது சஹாபாக்களாவது  
நபி(ஸல்)அவர்களுக்காக கொண்டாடிருப்பார்கள் அப்படி 
எதுவும் ஆதாரமில்லை இது அப்பட்டமான பிற மத கலாச்சாரம்.
நபி(ஸல்)கூறினார்கள்
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி
நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர்
என்பது நபிமொழி.
நூல்: அபூதாவூத் 3512.
ஒரு மனிதனுக்கு பிறந்தநாள் என்பது சந்தோசமானதா?
 என்றால் இல்லை. எப்படி என்றால் ஒவ்வொரு மனிதனுக்கும்
மரணிக்கும் நேரம் இதுதான் என்று   குறிக்கப்பட்டுள்ளது  இது 
எல்லோரும்  அறிந்ததே. அந்தவகையில் ஒரு வருடம் 
 முடிந்துவிட்டால்  உனக்கு குறிக்கப்பட்டநாளில்
ஒரு வருடம் குறைந்துவிட்டது 
 உனது மரணிக்கும் நேரம் நேருங்கிவிட்டது. அப்படி இருக்கும்
 போது எப்படி சந்தோஷமான நாளாக இருக்கும்.
மரணதண்டனை விதிக்கப்பட கைதியின் ஒவ்வொருனாலும்
கழியும்போது அவனது  நிலமை  எப்படி இருக்கும் அப்படித்தான் 
ஒவ்வொரு பிறந்தநாள் வரும் போதும் மரணிக்கும் நேரம்
நேருங்கிக்கொண்டிருக்கிறது  எனும் போது எப்படி 
 சந்தோசமாக இருக்கும். அதனால் ஒவ்வொருனாலும்
நல்ல நாள் என கருதி  நல்அமல்களை புரியும் பாக்கியத்தை 
அல்லாஹ் தருவானாக.............
நபி(ஸல்)கூறினார்கள்
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி
நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர்
என்பது நபிமொழி.
நூல்: அபூதாவூத் 3512
அன்புடன்.
முகவை  கான்   
  

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை