அல்லாஹ்வின் திருப்பெயரால்........

காலமெல்லாம் நோன்பு நோற்றவர் 

யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி)
நூற்கள்: முஸ்லிம்திர்மிதீஅபூதாவூத்இப்னுமாஜாஅஹ்மத்,
பைஹகீயின் சுனன் ஸகீர்தப்ரானியின் முஃஜம் ஸகீர்தாரிமி.

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் நிலை பெற்றுள்ளது. குறிப்பாக தவ்ஹீத் பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமடைந்த பின்னர் ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.
ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானதுஅதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி)
நூல்: தாரிமி 1690 ;இப்னுமாஜா 1705, அஹ்மத் 21378 .
பெருநாள் முடிந்து மறு நாளே நோன்பை ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இதை நோற்க வேண்டுமாஅல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமாஎன்ற கேள்விக்கு இந்த அறிவிப்பில் விடை உள்ளது.
அதாவது எல்லா நன்மைகளும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன. ரமளானில் நோற்ற 30 நோன்புகளும் பத்து மாதத்திற்குச் சமமாகி விடுகின்றது. ஆறு நோன்பு அறுபது நோன்புக்குச் சமமாகி விடுகின்றது.
இதனால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஒன்றுக்குப் பத்து என்ற நன்மையை அடைவது தான் இதன் நோக்கம் எனும் போது ஷவ்வாலில் எந்த ஆறு நாட்களில் நோற்றாலும் இந்த நன்மை கிடைத்து விடும்.
மேலும் பெரு நாளைக்கு மறு நாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்க வேண்டும் எனும் போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அந்த நன்மையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                                         TMR ரியடிமேட்ஸ் 
எங்களிடம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உண்டான Tசர்ட்டுகள் மற்றும் 
பனியன்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
தொடர்புக்கு.
55053710
----------------------------------------------------------------------------------------------------------------------------------
                                                          HanaH PERFUMES
எங்களிடம் தரமான அத்தர் மற்றும் செண்டு வகைகள் மொத்தமாகவும் 
சில்லறையாகவும் கிடைக்கும்..
தொடர்புக்கு.
55652855
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாதை தூயவடிவில் அறிந்திட
www.onlinepj,com;www.tntj.net;www.mugavaikhan.blogspot.com

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை