மாற்று மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்?


மாற்று மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்?
திருக்குர்ஆனின் 3:28, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80, 9:23 ஆகிய வசனங்களில் நீங்கள் சுட்டிக்காட்டுகின்ற கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது.
இஸ்லாம் இன வெறியைத் தூண்டுவதாக இவ்வசனங்களைப் பார்க்கும் சிலர் எண்ணுகின்றனர்.இவ்வாறு எண்ணுவது தவறாகும்.
திருக்குர்ஆனின் வசனங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அருளப்பட்டவைசில வசனங்களைச் சரியாகபுரிந்து கொள்ள அது அருளப்பட்ட சந்தர்ப்பத்தையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும்யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந் தார்கள்.
எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள்போர் நடக்காத வருடமே இருக்கவில்லைசில வருடங்களில் ஒன்றுக்குமேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும்நண்பர்களும் எதிரிகளின்பகுதிகளில் இருந்தனர்அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர்முஸ்லிம்கள் மூலம்தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு கட்டளைபிறப்பிக்கப்பட்டது.

திருக்குர்ஆனிலேயே
 இது பற்றி விளக்கமும் உள்ளது.
இஸ்லாத்தைக் கேப் பொருளாக ஆக்கியவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்

(
பார்க்க திருக்குர்ஆன் 5:57)
உங்களுக்குப் பகைவர்களாக இருப்போரையும்கைகளாலும் நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைக்கத்திட்டமிடுவோரையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்
(பார்க்க திருக்குர்ஆன் 60:2)
உங்கள் பகைவர்களாகவும் இருந்து கொண்டுஉங்களையும்நபிகள் நாயகத்தையும் ஊரை விட்டேவிரட்டியடித்தவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்

(
பார்க்க திருக்குர்ஆன் 60:1)
மார்க்கத்துக்கு எதிராக உங்களுடன் போருக்கு வருவோரையும்உங்களையும் நபிகள் நாயகத்தையும்விரட்டியடித்தவர்களையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்அவ்வாறு நடக்காத முஸ்மல்லாதவர்களுடன்நட்புப் பாராட்டுவது மட்டுமின்றி அவர்களுக்கு நன்மையும் செய்யுங்கள்

(
பார்க்க திருக்குர்ஆன் 60:8-9)
வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டிஉள்ளுக்குள் உங்களை ஒழிக்கத் திட்டமிடுவோரை நண்பர்களாக்காதீர்கள்
(
பார்க்க திருக்குர்ஆன் 3:118)
அன்றைய கிறித்தவ சமுதாயத்தினர் முஸ்ம்களிடம் நெருக்க மான அன்பு கொண்டவர்கள்
(
பார்க்க திருக்குர்ஆன் 5:82)
ஒரு சமுதாயம் உங்களுக்குச் செய்த தீமை காரணமாக அவர்களுக்கு அநியாயம் செய்யாதீர்கள்

(
பார்க்க திருக்குர்ஆன் 5:2, 5:8)
உடன்படிக்கை செய்து முறையாக நடப்போரிடம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்

(
பார்க்க திருக்குர்ஆன் 9:4)
முஸ்மல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு அடைக்கலம் அளிக்குமாறு திருக்குர்ஆன் 9:6வசனம் கூறுகிறது.
பெற்றோர்கள் முஸ்ம்களாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுமாறுதிருக்குர்ஆனின் 31:15, 29:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
இவ்வசனங்களையும் சேர்த்துக் கவனித்தால் முஸ்மல்லாதவர்களில் போர்ப் பிரகடனம் செய்யாதமக்களுடன் நன்றாகப் பழகவே இஸ்லாம் கட்டளையிடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அது மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் ஆட்சியில் முஸ்மல்லாதவர்கள் பலர் சகலஉரிமையும் பெற்று வாழ்ந்தனர்

(
நூல்புகாரி 1356)
நபிகள் நாயகமே தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர். (நூல்புகாரி 2916, 2068)யூதப் பெண்ணின் விருந்தை ஏற்றனர்

(
நூல்புகாரி 2617)
யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர்

(
நூல்புகாரி - 2412, 2417)
இவர்களெல்லாம் போர்ப் பிரகடனம் செய்யாது முஸ்லிம்களுடன் பழகியவர்கள்.

இன்னும்
 சொல்லப்போனால் நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சகர்கள் கூடவெளிப்படையாகப் போர்ப்பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர்அதனால் தான் இஸ்லாம் அந்தமக்களை வென்றெடுத்ததுபோர்ச் சூழ்நிலையில் எந்த ஒரு நாடும் எடுக்கக் கூடிய அவசரநடவடிக்கையின் ஒரு பகுதியாக இடப்பட்ட கட்டளை தான் மேற்கண்ட வசனங்கள்.
பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை