கிறிஸ்தவம் யாரால் உருவாக்கப்பட்டது???

கிறிஸ்தவம் யாரால் உருவாக்கப்பட்டது???

கிறிஸ்தவம் என்பது கிறிஸ்து என்ற பெயருடன் தொடர்பு படுத்தப்பட்ட ஒரு மதம்! இயேசுவோ அதற்கு முந்தைய தீர்க்கதரிசிகளோ இப்படி ஒரு மதத்தைப் போதித்ததாக பைபிள்கூறவில்லை. மாறாக அவர்கள் இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தையே பிரச்சாரம்செய்தனர். இஸ்லாம் என்றால் சமாதானம்! இந்த சமாதானத்தின் உடன்படிக்கை குறித்தேதீர்க்கதரிசிகள் உபதேசித்ததாகவும் அந்த சமாதானத்தையே இயேசு போதித்ததாகவும் பைபிள் கூறுகிறது! (பார்க்க: எண் 25:
12, ஏசாயா 26:12, 32:17, லூக்கா 1:79, யோவான் 14:27)

இயேசுவின் கொள்கைக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் எதிரியாகஇருந்து கொண்டு அவர்களைத் துன்புறுத்திய பவுல் என்பவர் பின்னாளில் தான் மனம்திரும்பியதாகவும் தனக்கு கடவுளிடமிருந்து செய்தி வந்ததாகவும் கூறி அதனடிப்படையில்ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்தவர். (அப்போஸ்தலர் 9: 1-9) கடவுளிடமிருந்து செய்தி வந்தது என்பதும் பவுல் தன்னைப் பற்றித் தரும் சுயஅறிக்கை மட்டுமே! அவரது பிரச்சாரங்கள் நியாயப் பிரமாணங்களை மறுக்கும் விதமாகவும்இயேசுவின் நடைமுறைக்கு எதிராகவும் அமைந்துள்ளது! கடவுளுக்காகத் தான் பொய்சொல்வதாகவும், தூய ஆவியால் அவர் தூண்டப்படுகிறார் என்பதற்குஅவரது மனச்சான்று மட்டுமே போதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்! (உரோமையர் 3:7, 9:1) பவுல் உருவாக்கிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருமதம் பிரச்சாரம் செய்யப்பட்டது! அது பின்னாளில் கிறிஸ்தவம் என்றும் அதைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும்அழைக்கப்பட்டனர் என்பதே உண்மை!

இயேசுவின் பெயராகிய கிறிஸ்து என்ற வார்த்தையுடன் சேர்த்து பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மதமே கிறிஸ்தவம் என்பதை பைபிளின் புதிய ஏற்பாடும் ஒப்புக்கொள்கிறது!

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை