இந்து மதமும் பெண்களும்
இந்து மதமும் பெண்களும் சில மாதங்களிற்கு முன்பு திருமண மந்திரங்கள் பற்றிய ஒரு பதிவை சில தளங்களில் எழுதினேன். இதையடுத்து நான் எழுதியது சரியா என்று ஒரு விவாதம் ஏற்பட்டது. ஒரு பத்திரிகையில் இந்த மந்திரங்கள் பற்றி எழுதிய போது, யரோ ஒரு பார்ப்பனர் “மந்திரங்கள் புனிதமானவை, அதை குற்றம் சொல்லக் கூடாது” என்று ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தார். வேறு எந்த விளக்கமும் எழுதவில்லை. ஆனால் கருத்துக் களங்களில் திருமண மந்திரங்கள் பற்றிய என்னுடைய கருத்து தவறு என்று சிலர் வாதிட்டார்கள். சில விளக்கங்களை முன்வைத்தார்கள். அவைகளுக்கு பதில் அளிக்க முனைந்த பொழுதே, அது நீண்டு இப்படியான ஒரு தொடருக்கு வித்திட்டது. அந்த வகையில் இந்தத் தொடருக்கு காரணமான திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றி முதலில் ஒரு முறை பார்ப்போம். தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் எந்த ஒரு விடயத்தையும் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்வது என்றாலும், சொல்லப்படுவதன் அர்த்தத்தை புரிந்து கொண்டுதான் செய்வார்கள். ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை மதத்த...
Comments