பைபிள் நம்மை வழி நடத்துமா ?வழி கெடுக்குமா??

பைபிள் நம்மை வழி நடத்துமா ?வழி கெடுக்குமா??



சகோதரர்களே !மறுமை மற்றும் இம்மை வாழ்விற்கு வழிகாட்டவே வேதங்கள் .சரி பைபிள் கூறும் வழிமுறை இயல்பு வாழ்விற்கு பொருந்துமா ? அறிவிற்கு ஏற்றதா ? என ஆராய்வோம்
விதவை மணம்
மனைவியை இழந்த கணவன் மறுமணம் முடிப்பது போல் கணவனை இழந்த பெண்களும் மறுமணம் செய்ய அனுமதிக்கபடவேண்டும் என்பது தான் அறிவுலகின் எதிர்பார்ப்பு
நான் கர்த்தர் .
கன்னிகையாய் இருக்கிற பெண்ணை அவன் விவாகம் செய்ய வேண்டும் .விதவையாகிலும்,தள்ளபட்டவளாகிளும்,வேசியாகிளும்,கற்பளிக்கபட்டவளாகிலும் அவன் விவாகம் செய்யாமல் தன் ஜனத்தை சேர்ந்தகன்னிகையை அவன் விவாகம் செய்ய வேண்டும்-- லேவியராகமம் 21:13 ,14

ஒரு பெண் விதவை ஆவது அவள் கையில் இல்லை எல்லாம் இறைவனின் சித்தம் .அத்தகைய இறைவன் இப்படி கூறி இருப்பாரா??


மாதவிடாய் :
மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்பட கூடிய இயற்கை உபாதை .இப்படிப்பட்ட காலகட்டத்தில் உடலுறவு கொள்ளல் ஆகாது என கூறினால் நம் அறிவு ஏற்கிறது ஆனால் பைபிள் என்ன சொல்கிறது என்பதை லேவி 15 :19 -24 வரை படித்து பாருங்கள்
அந்த பெண் 7 நாள் விலக்கமாய் இருக்க வேண்டும் அவளை தொட்டால் தீட்டு ,அவள் எதன் மேல் உட்காருகிராளோ எதன் மேல் படுக்கிராளோ அது தீட்டு அவள் உட்கார்ந்த இடத்தை தொட்டவனும் தீட்டு இப்படி பல தீட்டுகளை அடுக்கிகொண்டே போகிறது ..
பெண்களே !அந்த நாட்களில் உங்கள் மனம் படும் பாட்டை சராசரி மனிதனாய் என்னால் உணர முடிந்த அளவிற்கு உங்கள் கடவுளால் முடியவில்லையா ??உங்களை ஏன் பைபிள் இப்படி புறக்கணித்தது அந்த நாட்களில் ???
 ஜாதி பாகுபாடு :
ஒரு ஜாதியினர் தான் கடவுளுக்கு பூஜை செய்ய வேண்டும் அதுவும் வாரிசு அடிப்படையில் தான் வரமுடியும் என 

அபிஷேகம் பெற்றவனும் தன் தகப்பன் பட்டதுக்கு வந்து ஆசாரிய ஊழியஞ் செய்யப் பிரதிஷ்டை பண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பிராயசித்தம் செய்ய வேண்டும். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல் நூல் உடைகளை உடுத்திக் கொண்டு பரிசுத்த ஸ்தலத்துக்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டும். (லேவியராகமம் 16: 32-33)

அன்னியவன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கக் கூடாது. ஆசாரியின் வீட்டில் தங்கியிருக்கிறவனும் வேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.-(லேவியராகமம் 22:10)இல் கூறுவதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து ஜாதி ஏற்ற தாழ்வுகளை லேவி 22 :10 ,12 ,14 ,மற்றும் லேவி 23 :10 ,13 இலும் பறை சாற்றுகிறது .
புரோகிதர்களுக்கு பைபிள் நிர்ணயம் செய்துள்ள தகுதிகளை பாப்போம் . உன் சந்ததிகுள்ளே அங்கவீனமுள்ளவன்தலைமுறை தோறும் இறைவனின் அப்பத்தை படிக்கும்படி கிட்டவரலாகாது .குருடன் ,சப்பாணி ,முகவிகாரமுள்ளவன்,நீண்ட அவயம் உள்ளவன் ,கால் உடைந்தவன் ,கை உடைந்தவன் கூனன் ,அதிகம் மெலிந்தவன் ,பூவிழுந்த கண்ணன் ,சொறியன் ,விதை நசுங்கியவன் ஆகிய இவர்கள் கிட்ட வரலாகாது -லேவியராகமம் 21 :16 -23 

ஆணழகன் போட்டிக்கு தகுதி உடையவன் மட்டும்தான் கடவுளின் அப்பத்தை படைக்க வரவேண்டுமா ??அது மட்டுமில்லாமல் இப்படி குறைகளோடு இருப்பது இறைவனின் சித்தமே அன்றி மனித நாட்டமில்லை. கிறிஸ்தவர்களே உங்களை இப்படி இழிவு படுத்தும் இந்த கிறிஸ்தவம் இன்னும் உங்களுக்கு தேவை தானா என்று நான் கேட்டால் என்னை சாத்தான் என ஒரே வார்த்தையில் சொல்லி தப்பி விடலாம் என என்ன வேண்டாம் .வாழ்க்கை மிகவும் அற்பமானது விரைவாய் முடியகூடியது அதற்குள் உண்மையை தேடிகொல்லுங்கள்

பைபிளின் உளறல்கள் :
யதார்த்தத்திற்கு முரணாக கடவுளின் வார்த்தைகள் இருந்தால் அது கடவுளே இல்லை .
ஆடைக்கும் குஷ்டரோகம்
நாம் அணியும் உடைகளுக்கும் ,நாம் குடியிருக்கும் வீட்டிற்கும் குஷ்டரோகம் பிடிக்கும் என நான் சொன்னால் நீங்கள் என்னை பயித்தியம் என்பீர்கள் ஆனால் இதையே பைபிள் சொன்னால் இறை வாக்கு என்பீர்களா ??

ஆடையில் குஷ்டரோகம் தோன்றினால் அது கம்பளி ஆடையானாலும் பஞ்சு ஆடையானாலும் பின்னிய துணியானாலும் பஞ்சுத் துணியானாலும் கம்பளித் துணியானாலும் தோலானாலும் தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் அதில் காணும் ரோகம் பச்சை நிறமாயாவது சிவப்பு நிறமாயாவது காணப்பட்டால் அது ஆடையானாலும் தோலானாலும் நெய்த துணியாலானாலும் தோலினால் பின்னிய துணியானாலும் தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் அது குஷ்ரோகமே (லேவியராகமம், அதிகாரம் 13 , வசனம் 47 - 59)

வீட்டிற்கு குஷ்டரோகம் பிடிக்குமா ??

உங்கள் காணியாட்சியான தேசத்திலே ஒரு வீட்டிலே குஷ்டரோகத்தை நான் வரப் பண்ணினால் அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டில் ரோகம் போன்றதொன்று வந்திருக்கிறதாகத் தோன்றுகின்றது என்று ஆசாரியனுக்கு அறிவிக்க வேண்டும். அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் அசுத்தமாய்ப் போகாதபடி அந்த ரோகத்தைப் பார்க்கப் போகும் முன்னே வீட்டை ஒழித்து வைக்கும்படிச் சொல்ல வேண்டும். பின்பு ஆசாரியன் போய் அந்த வீட்டைப் பார்க்க வேண்டும். அந்த ரோகம் இருக்கிற இடத்தைப் பார்க்கும் போது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான கறைகள் உண்டாயிருக்கவும் அவைகள் சுற்றிலுமிருக்க சுவருக்கு பள்ளமாயிருக்கவும் கண்டால் ஆசாரியன் வீட்டை விட்டு வெளியே வாசற்படியில் வந்து வீட்டை ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும்.-(லேவியராகமம், அதிகாரம் 14, வசனம் 34-52)

கடவுளின் சாபம் பலிக்கவில்லையா ??

ஏவாள் அந்த கனியை தின்றதால் ஸ்திரியிடமோ நீ கற்பவதியாய் இருக்கும் போது உன் வாதையை மிகவும்பெருகபண்ணுவேன்.வேதனையோட பிள்ளை பெறுவாய் என கர்த்தர் சாபமிட்டார் -ஆதியாகமம் 3 :1

இது கடவுள் அந்த பாவத்திற்காக கொடுத்த சாபம் என்றால் அந்த சாபத்தை அறிவு ரீதியாக பார்க்கவேண்டிய கட்டாயம் அறிவுள்ள எவருக்கும் கடமையாகிறது
1 .மலடிகளுக்கும் மலடனை மணந்து கொண்ட பெண்களுக்கும் இந்த சாபம் பொருந்தாதே
2 .கன்னியாஷ்த்ரி பெண்கள் பிரசவிப்பதில்லையே
3 .பாவத்தின் நிமித்தம் தான் பிரசவ வலி என்றால் பெண்கள் மட்டுமில்லாமல் ஆடு மாடு போன்ற பிரசவிக்கும் அனைத்து உயிர்களும் வலியால்
வாடுவது ஏன்
சிந்திக்குமா கிறிஸ்தவ உலகம் ???.

கால்களை இழந்த பாம்பு : 

கடவுளாகிய கர்த்தர் உண்டாகிய சகல காடு ஜந்துகளில் சர்ப்பமே தந்திரமானதாய் இருந்தது .ஆதியாகமம் 3 :1 

நீ இதை செய்தபடியால் உன் வயிற்றினாலே நகர்ந்து உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணை தின்பாய்-ஆதியாகமம் 3 :14

1 .பாம்புதான் தந்திரமானதா? நரி ,காக்கை ,பச்சோந்தி ,மீன் கொத்தி பறவை இவைகள் உயிரினங்களில் பல மடங்கு தந்திரம் உடையவை என இறைவனுக்கு தெரியவில்லையா ?
2 .ஏவாளின் மனதை கெடுத்ததால் பாம்பு ஊர்ந்து செல்கிறது என்றால் அதற்கு முன் பாம்பு நடந்து சென்றதா ??
3. பாம்பு மண்ணை தின்னுமா ??

இறந்த பின் ரத்தம்:

ஒரு மனிதன் இறந்து விட்டால் அவன் உடலில் உள்ள ரத்தம் உறைந்து விடும் என்பது விஞ்ஞானம் .
அவர்கள் இயேசு மரித்ததை கண்டு அவரிடத்தில் வந்து ஈட்டியாலே அவரது விலாவை குத்தினான் உடனே ரத்தமும்தண்ணீரும் புறப்பட்டது -யோவான் 19:33

சிலுவையில் அறையப்பட்டதால் முழு ரத்தமும் வெளியேறி இருக்கவேண்டும் மீதமுள்ள ரத்தம் மரணித்ததும் உறைந்திருக்கும் பின்பு எப்படி ரத்தம் புறபட்டுருக்கும்.இதையும் சிந்திக்க மாட்டீர்கள் என்றால் இன்னும் சொல்வேன் இறைவன் நாடினால் .
கடவுளை தேடி ஒரு பயணம்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை