ஆங்கிலத்தில் நாமும் சாதிக்க...!!!

ஆங்கிலத்தில் நாமும் சாதிக்க...!!!

போட்டிகள் நிறைந்த  இந்த உலகத்தில், உலகமயமாக்கப்பட்ட இக்காலகட்டத்தில் ஆங்கில அறிவு மிகவும் அவசியம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே இந்த உலகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதிக்க முடியும் என்ற நிலையை நோக்கி உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினரிடம் திறைமைகள் இருந்தும் வேலைக்கான நேர்காணல்களில் ஆங்கில அறிவு போதுமான அளவில் இல்லையென்றால், ஆங்கில அறிவு பெற்றவர்களை விட பின்னோக்கி செல்லக்கூடிய நிலையை நாம் வெளிப்படையாக காணுகின்றோம். 

இன்றைய சமூகத்தில் நமது உரிமைகளை வென்றெடுக்கவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையவும் கல்வி தான் அடிப்படை என்பதை நாம் அறிந்து வைத்து இருக்கிறோம். அதே வேளையில், சிறந்த கல்வி தகுதிகளை பெற்று இருந்தாலும், ஆங்கில புலமை இல்லாவிட்டால் வீண் தான்.

ஆங்கில புலமையில் சிறந்து விளங்காவிட்டால் நம்மால்  உயர்கல்வி மற்றும் போட்டித்தேர்வுகளில் சாதிக்கவே முடியாது. ஆங்கிலம் என்பது அணைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழி. இருந்தாலும் நாம் ஆங்கிலம் கற்பதற்கு அதிக சிரத்தை எடுப்பது இல்லை.

பொதுவாக ஆங்கிலம் என்றால் நம்மில் பலருக்கு ஓர்  இனம் புரியாத வெறுப்புணர்வும் கசப்புணர்வும் தோன்றுகிறது. ஒரு சிலரை பார்த்தால் ஆங்கில அறிவில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், ஆங்கிலத்தை பிழை இன்றி எழுதுதல் மற்றும் உச்சரித்தல்  போன்றவற்றில் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். ஆனால், மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேச சொன்னால், அவர்களுக்கு நாக்கு எழவே எழாது. நாம் சிறந்த வேலைவாய்ப்புகளையும், கல்விக்கான வாய்ப்புகளையும் பெற தேவை சரளமான ஆங்கில அறிவே.

எனவே உங்களின்  ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்ள சில ஆலோசனைகளை வழங்குகிறோம். எந்த ஒரு மொழியையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடனும் , கல்விக்கான பாதையை நோக்கி செல்லக் கூடிய நமக்கு இறைவன் உதவி புரிவான் என்ற உறுதியுடனும் நாம் ஆங்கிலத்தை அணுகுவோம். 

ஆங்கிலம் நமக்கு வராது, என்னால் சரளமாக பேச இயலாது என்ற எதிர்மறை எண்ணங்களை முற்றிலுமாக துடைத்தொழிய  வேண்டும் 
 
தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது ஆங்கில நாளிதழ்கள் ஆங்கில நூல்களை வாசித்தல் அவசியம். எப்பவுமே சிறிய சிறிய கதைப் புத்தகங்களிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக; கடினமான மொழி நடையில் அமைந்த ஆங்கில நூல்களை வாசிக்க முயற்சிப்பது சிறந்ததாகும். 
 
ஆங்கிலத்தில் அதிகமான வார்த்தைகளை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். போதுமான வார்த்தை ஞானம் இல்லையென்றால், எந்த மொழியிலும் நாம் கால்பதிக்க இயலாது. ஆங்கில வார்த்தைகளோடு அவற்றின் அர்த்தத்தையும் அவசியம் அறிந்து வைக்க கொள்ளுங்கள். 
 
மற்றவர்கள் முன் தவறாக பேசி விடுவோம், அதனால் ஏளனத்திற்கு உள்ளாவோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் நம்மால் இயலும் என்ற எண்ணத்துடன் பேச துவங்குங்கள். ஆரம்பத்தில் உங்களுக்கு பிறர் முகம் நோக்கி ஆங்கிலத்தில்  பேச  தயக்கம் என்றால், தங்களின் தொலைபேசி(Airtel, Aircel,..etc) வாடிக்கையாளர் சேவை மையத்தினை தொடர்பு கொண்டு உங்களின் அனைத்து  உரையாடல்களையும் ஆங்கிலத்திலேயே அமைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களின் பேச்சாற்றலை சபை கூச்சமின்றி வெளிப்படுத்த இயலும்..  
 
நம்மால் இயன்றவரை நாம் பேசக்கூடிய பேச்சுக்களில் தெளிவான உச்சரிப்புக்களை கையாளப் பழக வேண்டும். எல்லோருக்கும் உச்சரிப்பு விஷயத்தில் சில ஆங்கிலச் சொற்களை இலகுவாகச் சொல்ல முடிவதில்லை. எனவே உங்களின் கருத்துக்களை Record  செய்து கொண்டு அதனை பல முறை கேட்டு, அடுத்த முறை உங்களின் உச்சரிப்பின் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள்.
 
ஆங்கில செய்தி ஒளிபரப்புகளை தினமும் 30 நிமிடங்களாவது பாருங்கள். British ஆங்கில உச்சரிப்பை அறிந்து கொள்ள BBC தொலைக்காட்சியையும், American ஆங்கில உச்சரிப்பை அறிந்து கொள்ள CNN தொலைக்காட்சி செய்திகளையும் பாருங்கள். ஆங்கிலத்தில் British English உச்சரிப்பு, American English உச்சரிப்பு, ஆஸ்திரேலியர்களின் ஆங்கில உச்சரிப்பு, ஆகியவை கொஞ்சம் வேறுபாடு உடையவை. இதில் British ஆங்கில உச்சரிப்பானது நமக்கு நன்கு அறியும் வரை எளிதில் புரிந்து கொள்ள முடியாதவாறு இருக்கும். பேசுபவர்களின் முகத்தினை உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் உச்சரிப்பு நமக்கு புரியும்.
 
எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் என்பது அவசியமான ஒன்று. பேசுவதாக  இருந்தாலும், எழுதுவதாக இருந்தாலும் நாம் சொல்ல நினைப்பதை தெளிவாக எத்தி வைக்க  இயலும். எனவே இலக்கண பகுதிகளை முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை நாம் மேற்குறிப்பிட்ட அடிப்படையில் அன்றாடம் பயிற்சியை மேற்கொள்வது அவசியம். இதில் ஓரளவுக்கு நம்பிக்கை வருவதை நீங்கள் 6 மாதங்களுக்குப் பின்பு தான் உணர முடியும். இவை அனைத்தும் உங்களின் ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே அமையும் என்பதை மனதில் கொண்டு ஆங்கிலத்தை படியுங்கள்.

மாணவர் அணி -  அஜ்மல்

*கல்வி, வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாணவர் அணியின் சேவைகளை அறிய - www.tntjsw.net*
ஆங்கிலத்தில் நாமும் சாதிக்க...!!!

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், உலகமயமாக்கப்பட்ட இக்காலகட்டத்தில் ஆங்கில அறிவு மிகவும் அவசியம் என்பதை யாராலும் மறுக்க இயலா
து. ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே இந்த உலகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதிக்க முடியும் என்ற நிலையை நோக்கி உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினரிடம் திறைமைகள் இருந்தும் வேலைக்கான நேர்காணல்களில் ஆங்கில அறிவு போதுமான அளவில் இல்லையென்றால், ஆங்கில அறிவு பெற்றவர்களை விட பின்னோக்கி செல்லக்கூடிய நிலையை நாம் வெளிப்படையாக காணுகின்றோம்.

இன்றைய சமூகத்தில் நமது உரிமைகளை வென்றெடுக்கவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையவும் கல்வி தான் அடிப்படை என்பதை நாம் அறிந்து வைத்து இருக்கிறோம். அதே வேளையில், சிறந்த கல்வி தகுதிகளை பெற்று இருந்தாலும், ஆங்கில புலமை இல்லாவிட்டால் வீண் தான்.

ஆங்கில புலமையில் சிறந்து விளங்காவிட்டால் நம்மால் உயர்கல்வி மற்றும் போட்டித்தேர்வுகளில் சாதிக்கவே முடியாது. ஆங்கிலம் என்பது அணைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழி. இருந்தாலும் நாம் ஆங்கிலம் கற்பதற்கு அதிக சிரத்தை எடுப்பது இல்லை.

பொதுவாக ஆங்கிலம் என்றால் நம்மில் பலருக்கு ஓர் இனம் புரியாத வெறுப்புணர்வும் கசப்புணர்வும் தோன்றுகிறது. ஒரு சிலரை பார்த்தால் ஆங்கில அறிவில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், ஆங்கிலத்தை பிழை இன்றி எழுதுதல் மற்றும் உச்சரித்தல் போன்றவற்றில் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். ஆனால், மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேச சொன்னால், அவர்களுக்கு நாக்கு எழவே எழாது. நாம் சிறந்த வேலைவாய்ப்புகளையும், கல்விக்கான வாய்ப்புகளையும் பெற தேவை சரளமான ஆங்கில அறிவே.

எனவே உங்களின் ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்ள சில ஆலோசனைகளை வழங்குகிறோம். எந்த ஒரு மொழியையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடனும் , கல்விக்கான பாதையை நோக்கி செல்லக் கூடிய நமக்கு இறைவன் உதவி புரிவான் என்ற உறுதியுடனும் நாம் ஆங்கிலத்தை அணுகுவோம்.

ஆங்கிலம் நமக்கு வராது, என்னால் சரளமாக பேச இயலாது என்ற எதிர்மறை எண்ணங்களை முற்றிலுமாக துடைத்தொழிய வேண்டும்

தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது ஆங்கில நாளிதழ்கள் ஆங்கில நூல்களை வாசித்தல் அவசியம். எப்பவுமே சிறிய சிறிய கதைப் புத்தகங்களிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக; கடினமான மொழி நடையில் அமைந்த ஆங்கில நூல்களை வாசிக்க முயற்சிப்பது சிறந்ததாகும்.

ஆங்கிலத்தில் அதிகமான வார்த்தைகளை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். போதுமான வார்த்தை ஞானம் இல்லையென்றால், எந்த மொழியிலும் நாம் கால்பதிக்க இயலாது. ஆங்கில வார்த்தைகளோடு அவற்றின் அர்த்தத்தையும் அவசியம் அறிந்து வைக்க கொள்ளுங்கள்.

மற்றவர்கள் முன் தவறாக பேசி விடுவோம், அதனால் ஏளனத்திற்கு உள்ளாவோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் நம்மால் இயலும் என்ற எண்ணத்துடன் பேச துவங்குங்கள். ஆரம்பத்தில் உங்களுக்கு பிறர் முகம் நோக்கி ஆங்கிலத்தில் பேச தயக்கம் என்றால், தங்களின் தொலைபேசி(Airtel, Aircel,..etc) வாடிக்கையாளர் சேவை மையத்தினை தொடர்பு கொண்டு உங்களின் அனைத்து உரையாடல்களையும் ஆங்கிலத்திலேயே அமைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களின் பேச்சாற்றலை சபை கூச்சமின்றி வெளிப்படுத்த இயலும்..

நம்மால் இயன்றவரை நாம் பேசக்கூடிய பேச்சுக்களில் தெளிவான உச்சரிப்புக்களை கையாளப் பழக வேண்டும். எல்லோருக்கும் உச்சரிப்பு விஷயத்தில் சில ஆங்கிலச் சொற்களை இலகுவாகச் சொல்ல முடிவதில்லை. எனவே உங்களின் கருத்துக்களை Record செய்து கொண்டு அதனை பல முறை கேட்டு, அடுத்த முறை உங்களின் உச்சரிப்பின் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள்.

ஆங்கில செய்தி ஒளிபரப்புகளை தினமும் 30 நிமிடங்களாவது பாருங்கள். British ஆங்கில உச்சரிப்பை அறிந்து கொள்ள BBC தொலைக்காட்சியையும், American ஆங்கில உச்சரிப்பை அறிந்து கொள்ள CNN தொலைக்காட்சி செய்திகளையும் பாருங்கள். ஆங்கிலத்தில் British English உச்சரிப்பு, American English உச்சரிப்பு, ஆஸ்திரேலியர்களின் ஆங்கில உச்சரிப்பு, ஆகியவை கொஞ்சம் வேறுபாடு உடையவை. இதில் British ஆங்கில உச்சரிப்பானது நமக்கு நன்கு அறியும் வரை எளிதில் புரிந்து கொள்ள முடியாதவாறு இருக்கும். பேசுபவர்களின் முகத்தினை உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் உச்சரிப்பு நமக்கு புரியும்.

எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் என்பது அவசியமான ஒன்று. பேசுவதாக இருந்தாலும், எழுதுவதாக இருந்தாலும் நாம் சொல்ல நினைப்பதை தெளிவாக எத்தி வைக்க இயலும். எனவே இலக்கண பகுதிகளை முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை நாம் மேற்குறிப்பிட்ட அடிப்படையில் அன்றாடம் பயிற்சியை மேற்கொள்வது அவசியம். இதில் ஓரளவுக்கு நம்பிக்கை வருவதை நீங்கள் 6 மாதங்களுக்குப் பின்பு தான் உணர முடியும். இவை அனைத்தும் உங்களின் ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே அமையும் என்பதை மனதில் கொண்டு ஆங்கிலத்தை படியுங்கள்.

மாணவர் அணி - அஜ்மல்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை