ஆரோக்கியத்தின் அவசியம்.

ஆரோக்கியத்தின் அவசியம்.

அல்லாஹ் இந்த மனித சமுதாயத்திற்கு என்னற்ற அருட்கொடைகளை செய்திருக்கிறான். அல்லாஹ்வின் அருட்கொடைகளில் உள்ளதுதான் ஆரோக்கியம். 
இஸ்லாமும் ஆரோக்கியமும்.
இஸ்லாம் இந்த ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளின் மூலம் அறிந்து கொள்கிறோம்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ர­ரி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ''அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!'' என்று கேட்டார்கள். நான் ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் ''இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள். நான் சிரமத்தை வரிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது!'' அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள். 'தாவூத் நபியின் நோன்பு எது?' என்று நான் கேட்டேன். ''வருடத்தில் பாதி நாட்கள்!'' என்றார்கள்.
''அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ர­ரி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் 'நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!'' என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: புகாரி (1975)

அதிகமாக தொழுதுவரை கூப்பிட்டு நபி ஸல் அவர்கள் பாராட்டவில்லை. மாறாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வணகத்தின் பெயரால் தன்னுடைய ஆரோக்கியத்தை கெடுத்து விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த மற்றொரு நிகழச்சியும் ஆரோக்கியத்தின் அவசியத்தை வ­யுறுத்துகிறது.
கைஸ் என்பவர் கூறுகிறார்கள். என்னுடைய தந்தை நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தி கொண்டுருக்கும் வேலையில் வந்து வெயி­ல் நின்று கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரை நிழ­ல் ஒதுங்கும் படி கட்டளையிட்டார்கள்.
நூல்: அதபுல் முப்ரத் (பாகம் 1 பக்கம் 401)
1174 லி قال حدثني قيس عن أبيه أنه : جاء ورسول الله صلى الله عليه وسلم يخطب فقام في الشمس فأمره فتحول إلى الظل قال الشيخ الألباني : صحيح  الأدب المفرد    ள جزء 1 லி  صفحة 401 ன 
2664 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ رواه مسلم
உடலைப்பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும்.
ஒருவர் தனக்கு கொடுத்த ஆரோக்கியத்தை சரியாக பஸ்ன்படுத்தாமல், அதை நாசமாக்கினால் மறுமையில் அதற்கும் விசாரனை உண்டு என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
ஒரு மனிதர் கியாம நாளில் தன்னுடைய ஆயுளை எப்படி கழித்தார் என்றும், அவருக்கு கொடுக்கப்பட்ட கல்வியை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை பற்றியும், அவருக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை எவ்வாறு செலவு செய்தார் என்பதை பற்றியும் அவருக்கு கொடுக்கப்பட்ட உடலை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை பற்றியும் கேட்கப்படாத வரை ஒருவரின் பாதம் நகழாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி (2341)
ஆரோக்கியத்தை கேட்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் ஒருவர் தன்னுடைய ஆரோக்கியதிற்காக அல்லாஹ்விடம் பிரார்ததனையும் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை நோய் விசாரிக்கச்சென்றார்கள். அவர் நோயினால் மிகவும் சிரமப்பட்டு கொண்டுருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீர் இறைவனிடம் ஆரோக்கியத்தை கேட்டு பிரார்த்தனை செய்யக்கூடாதா? என்று கேட்டார்கள். அவர் யா அல்லாஹ் மறுமையில் என்னை நீ தண்டிப்பதாக இருந்தால் இவ்வுலகத்திலேயே அதற்காக தண்டனையை வழங்கிவிடு என்று பிரார்த்தனை செய்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் உமக்கு இவ்வுலகத்திலேயே தண்டனையை வழங்கிவிட்டால்) நீர் தாங்கி கொள்ள முடியாது எனவே யா அல்லாஹ் இவ்வுலத்திலும் எனக்கு நன்மையை வழங்குவாயாக மறு உலகத்திலும் எனக்கு நன்மையை வழங்குவாயாக என்று கேளும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி (3409)
இதை ஏதோ ஒரு தடவை இரண்டு தடவை இப்படி வ­யுறுத்திப்பார்கள் என்று நினைத்து விடக்கூடாது நபி ஸல் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் இதை வ­யுறுத்திச்சென்றுள்ளார்கள்.
நீங்கள் லாயிலாஹா இல்லல்லாஹீ என்ற வார்த்தைக்குப்பிறகு ஆரோக்கியத்தைத்தவிர வேறு எதனையும் உங்களுக்கு வக்ஷ்ங்கப்பட வில்லை. எனவே நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள் என்று நபி ஸல் அவர்கள்  சொல்ல நான் கேட்டிருக்கிறேன் என்று அபூபக்கர் சித்தீக் ர­ அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (10)
மக்களுக்கு கட்டளையிட்டது மட்மில்லாமல நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேட்டுள்ளார்கள்.
யா அல்லாஹ் உன்னுடைய அருள் என்னை விட்டும், நீ எனக்கு கொடுத்த ஆரோக்கியம் விலகுவதை விட்டும், உன்னுடைய தண்டனை திடீரென்று வருவதையும், உன்னுடைய அனைத்து கோபத்தை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று பிரார்த்தனை செய்வார்கள். இது அவர்களின் (வழமையான) பிரார்த்தனைகளில் ஒன்றாகும் அப்துல்லாஹ் பின் உமர் (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லம் (4922)
இதன் முலம் இஸ்லாம் எந்த அளவிற்கு இஸ்லாம் ஆரோக்கியத்தை வழங்கியிருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியத்தை வ­யுறுத்தியது மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தை பேண வழிமுறைகளையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நமக்கு சொல்­ தந்துள்ளார்கள்.
நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் நாமும் நம்மை சுற்றி இருப்பவைகளும் சுத்தமாகவும். சுகதாரமாகவும் இருக்க வேண்டும்.
நம்மை சுற்றி இúப்பவைகளில் மிக முக்கியமானது நமது ஆடையாகும். நமது ஆடையையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தலை வாராதவராக, முடிகள் குழைந்த நிலையில் ஒரு மனிதரைப்பார்த்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்  இவர் தன்னுடைய முடியை வாரிக்கொள்தற்கு எதையும் பெற்றுக்கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள். மற்றொருவரின் ஆடை அழுக்கானதாக பார்த்தார்கள். உடனே இவர் தன்னுடைய ஆடையை கழுவிக்கொள்வதற்கு தன்னீரை பெற்றுக்கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள்.
நூல்: அபூதாவூத் (3540)
அடுத்து நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டியவைகளில் நம்முடைய வீடும் நம்மை சுற்றி இருக்கும் தெருக்களும்தான்.
சிலர்களுடைய வீடுகளைப்பார்க்கிறோம். அவர்களுடைய வீடுகளில் குப்பைகளும் தூசிகளும் நிறைந்து காணப்படுகின்றன. ஆங்காங்கே ஆýக்கு மூட்டைகளும் ஒற்றடைகளும் நிறைந்து காணப்படுகின்றன. வீட்டின் பெண்களிடம் கேட்டால் எங்களுக்கு நேரம் சரியாக கிடைப்பதில்லை என்ற காரணத்தை சொல்­விடுகிறார்கள். யார் நேரம் கிடைக்க வில்லை சொல்கிறார்கள் அவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது என்று பார்த்தால் அவர்கள் வழமையாக செய்யும் சோர் பொங்குவதும் அதற்காக கரிகளை செய்வதும் தான் மற்ற நேரங்களில் டீவி சினிமாக்களில் நாடகங்களில் பிஸியாகி விடுஹ்ôர்கள். அதுன்ட்டுமில்லாமல் அடுத்வரைப்பற்றி புறம் பேசுவதற்கும் கோள் சொல்வதற்கும் நேரத்தை ஒõக்குவார்கள். சுத்தத்திற்காக சிறிது நேரத்தை ஒதுக்கமாட்டார்கள்.
இவர்கள் தங்கள் இடத்தை மட்டுமில்லாமல் தங்களைச்சுற்றியிருக்கும் தெருக்களையும் சுத்தமாக வைக்கமாட்டார்கள். 
தன்னுடைய வாசி­லே கழிவு நீரை ஊற்றுதல். தன்னுடைய வீட்டு வாச­லே தன்னுடைய சிறு குழந்தைகளை மலம் ஜலம் கழிக்கச்செய்தல் இõவெல்லாம் சர்வ சாதரணமாக இன்று நம் மக்களிடம் காணப்படுகிறது. இது வெல்லாம் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுத்து நாசமாக்க கூடியதாகும்.
பாதைகளில் மலம் ஜலம் கழிப்பதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வன்மையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
பழிப்பிற்குரிய இரண்டு காரியங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறும் போது பழிப்பிற்குரிய இரண்டு செயல்கள் யாவை ? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு யார் பாதைகளில் மலம் கழிப்பதும். அல்லது  அவர்களின் நிழல்களில் கழிக்கிறார்களோ அவர்கள்தான் என்று நபி ஸல் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நூல்: முஸ்­ம் (397)
பல் துலக்குவது 
அடுத்து நாம் சுத்தமாக வைத்திருப்பவைகளில் மிகவும் முக்கியமானது நம்முடைய பல்லாகும். இன்று நம்மில்  சிலர் பல்லை சரி வர துஷ்க்குவதில்லை. சிலர் பீடி சிகரெட் போன்றவைகளை குடித்து விட்டு கல்லை கழுவாத பாத்ரூமை பார்த்தால் எப்படி இúக்குமோ அது போன்று தன்னுடைய பல்லை வைத்திருப்பார்கள். 
நபி ஸல் அவர்கள் பல் துலக்குவதை மிக மிக வ­யுறுத்தியுளள்ôர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் சமுதாயத்திற்கு' அல்லது 'மக்களுக்கு' நான் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்று (அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்திருப்பேன்.
நூல்: புகாரி 887)
அடுத்து நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டியகைளில் நமது கைகளாகும். குறிப்பாக நாம் சாப்பிட்ட பின்பும் முன்பும் கையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
யார் தன்னுடைய கையில் அதிகமான துர்வாசனையுடன் இரவு தூங்குகி அதனால் அவருக்கு ஏதும் ஏற்பட்டால் அவர் தன்னையே பழித்துக்கொள்ளட்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல்: அதபுல் முப்ரத் (பாகம் 2 பக்கம் 251)
2168 லி ( صحيح ) وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال من بات وفي يده ريح غمر فأصابه شيء فلا يلومن إلا نفسه رواه البزار والطبراني بأسانيد رجال أحدها رجال الصحيح إلا الزبير بن بكار وقد تفرد به كما قال الطبراني ولا يضر تفرده فإنه ثقة إمام صحيح الترغيب والترهيب    ள جزء 2 லி  صفحة 251 ன  
ஏனென்றால் நம்முடைய கைகளில் தான் அதிகமான நோய்கள் பரவுதாக மúத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக நமது உள்ளங்கைகளில்தான் அஸ்டெபிலோகாக ஆரியஸ் என்ற பாக்டிரியா அசுத்தமான கைளி­ருந்து கொண்டு நோயை பரப்புகிறது. நமது உட­ன் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராடும் சக்தி இந்த பாக்டீரியாவக்கு இருக்கிறது. 
அடுத்து குளிக்கும் இடங்கள், குளிக்கும் தன்னீர் இவைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்கüல் எவரும் சிறு நீர் கழிக்கவும் வேண்டாம்; பின்னர் அதில் குüக்கவும் வேண்டாம். 
நூல்: புகாரி (239)
இன்று இந்த காரியங்கள் குளங்களிலும், கினறுகளிலும் பகீரங்கமாக மீறப்படுகிறது. ஏழ்ôவது ஒரு இடத்தில் மலம் ஜலம் கழித்து விட்டு கினறுகளில் வந்து சுத்தம் செய்கிறார்கள்.
சிலர் கினற்றுக்குள்ளேயே மலம் ஜலம் கழித்துவிடுகிறார்கள். இந்த செயல்கள் இஹ்ர்களுக்கு மட்டுமில்ல மற்றவர்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.
அடுத்து நாம் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைக்க வேண்டியவைகளில் நமது பாத்திரங்களாகும். நமது பாத்திரத்தின் மூலமாகவும் நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை
(வெüயே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெüயே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) உன் கதவை மூடிவிடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உனது விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உனது பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலா விட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்.இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நூல்: புகாரி (3280)
பொதுவாக இரவு நேரங்களில் பூச்சிகள் நடமாட்டம் இருக்கும். அந்த நேரத்தில் தன்னீர் தொட்டியில் விழுந்து விடக்கூடாது. இப்படி பல காரணங்கள் இருக்கிறது.  அடுத்து பாத்திரங்கள் மூலமாக நோய் பரவுவத்கு வாய்புள்ளதாக கருதப்படுவைகள். நமது பாத்திரத்தில் ஊதி  குடிப்பதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (எதையும்) பருகும்போது பாத்திரத்திற்குள் மூச்சுவிட வேண்டாம்; கழிப்பிடம் சென்றால் பிறவிஉறுப்பை வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக்கரத்தால் சுத்தம்செய்ய வேண்டாம். இதை அபூகத்தாதா (ரரி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (153)
நமது ஆரோக்கியத்தை கெடுத்து நாசமாக்ககூடிய காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். 
மதுபானம், புகை.
அடுத்து நமது ஆரோக்கியத்தை கெடுத்து நாசம் செய்யக்கூடிய காரியங்களில் மதுபானமும் புகையுமாகும்.
இன்று பல சகோதரர்கள் புகைப்பிடிப்பதை பார்த்து நாம் வருந்துகிறோம். ஆனால் அவர்களோ கொஞ்சமும் கலலையில்லாமல் பொது இடங்களில் இருந்து கொண்டு பாட்டு படித்துக்கொண்டும், புகைவிடும் போது தன்னுடைய புகையை வட்ட வட்டமாக வானில் பறக்க விட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.
சில தந்தையர்கள் தான் மட்டும் புகைப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய குழந்தைகளுக்கும் இந்த பழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். தன்னுடைய மப்ன் முன்னால் புகைப்பதும், மகனையே பீடி, சிகரெட் வாங்கச்சொல்வதும் அவனை புகை பிடிக்க தூண்டக்கூடிய காரியங்களாகும்.
பன்றி இறைச்சியின் தீமைகள்.
இஸ்லாம் வ­யுறுத்துகின்ற ஆரோக்கியத்தை எடுத்து நடக்கும் போது இன்று உலகில் வருகின்ற எந்த நோயை விட்டும் தன்னை பாதுகாத்துக்கொள்ளலாம். இன்று நாம் வாழும் காலத்தில் எத்தனையோ நோய்கள் உருவாகின்றன. சமீபத்தில் வந்து நம்மை ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் ஒன்றாகும். இந்த காய்ச்சல் எதன்காரணமாக வெளிப்படுகின்றது மúத்துவர்கள் சொல்வதை கவனிக்கும் போது சுத்தமின்மையின் காரணமாகத்தான் என்பதை விளங்கி கொள்ளலாம்.
இஸ்லாம் பன்றியை அசுத்தமான பிரானியாக கருதுகிறது. ஆனால் இதை அறியாதோர் பன்றியை வளர்ப்பதும் அதைக்கொஞ்வதுமாக இருக்கிறார்கள்.
பன்றிக்காய்ச்சல் எதனால் ஏற்பட்டது என்பதை ஒரு மருத்துவர் சொல்லும் போது..
புளூ என்ற லைரஸ் பன்றியில் போய் நுழைந்து அது ஹெச் 1 என் 1 நோயாக மாறிவிட்டது. பிறகு ஒரு பன்றியில் ஏற்பட்ட ஒரு காயத்தை தொட அந்த நோய் மனிதனுக்கு பிடித்துக்கொண்டு பிறகு எல்லோறுக்கும் பரவி விட்டது.
இதனால் ஏற்படக்கூடிய பஸ்ங்கரத்தை விளக்கும் போது...‚
பன்றி இறைச்சி உன்பதால் ஹ‚க்  வார்ம் (கொக்கி புழு) இது மனித குட­ல் தங்கி குட­ன் சுவற்றை தாக்கி இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளும். 
ரவுண்ட் வார்ம் என்னும் வட்டப்புழுக்கள், இன் வார்ம் ஊசிப்புழு. உண்டாகின்றன. இது மனித இரத்த நானங்களில் அனைத்திலும் சென்று மனித உறுப்புகளை பாதிக்கச் செய்கின்றன.
டேப் வார்ம் நாடாபுழு என்பது நமது உட­ல் 80 அடிவரை வளரக்கூடியது. 
ஏன் எதற்கு எப்படி (பாகம் 1 பக்கம் 70)
ஆக இஸ்லாம் சொல்­யிருக்கின்ற சுத்தத்தை எடுத்து நடந்தால் உலகத்தில் எந்த நோயும் தோன்றாது. தோன்றினாலும் அதை நம்மை தீண்டாது. இன்ஷா அல்லாஹ்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை