இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் கொள்கை என்ன?


 இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் கொள்கை என்ன?

எகிப்தில் ஹசனுல் பன்னா என்பவர் இக்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தை உருவாக்கினார்.  "இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும்என்பதே இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்றுஇவர்கள் கூறிக் கொள்கிறார்கள்.
ஆனால் இவர்களின் பிரச்சாரத்தையும் செயல்பாட்டையும் கவனித்தால் இவர்கள் இஸ்லாமிய ஆட்சியைஉருவாக்கப் பாடுபடவில்லைதங்களை ஆட்சியாளர்களாக ஆக்கிக்கொள்ளமார்க்கத்தை ஆயுதமாகப்பயன்படுத்தும் அரசியல்வாதிகள் என்பதை அறியலாம்.
குர்ஆன் ஹதீஸில் ஆட்சி அதிகாரம் பற்றி வரும் வசனங்களை மட்டும் இவர்கள் படிப்பார்கள்இதைத்தங்களுடைய கொள்கைக்கு ஆதாரங்களாகக் கூறிக் கொள்வார்கள்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்கடமைகள்வணக்க வழிபாடுகள்இஸ்லாம் வன்மையாககண்டித்த பாவங்கள் ஆகியவற்றைப் பற்றி குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறைய கூறப்பட்டிருக்கும்.

இவர்கள் அதைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள்சிந்திக்க மாட்டார்கள்மக்கள் இஸ்லாத்துக்குமாற்றமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் உண்மையான இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல மாட்டார்கள்.மாறாக வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் மக்களிடத்தில் கூட இஸ்லாமிய ஆட்சியைப் பற்றிமட்டுமே பேசுவார்கள்.
இந்த இயக்கத்தில் இருப்பவர்களிடம் கூட இஸ்லாமிய ஒழுங்கு முறைகளையும்நெறிமுறைகளையும்பார்க்க முடியாதுஇஸ்லாமியப் போதனைகளில் பிடிப்பில்லாத இவர்கள் இஸ்லாமிய ஆட்சியை எப்படிஉருவாக்க முடியும்அப்படி உருவாக்கினால் அந்த ஆட்சி இஸ்லாமிய ஆட்சியாக இருக்குமாஎன்றுசிந்திக்க வேண்டும்.
இவர்கள் மக்களிடம் இஸ்லாத்தைக் காட்டி ஓட்டுக் கேட்பதால் கேவலத்தில் மற்ற அரசியல்வாதிகளைமிஞ்சிவிட்டனர்.
இவர்கள் தங்கள் இயக்கத்துக்கு இக்வானுல் முஸ்லிமீன் இஸ்லாமிய சகோதர இயக்கம் என்று பெயர்வைத்துள்ளனர்ஆனால் இந்தப் பெயருக்கு ஏற்ப இவர்கள் நடப்பதில்லைஇவர்களின் அறியாமையையாராவது ஒரு முஸ்லிம் சகோதரன் தெளிவுபடுத்தினால் அவனைக் கொல்வதற்குக் கூட தயங்கமாட்டார்கள்ஜிஹாத் என்ற பெயரால் இவர்கள் கொன்று குவித்த இஸ்லாமியர்களின் பட்டியல் ஏராளம்.
ஆட்சி அதிகாரத்தைப் பற்றி பேசும் இவர்கள் ஆட்சி அதிகாரத்தை  இஸ்லாம் எந்த இடத்தில்வைத்திருக்கின்றதுஎந்தச் சூழ்நிலையில் அதற்காகப் பாடுபடச் சொல்கிறதுஎன்பதைச் சிந்திக்கமாட்டார்கள்இது பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறிய நெறிமுறைகளைக்கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.
இந்த இயக்கத்தின் அசத்தியக் கொள்கையை அச்சுப் பிசகாமல் பின்பற்றக் கூடியவர்கள் வேறுபெயர்களில் நம் நாட்டில் இருக்கின்றார்கள்மார்க்கத்தை துஷ்பிரயோகம் செய்யும் இவர்களை மக்கள்புறக்கணிக்க வேண்டும்.
இப்போது கூட மனிதச் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதற்காக எகிப்து தேர்தலில் போட்டியிட்டுவென்றுள்ளனர்இத்துடன் இஸ்லாமிய ஆட்சி கோஷத்தை சவப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்துவிட்டார்கள்.
இப்னு ஸைன்

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

அவ்லியாக்களின் சிறப்பு

பைபிளில் 50000 பிழைகள் – கிறிஸ்தவ இதழின் வாக்குமூலம்: