Posts

Showing posts from January, 2013

ஏழரை லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள்TNTJ தமிழக முதல்வர் பேட்டி!

Image
ஏழரை லட்சத்திற்கு மேல் உறுப்பினர்களை கொண்ட அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத் – தமிழக முதல்வர் பேட்டி!  சற்று முன் விஸ்வரூபம் படம் குறித்து செய்தியாளர்களுக்கு தமிழக முதல்வர் பேட்டியளித்தார். இதில் தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி குறிப்பிட்டு பேசுகையில் தவ்ஹீத் ஜமாஅத்தில் ஏழரை லட்சத்திற்கு மேல்  உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்! அவர் அளித்த பேட்டியின் கருத்தாக்கம்: 1. எதிர்ப்பது சிறு கூட்டம் இல்லை, அவர்களெல்லாம் முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள், தவ்ஹீத் ஜமாத் 7.5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட பரந்து விரிந்த அமைப்பு , 500 தியேட்டர்களையும் முற்றுகையிடபோவதாக சொல்கின்றனர், தமிழக அரசால் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் .

மார்க்க அறிஞருக்கு ஓர் உதாரணம் !

மார்க்க அறிஞருக்கு ஓர் உதாரணம் ! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் என்னை நேர்வழியுடனும் மார்க்க அறிவுடனும் அனுப்பியதற்க்கு உதாரணம் ஒரு பெரு மழையைப் போல அது பூமியில் பெய்கிறது அந்த மழையால் நீரை உறுஞ்சி சேகரித்து வைத்து அதி ருந்து புற்பூண்டுகள் முளைக்கக்கூடிய தரைகளும் உண்டு . அந்த நிலங்களில் நீரை தேக்கி வைத்து மக்கள் அதனை பருகியும் நீர்பாய்ச்சி விவசாயம் செய்தும் பயன்பெறக்கூடிய நிலங்களும் உண்டு . அல்லாஹ்வின் மார்கத்தில் விளக்கம் பெற்று அல்லாஹ் என்னுடன் அனுப்பிய நேர்வழி அவருக்கு பயன்பெற்று மார்க்க அறிவை கற்றுக் கொண்டும் பிறருக்கும் கற்றுக் கொடுக்கிறவர் இவ்வாறு இருப்பார் ஆனால் அந்த மழைத்துளிகள் வேறு வகையான இடங்களில் பொழிகிறது.அவைகள் தண்ணீரை தேக்கி வைக்காத புற்பூண்டுகள் முளைக்காத தரிசு நிலங்களாகும் .என்னுடன் அனுப்பப்பட்ட நேர்வழியைப் பெறுவதற்க்கு எட்டிகூட பார்க்காமல் இருப்பவர் இதைப் போன்று இருப்பார்.  அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) நூல்: புகாரி நபி(ஸல்) அவர்கள் மார்க்க அறிவை ஒரு பெரு மழையுடன் ஒப்பிட்டு அது சென்றடைகின்ற இடங்களை மார்க்க அறிவை தேடி அதை பிறருக்கு கற்று...

மண்ணறை வாழ்க்கை

மண்ணறை வாழ்க்கை நபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக் கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து(ஒரு மனிதரைக் காண்பித்து) இம் மனித ரைப்பற்றி நீ என்ன கூறிக்கொண்டிருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள். ஒரு முஃமின் இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாவார் என நான் சாட்சி கூறினேன் என்று கூறுவான். நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார். இதற்குப் பகரமாக சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் உனக்கு ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்;. அவ்விரண்டையும் அவன் பார்ப்பான். ஒரு காஃபிர் அல்லது நயவஞ்சகனிடம் இம்மனிதரைப்பற்றி நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்கப்படும் அதற்கவன் எனக்குத் தெரியாது மக்கள் கூறியதைக் கூறிக்கொண்டிருந்தேன் எனக் கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவுமில்லை பின்பற்றவுமில்லை எனக் கூறப்படும். பிறகு அவன் இரும்புச் சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படுவான். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள்.(நஸயீ) .

திரித்துப் பொருள் கூறப்படும் திருக்குர்ஆன் வசனங்கள்.

திரித்துப்   பொருள்   கூறப்படும் திருக்குர்ஆன்   வசனங்கள். திருக்குர்ஆனின்   வசனங்களுக்குத்   தவறான   பொருளைக்   கூறி ,  அதன்   மூலம்   இஸ்லாத்திற்குப்   புறம்பானகொள்கைகளை   சிலர்   பிரச்சாரம்   செய்வதை   நாம்   காண்கின்றோம் .   இவ்வாறு   தவறாக   பொருள்கூறப்பட்ட   வசனங்களில்   சிலவற்றையும்   அவற்றின்   உண்மையான   பொருளையும்   நாம்   இங்குகாண்போம் . குர்ஆன்   வழிகெடுக்குமா ? சாதாரண   மக்கள்   மட்டுமல்ல !   பெரும்   பெரும்   ஆலிம்கள்   கூட ,  குர்ஆன்   வழி   கெடுக்கும்   என்றுபேசுகின்றனர் .   அதற்கு   ஆதாரமாக   கீழ்   கண்ட   வசனத்தைக்   கொண்டு   வருகின்றனர் . கொசுவையோ ,  அதை   விட   அற்பமானதையோ   உதாரணமாகக்   கூற   அல்லாஹ்   வெட்கப்பட   மாட்டான் . நம்பிக்கை   கொண்டோர்  " இது   தமது   இறைவ...

ஈஸா (அலை) இறந்து விட்டார்களா?

ஈஸா  ( அலை )  இறந்து   விட்டார்களா ? முஹம்மத் ,  தூதர்   தவிர   வேறு   இல்லை .  அவருக்கு   முன்   தூதர்கள்   சென்று   விட்டனர் .  அவர்   இறந்துவிட்டால்   அல்லது   கொல்லப்பட்டு   விட்டால்   வந்த   வழியில்   திரும்பி   விடுவீர்களா ?  வந்த   வழியேதிரும்புவோர்   அல்லாஹ்வுக்கு   எந்தக்   கேடும்   செய்யவே   முடியாது .  நன்றியுடன்   நடப்போருக்குஅல்லாஹ்   கூலி   வழங்குவான் .  ( அல்குர்ஆன்   3:144) நபிகள்   நாயகம்  ( ஸல் )  அவர்கள்   உலக   முஸ்லி - ம்களின்   ஒரே   தலைவராகவும் ,  வழிகாட்டியாகவும்இருக்கிறார்கள் .  ஆனாலும் ,  அவர்கள்   இறைவனின்   தூதரே   தவிர   இறைவனல்ல   என்பதை   இவ்வசனம்வலியுறுத்துகின்றது .

ஸஜ்தா திலாவத்

ஸஜ்தா   திலாவத் தொழுகையிலும்   தொழுகைக்கு   வெளியிலும்   குர்ஆனின்   ஒரு   சில   குறிப்பிட்ட   வசனங்களை   ஓதும்போது   ஸஜ்தா   செய்கின்றோம் .   இதை   ஸஜ்தா   திலாவத்   என்றழைக்கின்றோம் . இந்த   ஸஜ்தா   திலாவத்திற்கான   வசனங்கள்   எவை ?  அதாவது   எந்தெந்த   வசனங்களை   ஓதும்   போது   நாம் ஸஜ்தா   செய்ய   வேண்டும் ?  என்று   நாம்   பார்த்தால்   தற்போது   14   வசனங்கள்   ஸஜ்தா   வசனங்களாகநடைமுறையில்   உள்ளதைக்   கண்டு   வருகின்றோம் .   இந்த   14   வசனங்களுக்கு   ஹதீஸ்களில்   ஆதாரம்உள்ளதா   என்பதைப்   பார்ப்பதற்கு   முன்னர்   அவை   எந்தெந்த   வசனங்கள்   என்பதை   முதலில்   பார்ப்போம் .

விஷவரூப விவாதங்கள்

Image
விஷவரூப விவாதங்கள் இன்று ஒவ்வொரு தமிழனின் மனதிலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.படத்தை ஆதரித்தும்,எதிர்த்தும் பல குரல்கள் ஒலிக்கின்றது.தங்களுடைய கருத்துக்களை.படத்தை தடைசெய்தது மிகசரியே என்றுவாதிடுபவர்களில் நானும் ஒருவன்.அப்படியிருக்க படத்தை எதிர ்ப்பவர்களை பயங்கர வாதிகளாகவும் முஸ்லீம்களின் போராட்டங்களை கொச்சைபடுத்துபவர்களிடமும் கேட்க விரும்பும் சில கேள்விகள்... !)ஒருவர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் அது அவருடைய கருத்து சுதந்திரம் என்று வாதிடும் நியாயவான்களே டாம்999 படத்தில் முல்லைபெரியாறு ஆணை உடைவதாக கற்ப்பனையாகத்தனே ஒருவன் சித்தரித்தான்.அது அவனுடைய கருத்து சுதந்திரம் ஆனால் அதனை கண்டு கொந்தளித்தவர்களில் நானும் ஒருவன்.அப்போது எழுந்த தமிழனின் கோபம் இதுபோன்றுதான் கொச்சை படுத்தப்பட்டதா?

மட்டம் தட்டாதீர்!

மட்டம் தட்டாதீர்! நண்பர்கள் பலரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு உரையாடிக் கொண்டிருப்பர். அங்கே பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் அவர்களுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும். அவ்வாறு கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும் போது. அவர்களில் பொருளாதாரத்தில் குறைந்தவர் ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்வார். உடனே பக்கத்திலுள்ள ஒருவர் , " ஆமாம். இவர் பெரிய தத்துவ முத்தை உதிர்த்து விட்டார். நீ எல்லாம் எங்கோ இருக்க வேண்டிய ஆள். இங்கே வந்து உயிரை வாங்குகின்றாய் ''  என்று கடித்துக் குதறுவார். அவரை அந்தச் சபையில் வைத்து மட்டம் தட்டுவார். இப்படிப் பட்டவர்கள் பணம் ,  அறிவு ,  அழகு ,  அரசியல் செல்வாக்கு ஆகிய அம்சங்களில் ஏதேனும் ஒன்றில் மற்றவர்களை விட சிறந்து விளங்குவார்கள். இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும். அதை மற்றவர்களை மட்டம் தட்டுவதற்குரிய கருவியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதாவது பலர் முன்னிலையில் அவமானப் படுத்தி மூக்கறுப்பார்கள். அன்றாடம் திண்ணை சபைகளிலிருந்து ஆலோசனைக் கூட்டம். பொதுக்கூட்டங்கள் வரை இந்த ' நோஸ் கட் '  கலாச்சாரம் தொடர்கின்றது. இன்று கல்லூரிகளில் நடக்கும் ராக்க...

இஸ்திஃக்ஃபார்

இஸ்திஃக்பார் அல்லாஹ் தனது திருமறையில்  48:2  வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள். " அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் "அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி ' ( பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன் ''  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) , நூல் : புகாரி  6307 " எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன் ''  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி) , நூல் : முஸ்லிம்  4870

ஷிர்க்கும் பித்அத்தும் (வீடியோ)

Image
ஷிர்க்கும் பித்அத்தும் (வீடியோ)

ஏகத்துவம் என்றால் என்ன? (வீடியோ)

Image
ஏகத்துவம் என்றால் என்ன? (வீடியோ)

மனுஷ்ய புத்திரனா? மிருக புத்திரனா?:

மனுஷ்ய   புத்திரனா ?  மிருக   புத்திரனா ?: மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதும் இவன் இந்தப் பெயரை வைப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவன் .  உண்மையில் மிருக புத்திரன் என்றுதான் இவனைச் சொல்ல வேண்டும் .  காரணம் என்னவென்றால் கொடூரமான முறையில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட  4  மாத குழந்தைக்கு இரக்கம் காட்ட முன்வராத இந்த மனித மிருகம் ,  கொடூரமான முறையில் கொலை செய்த கொலைகாரப் பெண்மணிக்கு இரக்கம் காட்ட முன்வருவதிலிருந்தே இவன் மனித ஜாதி அல்ல ;  மிருக ஜாதிதான் என்பது வெட்ட வெளிச்சமாகின்றது .   இவனது பெண்டாட்டியையோ, மகனையோ ,  மகளையோ ,  அண்ணனையோ ,  தம்பியையோ அநியாயமாக எவனாவது கொலை செய்தால் அப்போது கொலை செய்த கொலைகாரனுக்கு ஆதாரவாக மனிதநேயம் பேசுவானா ?  அல்லது கொலை செய்யப்பட்டவனைக் கொல்ல வேண்டும் என்று இவன் சொல்வானா என்பது இவனது வீட்டில் ஏதாவது கொலை நடந்தால் தெரிந்துவிடும் .  

ஏன் நபிகள் நாயகத்தை ‘மகான்’ என்கிறோம்?

Image
ஏன் நபிகள் நாயகத்தை ‘மகான்’ என்கிறோம்? “இஸ்லாத்தின் உயரிய பண்புகள் இதற்குமுன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதை விட, இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளிதேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசர அவசரமாகத் தேவைப்படுகின்றன. “இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல; ஓர் சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள்; இஸ்லாத்தின் மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள், இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர். “நான் மதத்தைப் பற்றிக்கொண்டுள்ள கருத்துக்கும், இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழா விற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஓர் மார்க்கமாகக் கருதி, நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன். இவ்விழா வில் நான் கலந்து கொள்வது இதுதான் முதல் தடவையென்பதுமல்ல; இதுவே கடைசி தடவையுமல்ல. 

இஸ்லாமியப் போர்கள்

இஸ்லாமியப்   போர்கள் முஸ்லிமல்லாதவர்களை   மதமாற்றம்   செய்வதற்காகவும்   மறுப்பவர்களைக்   கொன்று குவிப்பதற்காகவும்   பிறநாட்டில்   உள்ள   அழகு   மங்கையரைக்   கவர்ந்து   செல்வதற்காகவும்   அங்குள்ள செல்வங்களைக்   கொள்ளையடிப்பதற்காகவும்   முஸ்லிம்கள்   படையெடுத்து   உள்ளனர் .  இஸ்லாம் ,  பிற மதங்களைச்   சகித்துக்   கொள்ளாத   மார்க்கம்   என்பதற்கு   அது   வாள்முனையில்   பரப்பப்பட்ட   மார்க்கம் என்பதற்கும்   இந்தப்   போர்களும்   படையெடுப்புகளும்   சான்றாக   உள்ளன . முஸ்லிமல்லாதவர்கள்   அடிக்கடி   எழுப்பிவரும்   குற்றச்சாட்டுகளில்   இதுவும்   ஒன்றாகும் . முகலாய   மன்னர்களும் ,  வேறு   பல   முஸ்லிம்   மன்னர்களும்   இந்தியாவின்   மீது   படையெடுத்து வந்ததையும்   நபிகள்   நாயகம்   ( ஸல் )  அவர்கள்   தம்   வாழ்நாளில்   எராளமான   போர்கள...