ஏழரை லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள்TNTJ தமிழக முதல்வர் பேட்டி!
ஏழரை லட்சத்திற்கு மேல் உறுப்பினர்களை கொண்ட அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத் – தமிழக முதல்வர் பேட்டி!
சற்று முன் விஸ்வரூபம் படம் குறித்து செய்தியாளர்களுக்கு தமிழக முதல்வர் பேட்டியளித்தார். இதில் தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி குறிப்பிட்டு பேசுகையில் தவ்ஹீத் ஜமாஅத்தில் ஏழரை லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!
அவர் அளித்த பேட்டியின் கருத்தாக்கம்:
1. எதிர்ப்பது சிறு கூட்டம் இல்லை, அவர்களெல்லாம் முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள், தவ்ஹீத் ஜமாத் 7.5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட பரந்து விரிந்த அமைப்பு , 500 தியேட்டர்களையும் முற்றுகையிடபோவதாக சொல்கின்றனர், தமிழக அரசால் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் .
2. எல்லா சொத்தையும் அடகுவைத்து பணத்தையெல்லாம் கொட்டியுள்ளேன், படம் வெளியாகாவிட்டால் பெரும் நஷ்டம் என கமல் சொல்கின்றார் : அவர் 58 வது முதிர்ச்சி உள்ள மனிதர், 50 ஆண்டுகால சினிமா அனுபவம் உள்ளவர், 100 கோடிக்கு படம் எடுப்பதாக இருந்தால் எப்படி எடுக்க வேண்டும் எப்படி பணத்தை எடுக்க வேண்டும் என அவர் தான் யோசித்து இருக்க வேண்டும், அவர் தான் ரிஸ்க் எடுத்தார் அதர்க்கு அரசாங்கம் எப்படி பொருப்பாகும், தனிமனிதரின் லாபத்திற்க்காக நாட்டின் சட்டம் ஒழுங்கை பலி கொடுக்க முடியாது.
4. சினிமா சட்டம் 1995 படி ஒரு மா நில அரசு விரும்பினால் எந்த படத்தையும் தடை செய்யலாம், எனவே தணிக்கை துறை அனுமதி வழங்கிவிட்ட பிறகு மா நில அரசிர்க்கு தடை செய்ய அதிகாரம் இல்லை என்பது பொய்யான வாதம்.
5. “இப்ப வா, அப்பரம் இன்னொரு நாள் வா” என கமல் இஸ்லாமிய தலைவர்களை அலைகழித்தார் ,
6. நாட்டின் பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் , கமல் இல்லை,
7. நான் சினிமா பார்ப்பது இல்லை , பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது, எனக்கு அதற்க்கு நேரம் இல்லை.
8. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டே படத்திற்க்கு தடை விதிக்கபட்டுள்ளது.
9. இஸ்லாமிய அமைப்புடன் பேசி வெட்ட வேன்டியதை வெட்டிவிட்டு படத்தை வெளியிட்டால் அரசு ஒத்துழைக்கும்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்று அளித்த பேட்டியின் வீடியோ
தவ்ஹீத் ஜமாஅத் குறித்து அவர் பேசியது ஆரம்பத்திலும் பின்னர் அவர் அளித்த பேட்டி முழுவதும் இதில் இடம் பெற்றள்ளது.
Comments