மார்க்க அறிஞருக்கு ஓர் உதாரணம் !


மார்க்க அறிஞருக்கு ஓர் உதாரணம் !


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் என்னை நேர்வழியுடனும் மார்க்க அறிவுடனும் அனுப்பியதற்க்கு உதாரணம் ஒரு பெரு மழையைப் போல அது பூமியில் பெய்கிறது அந்த மழையால் நீரை உறுஞ்சி சேகரித்து வைத்து அதி ருந்து புற்பூண்டுகள் முளைக்கக்கூடிய தரைகளும் உண்டு . அந்த நிலங்களில் நீரை தேக்கி வைத்து மக்கள் அதனை பருகியும் நீர்பாய்ச்சி விவசாயம் செய்தும் பயன்பெறக்கூடிய நிலங்களும் உண்டு . அல்லாஹ்வின் மார்கத்தில் விளக்கம் பெற்று அல்லாஹ் என்னுடன் அனுப்பிய நேர்வழி அவருக்கு பயன்பெற்று மார்க்க அறிவை கற்றுக் கொண்டும் பிறருக்கும் கற்றுக் கொடுக்கிறவர் இவ்வாறு இருப்பார் ஆனால் அந்த மழைத்துளிகள் வேறு வகையான இடங்களில் பொழிகிறது.அவைகள் தண்ணீரை தேக்கி வைக்காத புற்பூண்டுகள் முளைக்காத தரிசு நிலங்களாகும் .என்னுடன் அனுப்பப்பட்ட நேர்வழியைப் பெறுவதற்க்கு எட்டிகூட பார்க்காமல் இருப்பவர் இதைப் போன்று இருப்பார்.  அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் மார்க்க அறிவை ஒரு பெரு மழையுடன் ஒப்பிட்டு அது சென்றடைகின்ற இடங்களை மார்க்க அறிவை தேடி அதை பிறருக்கு கற்றுக் கொடுப்பவர் மார்க்க அறிவை அறிந்து கொள்ள முயலாதவர் இவர்களின் நிலைகளை உதாரணம் காட்டி மார்க்க அறிவின் அவசியத்தைப் பற்றி வ யுறுத்தியள்ளார்கள் . 
மார்க்க அறிவை தானும் அறிந்து பிறருக்கும் பயன் பெறும் வகையில் நடப்பவர்களை நீரை உறுஞ்சி அதன் மூலமாக புற்பூண்டுகள் முளைக்கக்கூடிய நிலங்களக்ககும் தண்ணீரை தேக்கி வைத்து மக்கள் பருகி விவசாயத்தற்க்கு நீர் பாய்ச்சி பயன் பெறக்கூடிய கிணறுகள் குளம் குட்டைகள் இருக்கும் நிலங்களுக்கும் ஒப்பிட்டுக் கூறுவதி ருந்து மார்க்க அறிவை அறிந்து அதை பிறருக்கு பயன் பெற செய்பவரின் சிறப்பு பற்றி விளங்கிறது .  இன்னும் இவர்களைப் பற்றி அல்லாஹ்வும் குர்ஆனில் கூறுகிறான் 

அல்லாஹ் உங்களில் நம்பிக்கைக் கொண்டவர்களுக்கும் மார்க்க அறிவை பெற்றவர்களுக்கும் அந்தஸ்த்துகளை உயர்த்துகிறான் . (அல்குர்ஆன் 58:11)

அல்லாஹ்வின் அடியார்களில் மார்ககத்தை அறிந்தவர்கள் தான் அவனை அதிகமாக பயப்படுவார்கள் . (அல் குர்ஆன் 35:28)

அல்லாஹ் தான் நாடியவர்க்கு மார்க்க ஞானத்தை வழங்குகிறான் யார் மார்க்க ஞானம் வழங்கப்பட்டாரோ அவர் அதிகமான நன்மைகளைப் பெற்றுவிட்டார். அறிவுடையவரைத் தவிர வேறு யாரும் படிப்பினை பெறமாட்டார்கள் (அல்குர்ஆன் 2:269) 


என குர்ஆனிலும் நபி மொழியிலும் ஏராளமான செய்திகளைக் காணலாம் .

இவ்வாறு பல்வேறு சிறப்புகளையும் உலகம் முழுவதும் பரவி மக்களின் அடிப்படைத் தேவைகளாக இருக்கின்ற நீர்நிலைகளைப் போல இருக்கும் ஆ ம்கள் மார்க்க அறிவை கற்று அதனை மக்களுக்கும் போதிக்கிறார்களா? என்று பார்த்தால் மார்க்க அறிவு என்ற பெயரில் மத்ஹப் குப்பைகளையும் மவ்லீதுகளையும் பித் அத்களையும் அதனையே வணக்க வழிபாடுகளாக மக்களுக்கும் போதிக்கிறார்கள் . மக்களுக்கு அறிவுரை கூறக்கூடிய இவர்களின் சொற்பொழிவுகளில் இந்த அடிப்படையில் கட்டுக்கதைகளும் நகைச்சுவைகளும் நிறைந்திருக்கும். இதற்க்குக் காரணம் சரியான மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாததும் அல்லது தெரிந்து கொண்டு மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்புக்குக்காக மறைப்பதும் தான் . இது போன்றவர்களுக்கு அல்லாஹ் எச்சரிக்கை விடுகிறான் . 

நாம் வேதத்திலுள்ளதை மக்களுக்கு தெளிவாக்கியதற்க்குப் பின்னால் நாம் இறக்கிவைத்த   தெளிவான வசனங்களையும் நேர்வழியையும் மறைப்பவர்ளை அல்லாஹ்வும் சபிக்கக்கூடியவர்களும் சபிக்கிறார்கள் .  (அல்குர்ஆன் 2:159)

இன்னும் அல்லாஹ் குர்ஆனைப் பற்றி கூறும் போது .......

இது மக்கள் அனைவருக்கும் விளக்குமும் நேர்வழியும் இறையச்சயமுடையவர்களுக்கு அறிவுரையுமாகும் (அல்குர்ஆன் 3:138)

இவ்வாறு நேர்வழிக்குரிய குர்ஆனையும் அதைப்பின்பற்றிய நபியவர்களின் வழிமுறையையும் பின்பற்றினால் இவ்வாறு இழிவடையத் தேவையில்லை. 

இவர்களின் நிலைமை தான் இப்படியென்றால் மார்ககத்தை அரபு நாடுகளில் கற்றுக் கொண்டு வந்திருக்கிறோம் என்று சில அறிஞர்கள் அரபு நாட்டு அரசாங்கத்திடமிருந்து மட்டும் தஃவாக்கு காசை வாங்கிக் கொண்டு எந்த பிரச்சாரமும் செய்யாமல் வீட்டிலேயே முடங்கி கிடங்கும் நிலைமையைக் காண்கிறோம் . இது போன்றவர்கள்  தான் நபி(ஸல்) அவர்கள் உதாரணம்  காட்டிய பெரு மழை பெய்தும் அதனால் அந்த நிலத்திற்கோ மக்களுக்கோ எந்த பயனும் கிடைக்காத தரிசு நிலங்களைப் போன்றவர்கள்  

இன்னும் தவ்ஹீத் வாதிகளிடத்திலும் மார்க்கத்தை அறிய வேண்டும் என்ற ஆர்வமும் அதனை மக்களிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் படிப்படியாகக் குறைந்து வருவகிறது . சொற்பொழிவுகளை ஒரு ரசனைக்காக கேட்டு பேச்சாளர்களுக்கு மார்க் போடும் நிலைதான் உள்ளது . இதன் மூலமாக என்ன அறிவுரையைப் பெற்றோம் யாரிடம் சொன்னோம் என்ற எண்ணம் இல்லாமலே போய்விட்டது ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு நபித் தோழரும் மார்க்த்தை அறிய வேண்டும் என்ற ஆர்வமும் அதை பிறருக்கு சொல்ல வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தையும் பாருங்கள் 

உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : மதீனாவின் மேட்டுப் பகுதி­யிருந்த உமையா பின் ஸைத் என்ற குலத்தைச் சார்ந்த அன்ஸாரி தோழர் ஒருவர் எனக்கு அண்டை வீட்டுக்காரராக இருந்தார் .நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று மார்க்க விஷயங்களை தெரிந்து கொள்வதற்க்கு முறைவைத்துக் கொண்டோம் . ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களிடத்தில் செல்வேன் . இன்னொரு நாள் அவர் செல்வார். நான் சென்றால் நபி(ஸல்) அவர்களிடமிருந்து வஹீ மற்ற விஷயங்களைக் கொண்டு வந்து அவரிடத்தில் சொல்வேன். இவ்வாறே அவரும் செய்வார் . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : புகாரி 87

உமர் (ரலி) அவர்களுக்கும் இந்த அன்ஸாரி தோழருக்கும் இருந்த ஆர்வத்தில் கொஞ்சம் கூட நம்மிடத்தில் இல்லை என்பதுதான் கவலைக்குரிய செய்தியாக உள்ளது . நாம் முறை வைப்பது கிரிக்கெட் ஸ்கோருக்கும் நாடங்களுக்கும் தான் 

அதுபோல நம் எல்லோருக்கும் தெரிந்த அதிக ஹதீஸ்களை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் வாழ்க்கையை சற்று சிந்தியுங்கள் 

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ;
அபூ ஹுரைரா ஹதீஸ்களை அதிகமாக அறிவிக்கிறார் என்று மக்கள் கூறுகிறார்கள் .என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் வேதத்தில் மட்டும் இரண்டு வசனங்கள் இல்லையென்றால் நான் ஹதீஸை அறிவிக்கமாட்டேன். நாம் மக்களுக்கு வேதத்திலுள்ளதை தெளிவாக்கியதற்க்குப் பின்னால் நாம் இறக்கிய தெளிவான வசனங்களையும் நேர்வழியையும் மறைப்பவர்ளை அல்லாஹ்வும் சபிக்கக்கூடியவர்களும் சபிக்கிறார்கள் . (அல்குர்ஆன் 2:159) என்று இந்த வசனத்தை ஓதி காண்பித்து விட்டு என்னுடைய முஹாஜிர் தோழர்கள் கடை வீதிகளில் வியாபரத்தில் ஈடுபட்டனர் . அன்ஸாரி தோழர்கள் வேலையில் ஈடுபட்டனர். அபூ ஹƒரைராவாகிய (நான்) நபி(ஸல்) அவர்களுடன் பசியுடனும் பட்டினியுடனும் இருந்து கொண்டு அவர்கள் இல்லாத நேரத்தில் நான் இருந்து அவர்கள் மனனம் செய்யாததை நான் மனனம் செய்தேன் .  அறிவிப்பவர் ; அஃரஜ்   நூல் ;  புகாரி 115

இது போன்று எண்ணற்ற நபித்தோழர்களின் இரத்தத்தாலும் பசியாலும் கிடைத்தது தான் இந்த மார்க்கம் ஆனால் நமக்கோ இருந்த இடத்தி ருந்து பட்டனை தட்டினால் மார்க்க சம்பந்தபட்ட அறிவுரைகளைக் கேட்க முடியும் இருந்தும் கூட அதற்கே நமக்கு சோம்பல் ஷிர்க் பித் அத்களை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்படுத்தபட்ட நபி வழி ஜூம் ஆ மேடைகளிலும் நமக்கு தூக்கம் இப்படியே சென்றால் மார்க்க அறிவு நம் முன்னால் வைக்கபட்டும் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருந்தால் நபியவர்கள் கூறிய ஒரு பயனுமற்ற தரிசு நிலங்களுக்கு ஒப்பாகிவிடுவோம் . 

இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ் தன் அடியார்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக ஓரேடியாக மார்க்க அறிவை இல்லாமல் ஆக்கிவிடமாட்டான் .ஆனால் மார்க்கம் தெரிந்தவர்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக எந்த மார்க்க அறிஞரும் இல்லாத அளவுக்கு மார்க்கறிவை இல்லாமல் ஆக்குகிறான் . இறுதியில் மக்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்குவார்கள் . அவர்களிடத்தில் மார்க்கத் தீர்ப்பு கேட்கப்படும்போது மார்க்கத்தில் இல்லாததைத் தீர்ப்பாக வழங்குகி தாங்களும் வழி கெட்டு மக்களையும் வழிகெடுப்பார்கள்.     அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ்            நூல் :  புகாரி 100

இவ்வாறு நாம் மார்கத்தை அறிவதிலும் அதை பிறருக்கு எடுத்து சொல்வதிலும் ஆர்வம் குறைந்தால் மடையர்களின் கையில் மார்க்கம் அகப்பட்ட நிலைமையாகிவிடும். எனவே தவ்ஹீத் சகோதரர்களுக்கு நாம் வைக்கின்ற அன்பான வேண்டுகோள் மார்க்கத்தை அறிந்து  உங்களுடைய ஊர்களில் எந்தெந்த வழிகளிலெல்லாம் மார்க்க அறிவை கொண்டு செல்லமுடியுமோ அந்த அனைத்து வழிகளிலும் கொண்டு சென்று ஈருலக பயனை அடைவோமாக!

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இஸ்லாம் கூறும் மனித நேயம்

பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்