இஸ்லாம் கூறும் மனித நேயம் மனிதனிடத்தில் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமான பண்பு மனித நேயம். மனித நேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும். தனக்கு விரும்பும் நன்மைகளை பிறருக்கு விரும்புவதும், தான் விரும்பாததை பிறருக்கும் விரும்பாமல் இருப்பதும் மனித நேயமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாகக் கண்டு வருகிறோம். இறைவன் மனிதனுக்குப் பயன் படக்கூடிய உறுப்புகளை ஏற்படுத்தி வெறும் உடலாக மட்டும் அவனைப் படைக்கவில்லை. உலகம் இயங்க வேண்டும் என்பதற்காக உடலுடன் பல நல்ல குணங்களையும் தன்மைகளையும் சேர்த்தே உருவாக்கியுள்ளான். நன்மைகளும் தீமைகளும் மனித நேயம் மட்டும் மனிதனிடம் எடுபட்டுப் போயிருந்தால் என்றைக்கோ இந்த உலகம் அழிந்திருக்கும். இக்குணத்தை இறைவன் சிலரிடத்தில் இயற்கையாகவே அமைத்திருப்பதால் மனிதநேயம் அற்றவர்கள் செய்யும் கொடுமைகளின் போது, மனிதநேயம் உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்து அவர்கள் இந்த உலகில் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கிறார்கள். உ...
பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள் அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவை மட்டுமே மார்க்கம் என்பதை அறியாமல், கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்று நினைத்து பழகிப்போன சில பகுதி மக்கள், பூரியான் ஃபாத்திஹாவுடன் சேர்ந்த 'விறகு வெட்டி கிஸ்ஸா'வை விடிய விடியப் படிப்பதும், கேட்பதும்கூட வணக்கம் என்று எண்ணி, அந்த மாயையில் மயங்கி கிடக்கும் மக்களுக்கும் இஸ்லாம் கூறும் தீர்வு இதோ! என் அருமை சமுதாய சொந்தங்களே! திருக்குர்ஆனும் ஏராளமான நபிமொழிகளும் தமிழ் மொழியில் எப்போதோ வந்துவிட்டன. தயவுசெய்து அதைப் படித்துப் பாருங்கள். அவற்றைப் படித்து, நீங்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டால், பூரியானுக்காக ஃபாத்திஹா ஓத வருபவர்களுக்கு இனி சவுக்கடி தான் கொடுப்பிர்கள். இந்த பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள் ஷியாக்களின் 12 இமாம்களில் ஒருவரான 'ஜாஃபர் சாதிக்' என்பவரின் பெயரை முன்னிறுத்தி, இந்த ரஜப் மாதம் 22 வது பிறையில் 'பூரியான் ஃபாத்திஹா'வை ஓதுவதற்காக வீட்டின் ஒரு அறையை பிரத்தியேகமாக கழுவி சுத்தம் செய்து, மேலே வெள்ளைத் துணியினால் பந்தல் அமைத்து, அதில் பூ...
Comments