குர்ஆனில் எழுத்துப் பிழைகளா?

குர்ஆனில் எழுத்துப் பிழைகளா?

தூத்துக்குடி விவாதம்:

தோல்வியை ஒப்புக்கொண்ட ஜமாஅத்துல் உலமா

கடந்த செப்டம்பர் மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்திற்கும் தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபையினருக்கும் இடையில் "குர்ஆனில்எழுத்துப் பிழைகளா?' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகர உலமா சபை ஈரோட்டில் உள்ள தாவூதிய்யா அரபிக் கல்லூரியை தலைமைஇடமாகக் கொண்டதுதாவூதிய்யா அரபிக் கல்லூரி தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை அடிப்படையில்இயங்கக்கூடியதுஇந்தக் கல்லூரியை தலைமை இடமாகக் கொண்ட தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல்உலமா சபையினரும் தப்லீக் கொள்கையில் இருப்பார்கள் என்று நாம் நினைத்திருந்தோம்.
ஆனால் விவாதத்தின் போது தப்லீக் ஜமாஅத்தைக் கடுமையான முறையில் எதிர்த்து வரும்அப்துல்லாஹ் ஜமாலியை இவர்கள் அழைத்து வந்திருந்தனர்அப்துல்லாஹ் ஜமாலிதவ்ஹீத்வாதிகளை அரை வஹ்ஹாபிகள் என்றும் தப்லீக் ஜமாஅத்தினரை முழு வஹ்ஹாபிகள்என்றும் கூறிதப்லீக் ஜமாஅத்தினர் தவ்ஹீத்வாதிகளை விட மோசமானவர்கள் என்று பிரச்சாரம்செய்து வருகிறார்இவரது கூட்டமான பரேலவிகள்தப்லீக் ஜமாஅத்தினரை வழிகேடர்கள் என்றுபிரச்சாரம் செய்கின்றனர்.
அசத்தியவாதிகள் நம்மை அழிப்பதற்காக எப்படிப்பட்ட பரம விரோதிகளோடும் கூட்டு சேர்ந்துகொள்வார்கள் என்று நினைப்பதாஅல்லது இவர்கள் தப்லீக் என்ற போர்வையில் பரேலேவிகளாகநடித்துக் கொண்டிருக்கிறார்களாஅவர்களுக்கே உண்மை வெளிச்சம்.

ஜமாஅத்துல் உலமா சபையினரின் நிலைபாடு

பீஜே அவர்களின் திருக்குர்ஆன் தர்ஜுமாவில் புனிதக் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளதாக பீஜேஅவர்கள் பதிவுசெய்துள்ளார்கள்திருக்குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருக்கின்றது என்றநச்சுக்கருத்தையும் யூதக்கருத்தையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரும் ஏற்று ஒத்துக்கொண்டுள்ளார்கள்ஆனால் புனிதக் குர்ஆனில் எவ்வித எழுத்துப் பிழைகளும் இல்லைஎழுத்துப்பிழைகள் உள்ளதாகக் கூறுவது குர்ஆனைக் கேவலப்படுத்துவது மட்டுமல்ல அதை எழுதியஎழுத்தர்களையும் சேர்த்து கேவலப்படுத்தியும் குர்ஆனுக்கு முரணாகவும் பீஜேவும் டிஎன்டிஜேஅறிஞர்களும் பல தவறான யூத நச்சுக் கருத்துக்களையும் கூறி இஸ்லாமியர்களின் ஈமானைபறிக்கக்கூடிய மாபெரும் விஷமக் கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள் என்பது எங்களின்நிலைபாடாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு

அல்லாஹ்விடமிருந்து வந்த திருக்குர்ஆன் எல்லாவிதமான குறைகளை விட்டும் அப்பாற்பட்டதுஅதுவானவர் ஜிப்ரீல் (அலைஅவர்கள் மூலமாக ஓசை வடிவில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்)அவர்களுக்கு அருளப்பட்டதுஅதில் எவ்விதமான குறைகளும் பிழைகளும் இல்லை.
மனித எழுத்தர்கள் பிரதி எடுக்கும் போது அதில் சில எழுத்துப் பிழைகள் நிகழ்ந்துள்ளனஎனினும்அல்லாஹ் அருளியது போன்றே கல்வியாளர்களின் உள்ளங்களில் குர்ஆன் இறைவனால்பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இது நச்சுக் கருத்தோ யூதர்களின் கருத்தோ இல்லைகுர்ஆனைக் கேவலப்படுத்துவதுமல்லயூதநச்சுக் கருத்துக்களையும் குர்ஆனைக் கேவலப்படுத்தும் கருத்துக்களையும் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் ஒருபோதும் சொல்வதில்லைஎதிர் தரப்பின் அறிஞர்கள் தான் குர்ஆனுக்கு எதிராக நச்சுக்கருத்துக்களையும்யூதக் கருத்துக்களையும்முஸ்லிம்களின் ஈமானைப் பறிக்கக்கூடிய மாபெரும்விஷமக் கருத்துக்களையும்குர்ஆனைக் கேவலப்படுத்தும் கருத்துக்களையும் கூறி குர்ஆனைஇழிவுபடுத்துகின்றனர்முஸ்லிம்களின் ஈமானைப் பறிக்கவும் செய்கின்றனர் என்பது எங்களின்நிலைபாடாகும்.

குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை

முதலில் யார் பேசுவது என்பதை முடிவு செய்ய மேடையில் டாஸ் போடப்பட்டதுஇதில்எதிரணியினர் முடிவு செய்யும் உரிமையைப் பெற்றனர்நாமே முதலில் விவாதத்தைத் தொடங்கலாம்என்று கூறினர்எனவே நாம் துவக்க உரையை ஆரம்பித்தோம்அதில் பின்வரும் உண்மையைமக்களுக்குத் தெளிவுபடுத்தினோம்.
அல்லாஹ்விடமிருந்து நபி (ஸல்அவர்களுக்குக் குர்ஆன் புத்தக வடிவில் அருளப்படவில்லை.மாறாக ஜிப்ரீல் (அலைஅவர்கள் நபி (ஸல்அவர்களிடம் வந்து ஓதிக் காட்டினார்கள்நபி (ஸல்)அவர்கள் குர்ஆனை மனனம் செய்து கொண்டார்கள்இவ்வாறு குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபி(ஸல்அவர்களுக்கு ஓசை வடிவில் தான் அருளப்பட்டதுஇதே வழியில் தான் நபி (ஸல்அவர்களும்குர்ஆனை நபித்தோழர்களுக்கு எத்திவைத்தார்கள்.
"குர்ஆன் ஓசை வடிவில் தான் அருளப்பட்டதுஎழுத்து வடிவில் அருளப்படவில்லைஎன்றுஅல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான்.  இந்தக் குர்ஆனை ஜிப்ரீல் (அலைஅவர்கள்நபி(ஸல்அவர்களின் உள்ளத்தில் இறக்கி வைத்தார் என்று குர்ஆன் கூறுகின்றது.
எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதேநீர் ஆவதற்காகஉமது உள்ளத்தில் தெளிவான அரபுமொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார். (அல்குர்ஆன் 26:195)
யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின்விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்
(அல்குர்ஆன் 2:97)
ஜிப்ரீல் (அலைஅவர்கள் நபி (ஸல்அவர்களிடம் குர்ஆனை எழுதிக் கொடுக்கவில்லைமாறாகஓதிக் காட்டினார்கள்நபி (ஸல்அவர்கள் அதை மனனம் செய்துகொண்டார்கள்.
ஜிப்ரீல் (அலைஅவர்கள் குர்ஆனை ஓதிக்காட்டும்போது அவர்கள் ஓதியதை மறந்துவிடுவோமோஎன்ற பயத்தில் நபி (ஸல்அவர்கள் தனது நாவால் வேகமாக ஓதினார்கள்.
இதன் பிறகு அல்லாஹ்இவ்வாறு செய்ய வேண்டாம்அவர் ஓதும் போது அமைதியாகக் கேட்கவேண்டும்உங்களுக்கு குர்ஆன் மறக்காதவாறு உள்ளத்தில் குர்ஆனைப் பதிய வைப்பது நம் கடமைஎன்று கூறினான்.
(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காகஅவசரப்பட்டு உமது நாவைஅசைக்காதீர்அதைத் திரட்டுவதும்ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்ததுஎனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராகபின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
(அல்குர்ஆன் 75:16)
நபி (ஸல்அவர்கள் கொண்டு வந்த குர்ஆனை மறுத்தவர்கள் தங்களுக்கு அல்லாஹ்விடமிருந்துபுத்தக வடிவில் வேதம் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்ஆனால் இவர்களின் இந்தக்கோரிக்கையை அல்லாஹ் ஏற்கவில்லை.
(முஹம்மதே!) "வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும்'' என்றுவேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர்இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம்கேட்டுள்ளனர். "அல்லாஹ்வைக் கண்முன்னே எங்களுக்குக் காட்டு'' என்று அவர்கள் கேட்டனர்.அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியதுபின்னர் தெளிவான சான்றுகள்அவர்களிடம் வந்த பின்புகாளைக் கன்றை (கடவுளாககற்பனை செய்தார்கள்அதை மன்னித்தோம்.மூஸாவுக்குத் தெளிவான சான்றை அளித்தோம்.
(அல்குர்ஆன் 4:153)
அல்லாஹ் காகிதத்தில் குர்ஆனை அருளவில்லைஅப்படி அருளியிருந்தாலும் நிராகரிப்பாளர்கள்அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம்கைகளால் தொட்டுப் பார்த்தாலும் "இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை'' என்று(ஏக இறைவனைமறுப்போர் கூறியிருப்பார்கள்.
(அல்குர்ஆன் 6:7)
அல்லாஹ் முதன்முதலில் மனித உள்ளங்களில் தான் குர்ஆனைப் பாதுகாத்தான்இனி வரும்காலங்களிலும் மனித உள்ளங்களில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கும் என்று அல்லாஹ் உறுதிகூறுகிறான்.
மாறாகஇவை தெளிவான வசனங்கள்கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன
(அல்குர்ஆன் 29:49)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் குர்ஆன் ஓசை வடிவில் தான் நபிக்கு அருளப்பட்டதுஎழுத்துவடிவில் வரவில்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
அல்லாஹ் அன்று ஓசை வடிவில் அருளிய குர்ஆன் சமுதாய சங்கிலித் தொடரின் மூலம் அப்படியேமாறாமல் இன்று நம்மை வந்து அடைந்துள்ளதுஇந்தக் குர்ஆன் பிழைகளுக்கும் தவறுகளுக்கும்அப்பாற்பட்டது.
அல்லாஹ் அருளிய இந்தக் குர்ஆனில் பிழைகள் இருக்கின்றன என்று சொன்னால் தான் ஈமான்பறிபோகும்எழுத்துப் பிரதிகளை அல்லாஹ் இறக்கவில்லைஎனவே நாம் கைகளில்வைத்திருக்கக்கூடிய குர்ஆன் எழுத்துப் பிரதிகளில் பிழைகள் இருக்கின்றன என்று சொல்வதால் ஈமான்பறிபோய்விடாது.
எழுத்துப் பிரதிகள் என்பது குர்ஆனை ஓதுவதற்குரிய உதவி சாதனமாகும்இந்த சாதனத்தை தங்கள்வசதிக்காக மனிதர்கள் தான் ஏற்படுத்திக் கொண்டார்கள்எனவே மனிதர்கள் ஏற்படுத்திய பிரதிகளில்தவறு இருக்கின்றது என்று சொல்வது மனிதர்கள் தவறு செய்துள்ளார்கள் என்ற கருத்தையே தரும்.
இந்தக் கருத்து இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானதல்லஎல்லா மனிதர்களும் தவறுசெய்யக்கூடியவர்களாவர்நல்லவர்களானாலும் வல்லவர்களானாலும் தவறு செய்யாத மனிதர்யாரும் இல்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைஎழுத்துப் பிரதிகளில் சில தவறுகள்உள்ளன என்ற நம்முடைய கூற்று இந்த அடிப்படைக் கொள்கையுடன் ஒத்துப்போகின்றதுஇந்தவிளக்கங்களை நாம் தெளிவாகக் கூறி துவக்க உரையை நிறைவு செய்தோம்.

தோல்வியை ஒப்புக்கொண்ட எதிர் தரப்பினர்

மேலே நாம் கூறிய விளக்கங்கள் விவாதத்தின் தலைப்புக்குள் உட்பட்டு இருப்பதுடன் நமதுநிலைபாட்டுக்கு ஆணிவேராகவும் அஸ்திவாரமாகவும் உள்ளது என்பதை அறிவுள்ள யாரும்மறுக்கமாட்டார்கள்.
நாம் மிக வலுவான வாதத்தை எடுத்து வைத்திருக்கும் போதுஎதிர் தரப்பினர் நம்முடையவாதத்தைத் தகர்க்கும் வகையில் ஆதாரங்களை அள்ளிப் போட்டு அல்லாஹ்விடமிருந்து எழுத்துவடிவில் தான் குர்ஆன் வந்தது என்று நிரூபித்திருக்க வேண்டும்அப்படி நிரூபித்து இருந்தால் நாம்ஈமானை பறிக்கக்கூடிய பாரதூரமான தவறான கருத்தைக் கூறுகிறோம் என்பது உண்மையாகும்.
ஆனால் எதிர் தரப்பினர் என்ன செய்தார்கள் தெரியுமாகுர்ஆன் ஓசை வடிவில் வந்ததாஎழுத்துவடிவில் வந்ததாஎன்பது தலைப்பு இல்லைஇது விவாதத்துக்கு அப்பாற்பட்ட விஷயம்எனவேஇதைப் பற்றி இங்கு பேச வேண்டாம் என்று கூறினர்.
இவ்வாறு கூறியதன் மூலம் விவாதம் துவங்கிய சில நிமிடங்களிலேயே தங்களுடைய தோல்வியைஒப்புக்கொண்டுவிட்டனர்எழுத்துப் பிழைகள் இருப்பதாக நாம் கூறுவதால் நாம் குர்ஆனைஇழிவுபடுத்துகிறோம்ஈமானை பறிக்கக்கூடிய கருத்தைக் கூறியுள்ளோம் என்று எதிர்த் தரப்பினர் நம்மீது வைத்த குற்றச்சாட்டு பொய்யானதுபோலியானது என்பதை மக்கள் தெளிவாகஅறிந்துகொண்டனர்.
அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் ஓசை வடிவில் தான் வந்ததுஎழுத்து வடிவில் வரவில்லை என்றுநாம் வைத்த வாதத்தை இவர்களால் மறுக்க முடியவில்லைஎனவே அல்லாஹ்விடமிருந்து வந்ததுஓசை தான்எழுத்து இல்லை என்பது விவாதத்தின் துவக்கத்திலேயே தெளிவானது.
அல்லாஹ்விடமிருந்து வராத ஒன்றில் பிழைகள் இருந்தால் என்னபிழைகள் இல்லாவிட்டால் என்ன?இது விவாதம் செய்யும் அளவுக்கு மிக முக்கியமான பிரச்சனை இல்லைஎதிர் தரப்பினர் தான்தேவையில்லாமல் கூக்குரலிடுகிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் நிலை இந்தவிவாதத்தில் ஏற்பட்டது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை