ஸஜ்தா திலாவத்


ஸஜ்தா திலாவத்
தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும்போது ஸஜ்தா செய்கின்றோம்.  இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.
இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவைஅதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தா செய்ய வேண்டும்என்று நாம் பார்த்தால் தற்போது 14 வசனங்கள் ஸஜ்தா வசனங்களாகநடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம்.  இந்த 14 வசனங்களுக்கு ஹதீஸ்களில் ஆதாரம்உள்ளதா என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் அவை எந்தெந்த வசனங்கள் என்பதை முதலில் பார்ப்போம்.

1 உமது இறைவனிடம் இருப்போர் (வானவர்கள்அவனுக்கு அடிமைத்தனம் செய்வதைப் புறக்கணிக்கமாட்டார்கள்அவனைத் துதிக்கின்றனர்அவனுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.
(7:206 -  அல் அஃராஃப்)

2) வானங்களிலும்பூமியிலும் உள்ளவை விரும்பியோவிரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன.அவற்றின் நிழல்களும் காலையிலும்மாலையிலும் பணிகின்றன
(13:15 - அர்ரஃது)

3) தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர்கட்டளையிடப்பட்டதைச்செய்கின்றனர்.          
(16:50 - அந்நஹ்ல்)

4) அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர்அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது
(17:109 - பனீ இஸ்ராயீல்)

5) அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும்நூஹுடன் நாம் கப்பலில் ஏற்றியவர்களிலும்,இப்ராஹீம்இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர் வழி காட்டித் தேர்ந்தெடுத்தநபிமார்களாவர்அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான்அவர்களிடம் அளவற்ற அருளாளனின்வசனங்கள் கூறப்பட்டால் அழுதுஸஜ்தாவில் விழுவார்கள்.  
(19:58 - மர்யம்)

6) வானங்களில் உள்ளோரும்பூமியில் உள்ளோரும்சூரியனும்சந்திரனும்நட்சத்திரங்களும்,மலைகளும்மரங்களும்உயிரினங்களும்மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப்பணிகின்றனர் என்பதை நீர் அறியவில்லையாஇன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகிவிட்டதுஅல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லைஅல்லாஹ்நாடியதைச் செய்வான்.        
 (22:18 - ஹஜ்)

7)  "அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது, "அதுஎன்ன அளவற்ற அருளாளன்நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?'' என்றுகேட்கின்றனர்இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகமாக்கியது
(25:60 - ஃபுர்கான்)

8) வானங்களிலும்பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்யமாட்டார்களாநீங்கள் மறைப்பதையும்வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான்அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லைஅவன் மகத்தான அர்ஷுக்கு அதிபதி
(27:26 - நம்ல்)

9) நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும் போது ஸஜ்தாவில் விழுவோரும்தமதுஇறைவனைப் புகழ்ந்து போற்றுவோரும்பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றைநம்புபவர்கள்.         
(32:15 - ஸஜ்தா)
10) "உமது ஆட்டை தனது ஆட்டுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அநீதி இழைத்து விட்டார்.உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர்நம்பிக்கைகொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிரஅவர்கள் மிகவும் குறைவு தான்''  என்று தாவூத் கூறினார்.அவரைச் சோதித்தோம் என்பதை தாவூத் விளங்கிக் கொண்டார்.  தமது இறைவனிடம் மன்னிப்புக்கேட்டார்பணிந்து விழுந்தார்திருந்தினார்.
(38:24-ஸாத்)

11) அவர்கள் பெருமையடித்தால் உமது இறைவனிடம் இருப்போர் இரவிலும்பகலிலும் அவனைத்துதிக்கின்றனர்அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்
(41:38 - ஃபுஸ்ஸிலத்)
12) அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து வணங்குங்கள்!
(53:62-நஜ்மு)

13) அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக்காட்டப்படும் போது ஸஜ்தா செய்வதில்லை
(84:21 - இன்ஷிகாக்)

14) எனவேஅவனுக்குக் கட்டுப்படாதீர்ஸஜ்தாச் செய்வீராகநெருங்குவீராக
(96:19 - அலக்)

15) நம்பிக்கை கொண்டோரேருகூவு செய்யுங்கள்ஸஜ்தாச் செய்யுங்கள்உங்கள் இறைவனைவணங்குங்கள்நன்மையைச் செய்யுங்கள்நீங்கள் வெற்றி பெறுவீர்கள்
(22:77 - ஹஜ்)

ஸஜ்தா திலாவத் என்று நடைமுறையில் உள்ள 14 வசனங்கள் இவை தாம்.  மேலே கூறப்பட்டதில்14க்குப் பதிலாக 15 உள்ளதே என்று கேட்டால் எல்லா சட்டங்களிலும் மத்ஹபுகள் நுழைவது போல்இங்கும் மத்ஹபுடைய கருத்துக்கள் நுழைந்துள்ளன
(14 அல்லது 15 ஆகிய இரண்டுமே ஹதீஸ் அடிப்படையில் சரியானவை தானா என்பதை பின்னர்காணவிருக்கின்றோம்)
மேலே நாம் கண்ட 15 வசனங்களில் ஹஜ் எனும் அத்தியாயத்தில் இரண்டு வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  இமாம் அபூஹனீபா அவர்கள் ஹஜ் அத்தியாயத்தில் ஒரேயொரு ஸஜ்தா வசனம் மட்டுமேஉள்ளது என்று கூறுகின்றார்.  ஆனால் அதே சமயம் ஸாத் எனும் அத்தியாயத்தில் வரும் வசனத்தைஸஜ்தா வசனமாக எடுத்துக் கொள்கின்றார்.
இமாம் ஷாஃபி அவர்கள் ஹஜ் அத்தியாயத்திலுள்ள இரண்டு வசனங்களையும் ஸஜ்தா வசனங்களாகக்கணக்கிடுகின்றார்.  ஆனால் ஸாத் அத்தியாயத்திலுள்ள வசனத்தை விட்டு விடுகின்றார்.  ஆக இரண்டுபேருமே 14 வசனங்களை ஸஜ்தா வசனங்கள் என்று கூறுகின்றார்கள்.  ஆனால் எந்தெந்த வசனங்கள்என்பதில் தான் இருவரிடமும் கருத்து வேறுபாடு உள்ளது.  இவ்வாறு இவ்விரு அறிஞர்களுக்குமத்தியில் கருத்து வேறுபாடுகள் கொண்ட சட்டங்கள் எத்தனையோ உள்ளன.  இதில் ஆச்சரியம் எதுவும்இல்லை.
ஆனால் ஆச்சரியமும் வேதனையும் என்னவெனில் இந்த இமாம்களின் பெயர்களைப் பயன்படுத்திக்கொண்ட பக்தியாளர்கள்குர்ஆனில் 38:24 வசனத்திற்கு அருகில் இது ஹனஃபிய்யாக்களின்ஸஜ்தாவாகும் என்றும்இதுபோல் 22:77 வசனத்திற்கு அருகில் இது ஷாஃபிய்யாக்களின் ஸஜ்தாவசனமாகும் என்றும் எடுத்துரைத்தது தான்!

இதன் மூலம் குர்ஆனே இந்த வேறுபாட்டை உருவாக்குகின்றது என்ற தோற்றத்தைஏற்படுத்துகின்றார்கள்.  ஆனால் குர்ஆனோ வேறுபாட்டிலுள்ள மக்களை ஒன்று படுத்தும் வேதமாகும்என்பதே உண்மை!  குர்ஆன் பிரதிகளில் இது போன்று அச்சடிப்பதை எதிர்த்துஅச்சகத்தாரிடம்கண்டனம் தெரிவித்து இதைத் தடுத்து நிறுத்துவது நமது கடமையாகும்
மேலும் இந்தக் கருத்து வேறுபாட்டுக்குக் காரணமாகவுள்ள இந்த ஸஜ்தா வசனங்களைப் பற்றிஹதீஸ்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்று விரிவாக நாம் பார்ப்பது இங்கு அவசியமாகின்றதுகுர்ஆனில் 15 ஸஜ்தா வசனங்கள் இடம் பெற்றுள்ளன என்பதைக் குறிக்கும் ஹதீஸைப் பார்ப்போம்.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள்குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக் காண்பித்தார்கள்என்றும்அவற்றில் (காஃப் அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான)முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்று ஸஜ்தாக்களும்சூரத்துல் ஹஜ்ஜில் இடம்பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும்'' என்று  அம்ர் பின் அல்ஆஸ் (ரலிஅறிவிக்கும் செய்திஅபூதாவூதில் 1193வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவில் 1047வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது
இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் மேற்கண்ட 15 இடங்களிலும் ஸஜ்தா செய்யப் படுகின்றதுஆனால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல!  இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஹாரிஸ் பின் ஸயீத் என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார்.  அதனால் குர்ஆனில் 15 ஸஜ்தாவசனங்கள் என்ற கருத்து ஆதாரமற்றதாக ஆகி விடுகின்றது.
"நான் நபி (ஸல்அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன்.  ஆனால் முஃபஸ்ஸலானஅத்தியாயங்களிலிருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை.  அல்அஃராஃப்ரஃதுநஹ்ல்பனீஇஸ்ராயீல்மர்யம்ஹஜ்ஃபுர்கான்நம்ல்ஸஜ்தாஸாத்ஹாமீம் ஆகியவையே ஸஜ்தாவுக்குரியஅந்த அத்தியாயங்களாகும்'' என்று அபூதர்தா (ரலிஅறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் 1046வதுஹதீஸாக இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் குர்ஆனில் 11 ஸஜ்தா வசனங்கள் என்று கூறுவோரும் உள்ளனர்ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மஹ்தீ பின் அப்துர்ரஹ்மான் பின் உபைதா பின்காதிர் என்பவர் யாரென அறியப்படாதவர்.  எனவே 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்றதாகிவிடுகின்றது.
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன்.  நஜ்ம்அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த ஸஜ்தாவும் அடங்கும்'' என்று அபூதர்தா (ரலிஅறிவிக்கும்இன்னோர் அறிவிப்பு திர்மிதியில் 519வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவின் 1045வது ஹதீஸாகவும்பதிவு செய்யப் பட்டுள்து.
இவ்விரண்டிலும் உமர் திமிஷ்கி என்பவர் இடம் பெறுகின்றார்.  இவரும் யாரென அறியப்படாதவர்எனவே இந்த ஹதீசும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமையவில்லை.
ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப் பட்டுள்ளதாஎன்று நபி (ஸல்)அவர்களிடம் கேட்டேன்.  அதற்கவர்கள்ஆம்யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தா செய்யமாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல் : திர்மிதீ 527
இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே வலுவற்றது என்று கூறுகின்றார்கள்.  மேலும்இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெற்றிருக்கும் அப்துல்லாஹ் பின் லஹீஆ பலவீனமானவர்.  இதில்இடம் பெறும் இன்னோர் அறிவிப்பாளரான மிஷ்ரஹ் பின் ஹாஆன் என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி)அவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார்எனவே இந்த ஹதீசும் பலவீனமானதாக உள்ளது.
மொத்தத்தில் 15 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்றகருத்துக்களாகி விடுகின்றன.  அப்படியானால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில்அமைந்த ஸஜ்தாக்கள் எத்தனைஎன்று பார்க்கும் போதுநான்கு வசனங்களை ஓதும் போது நபி (ஸல்)அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக அறிய முடிகின்றது.
நபி (ஸல்அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்தார்கள்.  ஒருமுதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தா செய்தனர்.  அம்முதியவர் ஒரு கையில்சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, "இவ்வாறு செய்வதுஎனக்குப் போதும்என்று கூறினார்.  பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப் பட்டதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி 1067, 1070
இதே கருத்து புகாரியில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.
ஸாத் அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை.  (ஆனால்நபி (ஸல்அவர்கள் அந்தஅத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 1069, 3422
அபூஹுரைரா (ரலிஅவர்களுடன் நான் இஷா தொழுத போது, "இதஸ்ஸமாவுன் ஷக்கத்என்றஅத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்ஸஜ்தா செய்தார்கள்இது பற்றி நான்அவர்களிடம் கேட்ட போது, "நபி (ஸல்அவர்களுக்குப் பின்னால் (இதற்காகநான் ஸஜ்தாசெய்திருக்கின்றேன்.  (மறுமையில்அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரைநான் அதைஓதி ஸஜ்தா செய்து கொண்டு தான் இருப்பேன்என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ராஃபிவு
நூல் : புகாரி 766, 768, 1078
இதஸ்ஸமாவுன் ஷக்கத்இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபி (ஸல்)அவர்களுடன் ஸஜ்தா செய்தோம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 905, 906
மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நஜ்முஸாத்இன்ஷிகாக்அலக் ஆகியநான்கு அத்தியாயங்களை ஓதும் போது அதிலுள்ள ஸஜ்தா வசனங்களுக்காக நபி (ஸல்அவர்கள்ஸஜ்தா செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.
நஹ்ல் என்ற அத்தியாயத்தை ஓதும் போது உமர் (ரலிஅவர்கள் ஸஜ்தா செய்ததாக புகாரியில் ஒருஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
உமர் (ரலிஅவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை மிம்பரில் நின்று நஹ்ல் அத்தியாயத்தை ஓதினார்கள்.  (அதிலுள்ளஸஜ்தா வசனத்தை அடைந்ததும் இறங்கி ஸஜ்தா செய்தார்கள்.  அடுத்த ஜும்ஆ வந்தபோது அதே அத்தியாயத்தை ஓதினார்கள்.  அப்போது ஸஜ்தா வசனத்தை அடைந்ததும், "மக்களேநாம்ஸஜ்தா வசனத்தை ஓதியிருக்கின்றோம்.  யார் ஸஜ்தா செய்தாரோ அவர் நல்லதைச் செய்தவராவார்யார் ஸஜ்தா செய்யவில்லையோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லைஎன்று கூறினார்கள்.  மேலும்அவர்கள் ஸஜ்தா செய்யவில்லை.
அறிவிப்பவர் : ரபீஆ பின் அப்தில்லாஹ்
நூல் : புகாரி 1077
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது எனினும் நபி (ஸல்அவர்கள் செய்ததாக இங்கு கூறப்படவில்லைஉமர் (ரலிஅவர்கள் செய்ததாக மட்டுமே கூறப்படுகின்றது.  எனவே இது மவ்கூஃப் என்ற தரத்தில்அமைந்த ஹதீஸாகும்.  இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
எனவே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் பார்த்தால் 1. நஜ்மு, 2. ஸாத், 3. இன்ஷிகாக், 4. அலக் ஆகிய நான்கு அத்தியாயங்களிலுள்ள ஸஜ்தா வசனங்களின் போது மட்டுமே ஸஜ்தா செய்யவேண்டும்.
நபி (ஸல்அவர்கள் தமது ருகூவிலும் ஸஜ்தாவிலும், "சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திகஅல்லாஹும் மக்ஃபிர்லீ' (இறைவாநீ தூயவன்எங்கள் இறைவாஉன்னைப் போற்றுகின்றோம்.இறைவாஎங்களை மன்னித்து விடு!) என்று அதிகமதிகம் கூறுவார்கள்.  (இதாஜாஅ... என்றஅத்தியாயத்தில் கூறப்படும் குர்ஆனின் கட்டளையை இதன் மூலம் செயல் படுத்துவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 817
இது போன்ற ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டிகுர்ஆனுடைய கட்டளையை நிறைவேற்றும் நோக்கில்குர்ஆனில் எங்கெல்லாம், "சுஜூது செய்வார்கள்பெருமையடிக்க மாட்டார்கள்என்ற வாசகம் இடம்பெறுகின்றதோ அந்த வசனங்கள் அனைத்திலும் ஸஜ்தா செய்ய வேண்டுமல்லவா?  அந்தஅடிப்படையில் நாம் மேற்கண்ட 14 வசனங்களில் ஸஜ்தா செய்ய வேண்டியது தானேஎன்ற வாதத்தைஎடுத்து வைக்கின்றனர்.
இவர்கள் சொல்வது போன்ற கருத்துக்களைக் கொண்ட வசனங்களை நாம் தேடிப் பார்த்தால் அது 14என்ற வட்டத்திற்குள் நிற்காது.  இது போன்ற வசனங்கள் சுமார் 60க்கு மேல் குர்ஆனில் உள்ளனஆனால் அத்தனை இடங்களிலும் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று இவர்கள் வாதிடுவது கிடையாதுஅவ்வாறு ஸஜ்தா செய்வதும் கிடையாது.  இதிலிருந்தே இவர்களது வாதம் தவறானது என்பதுதெளிவாகின்றது.  மேலும்இந்த வாதத்தின் அடிப்படையில் குர்ஆனில் "ருகூவு செய்யுங்கள்என்றுகூறப்படும் போது ருகூவு செய்ய வேண்டுமாஎன்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன.
"ஸஜ்தா செய்யுங்கள்என்ற கருத்தில் அமைந்த எந்த வசனத்தை ஓதினாலும் நபி (ஸல்அவர்கள்ஸஜ்தா செய்வார்கள் என்று பொதுவாக ஹதீஸ்களில் சொல்லப் பட்டிருந்தால் ஒருவேளை இந்தவாதம் சரி என்று கூறலாம்.  ஆனால் அவ்வாறு ஹதீஸ்களில் பொதுவாகக் கூறப்படவில்லை.  எனவேஎவற்றை நபி (ஸல்அவர்கள் கற்றுத் தந்தார்களோ அவற்றை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஹதீஸின் அடிப்படையில் செயல்படுவதாக இருந்தால் மேற்கண்ட நான்கு அத்தியாயங்களின் போதுமட்டும் ஸஜ்தா செய்வது தான் பேணுதலான செயலும் நபிவழியைப் பின்பற்றுவதும் ஆகும்.
இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை என்பதற்குக் கீழ்கண்டஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
நான் நபி (ஸல்அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன்.  அப்போது அவர்கள் ஸஜ்தாசெய்யவில்லை.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல் : புகாரி 1072. 1073
எனவே நபிவழியைப் பின்பற்றி நற்கூலியைப் பெறுவோமாக!
பீ.ஜைனுல் ஆபிதீன்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இஸ்லாம் கூறும் மனித நேயம்

பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்