ஹாரூத், மாரூத் ஆகிய இருவரும் ஷைத்தான்களா? அல்லது மலக்குகளா?


ஹாரூத், மாரூத் ஆகிய இருவரும் ஷைத்தான்களா? அல்லது மலக்குகளா? 

ஹாரூத்மாரூத் ஆகிய இருவரும் ஷைத்தான்கள் தாம்மலக்குகள் அல்ல என்பதை குர்ஆன் வசனங்களை அடிப்படையாகக் கொண்டு பல முறை முன்னர் விளக்கியுள்ளோம்.
"இது வரை யாரும் அப்படிக் கூறவில்லைஎந்த தஃப்ஸீரிலும் அப்படி இல்லை'' என்று கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ கூறியுள்ளதால் இதற்கு நாம் பதிலளிப்பதை விடபுகாரிமுஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்களின் மொழிபெயர்ப்பாளரும்வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னாள் பேராசிரியரும் சுன்னத் வல் ஜமாஅத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞர் என்று கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ போன்றவர்களால் மதிக்கப் படுபவருமான மவ்லவி அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி அவர்கள் தலைமையில் மொழிபெயர்க்கப்பட்டுரஹ்மத் அறக்கட்டளை சார்பில் வெளியிடப் பட்டுள்ள தஃப்ஸீர் இப்னு கஸீர் தமிழாக்கம்அடிக்குறிப்பு என்ற நூலில் எழுதப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிடுவதே பொருத்தமாகும்.
தஃப்ஸீர் இப்னு கஸீர் தமிழாக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"பாபிலோனில் இருந்த ஹாரூத்மாரூத் ஆகிய இரு வானவர்களுக்கு அருளப் பெற்றதையும் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் அவ்விருவரும் "நாங்கள் (இறைவனிடமிருந்து வந்துள்ள) ஒரு சோதனையாக உள்ளோம். எனவே நிராகரிக்க வேண்டாம்என்று கூறாத வரை யாருக்கும் அதைக் கற்றுக் கொடுப்பதில்லை'' என்று அல்லாஹ் கூறியுள்ளான். இந்த வசனத் தொடரின் பொருள் தொடர்பாக அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.

வமா உன்ஸில அலல் மலகைனி
அறிஞர்களில் சிலரது கருத்தாவது: "அவ்விரு வானவர்களுக்கு அருளப் பெற்றதைஎன்பதைக் குறிக்க மூலத்தில் "வமா உன்ஸில அலல் மலகைனிஎனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது. இதில் "மாஎனும் இடைச்சொல் எதிர்மறையைக் குறிக்கும்.
விரிவுரையாளர் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "மாஎதிர்மறையைக் குறிக்கும். அத்துடன் "வ மா'வில் உள்ள "வாவுஎனும் இணையிடைச் சொல்லானதுமுன்னர் கூறப்பெற்ற "வ மா கஃபர சுலைமானு' (சுலைமான் நிராகரிக்கவில்லை) என்ற வாக்கியத்தின் தொடர்ச்சி ஆகும். இதன் படி, "சுலைமான் நிராகரிக்கவில்லை. மாறாகஷைத்தான்களே நிராகரித்தனர். அவ்விரு வானவர்களுக்கு அந்தச் சூனியக் கலை அருளப் பெறவில்லை'' எனப் பொருள் விரியும்.
இதன் மூலம்வானவர்களான ஜிப்ரீலும் மீகாயீலும் சூனியத்தை பூமிக்குக் கொண்டு வந்தார்கள் என்ற யூதர்களின் கருத்து பொய் என நிரூபிக்கப்படும்.
அடுத்து "ஹாரூத வ மாரூதஎனும் சொற்றொடர்முன்பு கூறப் பெற்ற "அஷ்ஷயாத்தீன்என்ற சொல்லின் அருகமைவு (பத்ல்) சொல்லாகும். (இதன்படி, "பாபிலோனில் இருந்த ஹாரூத்மாரூத் ஆகிய ஷைத்தான்களே நிராகரித்தனர்'' என்று பொருள் வரும்.) "இருமைக்கும் பன்மை பயன்படுத்தப் படலாம்'' என்ற விதியின் கீழ், "அஷ்ஷயாத்தீன்' (ஷைத்தான்கள்) என்ற பன்மைக்கு ஹாரூத்மாரூத் எனும் இருமை அருகமைவாக (பத்ல்) இருப்பதில் தவறில்லை. இறந்தவருக்கு இரு சகோதரர்களோ பல சகோதரர்களோ இருந்தால் என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் "அவருக்குச் சகோதரர்கள் இருந்தால்'' (4:11) என்று பன்மையாகவே இறைவன் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.
அல்லது ஹாரூத்மாரூத் இருவராக இருந்தாலும் அவர்களுடைய ஆதரவாளர்கள் பலர் இருந்ததை முன்னிட்டு இவ்வாறு பன்மையாகக் கூறியிருக்கலாம். அல்லது ஷைத்தான்களிலேயே இவ்விருவர் தாம் அதிகக் குழப்பவாதிகள் என்பதால் இவ்விதம் குறிப்பிட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும் இதன்படி, "பாபிலோனில் இருந்த ஹாரூத்மாரூத் ஆகிய ஷைத்தான்களே நிராகரித்தனர். அவர்களே மக்களுக்குச் சூனியத்தைக் கற்பித்தார்கள்'' என இத்தொடரின் பொருள் அமையும்.
இத்தொடருக்கு இவ்வாறு பொருள் கூறுவதே சிறந்ததும் ஏற்றதுமாகும். மற்றப் பொருள்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று குர்துபீ (ரஹ்) அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது: "அவ்விரு வானவர்கள் மீது அது (சூனியம்) இறக்கப்படவில்லை'' என்றே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் பொருள் கூறியதாக அவ்ஃபீ (ரஹ்) அவர்கள் தெரிவிக்கின்றார்கள். இதே பொருளைத் தான் ரபீஉ பின் அனஸ் (ரஹ்) அவர்களும் தெரிவித்தார்கள்.
இதன்படிஇவ்வசனத்தின் பொருள் இவ்வாறு அமையும். "சுலைமான் காலத்தில் ஷைத்தான்கள் சொல்லிக் காட்டிய சூனியத்தை அவர்கள் பின்பற்றினார்கள். ஆனால் சுலைமான் (இறைவனை) நிராகரிக்கவில்லை. அவ்விரு வானவர்களான ஜிப்ரீல் மற்றும் மீகாயீல் மீது சூனியம் இறக்கப்படவில்லை. மாறாக ஷைத்தான்களே நிராகரித்தனர். பாபிலோனில் இருந்த ஹாரூத்,மாரூத் ஆகியோர் தாம் மக்களுக்குச் சூனியத்தைக் கற்பித்தார்கள்.''
இந்தக் கருத்தின் படி "பாபிலோனில் இருந்த ஹாரூத் மற்றும் மாரூத்எனும் சொற்றொடர் வாசகத்தில் பின்னால் இடம் பெற்றிருந்தாலும் பொருளில் முன்னால் உள்ளதாக அமையும். "இரு வானவர்கள்என்பது ஜிப்ரீல் மற்றும் மீகாயீலைக் குறிக்கும். இவ்விரு வானவர்களின் வாயிலாகவே இறைவன் சூனியத்தை அருளினான் என்று யூதச் சூனியக்காரர்கள் கூறி வந்தார்கள். அவர்களது கூற்று பொய் என்பதைத் தன் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்து,அவ்விருவரும் சூனியத்தைக் கொண்டு வரவுமில்லைசுலைமான் சூனியக்காரரும் அல்லர் என இறைவன் தெளிவு படுத்துகின்றான். சூனியம் ஷைத்தானின் வேலைபாபிலோனில் வைத்து அவர்கள் தாம் அதை மக்களுக்குக் கற்பித்தனர் என்றும் அல்லாஹ் விவரிக்கின்றான்.
அவ்வாறு மக்களுக்குச் சூனியத்தை முன் நின்று கற்பித்தவர்கள் ஹாரூத்மாரூத் என்ற மனித ஷைத்தான்கள் ஆவர். ஆகவே ஹாரூத் மற்றும் மாரூத் என்பது இரு மனிதர்களின் பெயர்களே ஆகும்.
மாற்றுக் கருத்தும் மறுப்பும்
இவ்வாறு எடுத்தெழுதி விட்டுப் பின்னர் இக்கூற்றை இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் மறுக்கவும் செய்கின்றார்கள். "வ மா உன்ஸிலஎன்பதிலுள்ள "மாஎனும் இடைச் சொல் எதிர்மறையைக் குறிக்காது என்றும்அது "அல்லஃதீஎன்ற மறுபெயர் ஒட்டுவின் பொருள் கொண்டதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுஅது தொடர்பாக விரிவாகப் பேசுகின்றார். அத்துடன் ஹாரூத்மாரூத் ஆகியோர் இரு வானவர்கள் என்றும்அவர்களை அல்லாஹ் பூமிக்கு அனுப்பி வைத்துச் சூனியத்தைக் கற்றுக் கொடுக்க அனுமதியளித்தான் என்றும் அவர் வாதிடுகின்றார்.
இதன் மூலம் தன் அடியார்களைச் சோதிப்பது அல்லாஹ்வின் நோக்கமாகும். அதே நேரத்தில் சூனியம் என்பது தடை செய்யப் பட்ட ஒன்றாகும் என்பதைத் தூதர்கள் வாயிலாகத் தன் அடியார்களுக்கு விளக்கவும் செய்தான் அல்லாஹ்! ஹாரூத்மாரூத் ஆகிய வானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையைச் செய்தார்களே தவிர வேறொன்றுமில்லை.
இப்னு ஜரீர் (ரஹ்) அவர்களது கூற்றுப்படி "அந்த ஷைத்தான்கள் சூனியத்தையும் பாபிலோனில் இருந்த ஹாரூத்மாரூத் ஆகிய வானவர்களுக்கு அருளப் பெற்றதையும் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்'' என்று பொருள் வரும்.
இது மிகவும் விநோதமான கருத்தாகும். அதைவிட விநோதம் என்னவென்றால்ஹாரூத்மாரூத் என்பது ஜின்களில் உள்ள இரு குலத்தாருக்குப் பெயர் என்று இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியிருப்பது தான்.
ஹாரூத்மாரூத் சம்பவம்
மேற்கண்ட ஹாரூத்மாரூத் ஆகிய இருவரின் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு அறிவிப்புகள் காணப்படுகின்றன. அவை முஜாஹித்சுத்தீஹஸன் அல்பஸ்ரீகத்தாதாஅபுல் ஆசியாஸுஹ்ரீ,ரபீஉ பின் அனஸ்முகாத்தில் பின் ஹய்யான் (ரஹ்) போன்ற தாபிஉகளில் ஒரு குழுவினரிடமிருந்து அறிவிக்கப் பட்டுள்ளன. முற்கால மற்றும் பிற்கால குர்ஆன் விரிவுரையாளர்களில் பலர் அந்த நிகழ்ச்சியைக் கூறியுள்ளனர்.
ஆனால் அவையனைத்துமே இஸ்ரவேலர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். உண்மையானவரும் உண்மையாக்கப் பட்டவருமான முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமே இது குறித்து இடம்பெறவில்லை. இந்தச் சம்பவத்தைக் குர்ஆன் விரிவாகவோ விவரமாகவோ இல்லாமல் சுருக்கமாகவே குறிப்பிட்டுள்ளது. எனவே குர்ஆனில் வந்ததை நாம் நம்புவோம். உண்மை அல்லாஹ்வுக்கே தெரியும்.
அடுத்து, "அவ்விருவரும் நாங்கள் (இறைவனிடமிருந்து வந்துள்ள) ஒரு சோதனையாக உள்ளோம். எனவே நிராகரிக்க வேண்டாம் என்று கூறாதவரை யாருக்கும் அதைக் கற்றுக் கொடுப்பதில்லை''என்று அல்லாஹ் கூறியுள்ளான். இது தொடர்பாக ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆம்! அவ்விரு வானவர்களும் சூனியத்தைக் கொண்டு வந்தனர். அதன் மூலம் மக்களை இறைவன் சோதிக்க விரும்பியதையே அவர்கள் கற்பித்தார்கள். எனவே தான் அவ்விருவரும், "நாங்கள் (இறைவனிடமிருந்து வந்துள்ள) ஒரு சோதனையாக உள்ளோம். எனவே நிராகரிக்க வேண்டாம்''என்று கூறிஅதை யாருக்கும் கற்றுத் தரக் கூடாது என்று உறுதிமொழி பெற்ற பின்னரே மக்களுக்குச் சூனியத்தைச் சொல்லிக் கொடுத்தார்கள்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தாங்கள் ஒரு சோதனை என்று கூறிய பின்னரே யாருக்கும் அதைக் கற்றுத் தர வேண்டும் என்று அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்பட்டிருந்தது.
இப்னு ஜுரைஜ் அவர்கள் கூறியதாவது: இறை மறுப்பாளனே சூனியம் செய்யத் துணிவான்;மற்றவர்களுக்கு அந்தத் துணிச்சல் வராது.
இந்த வசனத்தில், "சோதனைஎன்பதைக் குறிக்க மூலத்தில் "ஃபித்னாஎனும் மூலம் ஆளப்பட்டுள்ளது. இதற்குச் "சோதனை', "பரீட்சைஎன்று பொருள். பின்வரும் கவிதையில் இப்பொருளிலேயே இச்சொல் ஆளப்பட்டுள்ளது:
மக்கள் தமது மார்க்க விஷயத்தில் சோதனைக்கு (ஃபித்னா) ஆளாக்கப்பட்டனர்.
நெடிய அத்தீங்கிலிருந்து அஃப்பானின் புதல்வர் (மட்டுமே) தப்பித்தார்.
அவ்வாறே, "(இறைவா!) இது உன்னுடைய சோதனையே (ஃபித்னா) அன்றி வேறில்லை'' (7:155)என்று மூஸா (அலை) கூறியதாக வந்துள்ள இறைவசனமும் இதில் அடங்கும்.
வேண்டாம் சூனியம்!
இந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டுசூனியம் கற்பது இறை மறுப்பு (குஃப்ர்) ஆகும் என்று சிலர் கூறுகின்றார்கள். பின்வரும் ஹதீஸைத் தங்கள் கூற்றுக்குச் சான்றாகக் காட்டுகின்றார்கள்: ஒருவர் சூனியக்காரனிடம் அல்லது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மையென நம்பினால்அவர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப் பெற்ற(வேதத்)தை மறுத்தவர் ஆவார். (நூல்: அல்பஸ்ஸார். இது சரியான அறிவிப்பாளர் தொடரில் வந்த ஹதீஸாகும்)
அடுத்து, "ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவினை உருவாக்கக் கூடியதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றனர்'' என்று அல்லாஹ் கூறியுள்ளான். அதாவது மக்கள் அந்தச் சூனியக் கலையில் ஒரு சில இழிவான செயல்முறைகளையே அந்த ஹாரூத் மற்றும் மாரூத்திடமிருந்து கற்றனர். இணக்கமாகவும் இணைந்தும் வாழ்ந்து வருகின்ற கணவன் மனைவிக்கிடையே அந்தச் சூனியத்தைக் கொண்டு பிரிவினையை உண்டாக்கும் வித்தையைக் கற்றார்கள். இது ஷைத்தானின் செயல்களில் ஒன்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஷைத்தான் தனது அரியாசனத்தை நீர்மேல் அமைத்துக் கொண்டுதன்னுடைய பரிவாரங்களை மக்களிடம் அனுப்புகின்றான். அ(ந்தப் பரிவாரங்ளைச் சேர்ந்த)வர்களில் ஷைத்தானுக்கு மிகவும் நெருக்கமானவன் யாரென்றால், (மக்களைக்) கடுமையாகக் குழப்பத்தில் ஆழ்த்துபவன் தான். அவர்களில் ஒருவன் (ஷைத்தானிடம் வந்து), "நான் இன்ன ஆளுடனேயே இருந்தேன். அவன் இன்னின்னவாறெல்லாம் சொல்கிற அளவுக்கு அவனை ஆளாக்கி விட்டேன்'' என்று கூறுவான். அதற்கு ஷைத்தான், "நீ எதையும் சாதிக்கவில்லை'' என்பான். மற்றொருவன் வந்து, "நான் இன்ன மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கும் வரை அவனை விடவே இல்லை'' என்பான். உடனே அவனைத் தன்னருகே அழைத்துக் கட்டித் தழுவி, "நீ தான் சரியான ஆள்'' என்று கூறுவான்.
அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),
நூல்: முஸ்லிம்முஸ்னது அஹ்மத்
சூனியத்தால் தம்பதியினரிடையே ஒருவர் மீது ஒருவர் கெட்ட எண்ணம் கொள்ளச் செய்து,அல்லது கெட்ட பார்வை ஏற்படச் செய்துஅல்லது தீய குணம் உருவாகச் செய்து இருவரையும் பிரிப்பது தான் பிரிவினைக்குக் காரணமாகும்.
(நூல்: தப்ஸீர் இப்னு கஸீர் - தமிழாக்கம்அடிக்குறிப்புபக்கம்: 268-271)
ஹாரூத்மாரூத் தொடர்பாக மேற்படி நூலில் எழுதப்பட்டுள்ளதை எந்தவிதக் கூடுதல் குறைவும் இல்லாமல் அப்படியே எடுத்து எழுதியுள்ளோம். ஹாரூத்மாரூத் ஆகிய இருவரும் மலக்குகள் அல்லஷைத்தான்கள் தாம் என்பதை இது வரை யாரும் சொல்லவில்லைஎந்தத் தஃப்ஸீரிலும் இல்லை என்று கூறும் யாருடனும்  நேரடி விவாதம் செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்
ஏகத்துவம் மாத இதழ்

Comments

Unknown said…
இதிலே ஷைத்தான்களா மலக்குமார்களா என்று தெளிவாக இல்லை.
Unknown said…
இதிலே ஷைத்தான்களா மலக்குமார்களா என்று தெளிவாக இல்லை.
m z abideen said…
என்னதான் விளக்கம் கூறினாலும் ஹாரூத் மாரூத் வானவர்கள் என்ற குர்ஆனின் கூற்றே முந்திக் கொண்டுள்ளது இதை மாற்ற முடியாது

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை