மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்படலாமா ?



மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்படலாமா ?

முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளின் போது ஆர்டிஓ மூலம் தீர்வு காண்பது சரியா? உதாரணமாக முக்கியமான பிரச்சினைகளான பள்ளிவாசல்மையவாடி போன்ற பிரச்சினையில் கூடமார்க்கச் சட்டத்தை விட்டு விட்டு இந்த நாட்டின் சட்டத்தை ஏற்றுக் கொள்வது எப்படி நியாயமாகும்?
எஸ்.ஆர்அகமதுதுபாய்
இஸ்லாம் அல்லாத சட்டங்களைப் பின்பற்றக் கூடாது என்று கருதிக் கொண்டு இப்படி கேள்வி கேட்கும்நீங்கள் இக்கருத்தில் உண்மையாளராக இருக்க வேண்டும்நீங்களும் எதைச் செய்கிறீர்களோ அல்லதுசெய்வீர்களோ அது போன்றதை மற்றவர்கள் செய்யும் போது கேள்வி கேட்க முடியாது.
இது குறித்து நாம் முன்னரே பல தடவை விரிவாக தெளிவுபடுத்தியுள்ளோம்அதன் சுருக்கத்தைமீண்டும் இங்கே இடம் பெறச் செய்கிறோம்.
கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் கொண்டு தான் இது போன்ற கேள்விகள்எழுப்பப்படுகின்றன.
அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை.
திருக்குர்ஆன் 12:40
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராகஅவர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர்!
திருக்குர்ஆன் 5:49, 50
அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை.
திருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67
ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று இந்த வசனங்களில்கூறப்படுகிறதுஎனவே மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்படுவது மேற்கண்ட வசனங்களுக்கு எதிரானதுஎன்பது இவர்களின் வாதம்.
இந்த வாதம் இன்று புதிதாக எடுத்து வைக்கப்படுவதல்லமாறாக காரிஜிய்யாக்கள் என்ற கூட்டத்தினர்இதே வசனங்களை எடுத்துக் காட்டிஇவர்கள் வாதிட்டது போலவே வாதிட்டார்கள்குர்ஆன் கூறாதகருத்தை குர்ஆனில் திணித்த இவர்கள் அலீ (ரலிஅவர்களாலும் முஆவியா (ரலிஅவர்களாலும்முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர்.
'அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லைஎன்று குர்ஆன் கூறுவது உண்மை தான்.ஆனால் இவர்கள் திசை திருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாகஇல்லைஎந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம்பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றனஎந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ்கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது.
மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டுத் தீர்ப்புவழங்குவதையும்தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான்இந்தக் கேள்வியை எழுப்பக்கூடியவர்கள் கூட பல்வேறு பிரச்சினைகளில் மனிதத் தீர்ப்புக்கு வலியப் போய் கட்டுப்படவேசெய்கின்றனர்.
இவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.
அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒருநடுவரையும்அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்அவ்விருவரும்நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான்.அல்லாஹ் அறிந்தவனாகவும்நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:35
தம்பதிகளுக்கு மத்தியில் பிரச்சினை ஏற்படும் போது இரண்டு நடுவர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும்என்று அல்லாஹ் கூறுகிறான்அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது முரணாகுமாஎன்றால் நிச்சயம் முரணாகாது.
அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும்மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும்போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்.அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லதுஅல்லாஹ் செவியுறுபவனாகவும்,பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:58
அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம்அல்லது அவர்களை அலட்சியம்செய்யலாம்அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாதுநீர்தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராகநீதி செலுத்துவோரை அல்லாஹ்விரும்புகிறான்.
திருக்குர்ஆன் 5:42
மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ்கூறுகிறான்அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது ஒரு போதும் முரண் கிடையாது.
நம்பிக்கை கொண்டோரேஇஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்!உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப்போகும் கால்நடை (ஆடுமாடு ஒட்டகம் ஆகியவைபரிகாரமாகும்அது கஅபாவைச் சென்றடையவேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்அல்லதுஅதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும்உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்கவேண்டும்.
திருக்குர்ஆன் 5:95
உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இதுவும் முரணாகாது.
வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமாதொழுமிடத்தைத் தாண்டிதாவூதிடம் அவர்கள்வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார்பயப்படாதீர்!நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்புமீறிய இரண்டு வழக்காளிகள்எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராகதவறிழைத்துவிடாதீர்நேரான வழியில் எங்களை நடத்துவீராக!என்று அவர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 38:21, 22
ஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும்,ஸுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராகஅவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்.
திருக்குர்ஆன் 21:78
தாவூதுஸுலைமான் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது நிச்சயம் முரணானதல்ல.
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையேஇணக்கத்தை ஏற்படுத்துங்கள்அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறியகூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்!அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்!நீதி செலுத்துங்கள்நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
திருக்குர்ஆன் 49:9
மனிதர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படும் போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில்தீர்த்து வைக்க வேண்டும் என இவ்வசனம் தெளிவாக அனுமதிக்கின்றதுஇந்த வசனங்கள் அனைத்தும்மனிதர்கள் தீர்ப்பளிக்க முடியும்தீர்ப்பளிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றனஅதிகாரம்அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பளிப்பது தவறு என்று ஒருபோதும் கூற முடியாது.
ஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும்குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப்பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுக்கின்றனர்.
உண்மையில் மற்ற உயிரினங்களில் இருந்து மனிதன் வேறுபடுவதே அவனது பகுத்தறிவால் தான்.அவனது அறிவைப் பயன்படுத்தி பல நல்ல விஷயங்களைக் பிரித்து அறிய முடியும்.
மேலும் சிந்திக்குமாறு பல வசனங்களில் அல்லாஹ் நமக்குக் கட்டளை இடுகின்றனசிந்தனையின்மூலம் நல்லது கெட்டதை மனிதன் அறிந்து கொள்ள முடியும் என்பதால் தான் இறைவன் அவ்வாறுகூறுகிறான்ஒரு மனிதன் சிந்தித்து எடுக்கும் நல்ல முடிவுகளை மற்றவர்கள் ஏற்கலாம் என்ற கருத்தும்இதனுள் அடங்கியுள்ளது.
அல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் என்பதன் பொருள் இப்போது நமக்குத் தெளிவாகவிளங்குகின்றது.
மறுமையில் வெற்றி பெறுவதற்குரிய வணக்க வழிபாடுகள்ஹலால் ஹராம் ஆகிய சட்டங்கள்இயற்றும் அதிகாரம் பற்றியே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்இதைத் தவிர உள்ள அதிகாரங்கள்மனிதர்களுக்கு உண்டு என்பதைத் திருக்குர்ஆன் மேற்கண்ட வசனங்களிலும் இன்னும் பலவசனங்களிலும் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறான்.
மறுமையில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் காட்டவே நபிகள் நாயகம் (ஸல்அவர்கள்அனுப்பப்பட்டார்கள்அதனுடன் தொடர்பில்லாத உலக விஷயங்களைக் காட்டித் தர அவர்கள்அனுப்பப்படவில்லைஅந்த ஞானமும் அதிகாரமும் மனிதர்களுக்கு இறைவனால் இயல்பாகவேவழங்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒருவழக்கத்தைக் கண்டார்கள்பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள்ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்இதைக் கண்ட நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் 'இதைச் செய்யாதிருக்கலாமேஎனக் கூறினார்கள்மதீனாவாசிகள்இவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள்ஆனால் இதனால் முன்பை விட மகசூல் குறைந்துவிட்டதுஇதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் 'உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்னநேர்ந்தது?' எனக் கேட்டார்கள்நபிகள் நாயகம் (ஸல்கூறியதை நபித் தோழர்கள்நினைவுபடுத்தினார்கள்அப்போது நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் 'உங்கள் உலக விஷயங்களில்நீங்களே நன்கு அறிந்தவர்கள்எனக் குறிப்பிட்டார்கள்.
நூல் முஸ்லிம் 4358
மற்றொரு அறிவிப்பில் 'நானும் மனிதன் தான்மார்க்க விஷயமாக நன் உங்களுக்கு ஏதேனும்கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன்தான்எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல் முஸ்லிம் 4357
மற்றொரு அறிவிப்பில் 'நான் எனது கருத்தைக் கூறினேன்அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்.ஆனால் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்ஏனெனில்அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன்எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல்முஸ்லிம் 4356
எது அல்லாஹ்வுக்கு உள்ள அதிகாரம்எது மனிதனுக்கு உள்ள அதிகாரம்என்பது இந்த நபி மொழியில்மிகத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.
உலகின் ஜனநாயக நாடுகளில் மக்களின் கருத்தைக் கேட்டு மறுமைக்கான வழிகளை முடிவுசெய்வதில்லைஎப்படித் தொழுவது என்பதை மக்களின் கருத்தைக் கேட்டு யாரும் முடிவுசெய்வதில்லைமனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பற்றி முடிவு செய்யவே ஜனநாயகம்பயன்படுகிறது.
சில விஷயங்களில் இஸ்லாம் தடுத்துள்ள சில காரியங்களை அனுமதிக்கும் வகையில் ஆட்சியாளர்கள்சட்டம் இயற்றி விடுவார்கள்அதை மட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்இப்படி எளிமையாகப்புரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தைகாரிஜிய்யாக்களைப் பின்பற்றி மக்களை வழி கெடுப்பதற்காகத்திசை திருப்புகின்றனர்.
இவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாகதவறான கருத்தைக் குர்ஆனில் திணிக்கிறார்கள் என்பதைஇவர்களின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்..
மறுமையில் வெற்றி பெறுவது தொடர்பான விஷயங்களில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம்என்பதை இவர்கள் வசதியாக மறப்பார்கள்உதாரணமாக இவர்கள் மத்ஹபை ஆதரிப்பார்கள்;பின்பற்றுவார்கள்இதன் அர்த்தம் என்னவணக்க வழிபாடுகளில் சட்டம் இயற்றும் அதிகாரம்இமாம்களுக்கு உண்டு என்பது தானே?
இவர்கள் மத்ஹப் கூறும் முறையில் தான் தொழுவார்கள்மற்ற எல்லா வணக்கங்களையும் மத்ஹப்கூறும் முறையில் தான் செய்வார்கள்உலக விஷயங்களிலேயே மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவதுஷிர்க் என்ற இவர்களின் கொள்கைப்படி வணக்க வழிபாடுகளில் மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவதுகொடிய ஷிர்க் ஆக வேண்டுமல்லவா?
மீலாது விழா உள்ளிட்ட எல்லா பித்அத்களையும் இவர்கள் செய்வார்கள்அல்லாஹ்வும் அவனதுதூதரும் செய்யாதவற்றைச் செய்வது தானே பித்அத்அதாவது மனிதர்கள் உண்டாக்குபவையும்வணக்கமாகும் என்பது தானே இதன் பொருள்அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற வசனம்இப்போது ஏன் மறந்து போனது?
இதிலிருந்து தெரிய வருவது என்னஎந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மட்டும் அதிகாரம் உள்ளதோஅந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அதிகாரம் இல்லை என்று ஆக்கப் பார்க்கிறார்கள்எந்த விஷயத்தில்அல்லாஹ் மனிதனுக்கு அதிகாரம் வழங்கியுள்ளானோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்குத் தான்அதிகாரம் என்கின்றனர்இதிலிருந்து இவர்களின் அறியாமை வெளிச்சத்துக்கு வருகின்றது.
இந்த வாதத்தில் இவர்கள் பொய்யர்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகளே அம்பலப் படுத்துவதைநாம் காணலாம்.
இவ்வாறு வாதிடும் இயக்கத்தினர் தமது இயக்கத்திற்காகவோஅல்லது தமக்காகவோ ஒரு சொத்தைவாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்சொத்தின் உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்துப்பேசி முடித்தவுடன் அந்தச் சொத்து அவர்களுக்குரியதாகி விடும்இன்னும் உறுதிப்படுத்த நாடினால்இருவரும் எழுதி வைத்துக் கொள்ளலாம்இப்படித்தான் குர்ஆனும்நபிவழியும் கூறுகின்றன.
ஆனால் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தாள் வாங்குவதும்அந்த முத்திரைத் தாளில் அதைஎழுத வேண்டும் என்பதும்எழுதிய பின் அதைப் பத்திரப் பதிவாளர் முன் பதிவு செய்வதும் மனிதர்கள்இயற்றிய சட்டமாகும்இந்த வாதத்தைச் செய்வோர் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால்மேற்கண்ட மனிதச் சட்டங்களை மீற வேண்டும்வெள்ளைத் தாளில் மட்டும் எழுதி வைத்துக் கொள்ளவேண்டும்.
இந்த வாதத்தைச் செய்யும் ஒருவர் கூட இப்படிச் செய்வதில்லைஎந்த அதிகாரம் மனிதர்களுக்குஇல்லை என்று கூறினார்களோ அந்த அதிகாரத்துக்கு இவர்களே கட்டுப்படும் போது தங்கள் வாதம்பொய்யானது என்று தம்மையும் அறியாமல் ஒப்புக் கொள்கின்றனர்.
இது போன்ற வாதங்களைச் செய்பவர்கள் தமது அலுவலகத்துக்காகவோ அல்லது சொந்தப்பயன்பாட்டுக்காகவோ ஒரு கட்டடம் கட்ட நினைக்கிறார்கள்அல்லது ஒரு பள்ளிவாசலையே கட்டநினைக்கிறார்கள்நமக்குச் சொந்தமான இடத்தில் நாம் விரும்பும் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளும்உரிமை இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மனிதச் சட்டங்கள் இதில் பல விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன.
கட்டப்படும் கட்டடத்தின் அளவுபயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள்கட்டடத்தின் உயரம் மற்றும்அடுக்குகள் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டுபல மட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும்.ஒப்புதல் பெறாமல் கட்டடம் கட்டக் கூடாது என்பது மனிதச் சட்டம்.
இப்போது இவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்எனதுசொந்த இடத்தில் சொந்தக் கட்டடத்தைக் கட்ட நான் எவரிடமும் அனுமதி பெற மாட்டேன்என்று கூறவேண்டும்ஆனால் தமது வாதத்தைத் தாமே மீறும் வகையில் அந்த மனிதச் சட்டத்தை இவர்கள்அப்படியே பேணுவதைக் காண்கிறோம்அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்பது இப்போது இவர்களுக்குமறந்து போய் விடுகின்றது.
இவர்கள் தமது கொள்கைகளை மக்களிடம் சொல்வதற்காக வாரமாத இதழ்களை நடத்துகிறார்கள்.இஸ்லாம் இந்த உரிமையை வழங்கியுள்ளதுஆனால் இவர்கள் அற்பமான தபால் சலுகை வேண்டும்என்பதற்காக இதழ்களின் பெயரைப் பதிவு செய்கிறார்கள்அதற்காகப் பல்வேறு துறைகளில் அனுமதிபெறுகிறார்கள்.
மனிதச் சட்டங்களுக்குப் பணிந்து நாங்கள் அனுமதி வாங்கியுள்ளோம்என்பதைத் தெரிவிக்கும்வகையில் பதிவு எண்களைக் குறிப்பிடுகிறார்கள்சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனுக்கு உள்ளதைப்போது மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்த வாதத்தைச் செய்பவர்களை ஒருவன் மோசடி செய்து விட்டால் இவர்கள் என்ன செய்கிறார்கள்?மனிதச் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியோஅல்லது இந்திய உரிமையியல் சட்டத்தின்படியோ புகார் தெரிவிக்கின்றனர்நீதிமன்றங்களில் வழக்குத்தொடுக்கின்றனர்மனிதச் சட்டங்களின் படி எங்களுக்கு நீதி வேண்டும் என்று நீதிமன்றத்தைஅணுகுவதன் மூலம் தங்கள் வாதம் அபத்தமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர்மனிதச்சட்டங்களை ஏற்றுக் கொண்டால் தான் மோசடி செய்யப்பட்ட பணம் எங்களுக்குக் கிடைக்கும் என்றால்அது எங்களுக்குத் தேவையில்லைஎன்று கூற வேண்டியது தானே?
இவர்களின் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான்இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருள்திருட்டுப் போய் விடுகின்றதுஇஸ்லாமியச் சட்டத்தின்படி திருடனின் கையை வெட்ட வேண்டும்.ஆனால் இந்தியாவில் இயற்றப்பட்ட மனிதச் சட்டத்தின்படி சில மாதங்கள் சிறைத் தண்டனை தான்அளிக்கப்படும்.
அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான சட்டம் தான் இந்தியாவில் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டே இவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர்மனிதச் சட்டப்படியாவது எங்களுக்கு நீதிவழங்குங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடுகின்றனர்இவர்கள் செய்த வாதம் இப்போது என்னவானது?
ஹஜ் எனும் கடமையைச் செய்ய எந்த மனிதரிடமும் நாம் அனுமதி வாங்க வேண்டியதில்லைஆனால்பாஸ்போர்ட்விஸா என்று பல்வேறு அனுமதிகளை வாங்கினால் தான் ஹஜ் செய்ய முடியும் என்றுமனிதச் சட்டங்கள் கூறுகின்றன.
மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு இவர்கள்வருகிறார்களாஅல்லது மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டும் என்றுகூறுவார்களா?
இவர்கள் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தித் தான் எல்லாவிதமான கொடுக்கல் வாங்கல்களையும்செய்கிறார்கள்.
தங்கம்வெள்ளி போன்றவை இயற்கையாகவே மதிப்புடைய பொருள்கள்அதன் மூலம் கொடுக்கல்,வாங்கல் நடத்தினால் அதில் குறை ஏதும் சொல்ல முடியாது.
அல்லது பண்டமாற்று முறையில் கொடுக்கல் வாங்கல் நடத்தினால் அதையும் குறை கூற முடியாது.ஏனெனில் பண்டங்களுக்கு இயற்கையாகவே மதிப்பு உள்ளது.
ஆனால் ரூபாய் நோட்டுக்களுக்கு இயற்கையாக எந்த மதிப்பும் கிடையாது1000 ரூபாய் நோட்டுக்குஉரிய இயற்கையான மதிப்பு அதைத் தயாரிக்க ஆகும் செலவு தான்அதாவது 1000 ரூபாய் நோட்டைத்தயாரிக்க 10 ரூபாய் ஆகும் என்றால் அது தான் அந்தக் காகிதத்தின் மதிப்பு!
மனிதச் சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கிஅந்தப் பேப்பரைக் கொண்டுவருபவனுக்கு 1000 ரூபாய் மதிப்புடைய பொருளைக் கொடுக்கலாம்என்று உத்தரவாதம் தருவதால் தான் அதற்கு செயற்கையாக மதிப்பு கூடுகின்றது.
ஒருவர் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்திக் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதேமனிதச்சட்டங்களைப் பின்பற்றாமல் என்னால் வாழ முடியாதுஎன்று வாக்குமூலம் தருகிறார்.
குடும்ப அட்டைஓட்டுநர் உரிமம்அடையாள அட்டைசாலை விதிகள் என ஆயிரமாயிரம்விஷயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் மனிதனுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள்இதற்குக்கட்டுப்படாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.
யாரும் சொல்லாத தத்துவத்தை (?) சொன்னால் ஒரு கூட்டம் சேர்க்கலாம் என்பதற்காக மக்களைமடையர்களாக்குகிறார்களே தவிர எள்ளளவும் இவர்களது வாதத்தில் நேர்மையில்லை.
தமது வாதத்தைத் தாமே மறுக்கும் இழிவு தான் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.
மனிதச் சட்டங்களின் காரணமாகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றனகுடும்பக்கட்டுப்பாடுபோன்ற சட்டங்களும் இதன் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றன என்பது இவர்கள் கூறும் துணைக்காரணங்கள்.
மதுக்கடைகளை அரசாங்கம் திறந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் குடித்தாக வேண்டும் என்று அதன்அர்த்தமில்லைகுடித்தே ஆக வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டம் இயற்ற முடியாதுநாம்குடிக்காமல் இருந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது.
அது போல் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லைமனிதச்சட்டங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் கோடானுகோடி பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமலேயேவாழ்கின்றனர்.
ஒன்றிரண்டு சட்டங்கள் இஸ்லாத்திற்கு எதிரானதாக இருக்கலாம். அதை முஸ்லிம்கள் மீது திணிக்கும்வகையில் அமைந்தால் அதை மட்டும் எதிர்த்து நின்று போராடி அதை ரத்துச் செய்ய முடியும்.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்குக் கட்டாய ஜீவனாம்சம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டபோது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு இந்தஜனநாயகம் தான் காரணமாக அமைந்தது.
முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்பினால் அதை எந்த மனிதச் சட்டத்தாலும் மறுக்கமுடியாது என்பது தான் யதார்த்த நிலை!
வணக்க வழிபாடுகள் தவிர மற்ற விஷயங்களில் மனிதர்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம்வழங்கப்பட்டுள்ளதுஅதைப் பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு எதிராகஇல்லாவிட்டால் அதற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லைமார்க்கத்திற்கு எதிராக இருந்தால்அதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளதே தவிர மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியஅதிகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பறிப்பது நமது வேலையில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்க வேண்டும்.
மனிதச் சட்டம் என்ற வாதத்தை எடுத்து வைப்போர் எத்தனையோ மதரஸாக்கள்பள்ளிக்கூடங்களைநடத்துகிறார்கள்பல நிறுவனங்களையும் தொழில்களையும் நடத்துகின்றனர்அங்கெல்லாம் சட்டம்இயற்றும் அதிகாரத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களேஅது எப்படி?
தங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நிறத்தில்குறிப்பிட்ட ஆடையைத் தான் அணியவேண்டும் என்று கூறுவதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.
தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை மணிக்குப் பணியாளர்கள் வரவேண்டும்இத்தனை மணி நேரம்வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்களேஇதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத்தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கும்பிள்ளைகளுக்கும் சில ஒழுங்குகளையும்கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான்இப்படி எல்லா மனிதர்களும் தத்தமது வட்டத்துக்குள் சட்டம்இயற்றும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை.
அது போல் தான் நாட்டை ஆளும் பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய சட்டங்களை வகுக்கும்அதிகாரம் பெற்றுள்ளார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.
யூசுப் நபியின் வரலாறு பற்றி அல்லாஹ் கூறும் போது, 'கேள்வி கேட்பவர்களுக்கு அவரது வரலாற்றில்சான்றுகள் உள்ளனஎன்று அல்லாஹ் கூறுகின்றான்.
யூசுப் நபியவர்கள் இறைத் தூதராக இருந்தும் மனிதச் சட்டத்தின்படி நடந்த ஆட்சியில் அமைச்சர்பதவியைக் கேட்டுப் பெற்றார்கள்.
'இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்நான் அறிந்தவன்பேணிக்காப்பவன்என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 12:55
அறிவுப்பூர்வமாகச் சிந்திக்காமல்குர்ஆனை உரிய முறைப்படி ஆராயாமல் அரைவேக்காட்டுத் தனமாகஇவர்கள் அணுகியதால் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
எனவே பள்ளிவாசல்அடக்கத்தலம் போன்ற பிரச்சினைகளில் ஆர்டிஓ விசாரணை மூலம் தீர்வுகாண்பதும் இந்த அடிப்படையில் தான்லஞ்சம்ஒரு பக்கச் சார்பு காரணமாக சில தீர்ப்புகள்அநியாயமாக அளிக்கப்படலாம்அதைக் கண்டித்து போராட முடியுமே தவிர அந்த தீர்ப்புக்கு எதிராகஅந்தச் சொத்தை நாம் கைவசப்படுத்த இயலாது.
சரி இப்படி கேட்பவர்களுக்கு ஆர்டிஓ விசாரணைக்கு சம்மன் வந்தால் என்ன செய்வார்கள்இந்தக்கேள்விக்கு அவர்கள் அளிக்கும் பதிலில் இதற்கான விடையும் கிடைத்து விடும்.
உணர்வு 16:03

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

இஸ்லாம் கூறும் மனித நேயம்