உயிரைக் கொடுத்து பைபிளைப் பொய்யாக்கிய பாதிரியார் !


உயிரைக் கொடுத்து பைபிளைப் பொய்யாக்கிய பாதிரியார் !

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

பாம்புகளை கையில் எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.

(மாற்கு : 16 : 17 முதல் 19 வரை)

மேற்கூறப்பட்டுள்ள வசனங்கள்தான் ஒரு கிறித்தவர் அவர் உண்மையான கிறித்தவரா?அல்லது போலி விசுவாசியா?என்பதை அறிந்து கொள்வதற்காக கர்த்தர் பைபிளில் சொல்லியுள்ள வாசகங்கள். அற்புதமான வசனங்கள்(?).

இந்த பைபிளின் வசனங்களின் அடிப்படையில்தான் நாம் நம்முடன் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்களை, “சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது” என்று கர்த்தர் சொல்லியுள்ளதால், “இதோ விஷபாட்டில் உள்ளது. இதிலுள்ள விஷத்தைக் குடித்து சாகாமல் உயிரோடு இருந்து காட்டுங்கள்” என்று அறைகூவல் விடுத்தோம். அவர்களால் அதைச் செய்ய இயலவில்லை.

ஆனால், இவர்கள் செய்யப் பயந்ததை, அமெரிக்காவில் உள்ள வெர்ஜினா என்ற மகாணத்திலுள்ள ஒரு பாதிரியார் துணிச்சலோடு செய்ய முன்வந்துள்ளார். துணிச்சலோடு அந்த அடையாளங்களைச் செய்துகாட்டி மக்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளார். அவர் யார் தெரியுமா? அவர்தான் பாம்பு பிடிக்கும் பாதிரியார் “மேக் வெல்ஃபோர்டு”.இவர் கிறித்துவ மிஷினரி சேவைகளுக்கு புகழ் பெற்றவர்.

மேற்கூறப்பட்ட வசனங்களில், உண்மையான விசுவாசிகளுக்குண்டான அடையாளங்களில் ஒன்றான விஷம் குடித்து விஷப்பரீட்சையில் ஈடுபட்டு இந்த பாதிரியார் உயிரை விடத் தயாரில்லை. ஆனால், அதே நேரம், பைபிளில் கர்த்தர் சொல்லியுள்ளது போல, “அவர்கள் பாம்புகளைக் கையில் பிடிப்பார்கள்” என்ற வசனத்தை உண்மைப்படுத்தும் நோக்கில் பாம்புகளைக் கையில் வைத்து விளையாட்டுக் காட்டுவாராம் இந்தப் பாதிரியார்.

விளையாட்டு விபரீதமான கதை :

இவர் தன்னிடத்திலுள்ள, ஏற்கனவே பல்லைப் பிடுங்கி ரெடியாக வைத்துள்ள பாம்பை எடுத்து சின்னப்பிள்ளைகளுக்கு மிட்டாயை எடுத்துக்காட்டுவது போல காட்டிவிட்டு வித்தைகாட்டி, பைபிள் உண்மை என்று நம்ப வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றார். அது போல கடந்த மே 27ஆம் தேதி ஒரு பொது நிகழ்ச்சியில் இது போல ஒரு பாம்பை எடுத்து விளையாட்டுக்காட்ட, கையில் எடுத்த பாதிரியாரை பாம்பு போட்டுத்தள்ளியது.

பாவம்! எப்போதும் கொண்டு வரக்கூடிய பல் பிடுங்கப்பட்ட பாம்பை கொண்டு வர மறந்து போய், விஷமுள்ள பாம்பை மாற்றி எடுத்துவிட்டு வந்துவிட்டார் போலும். இவர் பாம்பை மாற்றிக் கொண்டு வந்தாரா? அல்லது இவரை பழிவாங்க வேண்டும் என்று சதி செய்து, விஷம் நிறைந்த பாம்பை பல் பிடுங்கப்பட்ட பாம்புக்குப் பதிலாக இவரோடு பணிபுரியும் சக பாதிரிமார்கள் மாற்றி வைத்து அவர்கள் ஏதும் சித்து விளையாட்டு விளையாடி விட்டார்களா என்பதும் கர்த்தருக்கே வெளிச்சம்.

எது எப்படியோ, விஷம் நிறைந்த பாம்பு அவரது தொடையில் கொத்திய சில மணித்துளிகளிலேயே ஆள் காலி. அவரது வித்தையைப் பார்க்க வந்தவர்கள் அவசர அவசரமாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே மரணித்து விட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட நிகழ்வுகளின் மூலம் பல உண்மைகள் நமக்குப் புலனாகின்றது.

1. இந்த நிகழ்வின் மூலம் பைபிளின் வசனத்தை அந்த பாதிரியார் பொய்யாக்கி விட்டார்.

2. அதுமட்டுமல்லாமல், வியாதியஸ்தர்களை உண்மையான விசுவாசிகள் குணப்படுத்துவார்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பரை பாம்பு கொத்தியவுடனேயே, அவர் தனக்குத்தானே அற்புதம் செய்ய வக்கில்லாமல், அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றதை வைத்துப் பார்க்கும் போது, அந்த வசனமும் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

3. இது போன்று பாம்புகளைக் கையில் பிடித்து மதத்துக்கு ஆள் பிடிக்கும் சாகசம் அனைத்துமே பொய்தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகிவிட்டது.

சுதாரித்துக் கொண்ட“யஹோவாவின் சாட்சிகள்”:

இதன் காரணமாகத்தான் நம்முடன் விவாதிக்க வந்த “யஹோவாவின் சாட்சிகள்” என்ற கிறித்தவ பாதிரிகள் தரப்பினர் விவாதத்தின் ஆரம்பத்திலேயே, பைபிளின் புதிய ஏற்பாட்டில், மாற்கு அதிகாரம் 16ல் வரக்கூடிய கடைசிச் செய்தி எல்லாம் பொய். அதை நாங்கள் நம்பவில்லை என்று அட்வான்ஸாக வந்து நம்மிடம் சரண்டர் ஆனது உங்களுக்கு நினைவிருக்கலாம். எங்கே நாம் அவர்களுக்கு விஷபாட்டிலை கொடுத்து விடுவோமோ, அல்லது கட்டுவிரியன் பாம்புகளைக் கொண்டு வந்து கடிக்க விட்டுவிடுவோமோ என்ற பீதியில் பைபிளில் ஒரு பகுதி பொய் என்று சொல்லி ஜகா வாங்கினர்.

அது போல இந்த பாம்புப் பாதிரியும் சொல்லித் தப்பித்திருந்தால் அவர் உயிர் போயிருக்காது.

அதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், இப்போது பாம்பு கடித்து செத்த அந்த பாதிரியாரின் தந்தையாரும் இது போலத்தான் 1983ஆம் வருடம் பாம்பு கடித்து செத்தார் என்று கூடுதல் வரலாற்றுத் தகவல்களை வேறு இந்தச் செய்தியை வெளியிட்ட, “வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அப்படியானால் அவரது தந்தை 1983ஆம் ஆண்டிலேயே பைபிளைப் பொய்யாக்கியுள்ளார் என்பதும் நமக்கு கூடுதல் தகவலாகத் தெரிய வருகின்றது.

அதில் இன்னொரு காமெடி என்னவென்றால், இந்தப் பாதிரியாரை பாம்பு கடித்து செத்தவுடன், அங்கு குழுமியிருந்த மக்கள் அனைவரும் பைபிளின் மாற்கு அத்தியாயத்தில் வரும் “பாம்பு கடித்தால் சாகமாட்டான்” என்ற வசனத்தை வாசித்தவர்களாக இருந்தனர் என்று அந்தப் பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கின்றது.

என்ன கொடுமை இது?:

ஒரு பைபிள் வசனம் கண்முன்னால் பொய்யானதைக் கண்டுவிட்டு, பாம்பு கடித்து அந்தப் பாதிரி செத்ததைக் கண்கூடாகக் கண்டுவிட்டு, அதைக் கண்ட அனைவரும், “பாம்பு கடித்தால் சாகமாட்டான்” என்ற பைபிள் வசனங்களை வாசித்துள்ளார்கள் என்றால் இவர்களின் குருட்டு பக்தியை எங்கு போய் சொல்ல?

இவரின் மரணத்தை நேரில் பார்த்த லாரன் பவுன்ட் என்ற பெண்மணி வாஷிங்டன் பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்கையில்:

“இவரைப் போல் சிறந்த போதகரை நான் பார்த்ததில்லை; எல்லோரும், நம்பிக்கையை எழுத்துக்களிலும்,பேச்சுகளிலும்சொல்வார்கள். ஆனால் இவர் நேரடியாக தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார், பாம்பு அவரை கடித்ததை நான் பார்த்தேன், பிறகு அவர் செத்துப் போய்விட்டார்” என்று கூறிய செய்தியையும் கேட்டு நாம் சிரிப்பதா?அல்லது அழுவதா? என்று தெரியவில்லை. சிறந்த போதகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கே இந்த நிலை என்றால்,சில்மிஷம் செய்யும் போதகர்களெல்லாம் பாம்பை பார்த்தாலே செத்துவிடுவார்கள் போலும். கர்த்தருக்கே வெளிச்சம்.

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

இஸ்லாம் கூறும் மனித நேயம்