பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்


பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவை மட்டுமே மார்க்கம் என்பதை அறியாமல், கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்று நினைத்து பழகிப்போன சில பகுதி மக்கள், பூரியான் ஃபாத்திஹாவுடன் சேர்ந்த 'விறகு வெட்டி கிஸ்ஸா'வை விடிய விடியப் படிப்பதும், கேட்பதும்கூட வணக்கம் என்று எண்ணி, அந்த மாயையில் மயங்கி கிடக்கும் மக்களுக்கும் இஸ்லாம் கூறும் தீர்வு இதோ!

என் அருமை சமுதாய சொந்தங்களே! திருக்குர்ஆனும் ஏராளமான நபிமொழிகளும் தமிழ் மொழியில் எப்போதோ வந்துவிட்டன. தயவுசெய்து அதைப் படித்துப் பாருங்கள். அவற்றைப் படித்து, நீங்கள் சிந்திக்கத் துவங்கிவிட்டால், பூரியானுக்காக‌ ஃபாத்திஹா ஓத வருபவர்களுக்கு இனி சவுக்கடி தான் கொடுப்பிர்கள்.

இந்த பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்
ஷியாக்களின் 12 இமாம்களில் ஒருவரான 'ஜாஃபர் சாதிக்' என்பவரின் பெயரை முன்னிறுத்தி, இந்த ரஜப் மாதம் 22 வது பிறையில் 'பூரியான் ஃபாத்திஹா'வை ஓதுவதற்காக வீட்டின் ஒரு அறையை பிரத்தியேகமாக கழுவி சுத்தம் செய்து, மேலே வெள்ளைத் துணியினால் பந்தல் அமைத்து, அதில் பூக்களைத் தொங்கவிட்டு அலங்கரித்தவுடன் அந்த அறைக்கே ஒரு புனிதம் வந்துவிட்டதாக எண்ணி, ஃபாத்திஹா ஓதி முடிக்கும்வரை யாரையும் உள்ளேகூட அனுமதிக்கமாட்டார்கள்! (ஓதுபவர்கள் மட்டும் உள்ளே செல்லலாம்). தயாரித்து வைத்துள்ள பூரியான்களில் 22 பூரியான்கள் மட்டும் ஓதுவதற்காக (படைப்பதற்காக) வைக்கப்படும்.

இந்த‌ 'பூரியான் ஃபாத்திஹா'வைப் பொருத்தவரை குறுகிய காலத்தில் செல்வந்தராவதற்காக மாற்று மதத்தவர்கள் செய்யும் 'லட்சுமி பூஜை'யைக் காப்பி அடித்ததாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மூட நம்பிக்கையையும், கண்மூடிப் பின்பற்றும் மடமையையும் ஒழிக்க வந்த பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துக்கொண்டு, 'முன்னோர்கள் சொன்ன வழிமுறை' என்று அதே இஸ்லாத்தின் பெயராலேயே நாம் அத்தகைய மூடச்செயல்களை செய்துக் கொண்டிருக்கலாமா? இது உங்களுக்கு கைசேதமில்லையா? இதுபோன்ற ஒரு வணக்க‌த்தை அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டுள்ளானா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் கற்று தந்தார்களா ? இல்லை கண்டிப்பாக இல்லை இறைமறையும்,நபி மொழியும் கூறுவதை கவனியுங்கள்.

"அல்லாஹ் தான் நாடியவருக்கு ஏராளமாகக் கொடுக்கிறான். (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்கிறான்.எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் அற்பமேயன்றி வேறில்லை". (அல்குர்ஆன் 13:26)

"நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்தபோதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான். மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39)

இறை மறை இப்படி இயம்புகிறது நபி மொழியோ மார்க்கத்தில் அல்லாஹ்வினுடைய தூதர் கற்று தரதாவைகள் எல்லாம் புதுமைகள் அது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று கூறுகிறது
இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ''வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்)அவர்களின் நடைமுறை; காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்); பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: புகாரி)

இத்தகைய வழிகேடுகள், தான் காணும் கட்டுக் கதைகளை எல்லாம் தங்கள் இஷ்டம்போலக் கூறி, மக்களை வழக்கம்போல் நம்பவைத்து ஏமாற்றி, ஓசியில் தங்கள் வயிறு வளர்க்க சிலர் உருவாக்கியவைதான் என்பதை புரிந்துக் கொண்டு, சிறிதும் தாமதிக்காமல் உங்களை நபிவழியின் பக்கம் மாற்றிக்கொண்டு நேரான வழியில் செல்லுங்கள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக! நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக! நேர்வழியில் இருப்போரை அதைவிட்டும் தடம் புரண்டுவிடாமல் காப்பானாக 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

இஸ்லாம் கூறும் மனித நேயம்