பெருவெடிப்பு சோதனை வெற்றி



பெருவெடிப்பு சோதனை வெற்றி

பெருவெடிப்பு சோதனை வெற்றி
 இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியதுஎப்படி தோன்றியதுஎன்பதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களைஒவ்வொரு காலகட்டத்திலும் கூறி வந்தனர்இறுதியாக பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பின் மூலம் தான் இப்பிரபஞ்சம் உருவானதுஎன்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
சில மில்லி மீட்டர் அளவில் ஒன்று திரண்டிருந்த அணுக்கள் திடீரென பயங்கர வேகத்துடன் வெடித்துச் சிதறியதுஒவ்வொரு விநாடியும்பல மடங்காக இது விரிவடைந்து கொண்டே இருக்கிறதுஇவ்வாறு விரிவடைந்த போது வெப்பம் தனிந்த வாயுக்கள் தான்நட்சத்திரங்களாகவும் கோள்களாவும் உருவாயின என்பது தான் பெருவெடிப்புக் கொள்கைஇது 14 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100கோடிஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அணு மோதலால் வெடித்துச் சிதறி இம்மாபெரும் பேரண்டம் உருவானது என்றால் செயற்கையாக அணு மோதலை ஏற்படுத்தி வெடிக்கச்செய்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர்.
ஐரோப்பாவின் அணு ஆராய்ச்சி மையம் சுவிட்சர்லாந்தில் உள்ள சேர்ன் அணு ஆராய்ச்சி மையத்தில் இந்தச் சோதனையை நடத்ததிட்டமிட்டது.
80 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் உழைத்து சென்ற வருடம் இம்முயற்சியில் இறங்கினார்கள்.
சுமார் 5.95 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து ல்லையில் பூமிக்கு அடியில்100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்தனர்.
சுரங்கத்தின் 2 இடங்களில் இருந்து புரோட்டான்களை செலுத்தி நேருக்கு நேர் மோதவிட்டுப்போது உருவாகும் மாற்றங்களையிரக்கணக்கான கருவிகள் மூலம் ய்வு செய்து பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் ண்டுபிடிக்க திட்டமிட்டனர்இதற்காகஉருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கிமுதற்கட்ட சோதனையை முடித்தனர்.
ஆனால் 2008 செப்டம்பர் 20ஆம் தேதி ந்திய நேரப்படி தியம் 2.57 ணிக்கு பிக்-பேங் சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில்கோளாறு ற்பட்டதுகுளிரூட்டும் கருவி ன்றில் இருந்து ஒரு ன்னிற்கும் மேற்பட்டதிரவ நிலையிலான ஹீலியம் வாயு சிந்ததால்ஒன்பது நாட்கள் மட்டுமே செயல்பட்ட இயந்திரம் செயல் இழந்ததுசோதனை தோல்வியில் முடிந்தது.
மீண்டும் இச்சோதனையை வெற்றிகரமாக நடத்திட பதினேழு மாதங்கள் விஞ்ஞானிகள் உழைத்து சோதனையை வெற்றிகரமாக நடத்திமுடித்து விட்டனர்.
கணித அடிப்படையிலும் ஊகமாகவும் சொல்லப்பட்டு வந்த பெருவெடிப்புக் கொள்கை இச்சோதனை மூலம் இப்போதுநிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையில் கீழ்க்காணும் உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.
  • அணுக்கள் மோதும் போது மாபெரும் ஆற்றல் அதில் இருந்து வெளிப்படுகிறது.
  • அந்த ஆற்றல் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
  • பின்னர் விரிவடையும் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து விரிவடைந்த ஆற்றல் சுருங்கி வெடிப்பதற்குமுன் இருந்த நிலையை அது அடைகின்றது.
இது தான் இந்த சோதனை மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.
இப்பிரபஞ்சம் உருவாகக் காரணமான அணு ஆற்றலுடனும்  இப்பிரபஞ்சம் உருவாக்குவதற்கான அணு மோதலுடனும் இதை ஒப்பிடவேமுடியாதுபூமி உருண்டை என்பதைச் சொல்லிக் காட்டும் போது ஒரு கடுகை எடுத்துக் காட்டி இது போல் பூமி உருண்டையானது என்றுசொல்வது போல் தான் இந்தச் சோதனை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடுகுக்கும் பூமிக்கும் அளவில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பது நமக்குத் தெரிகிறது.இரயில் வண்டியின் செயல்பாட்டை பொம்மை ரயில் மூலம் விளக்குவது போன்றது தான் இந்தச் சோதனை
இப்பிரபஞ்சம் உருவாகும் போது வெடித்த அணுவின் ஆற்றல் மற்றும் அதன் வெப்பம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்த செயற்கைஅணு மோதல் உதாரணம் சொல்லிக் காட்ட முடியாத அளவுக்குச் சிறியதாகும்
இவர்கள் சோதித்த செயற்கை அணு மோதல் விரிவடைந்ததும் மீண்டும் சுருங்கி பழைய நிலைக்கு திரும்பியதும் சில நாட்களில் முடிந்துவிட்டனஆனால் 14 பில்லியன் ஆண்டுக்கு முன் நிகழ்ந்த பெரு வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட விரிவடைதல் இன்னும் நிற்கவில்லை.விரிவடைந்து கொண்டே உள்ளதுஅதன் பின்னர் தான் விரிவடைதல் நின்று பழைய நிலைக்குத் திரும்பும். இதில் இருந்தே வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளலாம்.
இது குறித்து இன்றைய 31-3-2010 தினமலரில் வெளிவந்த செய்தியைப் பாருங்கள்
ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிக் பாங்' (பெருவெடிப்புபரிசோதனைவெற்றியடைந்துள்ளது.'அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போதுஅதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்தஅணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்ததுஅதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம்இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம்விரிவடைந்து கொண்டே இருக்கிறது.
குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின்மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்'என்பது தான்நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம்இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங்தியரி' (பெருவெடிப்புக் கொள்கைஎனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காகபிரான்ஸ் - சுவிட்சர்லாந்துஎல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில்அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்' (சி..ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ.அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளதுகாந்த ஈர்ப்புமுறையில் அமைந்த இதில்அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.
இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்எனப்படும்கடந்த ஆண்டில்இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின்அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில்புதியஅறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது.அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, 'செர்ன்அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில்இருந்த விஞ்ஞானிகள்சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.
இந்த வெற்றிபுதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறதுஒரேநாளில் இதற்கான விடை தெரியாதுகாலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில்,பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும்வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம்துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்
சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் அனைத்தும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டு இது இறை வேதம் தான் எனபதை நிரூபிக்கின்றது.
அனைத்து இணைந்திருந்தன
வானங்களும்பூமியும் இணைந்திருந்தன என்பதையும்அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும்உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமாஅவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
திருக்குர்ஆன் 21:30
பிரபஞ்சம் விரிவடைகிறது
)நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.
திருக்குர் ஆன் 51:47
மீண்டும் சுருட்டப்படும்
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
திருக்குர் ஆன் 21:104
www.onlinepj.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

இஸ்லாம் கூறும் மனித நேயம்